ஆயிரம் அதிசயம் அமைந்தது பாபா ஜாதகம், நீ யாரு சொந்தக்காரன், யேய்ய்ய் வெளிய போ – இந்த டெம்ப்ளேட் எல்லாம் வைரலா சுத்திட்டு இருக்கும்போதுதான் பாபா ரீ ரிலீஸ் அனௌன்ஸ் பண்ணாங்க. பாபா ரீ ரிலீஸ்ல நிறைய சீன்களை கட் பண்ணி தூக்கியிருக்காங்க. ஆல்ரெடி சோஷியல் மீடியாவைப் பார்த்து என்னென்ன சீன்களை தூக்கியிருக்காங்கனு கொஞ்சம் தெரிஞ்சிருப்பீங்க. புதியா பாபா படத்துல இருந்து என்னென்ன சீன்களை மாத்தியிருக்காங்க. பழைய பாபா படம் பெஸ்டா? புதிய பாபா படம் பெஸ்டா? இதை தான் இந்த வீடியோல நாம பார்க்கப்போறோம்.
இண்ட்ரோ சீன்லயே கொஞ்சம் கட் பண்ணிட்டாங்க. பழைய பாபால “பாபா வந்துட்டு இருக்கான்”னு அம்மா சொன்னதும் ரயில் ஃபேக்டரில நடுவுல பாபா நின்னுட்டு இருப்பாரு. லாங் ஷார்ட்ல இருந்து கேமராலாம் வரும். டக்னு பாபா கை சின்னத்தை காமிப்பாங்க, அப்புறம் கண்ணை திறப்பாரு. ஆனால், புதிய வெர்ஷன்ல படம் ஆரம்பிச்ச உடனேயே புர்ரா சொல்லி பாட்டுக்கு போய்டுவாரு. டிப்பு டிப்பு பாட்டுலாம் என்னைக்கும் பெஸ்ட் தான். தியேட்டர்ல அப்படி கத்துறாங்க. புதுசா படம் வந்த மாதிரி, அப்போதான் ஒரு உண்மை புரிஞ்சுது, ரஜினி ஃபேன்ஸ் எல்லாருக்கும் பாபா மந்திரம் வரமா கிடைச்சா, பாபா, அண்ணாமலை, அருணாச்சலம் மாதிரிதான் தலைவர் படம் நடிக்கணும்னு சொல்லி வைச்ச மாதிரி கேப்பாங்க. இவங்களுக்கு கார்த்திக் சுப்ராஜ், நெல்சன், ஏ.ஆர்.முருகதாஸ் எல்லாம் செட் ஆகமாட்டாங்க. வாலி பால் ஃபைட் சீன் வரும்ல. அதுக்கு முன்னாடி கிரேன் மனோகர்கிட்ட கத்தியை கொடுத்து அனுப்பி பத்து எண்ற சீன் வரும். ஒரு பாட்டில் சரக்கை ஒரே மூச்சுல குடிச்சு முடிச்சிட்டு போவாரு. அந்த சீனை அப்படியே கட் பண்ணி தூக்கிட்டாங்க. இடத்தை இப்போ ராமசாமி மகன் ஆக்கிரமிச்சிருக்கான்னு தெரிஞ்சதும், எடுத்த உடனே ஃபைட்தான். அதுவும் நாங்க தியேட்டர்ல படம் பார்க்கும்போது, பக்கத்துல இருந்தவர் நினைவு தெரிஞ்ச நாள்ல இருந்து ரஜினி ஃபேன்னு சொன்னாரு. மகன், மனைவினு எல்லாரையும் படம் பார்க்க கூட்டிட்டு வந்திருந்தாரு. என்னப்பா, சைல்டிஷா இருக்குனு வார்த்தை போட்டு முடிச்சு விட்டுட்டான். அவரால எதுவும் சொல்ல முடியல. எப்பவுமே ரஜினி ஃபேன்ஸ் பாவம்தான்.
