ஃபகத் ஃபாஸிலுக்கு இணை ஃபகத் ஃபாஸில் மட்டும்தான்... ஏன்?!

தமிழ்ல விஜய்க்கு ‘காதலுக்கு மரியாதை’, மலையாளத்துல குஞ்சாக்கோ போபனுக்கு 'அனியாதிபிராவு’னு பிளாக் பஸ்டர் படங்களைக் கொடுத்த டைரக்டர் ஃபாஸில், தன்னோட மகன் ஃபகத் ஃபாஸிலை ‘கையெத்தும் தூரத்து’ன்ற படத்துல அறிமுகப்படுத்துனாரு. ஆனால், படம் அட்டர் ஃப்ளாப். ஃபகத்தை மட்டும் அந்தப் படத்துல விமர்சிக்கல. அவரோட அப்பாவையும் சேர்த்து பயங்கரமா விமர்சனம் பண்ணாங்க.

எந்தவிதமான பிரிபரேஷனும் இல்லாமல் நடிக்க வந்தது என்னோட தப்பு. என்னோட அப்பாவுக்கும் இதுக்கும் சம்பந்தமில்லை”னு ஃபகத் சொல்லிட்டு அமெரிக்காவுக்கு படிக்க கிளம்பிட்டாரு. ஏழு வருஷம் கழிச்சு ‘கேரளா கஃபே’ன்ற படத்துல தன்னோட ரெண்டாவது இன்னிங்ஸை ஃபகத் தொடங்கினாரு. அந்தாலஜி மாதிரியான படம் அது. மலையாளத்துல இருக்குற முன்னணி டைரக்டர்ஸ் பலரும் அந்தப் படத்துல இருந்து ஃபகத் நடிப்பை கவனிக்க ஆரம்பிச்சாங்க.

ஃபாஸில்க்கிட்ட ஒரு இண்டர்வியூல, “இன்னைக்கு முன்னணில இருக்குற பல நடிகர்களுக்கும் நல்ல படத்தைக் கொடுத்துட்டீங்க. ஆனால், சொந்தம் மகனுக்கு ஒரு நல்ல சினிமா மூலமா எண்ட்ரி கொடுக்க முடியலையா?”னு கேப்பாங்க. அதுக்கு ஃபாசில், “நானும் சரி, அவனும் சரி கண்டிப்பா திரும்ப வருவோம்”னு பழைய இண்டர்வியூ ஒண்ணுல சொல்லியிருப்பாரு.

அந்தப் படம் அட்டர் ஃப்ளாப்னு தெரிஞ்சதுக்கு அப்புறம் ஃபாசில், ஃபகத்கிட்ட, “நீ ஒண்ணும் அவ்வளவு மோசமான நடிகன் இல்லை”னு சொல்லியிருக்காரு. சமாதானம் பண்ணதான் அப்பா சொல்றாருனு நினைச்சிட்டு அமெரிக்கா போய்ருக்காரு. ஆனால், செமயான மெச்சூரிட்டியோட கம்பேக் கொடுத்து இன்னைக்கு மலையாளத்துல மட்டுமில்ல, தமிழ், தெலுங்குனு சவுத் இந்தியால பலரும் நடிக்க தயங்குற கேரக்டரைக்கூட தைரியமா எடுத்துப்பண்ணி மோஸ்ட் வாண்டட் ஆக்டரா ஃபகத் இருக்காரு.

உங்க ரெகுலர் வேலைகளை பார்க்குறப்போவே  ஜாலியான தகவல்களையும் தெரிஞ்சுக்கணுமா? தமிழ்நாடு நவ் பாட்காஸ்ட் கேளுங்க! மிஸ் பண்ணவே கூடாத ரகளையான மூணு சீரீஸ் வருது!

ஃபகத்கிட்ட படம் தோத்துப்போச்சுனா தளர்ந்து போய்டுவீங்களானு எப்பவும் கேப்பாங்க. “நான் என்னோட கரியரை தோல்வியில இருந்துதான தொடங்குனேன். அதுனால, அதுவும் ஃபேஸ் ஆஃப் ஜார்னி. அதுனால தோல்விகள் மேல இருக்குற பயமே போய்டுச்சு”னு டேக் இட் ஈஸியா ஒரு பதில் சொல்லுவாரு.

