இருபதாம் நூற்றாண்டில் இந்தியாவின் பெருமைமிகு அடையாளங்களுள் முக்கியமானவர் எம்.ஜி.ஆர் என்ற மூன்றெழுத்து இனிஷியலோடு அடையாளப்படுத்தப்படும் எம்.ஜி.ராமச்சந்திரன்.
எம்.ஜி.ஆர்
பொன்மனச் செல்வர்’,
புரட்சித் தலைவர்’ இப்படி எத்தனையோ பெயர்களில் ரசிகர்களால் கொண்டாடப்படுபவர் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்.படங்களைப் பொறுத்தவரை, அட்ராக்டிவ்வான அவர் ஏழைகளுக்கான சேவையில் உயிர் துறக்கவும் தயாராக இருப்பதாக அவரது கேரக்டர் உருவகப்படுத்தப்பட்டிருக்கும். நிஜ வாழ்வில் லெஜண்டாகவே வாழ்ந்த எம்.ஜி.ஆர், தனது திரைவாழ்வுக்கும், அரசியலுக்கும் அடிப்படையாக இருந்த இமேஜைக் கட்டமைத்துக் கொண்டவர். தனது இமேஜை எந்த இடத்திலுமே விட்டுக் கொடுக்காதவர். அப்படி இமேஜ்களால் தன்னைக் கட்டமைத்துக் கொண்ட எம்.ஜி.ஆரை, பெரிய திரையில் உருவகப்படுத்திய படங்களில் முக்கியமானவை இரண்டு. மணிரத்னம் இயக்கத்தில் 1997-ம் ஆண்டு வெளியான இருவர் மற்றும் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான `தலைவி’. இதில், இருவர் படத்தில் இடம்பெற்ற ஆனந்தன் கேரக்டர் அதிகாரப்பூர்வமாக எம்.ஜி.ஆர் கேரக்டர்தான் என்று அறிவிக்கப்படாவிட்டாலும், அவரின் ரியல் லைஃப் ஈவெண்ட்ஸ்களை அடிப்படையாக வைத்தே எடுக்கப்பட்டது. படத்தில் ஆனந்தன் கேரக்டரில் மோகன்லால் நடித்திருப்பார். அதேபோல், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்றைத் தழுவி எடுக்கப்பட்ட தலைவி படத்தில் எம்.ஜி.ஆர் கேரக்டரில் அரவிந்த்சுவாமி நடித்திருந்தார்.மோகன்லால், அரவிந்த்சாமி என இவர்கள் இருவரில் எம்.ஜி.ஆர் கேரக்டரில் அசத்தியது யார்… யார் சூப்பர் எம்.ஜி.ஆருனு 3 பாயிண்டுகளை அலசி தெரிஞ்சுக்க முயற்சி பண்ணுவோம்.
கேரக்டரைசேஷன்
எம்.ஜி.ஆர் மலையாளப் பின்னணி கொண்ட குடும்பத்தில் பிறந்து தமிழகத்தின் ஆட்சிக் கட்டிலில் அமர்ந்தவர். இந்த கேரக்டரில் கனகச்சிதமாக மோகன்லால் பொருந்திப்போவார். கரியரின் ஆரம்ப காலகட்டங்களில் ஸ்டூடியோ ஸ்டூடியோவாக சான்ஸ் கேட்டு அலைவதாகட்டும், புரடியூசர்களின் கார் கதவுகளைத் திறந்துவிட்டு கையெடுத்துக் கும்பிட்டு வாய்ப்புக் கேட்பதாகட்டும், பின்னாட்களில் ஒரு ஸ்டார் நடிகராக உயர்ந்தபோது மெஜஸ்டிக் லுக்கோடு நடந்துகொள்வதாகட்டும் மோகன்லால் திரையில் எம்.ஜி.ஆராகவே வாழ்ந்திருப்பார். அதேபோல், தலைவியில் எம்.ஜி.ஆர் கேரக்டரை ஏற்று நடித்திருந்த அரவிந்த்சுவாமி, அவரைப் போலவே பளிச்சென்ற நிறம் கொண்டவர். தலைவி படத்தில் எம்.ஜி.ஆரின் ஆரம்பகால கட்டங்கள் பற்றிய காட்சிகள் இருக்காது. ஜெயலலிதாவுடன் முதன்முதலில் இணைந்து நடித்த ஆயிரத்தில் ஒருவன் காலகட்ட எம்.ஜி.ஆராகத்தான் அறிமுகமாவார். அதன்பின்னர், எம்.ஜி.ஆர் தனது வாழ்நாளில் எப்படியிருந்தார் என்பதை தன்னால் முடிந்தவரை திரையில் சிறப்பாகவே கொண்டுவந்திருப்பார் அரவிந்த்சுவாமி. ஜெயலலிதாவுடனான உரையாடல்கள், ஷூட்டிங் ஸ்பாட்கள், கட்சி தொடங்கி முதல்வராவது என எம்.ஜி.ஆர் வாழ்க்கையின் செகண்ட் ஹாஃபை சிறப்பாகச் செய்திருப்பார். ஆனாலும், கேரக்டரைஷேசன் என்ற வகையில், இருவர் மோகன்லாலே முந்தி நிற்கிறார்.
நடிப்பு
திரையில் மிகப்பெரிய நட்சத்திரமாக ஜொலிக்கும் ஆனந்தன், நிஜவாழ்வில் வாய்ப்புகளைச் சரியாகப் பயன்படுத்திக் கொள்ளும் சாதாரண மனிதன்தான். இந்த இரண்டு எக்ஸ்டெண்டுகளையும் ரசிகர்களுக்குக் கடத்தி, நுட்பமாக அதன் வித்தியாசத்தையும் உணர வைத்திருப்பார். உதாரணமாக, கட்சியிலிருந்து நீக்கப்பட்டது தெரிந்தவுடன் அதிர்ந்துபோகும் சீனும், அண்ணா மறைந்தவுடன் மக்கள் முன் உணர்ச்சிகரமாக உரையாற்றும் சீனும், பின்னாட்களில் முதல்வராகப் பதவியேற்கும் போது பல்வேறு உணர்ச்சிகளையும் பிசிறில்லாமல் கடத்தியிருப்பார் மோகன்லால். இதுவரை அவர் நடித்த கேரக்டர்களில் ஐகானிக் கேரக்டர் என்றால், அது ஆனந்தன்தான் என்றே சொல்லலாம். இந்தப் பக்கம் தலைவி படத்தை எடுத்துக்கிட்டோம்னா, அரசியல்வாதியாக அவர் எப்படியிருந்தார் என்பதைவிட ஒரு நடிகராக எப்படியெல்லாம் இருந்தார் என்கிற எபிசோடில் அரவிந்த்சாமி சூப்பரா ஸ்கோர் செய்திருப்பார். வாள்சண்டை சீன் அதற்கு நல்ல எக்ஸாம்பிள். அதேபோல், குண்டடிபட்ட பிறகு ஜெயலலிதாவுடனான போன்கால் பேசும் சீனில் எக்ஸ்பிரஷன்களில் அசத்தியிருப்பார். மொத்தமாக நடிப்பு என்ற வகையிலும் அரவிந்த்சாமியை முந்தி மோகன்லாலே முன் நிற்கிறார்.
மேனரிசம் – டிரெஸ்ஸிங்
பொதுவாக எம்.ஜி.ஆர் என்றாலே அவரின் கறுப்பு நிற கண்ணாடியும், ஐகானிக் தொப்பியும்தான் நமக்கு சட்டென நினைவுக்கு வரும். நடிகராக இருக்கும்போதும் சரி, அரசியலுக்கு வந்தபிறகும் சரி எம்.ஜி.ஆரின் டிரெஸ்ஸிங்கில் தனித்தன்மை எப்போதுமே இருக்கும். வலது கையில் சட்டைக்கு மேல் வாட்ச் கட்டுவது, அவர் வணக்கம் சொல்லும் முறை, கைகளை வைக்கும் இடம் என அவரது மேனரிசமுமே கொஞ்சம் வித்தியாசமானது. டிரெஸ்ஸிங்கைப் பொறுத்தவரை மோகன்லாலும் சரி, அரவிந்த்சுவாமியும் சரி எம்.ஜி.ஆரை அச்சு அசலாக நம் கண்முன்னே கொண்டு வந்து நிறுத்தியிருப்பார்கள். டிரெஸ்ஸிங் என்கிற வகையில் இரண்டு பேருமே சரிசமமாக ஸ்கோர் செய்கிறார்கள்…
இப்படி பாயிண்ட் டு பாயிண்ட் பார்த்தால் மோகன்லால்தான் வின்னர் எனத் தோன்றும். ஆனால், அரவிந்த்சாமி நடித்தது ஜெயலலிதாவை மையப்படுத்திய ஒரு படத்தில். அதில் அவருடைய ஸ்க்ரீன் ஸ்பேஸ் முழு நீள ஹீரோ படம் அளவுக்கு கிடையாது.
கிடைத்த கொஞ்ச வாய்ப்பிலும் அசத்தலாகவே ஸ்கோர் செய்திருப்பார் அரவிந்த்சாமி. மோகன்லால் அளவுக்கான பெர்ஃபார்மர் இல்லை. அவ்வளவு நீண்ட அனுபவம் இல்லை. ஆனாலும், ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள படத்துக்காக அரவிந்த்சாமி கொடுத்த உழைப்பு நம்ப முடியாதது. எனவே. இந்த ஒப்பீட்டில் இருவருக்கும் `draw the match’ என்றுதான் சொல்ல வேண்டும்..
ஆகவே இருவருமே வின்னர்தான். இதில் உங்களுக்கு மாற்றுக் கருத்து இருந்தால். விரிவாக கமெண்ட் செய்யுங்கள்.