ரஜினி எப்பவுமே ரசிகர்களுக்குனு சில டயலாக்ஸ் வைப்பாரு. இந்தக் காலத்து ரஜினி ஃபேன்ஸ்க்கு அதுலாம் தெரியுமானு தெரியலை. ஏன்டா, உனக்கு மட்டும் தெரியுமா?னு கேக்றீங்க. பேசிகிட்டாங்க. எக்ஸாம்பிள்க்கு சொல்லணும்னா, பேட்ட படத்துல, கிளைமாக்ஸ்ல, இந்த ஆட்டம் போதுமா குழந்தைனு ஸ்கிரீனைப் பார்த்து டயலாக் சொல்லுவாரு. அதேமாதிரி பாபால 2,3 இடத்துல டயலாக் வரும். ஆட்டோல இருந்து இறங்கும்போது, ஆட்டோக்காரர்கிட்ட, “டேய், போய்டாத” அப்டினு பாபா ஸ்ட்ரிக்டா சொல்லுவாரு. அப்போ ஆட்டோக்காரர், “உன்னை விட்டுட்டு போவனா தலைவா?”னு ரிப்ளை பண்ணுவாரு. செமயா இருக்கும். ஆனால், அந்த சீன் புது வெர்ஷன்ல இல்லை. இதெல்லாம் வைச்சிருந்தா, அந்த காலத்து ரசிகர்கள் விசிலடிச்சதுலாம் செம மெமரியா இருந்துருக்கும். அப்படியே இறங்கி வந்து, தள்ளு வண்டிக்காரர் கிட்ட பேசும்போது, பேசாம எதாவது கட்சில சேர்ந்துடலாம்னு இருக்கேன்னு அவர் சொல்ல., ரஜினி துப்புவாரு. அப்போ, இதுலாம் செம கைதட்டல் இருக்கும். இந்த டயலாக்குக்காக இந்த சீனை அவர் இப்போ தூக்கியிருக்கலாம். அப்புறம், இப்போ ராமசாமி வர சொன்னாருனு சொன்னதும். எங்க சைதாபேட்டா, சௌகார்பேட்டானு கேப்பாரு. இதுவும் அரசியல்வாதிகளை அட்டாக் பண்ற மாதிரி அப்போ இருந்துச்சாம். இதையும் படத்துல இருந்து அலேக்கா தூக்கி வெளிய போட்டாங்க. இப்படி சின்ன சின்னதா அரசியல் போர்ஷன் நிறைய அப்போ இருந்த வெர்ஷன்ல இருந்துருக்கு. ரஜினி பீக்ல இருந்த டைம். அரசியலுக்கு வருவாரா மாட்டாரானு குழப்பம், விவாதம் இருந்த டைம். இந்த டயலாக்லாம் குதூகலமா ரசிகர்களுக்கு இருந்துருக்கும்.
இன்னைக்கும் மீம் டெம்ப்ளேட்டா, சொந்தக்காரங்க மேல கடுப்பு வரும்போதுலாம் ஸ்டேட்டஸா வைக்கிற சீன் பாபால ராஜேஷ்வரி வீட்டுக்கு காதலுக்கு கதம் சொல்லப்போற சீன்தான். நான்லாம் அந்த சீன்க்கு விசில் அடிச்சு கைதட்டலாம்னு போய் உட்கார்ந்தேன். ஆனால், எடிட்ல தூக்கிட்டாங்க. இருந்தாலும் அந்த சீனை வைச்சிருக்கலாம். அதேமாதிரி பாபால மொத்தம் 7 மந்திரம் வைச்சிருப்பாங்க. புது வெர்ஷன்ல மொத்தமே 5 மந்திரம்தான். ரெண்டு மந்திரத்துல பட்டம் வரும், ஒரு மந்திரத்தில 10 லட்சம் வரும், மீதி ஒண்ணுல ஏரியா ரோடுலாம் போட்டு புதுமை ஆயிடும், கடைசி மந்திரம்ல கந்தன் ஐயாவை முதல்வர் ஆக்க பயன்படுத்துவாரு. படையப்பாவை நினைவுபடுத்துற ஃபேன் மொமண்ட் சீனா நீலாம்பரி வர்றது பழைய படத்துல வைச்சிருப்பாங்க. அதை தூக்கிட்டாங்க. அப்புறம், அந்த ஜப்பான் பொண்ணுக்கு கல்யாணம் ஆனதும் மாப்ளைக்கு உயிருக்கு ஆபத்து வரும். அதைக் காப்பாத்த பயன்படுத்துவாரு. இந்த ரெண்டும் புது வெர்ஷன்ல இல்லை. அப்புறம் சிம்க்கு முன்னால நாதஸ்வரம் வாசிச்சா கவுரம், சி.எமே நாதஸ்வரம் வாசிச்சா கேவலம்யா டயலாக், ஷேவ் பண்ணி பாரு சின்ன பையனா தெரிவாருனு வர்ற டயலாக் எல்லாம் தூக்கிட்டாங்க. உப்பிட்ட தமிழ் மண்ணை நான் மறக்க மாட்டேன் பாட்டுல, “முடிவெடுத்த பின்னால் நான் தடம் மாற மாட்டேன், முன் வைத்த காலை பின் வைக்க மாட்டேன்” வரிகளை அப்படியே கட் பண்ணி கண் காணாத தூரத்துல தூக்கி போட்டுட்டாங்க. ஏன்னா, உங்களுக்கே தெரியும். அப்புறம், இவன் வசம் இருந்தது ஏழு வரம் வரிகளையும் தூக்கிட்டாங்க. மந்திரம் தெரிஞ்ச பிறகு இவரை அடிக்க ஆள் அனுப்புவாங்க. அப்போ, துண்டுல கல்லை கட்டிலாம் அடிப்பாரு. அந்த சீனையும் தூக்கிட்டாங்க.
