எம்.ஜி.ஆர் – சிவாஜி காலம் தொடங்கி ரஜினி – கமல், அஜித்-விஜய், சூர்யா, தனுஷ், சிவகார்த்திகேயன் வரை பல தலைமுறைகளாக தமிழ் சினிமாவில் பயணித்தவர் கவிஞர் வாலி. அவரை ஏன் வாலிபக் கவிஞர்னு சொல்றாங்க தெரியுமா… அந்த காலகட்டங்கள்ல எல்லாரும் கம்பெனி கம்பெனியா ஏறி சான்ஸ் கேட்டப்போ, அப்போவே சான்ஸ் கேக்குறதுல புதுமையும் செஞ்சிருக்காரு வாலி.. அது என்னனு தெரியுமா.. 1958ல இருந்து 2018 வரைக்கும் வாலியோட தமிழ் திரையுலகை ஆண்டுச்சுன்னே சொல்லலாம். இந்த வீடியோவுல வாலியை ஏன் வாலிபக் கவிஞர்னு சொல்றாங்கன்றதுக்கான 5 காரணங்களைப் பத்திதான் நாம தெரிஞ்சுக்கப்போறோம்.
* எல்லாருக்குமான வரிகள்
வாலி, எம்.ஜி.ஆர், சிவாஜி தொடங்கி கருணாநிதி, கண்ணதாசன் வரையில் அரசியலிலும் சினிமாவிலும் பரந்துவிரிந்த நட்பு வட்டத்தைக் கொண்டவர். தீவிரமான ஆத்திகவாதி. அவர் முருகனுக்கான எழுதின பாடல்தான் `கற்பனை என்றாலும்… கற்சிலை என்றாலும்… கந்தனே உனை மறவேன்’ பாட்டு. நாத்திகர்கள் மனம் கோணாமலும், அதேநேரம் தன்னுடைய நம்பிக்கையை அழுத்தமாக வெளிப்படுத்துவதிலும் வாலிக்கு ஈக்குவல் வாலிதான். பக்தி மட்டுமில்லீங்க, காதல், தாய் பாசம், தாய்மை, நட்பு, தத்துவம் என நம்ம கவிஞர் கைவைக்காத ஏரியாவே இல்லைனே சொல்லலாம். அடிமைப்பெண்ணில் வரும் தாயில்லாமல் நானில்லை தொடங்கி தளபதி, சின்னத்தாய் அவள், மன்னன் – அம்மா என்றழைக்காத உயிரில்லையே, நியூவில் வரும் காலையில் தினமும் கண்விழித்தால் வரை தலைமுறைகளாக இவர் எழுதிய அம்மா பாட்டுகள் அந்தந்த தலைமுறை ரசிகர்களால் கொண்டாடப்பட்ட எவர்கிரீன் சாங்ஸ். எம்.ஜி.ஆரின் அரசியலுக்குக் கட்டியம் சொல்ற மாதிரி இவர் எழுதின, மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும், நான் ஆணையிட்டால்; அது நடந்துவிட்டால் எல்லாமே இன்னிக்கும் எம்.ஜி.ஆர் ரசிகர்களோட ஆதர்ஸமான பாடல்கள். ‘வெற்றி வேண்டுமா போட்டுப்பாரடா எதிர்நீச்சல்’ன்ற பாட்டைவிட பெரிய மோட்டிவேஷன் சாங் இருக்கா என்ன? சிவாஜி
* அப்டேட் கில்லி
காதல் – கவிஞர்கள் பலரும் பல ஆங்கிள்களில் எழுதி, எழுதித் தள்ளிய ஒரு சப்ஜெக்ட். நீதான் எனக்கு எல்லாமே; உன்னைத் தவிர வேறெதுவும் இங்க இல்லை – இந்தக் கரு காலம்காலமா சொல்லப்பட்டு வர்றது. அதையே பல தலைமுறைகளா எழுதினாலும் காலத்துக்கு ஏத்த மாதிரி, ஒரு புதிய பார்வையோட சொன்னவர் கவிஞர் வாலி. `அவளுக்கென்ன அழகிய முகம்; அவனுக்கென்ன இளகிய மனம்; நிலவுக்கென்ன இரவினில் வரும்; இரவுக்கென்ன உறவுகள் தரும்; உறவுக்கென்ன
உயிருள்ளவரை தொடர்ந்துவரும்’ என ஆரம்ப நாட்களில் பாட்டெழுதிய வாலி, சுந்தரி கண்ணால் ஒரு சேதி என 90களிலும், பின் நாட்களில் ஜன்னலில் வழி வந்து விழுந்தது மின்னலின் ஒளி அதில் தெரிந்தது அழகு தேவதை அதிசய முகமே … (வெண்மதி வெண்மதியே நில்லு பாடல்க்) என்று எழுதினார். இப்படி காலத்துக்குத் தகுந்தபடி தன்னை அப்டேட் செய்துகொண்டு ரசிகர்களின் ரசனைக்கும் தீனிபோட்டவர் வாலி.