மலையாள சினிமாவோட முகத்தை மாத்துனதுல மோகன்லால், மம்முட்டிக்குலாம் பெரிய பங்கு இருக்குற மாதிரி, மலையாள சினிமாவை அடுத்தக்கட்டத்துக்கு எடுத்துட்டு போனதுல தோல்வியில் இருந்து தொடங்கிய நாயகன் ஃபகத்துக்கு மிகப்பெரிய பங்கு இருக்கு. ஆனால், இதை எப்பவும் ஃபகத் ஏத்துக்கமாட்டாரு.

கேரளா கஃபே படத்துக்கு அப்புறம் பிரமானி, காக்டெயில், டூர்னமெண்ட்னு சில படங்கள்ல நடிச்சாரு. இருந்தாலும் அவருக்கு பெருசா பேரு வாங்கிக்கொடுக்கல. ஆனால், அவருக்கு மிகப்பெரிய பிரேக் கொடுத்தது ‘சாப்பா குரிசு’ன்ற படம். இந்தப் படத்துல நெகட்டிவ் ஷேட் கேரக்டர்லதான் ஃபகத் நடிச்சிருந்தாரு. நடிப்புக்குனு பலராலும் பாராட்டப்பட்டு, கேரளா ஸ்டேட் ஃபிலிம் அவார்டும் வாங்குனது இந்தப் படத்துக்குதான்.

‘22 ஃபீமேல் கோட்டயம்’ படத்துல ஃபகத் நடிச்ச கேரக்டரை எந்த நடிகரும் நடிக்க அவ்வளவு சீக்கிரம் அக்சப்ட் பண்ணிக்க மாட்டாங்க. ஆனால், ஃபகத் நடிச்சாரு. ஃபகத்தோட நடிப்பு தனித்துவமா தெரியுறதுக்கு முக்கியமான காரணம் அவரோட கண்கள்கள்தான். 22 ஃபீமேல் கோட்டயம்ல கோபம், இயலாமை, அதிர்ச்சி, வலி, ஏமாத்துறது. தோல்வியை ஏத்துக்குறதுனு எல்லாத்தையும் தன்னோட கண்கள் வழியா பல சீன்கள்ல ஒரு வார்த்தைக்கூட பேசாமல் சொல்லியிருப்பாரு.

நார்த் 24 காதம் படத்துல பக்காவா டைம்க்கு எல்லாம் பண்ற சின்சியறான ஆளா நடிச்சிருப்பாரு. ஒரு நல்ல ஃபீல்குட் மூவி இந்தப்படம். யாரையும் நம்பாத, யாரைப் பற்றியும் கவலைப்படாத கேரக்டர்ல இருந்து எல்லார்க்கிட்டயும் அன்பைக் காமிக்கிற ஒரு மனுஷனா மாறுறதை தான் போட்டுறுக்குற கண்ணாடிக்குள்ள இருக்கும் கண்கள் வழியா காமிச்சிருப்பாரு.

அதுக்கப்புறம் அவர் நடிச்ச பெங்களூர் டேஸ் தவிர மற்ற படங்கள் பெருசா வரவேற்பு பெறலை. அவரோட செகண்ட் இன்னிங்ஸ் முடிஞ்சதா நினைச்சாங்க. ஆனால், மகேஷிண்ட பிரதிகாரம் மூலமா அடுத்த இன்னிங்க்ஸ்க்கு தயாரா வந்தாரு ஃபகத்.

மகேஷிண்ட பிரதிகாரத்துல காதல் தோல்வி, ஃபோட்டோகிராபரா தோல்வி, சாதாரண மனுஷனா ஒரு ரௌடி மாதிரியான ஆள்கிட்ட தோல்வினு தோல்வியை மட்டுமே பார்த்து டிப்ரஷன்ல இருக்குறதை அந்த கண்கள் சொல்லும். கடைசியில் ஜெயிச்சப்புறம்கூட நான் சாதாரண ஆளுதான்னு அந்தக் கண்ணு சொல்லும்.

