`வாழ்ந்தே தீரணும் வாழ்க்கை. கொடுத்தே தீரணும் கடன்!’ - எழுத்தாளர் பிரபஞ்சனின் பிரபல 10 வரிகள்

எவ்வளவு பிரச்னைகளுக்கு மத்தியிலும் ஒரு பூ பூக்கத்தானே செய்கிறது!

வார்த்தைகள் மூலமாகத்தான் நம்மை விளங்கிக்கொள்ள விதிக்கப்பட்டிருக்கிறோம் அல்லது சபிக்கப்பட்டிருக்கிறோம். நான் வார்த்தைகளால் நிரம்பி இருக்கிறேன். ஆகவே நான் பேச விரும்புகிறேன்!

காடுகள் மாத்திரம்தானா ரகசியங்களைப் பொதிந்து வைத்துக்கொண்டிருக்கின்றன. மனிதர்களும்தான்! ஒவ்வொருவரிடமும் எத்தனை ரகசியங்கள்!

முழுமைபெற்ற மனிதனுக்கு, கடவுள் அவசியமில்லை என்று மார்க்ஸ் சொல்கிறார். வறுமைதான் அவனைக் கோயிலுக்கு அழைத்துச் செல்கிறது. சக மனிதன் மீது நம்பிக்கை வைக்க முடிந்தால், மதம் அவசியமின்றி போய்விடும்.

இதெல்லாம் உங்க Whatsapp-க்கு  வரணுமா? கீழ இருக்க லிங்க்கை கிளிக் பண்ணி ஜாயின் பண்ணுங்க

Arrow

இசையில் ஈடுபடும் ஒருவன் ஒருபோதும் குற்றச் செயல்களில் ஈடுபட மாட்டான். மனிதக் கறைகளைக் கழுவிவிடக்கூடியது சங்கீதம்.

தனியாக இருப்பது பயம் தருவதாக இருக்கிறது. உறக்கம் கலைப்பதாக இருக்கிறது. நானும் நானும் மட்டுமே என் வாழ்க்கை. நான் மகிழ்ச்சியாக இல்லை. ஆனாலும், வாழ்ந்தே தீரணும் வாழ்க்கை. கொடுத்தே தீரணும் கடன்.

இசை எல்லோருக்கும் பொதுவானது. சாதி, மத பேதங்களைக் கடந்து இசை ஒரு மனிதனின் உணர்வுகளை குணநலன்களைப் பண்படுத்துவதில் முக்கியப் பங்கு வகிக்கிறது.

தமிழகத்தின் அரசியலைப்போல இருக்கிறது இலக்கியத் துறையும். தத்துவம் அற்றது நம் அரசியல். அறம் குறைந்தது நம் இலக்கியத் துறை. நன்றாக எழுதுபவரை, நன்றாக எழுதுகிறார் என்று சொல்லாதவர்கள் நம் நண்பர்கள்.

பிறக்கும்போதே இறக்கைகளுடன் பிறந்த பறவை போன்றது மனது. அதைப் பறக்கக் கூடாது என்று எப்படி சொல்வது?

மிருகங்கள் இன்னொரு ஜீவனை சிநேகித்துவிட்ட பிறகு, அந்த சிநேகத்தை மனிதர்களைப்போல மறுபரிசீலனை செய்வது இல்லை.