பள்ளி நாட்களை நினைவுபடுத்தும்  ‘Annual Day’ பாடல்கள்!

பள்ளி நாட்களை அப்படியே நினைவுபடுத்திப் பார்த்தா நமக்கு சில நினைவுகள் கண்டிப்பா வந்து போகும். அப்படி மறக்கவே முடியாத மொமெண்ட்தான் இந்த ஸ்கூல் Annual Days. அப்படி நாம டான்ஸ் ஆடுன சில பாடல்கள் பத்திதான் இந்த வீடியோல பார்க்கப் போறோம்.

ஆண்டுவிழானு ஒரு அறிவிப்பு வந்ததும், அடுத்து நம்ப யோசனை எல்லாம், அங்க தான் இருக்கும். என்ன பண்ணப் போறோம், பாட்டு எப்படி சுஸ் பண்ணலாம்,  டீம்ல யார் யார் போடலாம்னு மொத்த மைன்டும் அங்க தான் இருக்கும். அப்படி ‘Annual Day Dances-னு பிரிச்சா அதுல சில வகைகள் இருக்கு. அது என்னென்ன டைப், எப்படிபட்ட பாட்டு, அதுக்கான சேலெக்க்ஷன் எப்படி நடக்கும், Rehearsal டைம்ல நடக்கும் கலாட்டா-னு அத்தனையும் சுவாரஸ்யாம இருக்கும். இப்போ நினைச்சு பார்த்தாலும் அப்போ நடந்த விஷயங்கள் எல்லாம் ஒரு துளிக் கூட மறக்காம அப்படியே சொல்லுவோம். அதுல நமக்கு ஒரு அற்பமான சந்தோஷமும் வேற வரும்.

Annual Day
Annual Day

இந்த ஆண்டுவிழா பாடல்களை வரிசைப்பபடி  பிரிச்சு பார்த்தா மொத்தம் 6 வகைன்னு சொல்லலாம். நர்சரி ஸ்கூல் டான்ஸ்ல ஆரம்பம் ஆகி உயர்நிலைப் பள்ளி வரை பசங்க சும்மா பின்னி எடுப்பாங்க. இதுக்காண ஏற்பாடுகளும் ஒரு பக்கம் ரொம்ப சுவாரஸ்யமாகப் போகும். ஒரே மாதிரி டிரெஸ் போடுறது, அதுக்குத் தேவையான பொருட்களைத் தயார் பண்றதுன்னு பிஸியாவே இருப்போம். இன்னும் 90’ஸ் கிட்ஸ்ல கேட்கவே வேணாம். நடன ஒத்திகைனு சொல்லிட்டு வகுப்புகளுக்கு மட்டம் போடும் வாய்ப்புகளும் இடையில் வரத்தானே செய்யும்? இதெல்லாம் இல்லாம அப்போ இருந்த காலத்தில் செல்போன் புழக்கம்ல அதிகம் இல்லாததால பொதுவா டான்ஸ் பிராக்டீஸுக்கு டிவிடி பிளேயர் தான் யூஸ் பண்ணுவாங்க, அதையும் பக்கத்து கிளாஸ் பசங்க கிட்ட கடன் வாங்கியோ, இல்ல பக்கத்து வீட்ல இருந்து கேட்டு வாங்கிட்டு வர ஃபீல் இருக்கே…ஆஹ்ஹா அப்படி இருக்கும்.

நர்சரி டான்ஸ்ல இருந்து அப்படியே தொடங்குவோம், இருக்கிறதுலையே ரொம்ப க்யூட் இவங்க தான், நடுவுல ஸ்டெப்ஸ் மறந்துட்டாலும் மேட்ச் பண்ணி சூப்பரா ஆடுவங்க, குஷி படத்துல வர மேகம் கருக்குது பாட்டுக்கு நிறைய பேர் ஆடி பார்த்து இருப்போம், சின்ன பசங்க அப்படிங்குற காரணத்தால ஸ்டெப்ஸ் ஈசியா இருக்கணும்னு இந்த பாட்டை எடுப்பாங்க. துள்ளி குதிச்சு ஆடவும் ஜாலியா இருக்கும். அடுத்து Am A Barbie Girl, சில நர்சரி கிட்ஸ் ஓட ட்ரீம் சாங் இது, அதுல வர பீட்ஸ் கேட்டு ஆட தங்குந்த பாட்டு. குழந்தைகளுக்கு இன்னொரு ஃபார்மேட் இருக்கு, அது தான் திருவிழா அண்ட் கொண்டாட்டாம் நிறைந்த பாடல்கள். அந்த வகையில ரமணா படத்துல வர வானம் அதிரவே பாட்டு அப்போ ரொம்ப பேமஸ்.

 அதே மாதிரி திருப்பாச்சி படத்துல வர கும்பிட போன தெய்வம் பாட்டு வேற மாதிரி ஒரு வைப் கொடுக்கும். கூடவே பசங்க Property-யா யூஸ் பண்ண வேப்பிலையும் இருக்கும்.