Also Read – `வெரைட்டி பெர்ஃபார்மர்’ நடிகை மீனா கதை!
கிளைமாக்ஸையும் அப்படியே மாத்திட்டாங்க. ஏன்னா, அவருக்கு அப்போ அரசியல் ஆசைலாம் இருந்துச்சு. இப்போ அதெல்லாம் வேணாம்னு விலகிட்டாரு. மக்களை போய் பார்த்துட்டு முடிவு பண்ணுனு பாபா ஜி அவரை கீழ அனுப்பி வைப்பாரு. மக்களை பார்த்துட்டு இமயமலைக்கு திரும்ப போவாரு. ஆனால், கந்தனை சுட்டு கொன்றுவாங்க. அதைப் பார்த்துட்டு உப்பிட்ட தமிழ் மண்ணை பாட்டுப் போட்டுட்டு திரும்ப மக்கள் பக்கம் பார்த்து நடக்க ஆரம்பிப்பாரு. ஆனால், புது வெர்ஷன்ல அப்படியே மாத்திட்டாங்க. அம்மாவோட ஆசைகளை நிறைவேத்தணும், அடுத்த ஜென்மத்துல பிறந்து அவங்க மனசை குளிர வைச்சிட்டு வா. அப்போ, நானே உன்னை ஏத்துக்குறேன்னு அனுப்பி வைப்பாரு. இப்படி புது வெர்ஷன் முடியும். நடந்து வரும் போது படத்தை முடிச்சிருவாங்க. அப்போ, இருந்த அரசியல் சூழல், ரஜினி மீது இருந்த எதிர்பார்ப்பு எல்லாம் வைச்சு படம் எடுத்து ரிலீஸ் பண்ணியிருக்காரு. நிறைய காரணங்களால அப்போ சரியா போகலை. ஆனா, ரஜினிக்கு பெர்சனலா புடிச்ச படம் பாபாதான். அதுனாலதான் இந்தப் படத்தை இப்போ அவர் ரிலீஸ் பண்ண முடிவு எடுத்துருப்பாரு. இந்த சூழல்ல, இப்போ இருக்குற டிரெண்டுக்கு பாபா கனெக்ட் ஆகாதுதான். ஆனால், அவரோட ஃபேன்ஸ்க்கு என்னைக்கும் அவரோட படங்கள் ட்ரீட்தான். அதனால, பழைய பாபாவா, புதிய பாபாவா? எது பெஸ்ட்னு கேட்டா, முடிவு பண்றது நாம இல்லை. சூழல்தான். மொத்தத்துல அவர் ஃபேன்ஸ் ஹேப்பி. அவ்வளவுதான்.
ரஜினியோட பாட்ஷா, பாபாலாம் ரீ ரிலீஸ் பண்ணிட்டாங்க. அடுத்த பிறந்தநாளுக்கு எந்தப் படத்தை ரிலீஸ் பண்ணா நல்லாருக்கும்னு நீங்க நினைக்கிறீங்கன்றதை கமெண்ட்ல சொல்லுங்க.