எம்.ஜி.ஆர் படத்துக்கு ஒரு பாட்டெழுதப் போய் மொத்தப் படத்துக்கான பாடல்களையும் எழுத இவருக்கு எப்படி சான்ஸ் கிடைச்சுனு சொல்றேன்… வீடியோவை முழுசா பாருங்க…
* தீர்க்கதரிசி
எதிர்காலத்தை முன்கூட்டியே சரியாகக் கணித்து, அதைத் தனது பாடல்களில் பொதிந்து ரசிகர்களுக்குக் கொடுத்தவர் நம்ம வாலி. கம்ப்யூட்டர்கள் ஆதிக்கம் பெரிதாக இல்லாத காலத்திலேயே எதிர்காலம் கம்ப்யூட்டர்களை வைச்சுதான்றதைச் சரியா கணிச்சவர் வாலி. காதலர் தினம் படத்தில் வரும் `ஓ மரியா’ பாடலில் `கம்ப்யூட்டரில் காதல் செய்யும் காதல் இது’னு ஒரு வரி எழுதியிருப்பார். அது எழுதப்பட்ட வருஷம் 1999. பாஸ்போர்ட்டே எடுக்காத வாலி எந்தவொரு வெளிநாட்டுக்கும் தனது வாழ்நாளில் சென்றதில்லை. ஆனால், `நியூயார்க் நகரம் உறங்கும் நேரம்’ எப்படியிருக்கும்னும், வட அமெரிக்காவின் மிஸிஸிப்பி நதியையும் தன்னுடைய பாடல்களில் உவமைகளாகக் கையாளத் தெரியும்.
* வைரல் நாயகன்
டிரெண்டிங், வைரல்ங்குற வார்த்தைகளுக்கான வயசு கம்மிதான். ஆனா, 1950களோட இறுதி தொடங்கி 2010-ஓட இறுதி வரைக்கும் வாலி பயன்படுத்தின வார்த்தைகள், அந்தந்த காலகட்டங்கள்ல வைரல்னே சொல்லலாம். இப்படி பல தசாப்தங்களாக, அந்தந்த தலைமுறைகள் கொண்டாடும் வரிகளைக் கொடுத்தவர் வாலி. ’கண் போன போக்கிலே கால் போகலாமா? கால் போன போக்கிலே மனம் போகலாமா?’ இப்படியும் எழுதுவார், டிரெண்டிங்கிலும் வைரலிலும் திளைக்கும் இன்றைய தலைமுறைக்கு அவர் கொடுத்த பாடல்கள் ஒன்றா, இரண்டா… நாளை என்றும் “உசேன் போல்டை போல் நில்லாமல் ஓடு கோல்ட் தேடி வரும்.. தேடி வரும்..
உந்தன் வாழ்விற்கு… ஒலிம்பிக்கைப் போலே.. வேர்வை தேடி வரும்’ என்றும் எழுதுவார். இப்படி, ரசிகர்களின் பல்ஸ் பிடிச்சு அதை பிரசண்ட் பண்ணுவதில் நம்ம வாலிபக் கவிஞர் வாலி, வைரல் நாயகன்தான். அதேமாதிரி, முக்காலா முக்காபுல்லா, முஸ்தஃபா முஸ்தஃபா, சல்சா பண்ணுங்கடாங்குற புரட்சி வார்த்தைகளையெல்லாம் கண்டுபிடிச்சு எழுதுனதுனது தன்னோட முதிய பிராயத்தில்தான்.