இதுல இரண்டாவது வகை மிடில் ஏஜ்ல இருக்க பசங்க, இவங்க மோஸ்ட்டா ஹீரோ இன்ட்ரோ பாடல்கள், குத்து பாடல்களை தேர்வு பண்ணுவாங்க. அந்த லிஸ்ட்ல இருக்க முக்கியமான பாடல்கள் என் பேரு படையப்பா, ஆல் தோட்ட பூபதி, அப்படி போடு, எல்லா புகழும் இறைவனுக்கு, தேவுட தேவுட, பலேலக்கா -ன்னு நல்ல மாஸ் சாங்ஸ்-க்கு ஆடுவாங்க, அடுத்த வகை Girls டீம்ல இருக்க சிலர் ஹீரோயின் இன்ட்ரோ சாங்ஸை எடுப்பாங்க, அதுல இருக்கும் சில Mandatory பாடல்கள் சின்ன சின்ன ஆசை, கொஞ்சும் மைனக்களே, ஷாலலா, பூ பறிக்க நீயும் போகாதே, நன்னாரே, பூ பூக்கும் ஓசை, மே மாதம், மலே மலே – இது எல்லாமே ஹீரோயின்ஸ் சம்மந்தப்பட்ட பாடல்களாவே இருக்கும்.

நெக்ஸ்ட் பரதநாட்டியம், இதுக்கு இவங்க பண்ற சேட்டைகள் எல்லாம் கொஞ்சம் எல்லை மீறியும் போகும். கிளாசிக் டான்ஸ் அப்படிங்குறதுல அதுக்கான Costume & Jewels -லாம் ஏற்பாடு பண்ண சில அலும்பல்கள் எல்லார் வீட்டுலையும் நடக்கும். பரதநாட்டியம்னு சொன்னதும் முதலில் ஞாபகம் வருவது மார்கழி திங்கள் அடுத்து ராதை மனதில், கண்ணோடு காண்பதெல்லாம், மின்சார கண்ணா, நலம் தானா, சௌக்கியாமா, நாத வினோதங்கள், ஓம் நமச்சிவாயா. 

இதுல சிலர் ஆடும்போதே பெற்றோர்கள் ஒரு பக்கம் பிள்ளைகளை மெய் மறந்து பார்த்துட்டு இருப்பாங்க.

 அடுத்த வகை குரூப் டான்ஸ், இவங்க ஒரு தனி வைப்ல இருப்பாங்க, ஒரே மாதிரி ட்ரெஸ் எடுத்து போட்டுபாங்க. Rehearsal-லாம் வெளுத்து வாங்குவாங்க. ஸ்டேஜ்ல அதை விட அதிரடியா இருக்கும், இப்படி அலப்பறை பண்ண இவங்க எடுக்கிற பாட்டு என்னென்னனு பார்த்தா, முக்காலா முக்காபுலா, மன்னார்குடி கலகலக்க, சீனா தான, மாம்பழமா மாம்பழம், உப்பு கருவாடு, குச்சி குச்சி ரக்கம்மா, ஊர்வசி ஊர்வசி, மேக்கோரினா, அண்டங்காக்க கொண்டைக்காரி, போட்டு தாக்கு, ஆளான நாள் முதல்லா-ன்னு அடுக்கிட்டே போகலாம் தமிழ் சினிமாவுல அந்த அளவுக்கு குத்து பாட்டு ஏராளம்.

Also Read – யார் இந்த ஜென்ஸி; இத்தனை ஹிட் பாடல்களை பாடியிருக்காங்க!

கடைசி வகை வேற்று மொழி பாடல்கள், இதை சொன்ன உடனே இல்லை இல்லை, Annual day-ன்னு சொன்னதுமே உங்க எல்லார் மண்டைக்குள்ள ஓடிட்டு இருக்க பாட்டு Dum Machale பாட்டு தான். மறக்க முடியுமா அந்த பாட்டை. இந்த லிஸ்ட்ல வேற என்ன பாட்டுலாம் இருக்குன்னு கேட்ட Made in India, சைய்யா சைய்யா, டால் சே டால் மிலா, டோல ரே டோல ரே, ஹன்னி பன்னி,-ன்னு பல பாடல்கள் இருக்கு. இதெல்லாம் சொல்லி முடிக்கும் போதே அந்த மொமெண்ட் எல்லாம் கண்ணு முன்னாடி வந்து போகுது.

இது எல்லாத்தையும் தாண்டி, Annual Day டான்ஸ் ஆடும்போது தான் நமக்குள்ள ஒரு டான்சர் இருக்கறது நமக்கே தெரியும். இதுல டான்ஸ் ஆடி அதுக்கு அப்புறம் பெரிய டான்சர் ஆன கதைகளாமும் சிலர் கிட்ட இருக்கும். இது எல்லாத்தையும் தாண்டி இப்போ நினைச்சாலும் நமக்குள்ள ஒரு ஸ்பார்க் வந்து போறது தான் இதோட சிறப்பு.

கண்டிப்பா இந்த வரிசையில நிறையா பாட்டு மிஸ் ஆகி இருக்கும்.

அப்படி நான் என்ன பாட்டு மிஸ் பண்ண இல்லை  நீங்க என்ன பாட்டுக்கு டான்ஸ் ஆடுன ஞாபகம் இருக்கோ அதை கமெண்ட்ல சொல்லுங்க. முடிஞ்சா அந்த க்ரூப் டான்ஸ் போட்டோஸை கூட கமெண்ட்ல போட்டு, உங்க ஃப்ரெண்ட்ஸை டேக் பண்ணுங்க. 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top