கவுண்டமணி நேம்போர்டுகள்

இப்படியெல்லாம் யோசிக்க முடியுமா… கவுண்டமணியின் நேம் போர்டு மேஜிக்!

தமிழ் சினிமாவின் ‘Counter’ கிங் நம்ம கவுண்டமணி. தன்னோட காமெடிகள் மூலமா சமூக அவலங்களையும் மூட நம்பிக்கைகளையும் சாடியிருப்பார். காமெடி மூலமா மக்கள்கிட்ட பல பிரச்னைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தியிருப்பார். கவுண்டமணி, தன்னோட கரியர்ல நடிச்ச பல படங்கள்ல தனியா பிஸினஸ் பண்றவரா நடிச்சிருப்பார். அந்த பிஸினஸுக்காக அவர் வைச்சிருக்க பெயர் பலகைகளே பல கதைகள் சொல்லும். கொஞ்சம் கவனிச்சுப் பார்த்தீங்கன்னா, நம்மூர் நக்கல், நைய்யாண்டிகளை வைச்சே அந்தக் கடைகளுக்கான பெயர்களை செலக்ட்  செஞ்சிருப்பார். ஒவ்வொரு நேம் போர்டும் கவுண்டமணியோட ஜீனியஸ்னஸை நமக்குச் சொல்லும்.

சோசியல் மீடியாவை ஸ்க்ரோல் பண்ணிட்டு இருந்தப்ப, கவுண்டமணி படங்கள்ல இருந்த நேம் போர்டுகளைப் பத்தின பதிவுகளைப் பார்க்க நேர்ந்துச்சு. சரினு நாமளும் கொஞ்சம் தேடிப்பார்ப்போம்னு பார்த்தா, நேம் போர்டுகளுக்காகவே மனுஷன் அப்படியொரு உழைப்பைப் போட்டிருக்காருனு புரிஞ்சது. சோசியல் மீடியாவே இல்லாத அந்த காலகட்டங்கள்ல அவர் நேம் போர்டுகள்ல மூலமா அவர் காட்டுன மேஜிக் பத்திதான் நாம இந்த வீடியோல பார்க்கபோறோம்.
கவுண்டமணி படங்கள்ல வந்த நேம் போர்டுகள் பத்தி மணிக்கணக்கா பேச வேண்டி வரும். அதனால, நாம இந்த வீடியோவுல 10  நேம்போர்டுகளைப் பத்தியும் அது இடம்பெற்ற சூழ்நிலை, அப்புறம் அதோட பின்னணியைப் பத்தியும் பார்ப்போம்.

வள்ளல் மளிகை ஸ்டோர்

கவுண்டமணி – ராமராஜன் காம்போவுல கரகாட்டக்காரன் காமெடிக்கு அப்புறமா நமக்கு இன்னொரு சீன் நினைவுக்கு வரும். அது, கவுண்டமணியோட குடும்பத்தையே பார்க்க வைச்சு ஒரு பெரிய வாழை இலைல ராமராஜன் சாப்பிடுற காமெடி சீன்தான் அது. பாட்டுக்கு நான் அடிமை படத்துல வர்ற சீன் அது. அந்தப் படத்துல எதுக்காகவும் செலவே பண்ணிடக் கூடாதுனு நினைக்குற கஞ்சன் கேரக்டர்ல கவுண்டமணி நடிச்சிருப்பாரு. ஆனால், அவர் வள்ளல் மளிகை ஸ்டோர்னு தன்னோட கடைக்கு பேர் வைச்சிருப்பாரு. நக்கல் புடிச்ச மனுஷன்ல.

அகில இந்திய தமிழ்நாடு இனிப்புகள்

பல படங்கள்ல கவுண்டமணி ஒரே பிஸினஸ் பண்ற மாதிரிதான் நடிச்சிருப்பாரு. ஆனா, 1989ல வந்த நினைவுச்சின்னம்ன்ற ஒரே படத்துல பல பிஸினஸ் மேன் அவதாரம் எடுத்துருப்பாரு. தமிழ்நாடு ஒரிஜினல் முட்டைக்கடை, அகில இந்திய தமிழ்நாடு இனிப்புக்கடை அப்டினு பல பிஸினஸ்கள் பண்ணுவாரு. செந்திலால பாதிக்கப்பட்டு ஒரு கட்டத்துல எந்த பிஸினஸும் இல்லாத நிலைமைலயும் தன்னோட கடைல `விரைவில் அடுத்த வியாபாரம் – இங்கனம் குண்டலகேசி’னு எழுதிப் போடுற நிலைமைக்குப் போவாரு.

குபேரன் & கோ

எங்கள் தாய்க்குலமே வருக படத்துல கிட்டத்தட்ட செகண்ட் ஹீரோ அளவுக்கு கவுண்டமணி பின்னி பெடலெடுத்துருப்பாரு. டிவி, ரேடியோ, ஃபேன் உள்ளிட்ட வீட்டு உபயோகப் பொருட்கள் விற்கும் அலேக் & கோ-வில் ஆரம்பத்தில் வேலைபார்க்கும் கவுண்டமணி, ஒரு குறிப்பிட்ட காலத்தில் குறுக்கு வழியில் சம்பாதித்து குபேரன் & கோ என்கிற பெயரில் தனது முதலாளி கடைக்கு எதிரே புதிய கடையைப் போடுவார். போலிகளைக் கண்டு ஏமாறாதீர்கள்; உண்மையைக் கண்டு ஒளியாதீர்கள், நாணயத்திற்கும் நம்பிக்கைக்கும் சிறந்த இடம் போன்ற துணை வாசகங்களும் இடம்பெற்றிருக்கும். குலுக்கு சீட்டு போட்டு முன்னுக்கு வரும் அவர், ஒரு கட்டத்தில் அதனாலேயே ஜெயிலுக்கும் போகும் நிலைக்குத் தள்ளப்படுவார்.  

