கடந்த, 2005-ம் ஆண்டின் இதே நாளில் வெளியான ‘சண்டக்கோழி’க்கு அந்த வருடத்தின் சினிமாக்களில் முக்கிய இடம் உண்டு. தியேட்டரில், 200 நாட்களுக்கு மேல் ஓடி சாதனை படைத்தது.
- ஆனந்தம், ரன் என அடுத்தடுத்து மெகா ஹிட்களைக் கொடுத்த, இயக்குனர் லிங்குசாமிக்கு ஜி படம் தோல்வியைக் கொடுக்கவே, நிச்சயமாக வெற்றியைக் கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்தார், லிங்குசாமி.
- ஜி படப்பிடிப்பு சமயத்தில் சண்டக்கோழி படத்தின் கதையைத் தயார் செய்திருந்த லிங்குசாமி விஜய் மற்றும் சூர்யாவிடம் கதையைச் சொல்லியிருந்தார்.
- அப்போது விஜய், சூர்யா இருவரின் கால்ஷீட் பிரச்னையால் இந்த கதைக்கு ஒரு புதுமுகம் தேடிக் கொண்டிருந்தார், லிங்குசாமி.
- அந்த நேரத்தில் நடிகர் விஷால் அப்பாவின் கம்பெனிக்காக ஒரு படம் பண்ணும் வாய்ப்பும் வந்தது. அந்த வாய்ப்பில் சண்டக்கோழி கதைக்குள் வந்தார், விஷால்.
- புதுமுக நடிகரை வைத்து ஒரு ஆக்ஷன் கதை என்பதால் லிங்குசாமி தவிர யாருக்கும் அந்த படத்தில் பணியாற்ற விருப்பமில்லையாம். லிங்குசாமியின் சாமர்த்தியத்தால் சண்டக்கோழி ஆரம்பமானது.
- சண்டக்கோழி படத்துக்காக சுமார் 3 வருடங்களாக விஷால் காத்திருந்து நடித்தார்.
- ஹீரோ கமிட், அடுத்தது ஹீரோயின் தேடும் படலம் ஆரம்பமானது, லிங்குசாமியும், விஷாலும் மும்பை பறந்தனர். தீபிகா படுகோனேவுக்குக் கதை சொல்லி, கதை பிடித்துப்போக அவர் கேட்ட சம்பளத்தைக் கேட்டு சென்னைக்கு ரிட்டர்ன் ஆகியிருக்கின்றனர், விஷாலும், லிங்குசாமியும்.
- எதேச்சையாக லிங்குசாமியின் அலுவலகத்தில் நடிகை மீராஜாஸ்மின் சண்டக்கோழி கதையைக் கேட்க ‘நான் ஏன் நடிக்கக் கூடாது’ என்று கேட்க ஹீரோயினும் முடிவு செய்யப்பட்டு, அடுத்ததாக மற்ற நடிகர்கள் ஒப்பந்தம் செய்யப்பட்டு படம் ஆரம்பித்தது.
- இப்படத்தில் இடம்பெற்ற, விஷால் – மீரா ஜாஸ்மின் காதல் காட்சி வெகுவாக ரசிக்கப்பட்டது.
- முதல் பாதியில் விஷால் ஹீரோ… இரண்டாம் பாதியில் ராஜ்கிரண் ஹீரோ என்று சொல்லும் அளவுக்கு சண்டக்கோழி படத்துக்கு ஆணிவேராக இருந்தார், ராஜ்கிரண்.
- விஷாலைப் பட்டிதொட்டியெங்கும் கொண்டு சென்ற சேர்த்த பெருமை சண்டக்கோழிக்கும், அதன் இயக்குநர் லிங்குசாமிக்குமே சேரும்.
- அந்த படத்தின் மற்றொரு முக்கியமான தூணாகத் தாங்கிப் பிடித்தது, யுவன் சங்கர் ராஜாவின் இசை. அந்த வருடத்தின் பெஸ்ட் தீம் வரிசையில் சண்டக்கோழி தீம் சாங்குக்கு முக்கியமான இடம் உண்டு. யுவனின் மாஸ் பிஜிஎம்களில் இதுவும் ஒன்று.
Also Read – `மென்குரல் அரசன்’ ஹரிஹரன் ரசிகர்களே… உங்களுக்கான சின்ன டெஸ்ட்!