பூலோக வைகுந்தம்;அசையும் கொடிமரம் - திருச்சி ஸ்ரீரங்கம் கோயிலின் அதிசயங்கள்!
ஸ்ரீரங்கம் நம்பெருமாள் வருடத்திற்கு ஏழு முறை மட்டும், தங்க குதிரை வாகனத்தில் எழுந்தருள்வார்
இந்த கோயிலின் தெய்வமான ஸ்ரீ ரங்கநாதர், ஸ்ரீதேவியாகிய லட்சுமி மற்றும் ஆண்டாளுடன்எழுந்தருளியுள்ளார்
இந்த கோயிலில் ஸ்ரீ ராமானுஜரது திருவுடல் 900 ஆண்டுகளுக்கும் மேலாக பச்சை கற்பூரம் சாற்றி பாதுகாக்கப்படுகிறது
உங்க ரெகுலர் வேலைகளை பார்க்குறப்போவே ஜாலியான தகவல்களையும் தெரிஞ்சுக்கணுமா? தமிழ்நாடு நவ் பாட்காஸ்ட் கேளுங்க!மிஸ் பண்ணவே கூடாத ரகளையான மூணு சீரீஸ் வருது!
ஸ்ரீரங்கம் கோயிலின் பிரமாண்டமான ராஜகோபுரத்தை கட்டுவதற்கு 1.7 கோடி செங்கற்கள், 20,000 டன் மணல், 1,000 டன் கருங்கல், 12 ஆயிரம் டன் சிமெண்ட், 130 டன் இரும்பு கம்பிகள், 8,000 டன் வர்ண பூச்சுக்கள் பயன்படுத்தப்பட்டுள்-ளன
ஸ்ரீரங்கம் கோயில் ஏறத்தாழ 156 ஏக்கர் பரப்பளவில் அதாவது 6,31,000 சதுர மீட்டர அளவு கொண்டதாக, நாட்டிலேயே மிகப்பெரிய கோயில்களில் ஒன்றாக விளங்குகிறது
5000 ஆண்டுகளுக்கும் மேல் பழமையான இந்தக் கோயில், “சோழர்கள், பாண்டியர்கள், ஹொய்சளர்கள், விஜயநகர பேரரசர்கள்” என பல அரச வம்சங்களால் சீர்செய்யபட்டு கட்டப்பட்டுள்ளது
ஸ்ரீரங்கம் கோயில் வளாகத்துக்குள் அமைந்துள்ள ஏழு மதில் சுற்றுகளும், ஏழு லோகத்தை குறிப்பதாக சொல்லப்படுகிறது
இங்கு எல்லாமே 7 என்ற பெருமையைக் கொண்டது இத்தலம். 7 பிராகாரம், 7 மதில்கள், 7 தாயார்கள், 7 உற்சவம், 7 திருவடி சேவை, 7 கண்டுகளிக்கும் சேவை என ஏகப்பட்ட 7 அதிசயங்கள் ஸ்ரீரங்கத்தில் இருக்கிறது
அசையும் கொடிமரம் - ரெங்கவிலாஸ் மண்டபத்தில் உள்ள கல் கொடிமரத்தின் முன்பு விழுந்து வணங்கி உயர்ந்து நோக்கினால் அசையும் தோற்றத்தில் நம்மை ஆச்சரியப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது