ஐஷ்வர்யா ரஜினிகாந்த ஃபிட்னஸில் அதிக ஆர்வம் கொண்டவர். வொர்க் அவுட் செய்யும் புகைப்படங்கள், சைக்கிளிங் செல்லும் புகைப்படங்கள் போன்றவற்றை தனது சமூக வலைதள பக்கங்களில் ஐஷ்வர்யா வழக்கமாக பதிவிடுவது உண்டு. அவ்வகையில், ஐஷ்வர்யா ரஜினிகாந்த் சைக்கிளிங் சென்ற புகைப்படம் ஒன்றை நேற்று தனது ட்விட்டரில் பதிவிட்டிருந்தார். அந்த புகைப்படத்தில் ஐஷ்வர்யா கையில் வைத்திருந்த தண்ணீர் பாட்டில் தற்போது சமூக வலைதளங்களில் பேசுபொருளாக மாறியுள்ளது. அப்படி அந்த புரோட்டீன் தண்ணீர் பாட்டிலில் என்ன ஸ்பெஷல் என்பதைத்தான் இந்த கட்டுரையில் தெரிந்துகொள்ளப் போகிறோம்.
புரோட்டீன் பவுடன் கலக்கப்பட்ட தண்ணீர் பாட்டிலைத்தான் ஐஷ்வர்யா தனது கையில் வைத்திருந்தார். இதை நெட்டிசன்கள் கூகுள் செய்து அதன் விலையைப் பார்த்து ஷாக் ஆகியுள்ளனர். ஆம், ஐஷ்வர்யா ரஜினிகாந்த் அருந்தும் புரோட்டீன் தண்ணீர் அரை லிட்டர் பாட்டிலின் விலை ரூ.150 மட்டுமே. என்னது 150 ரூபாயா? என நெட்டிசன்கள் வாய்ப்பிளந்தாலும், செலிபிரிட்டிகளுக்கு இது சாதாரண விஷயம்தான் என்றும் கமெண்டுகளை பதிவிட்டு வருகின்றனர். சரி, அந்த புரோட்டீன் தண்ணீரில் அப்படி என்ன ஸ்பெஷல் இருக்கிறது என்று இனி பார்க்கலாம்.
சமீப ஆண்டுகளில் பிரபலங்கள் மத்தியில் குறிப்பாக வொர்க் அவுட் செய்யும் பிரபலங்கள் மத்தியில் இந்த தண்ணீர் பிரபலமாக உள்ளது. வொர்க் அவுட் செய்த பிறகு ரீஹைட்ரேட் செய்ய இதனை அதிகளவு பயன்படுத்துகின்றனர். தாவரம், விலங்கு போன்றவற்றில் இருந்து பிரித்து எடுக்கப்படும் புரோட்டீன்களையும் இந்த தண்ணீர் தயாரிக்கப் பயன்படுத்துகின்றனர். புரோட்டீன் தண்ணீரில் கலோரிகள் குறைந்த அளவே உள்ளன. எலும்புகளை வலுப்படுத்த உதவும் கால்சியம், மெக்னீசியம் போன்ற தாதுக்கள் இதில் அதிகளவு உள்ளன. விட்டமின் பி 6, பி 12, சி மற்றும் டி போன்ற வைட்டமின்கள் இதில் நிறைந்துள்ளன.
சர்க்கரையின் அளவும் புரோட்டீன் தண்ணீரில் சிறிதளவு பயன்படுத்தப்படுகிறது. புரோட்டீன் சத்து அதிகம் தேவைப்படும் நபர்கள் இந்த நீரை அருந்தலாம். விளையாட்டு வீரர்கள், புற்றுநோய் சிகிச்சைப் பெறுபவர்கள் மற்றும் வயதானவர்கள் இந்த நீரை அதிகம் அருந்தலாம். அவர்களுக்கு இந்த தண்ணீர் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இந்த புரோட்டீன் தண்ணீரை வொர்க் அவுட் முடிந்த பிறகு குடிக்க வேண்டும். எடைக் குறைப்புக்கும் இந்த தண்ணீர் அதிகம் பயன்படுகிறது. ஷார்ட்டாக சொல்ல வேண்டும் என்றால் வொர்க் அவுட் செய்பவர்களும், விளையாட்டு வீரர்களும்தான் அதிக அளவில் இந்த தண்ணீரைக் குடிக்கின்றனர்.
சிறுநீரகக் கோளாறு உள்ளவர்கள், மெட்டாபாலிசப் பிரச்னைகள் உள்ளவர்கள், homocystinuria மற்றும் phenylketonuria போன்ற பிரச்னைகள் உள்ளவர்கள் புரதச் சத்துகளை குறைவாக எடுத்துக்கொள்ள வேண்டும். அவர்கள் கண்டிப்பாக இந்த தண்ணீரைக் குடிக்கக் கூடாது. பாலில் உள்ள புரதத்தை இந்த தண்ணீரில் பயன்படுத்துவதால் பால் சம்பந்தமான ஒவ்வாமை உள்ளவர்களும் இந்த தண்ணீர் குடிப்பதைத் தவிர்க்க வேண்டும். ஆனால், செலிபிரிட்டிகளால் மட்டுமே வாங்கக்கூடிய வகையில் இதன் விலை உள்ளதால் நடுத்தர மற்றும் கீழ்தட்டு வர்க்க மக்கள் இதனை வாங்கிக் குடிப்பது என்பது கனவுதான். எனவே, அவர்கள் இயற்கையாக நாம் அன்றாடம் உண்ணும் உணவில் அதிகம் புரோட்டீன் இருக்கும்படி பார்த்துக்கொள்வது சிறந்தது.
Also Read: ஆன்லைன் விளையாட்டுக்கு அடிமையாகும் சிறார்கள்… மீட்க இதுதான் வழி!
Smart bands can find activity but not the motivation for the activity (workout vs.
anxiety).