“நானும் ரோஜாவும் 12 வருஷம் காதலிச்சு கல்யாணம் பண்ணினோம். கல்யாணம் பண்ணுன மூணாவது நாளில் இருந்து எங்களுக்குள்ள பயங்கர சண்டை. இனிமேல் எங்களால சேர்ந்தே வாழ முடியாதுங்கிற அளவுக்கு யோசிக்க ஆரம்பிச்சிட்டேன். அப்போ நான் இயக்குநர் வி.சேகருக்கு போன் பண்ணி, இந்த விஷயத்தை சொன்னேன். அப்போ அவர், ‘நீ வாழ்க்கையில எதை வேணும்னாலும் ஜெயிக்க நினைக்கலாம்; ஆனால், பொண்டாட்டிகிட்ட ஜெயிக்கணும்னு நினைக்காதே. பொண்டாட்டிக்கிட்ட போட்டிப் போடாமல் அவகிட்ட தோத்திடு. நீ தோக்கலைனாலும் பரவாயில்லை; அவ ஜெயிச்ச மாதிரி ஓர் உணர்வை அவளுக்கு கொடுத்திடு’னு சொன்னார். அவர் சொன்னதை ஃபாலோ பண்ணுனதுக்கு அப்பறம் எங்களுக்குள்ள சண்டையே வரலை” – என இயக்குநர் ஆர்.கே.செல்வமணி ஒரு நிகழ்ச்சியில் பேச, அதை ரஜினிகாந்த் ஒப்புக்கொண்டு கைதட்டினார்.
12 வருசக் காதல்… மூன்றே நாளில் சண்டை!
By
Web desk
/ June 11, 2021