`மனிதன் மகத்தான சல்லிப்பயல்' - ஜி.நாகராஜனின் புகழ்பெற்ற வரிகள்!

இது ஒரு மனிதனின் ஒரு நாளைய வாழ்க்கை. நீங்கள் துணிந்திருந்தால் செய்திருக்கக்கூடிய சின்னத்தனங்கள், நிர்பந்திருக்கப்பட்டிருந்தால் காட்டியிருக்கக்கூடிய துணிச்சல். இவையே அவன் வாழ்க்கை. அவனது அடுத்த நாளைப் பற்றி நாம் தெரிந்துகொள்ள வேண்டாம். ஏனெனில், அவனுக்கும் நம்மில் பலருக்கும்போலவே `நாளை மற்றுமொரு நாளே!'.

நாட்டில் நடப்பதை சொல்லியிருக்கிறேன். இதில் உங்களுக்கு பிடிக்காதது இருந்தால் `இப்படியெல்லாம் ஏன் நடக்கிறது' என்று வேண்டுமானால் கேளுங்கள்; `இவையெல்லாம் ஏன் எழுத வேண்டும்?' என்று கேட்டு தப்பித்து கொள்ளப்பார்க்காதீர்கள். உண்மையைச் சொல்வதென்றால் முழுமையுந்தான் சொல்லியாக வேண்டும். நான் விரும்பும் அளவு சொல்ல முடியவில்லையே என்றுதான் வருத்தம்.

எந்தச் சமுதாய அமைப்பிலும் சிறப்புச் சலுகைகள் அனுபவிக்கும் ஒரு சிறு கூட்டம் இருந்தே தீரும். இல்லையெனில் அவ்வமைப்பு சிதைந்துவிடும். 

மனித குணங்களை மனிதர்கள் சிலாகித்துப் பேசுவதைவிட கேலிக்கூத்து கிடையாது. ஏனெனில், சிந்திக்கும் நாய்கள் நாய் குணங்களையே உயர்வாகக் கருதுகின்றன. 

தனிமனிதர்களை மதிக்கத் தெரியாதவர்கள்தான் மனிதாபிமானம் பேசுவார்கள்.

மனிதனைப் பற்றிப் பொதுவாக எதுவும் சொல்லச் சொன்னால் ‘மனிதன் மகத்தான சல்லிப்பயல்’ என்றுதான் சொல்வேன்.

தனது கலைப் படைப்புகள் மூலம் சமுதாய மாற்றங்களை நிகழ்த்துவதாக நினைக்கும் கலைஞனுக்கு, பனம்பழத்தை வீழ்த்திய காக்கையின் கதையைச் சொல்லுங்கள்.

மனிதர்களிடம் நிலவ வேண்டியது பரஸ்பர மதிப்பே தவிர, பரஸ்பர அன்பு அல்ல; அப்போதுதான் ஏமாற்று குறையும்.

`தேனிசைத் தென்றல்’ தேவா ரசிகர்களே… அவரைப் பற்றி உங்களுக்கு எந்தளவுக்குத் தெரியும்? #Quiz

Read More