* எவர்க்ரீன் இளமைத் துள்ளல்
வாலி, தன்னுடைய அறுபது வயதுக்கு மேல் எழுதிய பல காதல் பாடல்கள், இளம் கவிஞர்களின் கற்பனைக்கே எட்டாத கோணத்தில் யோசித்து எழுதியிருப்பார். 2004-ல் வெளியான மன்மதன் படத்தில் இடம்பெற்ற ’தத்தை தத்தை தத்தை… பல அத்தை பெத்த தத்தை… அந்த தத்தைக்கெல்லாம் தைத்துவைத்தேன்… பூமெத்தை’ பாடலை எழுதியபோது நம் வாலிபக் கவிஞர் வாலியின் வயது 70-க்கும் மேல… விஜயோட கரியர் ஆரம்பகாலகட்டத்துல ரசிகன் படத்துல இவர் எழுதுன LOVE லவ் மாமா.. KISS கிஸ் மாமா, சூரியன் படத்துல எழுதுன `பதினெட்டு வயசு இளமொட்டு மனசு, `இந்து’ படத்தில் இடம்பெற்றிருந்த சக்கரவள்ளி கிழங்கு மாமா சமைஞ்சது எப்படி, இது நம்ம ஆளு படத்தின் `நான் ஆளான தாமரை’ என குறும்பு மொழியும் பேசுவார். சத்யாவில் வரும் ’வளையோசை கலகலவென’, தீனா நீயில்லை என்றால் வாழ்க்கையும் இல்லை… லேசா லேசா – ஏதோ ஒன்று ஏதோ ஒன்று உன்னை கேட்பேன், மின்னலே – வெண்மதி வெண்மதியே நில்லு உள்ளிட்ட பாடல்களில் காதல் ரசத்தையும் கொட்டியிருப்பார். அதுதான் வாலி. அவரின் பாட்டெழுதும் திறமையை சிம்பு லூஸுப்பெண்ணே பாட்டில் வாலி போல பாட்டெழுத எனக்குத் தெரியலியேனு ஒரு வரியாகவே வைத்திருப்பார்.
சரி மொதல்ல சொன்ன அந்தத் தகவல்களுக்கு வருவோம். அந்த காலகட்டங்கள்ல சினிமா வாய்ப்புத் தேடி கலைஞர்கள் ஒவ்வொரு புரடக்ஷன் கம்பெனியாக ஏறிக் கொண்டிருந்த நேரத்தில், இவர் தன்னைப் பற்றிய குறிப்பு, ஒரு பாடலுக்கான வரிகளோடு போஸ்ட் கார்டில் குறிப்பிட்டு அனுப்பினார். அந்த போஸ்ட் கார்டில் அவர் எழுதியிருந்த வரிகள், இன்று ஒலிக்காத கோயில்களே இல்லை என்றே சொல்லலாம். அந்த வரிகள், `கற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும், கந்தனே உனை மறவேன்’ பாடல். இந்தப் பாடல் வரிகளை பாடகர் டி.எம்.சௌந்தர்ராஜனுக்கு ஸ்ரீரங்கத்தில் இருந்து எழுதி அனுப்பியிருந்தார். `உனக்குத் திறமையிருக்கிறது. சென்னைக்கு வா’ என்று டி.எம்.எஸ் பதில் கடிதம் அனுப்பவே, சென்னைக்குப் பயணப்பட்டிருக்கிறார்.
அதேபோல, எம்.ஜி.ஆர் நடித்த படத்தில் ஒரு பாடலை எழுதும் வாய்ப்பு வாலிக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது. டியூனைக் கேட்டதும் சரசரவென பாடல் வரிகளை எழுதிக் கொடுத்திருக்கிறார். ரெக்கார்டிங் முடிக்கப்பட்ட அந்தப் பாடலைக் கேட்ட எம்.ஜி.ஆர், யார் இதை எழுதியது என்று கேட்டிருக்கிறார். வாலி என்றதும், எல்லாப் பாடல்களையும் அவரையே எழுதச் சொல்லுங்கள் என்று சொல்லிவிட்டாராம். அந்தப் படம் எம்.ஜி.ஆர் நடித்த படகோட்டி. அவர் முதலில் எழுதிக் கொடுத்த பாடல், பாட்டுக்கு பாட்டெடுத்து நான் பாடுவதைக் கேட்டாயோ பாடல். அந்தப் படத்தில், ஒருநாள் போவார்; ஒருநாள் வருவார்… ஒவ்வொரு நாளும் துயரம் என மீனவர்கள் படும் துயரத்தை வாலி எழுதியிருப்பார். அது இன்றைய சூழலுக்கும் பொருத்தமாகத்தானே இருக்கும்?
கவிஞர் வாலி 15,000-த்துக்கும் மேலான பாடல்களை எழுதியிருக்கார். ஹிட்டுகளுக்கு கணக்கே இல்லை. அவரோட பாடல்கள் பத்தி முழுமையா நம்மால பேசிடவே முடியாது. இருந்தாலும், எங்களால முடிஞ்ச வரை பல பாடல்களைப் பத்தி பேசியிருக்கோம். வாலிபக் கவிஞர் வாலியோட பாடல்கள்ல உங்களோட ஃபேவரைட் பாட்டு எதுனு மறக்காம கமெண்ட்ல சொல்லுங்க.
Also Read – இப்படியெல்லாம் யோசிக்க முடியுமா… கவுண்டமணியின் நேம் போர்டு மேஜிக்!