அந்தப் படம் வந்ததுக்கு அப்புறம் மம்முட்டி ஃபகத்தைப் பத்தி நஸ்ரியாக்கிட்ட கேக்கும்போது, “மகேஷ் இல்லையா”னுதான் கேப்பாராம். சூப்பார் ஸ்டார்ல இருந்து சாதாரண ஆள் வரைக்கும் அந்த கேரக்டர் அவ்வளவு பாதிப்பை ஏற்படுத்துச்சு.

பல மொழிகளுக்கும் மலையாள சினிமாவை கொண்டு போய் இந்தப் படம் சேர்த்துச்சு. தொண்டிமுதலும் த்ரிக்‌ஷாக்‌ஷியும் படத்துல அப்படியே அசல் திருடனா நடிச்சிருப்பாரு. அந்தக் கண்ணுல அவ்வளவு கள்ளத்தனம் இருக்கும். சீரியஸாதான் இந்த ஆளுக்கு நடிக்க வரும்னு இருந்ததை ‘ஒரு இந்தியன் பிரணயகதா’ல மாத்துனாரு. அந்தக் கண்ணுல அவ்வளவு காமெடி சென்ஸ் தெரியும்.

உங்க Favourite Celebrities பத்தின  1000+ Super Cool தகவல்கள் படிக்க 7WOWFacts Android app Install பண்ணுங்க!

கண்ணை வைச்சு இப்படிலாம் நடிக்க முடியுமானு எல்லாரையும் ஆச்சரியப்பட வைச்சப் படம் ‘கும்பளாங்கி நைட்ஸ்’. அதுல கிச்சன்ல அக்காவும் தங்கச்சியும் பேசும்போது என்ன பேசுனீங்கனு கேக்குற சீன் இருக்குல. அதைப் பார்த்தாலே ஃபகத் மேல பயம் வந்துரும். மனுஷன் அந்த கேரக்டரை நடிக்கிறதுக்காகவே பிறந்தவர் மாதிரி நடிச்சிருப்பாரு.

ஃபகத் தோல்வியில இருந்து திரும்ப வந்ததும் எல்லாரும் கேட்ட கேள்வி உங்களுக்கு தலைல முடி இல்லை. நடிப்புனு வந்தா அதெல்லாம் முக்கியம். உங்களுக்கு அது ஓகேவா இருக்கா?ன்றதுதான். அதுக்கு ஃபகத், “நான் இப்படி இருக்குறதுலதான் கம்ஃபர்ட்டா இருக்கேன். என்னோட லுக்குக்கு ஏற்ற கேரக்டர்கள் வந்தா, அந்த ஸ்கிரிப் என்னை இம்ப்ரஸ் பண்ணா நான் கண்டிப்பா அதுல நடிப்பேன்”னு சொல்லுவாரு.

ஃபகத் பண்ண கேரக்டரை வேற மொழில பண்ண ஆளே இல்லைனு சொல்லலாம். ஃபகத்தோட மகேஷிண்ட பிரதிகாரம் படத்தை வேற மொழிகள்ல ரீமேக் பண்ணாங்க. ஆனால், அது வொர்க் அவுட்டே ஆகலை. மலையாளத்தைத் தவிர எந்த இண்டஸ்ட்ரீல அவர் நடிச்சிருந்தாலும், இப்படியான கேரக்டர்ஸ் அவருக்கு கண்டிப்பா கிடைச்சிருக்காது.

இப்பவும் ஃபகத்கிட்ட நீங்க ஒரு நல்ல நடிகரானு கேட்டா, “கண்டிப்பா இல்லை. என்னைவிட நல்ல நடிகர்கள் இருக்காங்க”னு சொல்லுவாரு. அதனாலதான் சொல்றோம், ஃபகத்தைவிட நல்ல நடிகர்கள் இருக்கலாம்.  ஆனால், ஃபகத்துக்கு இணை ஃபகத் மட்டும்தான்.