விமான நிலையங்கள் என்றாலே அவற்றின் பிரமாண்டத்துக்காகப் புகழ்பெற்றவை. பெரிய அளவிலான கண்ணாடி சுவர்கள், அலங்காரங்களோடு கிலோமீட்டர் கணக்கில் நீண்டுகிடக்கும் ரன்வேயும் விமான நிலைங்களின் அலங்கார சின்னங்கள். ஆனால், நம்மூர் பஸ் ஸ்டாண்டுகளை விடவும் சிறிய அளவிலான விமான நிலையங்களும் உலகில் இருக்கின்றன. அந்த வகையில் உலகின் மிகச்சிறிய 5 விமான நிலையங்களைப் பற்றிதான் இந்தக் கட்டுரையில் நாம் பார்க்கப்போகிறோம்.
Juancho Yrausquin Airport
கரீபியன் தீவுகளில் ஒன்றான Saba-வில் இருக்கும் இந்த விமான நிலையம் உலகின் மிகச்சிறிய விமான நிலையங்களுள் ஒன்று. 400 மீ அளவு மட்டுமே கொண்ட இதன் ரன்வே உலகின் மிகச்சிறிய ரன்வேயாகும். ரன்வேயின் அளவு சிறிதாக இருப்பதாக் ஜெட் விமானங்கள் இங்கு தரையிறங்க முடியாது. ஹெலிகாப்டர்கள், சிறிய ரக விமானங்கள் மட்டுமே தரையிறங்க அனுமதிக்கப்படுகின்றன.
Moshoeshoe I International Airport
Lesotho நாட்டின் தலைநகரான Maseru-வில் இருக்கும் Moshoeshoe I International Airport உலகின் மிகச்சிறிய விமான நிலையங்களுள் ஒன்று. Lesotho மன்னராக 1850-களில் இருந்த Moshoeshoe I-ஐக் கௌரவிக்கும் வகையில் இந்த விமான நிலையத்துக்கு அவர் பெயர் சூட்டப்பட்டிருக்கிறது. கடல் மட்டத்தில் இருந்து 1,630 மீ உயரத்தில் இருக்கும் இந்த விமான நிலையத்தில் இரண்டு சிறிய ஓடுதளங்கள் மட்டுமே இருக்கின்றன. இந்த விமான நிலையம் அளவில் சென்னை கோயம்பேடு பேருந்து நிலையம் அமைந்திருக்கும் பகுதியில் நான்கில் ஒரு பங்கிற்கும் சிறியது.
Barra Airport
ஸ்காட்லாந்தின் Barra தீவில் இருக்கும் இந்த விமான நிலையம் கடற்கரையில் ரன்வே-யைக் கொண்ட உலகின் ஒரே விமான நிலையமாகும். தினசரி கிளாஸ்கோவில் இருந்து இரண்டு விமானங்கள் வந்து செல்கின்றன. மிகச்சிறிய ரன்வேயைக் கொண்டிருக்கும் உலகின் மிகச்சில விமானநிலையங்களில் இது ரொம்பவே முக்கியமானது. கிளாஸ்கோவைத் தவிர வேறு எந்த ஊருக்கும் இங்கிருந்து விமானங்கள் இயக்கப்படுவதில்லை. 1936-ல் சேவையைத் தொடங்கிய இந்த விமான நிலையம் நம்மூர் பஸ் ஸ்டாண்டுகளை விட அளவில் ரொம்பவே சிறியது.
Morgantown Municipal Airport
அமெரிக்காவின் வெஸ்ட் விர்ஜீனியா மாகாணத்தில் இருக்கும் மோர்கன் டவுன் முனிசிபல் ஏர்போர்ட்டில் பெரிய விமானங்கள் தரையிறங்க முடியாது. 494 ஏக்கர் பரப்பளவில் இருக்கும் இந்த விமான நிலையம் கொஞ்சம் பிஸியானதும் கூட. 2011-ல் இந்த விமானநிலையத்தில் இருந்து 10,674 விமானங்கள் பறந்திருக்கின்றன. பெரும்பாலும் கமர்ஷியல் விமானங்களே பயன்படுத்தும் இந்த ஏர்போர்ட், ராணுவ நடவடிக்கைகளுக்காகவும் அவ்வப்போது பயன்படுத்தப்படுவதுண்டு.
Tenzing-Hillary Airport
நேபாளத்தில் அமைந்திருக்கும் Tenzing-Hillary Airport லுக்லா கிராமத்துக்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்காகவே பிரத்யேகமாக அமைக்கப்பட்டது. எவரெஸ்ட் மலைச்சிகரத்தில் முதல்முறையாக ஏறிய Edmund Hillary மற்றும் Tenzing Norgay நினைவாகப் பெயர் சூட்டப்பட்டது. இந்த லிஸ்டில் இடம்பெற இதன் ஷார்ட்டான ரன்வே முக்கியமான காரணம். இந்த விமான நிலையத்தில் தரையிறங்குவதும் டேக் ஆஃப் செய்வதும் விமானிகளுக்கு சவாலான விஷயம்.
Also Read – நீங்க morning/evening பெர்சனா… சிம்பிள் டெஸ்ட்ல கண்டுபிடிக்கலாம் வாங்க?