விஷமுருக்கி வேலுச்சாமி – தென் நாட்டு வைத்தியர்

பாண்டியன் நடித்த மண்ணுக்கேத்த பொண்ணு படத்தில் விஷமுருக்கி வேலுச்சாமி என்கிற நாட்டு வைத்தியர் கேரக்டரில் கவுண்டமணி நடித்திருப்பார். `ஓம் பகவதி அம்மன் துணை’ – விஷமுருக்கி வேலுச்சாமி – தென் நாட்டு வைத்தியர் என்கிற பெயர் பலகையைக் காட்டிவிட்டுதான் கவுண்டமணியின் இன்ட்ரோ சீனே இந்தப் படத்தில் வரும். முதல் காட்சியிலேயே தெறிக்கவிட்டிருப்பார். எதுகை மோனையோடு, தென் நாட்டு வைத்தியர் என்கிற கேப்ஷனும் கவனத்தை ஈர்ப்பவை.

வணக்கம் – வந்தனம் வீடியோ கடை

இப்போதெல்லாம் கடைக்குப் பெயர் வைப்பதிலேயே வித்தியாசம் காட்டுவது ஒரு டிரெண்டாக இருக்கிறது. அந்த டிரெண்டை 1990-களிலேயே தொடங்கிவைத்தவர் நம்ம கவுண்டர். முரளி நடிப்பில் 1993-ல் வந்த மணிக்குயில் படத்தில் டிவி டெக் வாடகைக்கு விடும் பிஸினஸ் செய்பவர் கேரக்டர் நம்ம ஆளுக்கு. அந்த கடைக்கு வணக்கம் – வந்தனம் வீடியோ கடை என்று போர்டு வைத்திருப்பார். அத்தோடு, வைக்கப்பட்டிருக்கும் துணை போர்டில், ஒரு நாள் வாடகை, கடையில் முழுப் படம் பார்க்க, இடைவேளை வரை பார்க்க என்பதோடு ஒரு பாட்டு பார்க்க எவ்வளவு என்பதுவரையில் டீடெய்லாக வாடகையையும் குறிப்பிட்டு நைய்யாண்டி செய்திருப்பார்.

பாட்டு வைத்தியர் பச்சைமுத்து

மருத்துவமும் இசையும் ஒன்றிணைந்தால் எப்படியிருக்கும். அதுதான், பாட்டு வைத்தியர் பச்சைமுத்துவின் ஸ்டைல். தன்னிடம் வரும் நோயாளிகளுக்கு பிரிஷ்கிரிப்ஷனாக நாட்டு மருந்தோடு சிச்சுவேஷனுக்கு ஏத்தபடி ஒரு பாடலையும் பரிந்துரைப்பது பாட்டு வைத்தியரின் வழக்கம்.

ஆல்-இன்-ஆல் அழகுராஜ் சைக்கிள் கடை

கவுண்டமணியின் நேம் போர்டுகளிலேயே பயங்கர வைரல் இந்த நேம் போர்டு. எந்தளவுக்கு இது பேமஸ் என்றால், பல படங்களில் இந்தப் பெயரை ரெஃபரென்ஸாகப் பயன்படுத்தியிருப்பார்கள். பெட்ரமாக்ஸ் லைட்டின் மேண்டிலை செந்தில் உடைப்பதும், அதற்குப் பின்னர் பெட்ரமாக்ஸ் லைட்டேதான் வேணுமானு கவுண்டமணி பேசுற டயலாக்கும் ஃபேமஸான மீம் டெம்ப்ளேட்.

இதுதவிர, க.சே.க தலைமைக் கழகம், இன்டர்நேஷனல் இசக்கிமுத்து கடை, டிண்கு சைக்கிள் கடை, டிங் டாங் டீஸ்டால், சாக்ரடீஸ் சவுண்ட் சர்வீஸ், டைட்டானிக் டூவீலர் கிளீனிக், ஓஹோ ஸ்டூடியோ, சூரியன் படத்தில் மூன்று போஸ்டிங்குகளுக்குத் தனித்தனியாக வைத்திருக்கும் நேம் போர்டுகள், நியூ சித்தப்பு சலூன், மண்டையன் மளிகைக் கடை – ஒரிஜினல் என அவர் படத்தின் நேம் போர்டுகளைப் பட்டியலிட்டுக் கொண்டே செல்லலாம்.

இதில், உங்க ஃபேவரைட் நேம் போர்டு எது… அதுக்கான காரணம் என்னனு கமெண்ட்ல சொல்லுங்க..

Also Read – கவுண்டமணி – செந்தில் காமெடிகளில் ஆதிக்கம் செலுத்தியது யார்… அப்பாவியின் மறுபக்கம்!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top