மேஷம் முதல் மீனம் வரை… உங்க ராசிக்கு இந்த வாரம் எப்படியிருக்கும்னு தெரிஞ்சுக்கலாமா?
மேஷம்
குடும்பத்துடன் இந்த வாரம் சந்தோஷமாக நேரம் செலவிடப் போகும் மேஷ ராசி நண்பர்கள், உங்களுக்கு நல்ல செய்திகள் வந்து சேரும் வாரம் இது. பொருளாதாரரீதியாக வலு சேரும். வேலை பாக்குற இடத்துல சக ஊழியர்களோட நல்ல ரிலேஷன்ஷிப் மெயிண்டெய்ன் பண்றது நல்லது. புரடக்டிவ்வா வேலை பாக்கணும்னு நினைச்சீங்கன்னா, தேவையில்லாத குழப்பம், பிரச்னைகள்ல இருந்து தள்ளியே நிக்குறது சேஃப். வாரத்தோட கடைசியில சின்னச் சின்ன பிரச்னைகள் வர்றதுக்கு வாய்ப்பிருக்கு. உஷாரா இருங்க!
ரிஷபம்
வேலை பாக்குற இடத்துல கொஞ்சம் வொர்க் லோட் ஜாஸ்தியாக வாய்ப்பிருக்கு. வேலை, கரியர் விஷயத்துல பொதுவா ஒரு சின்ன மனக்கஷ்டம் வரலாம். மற்றபடி இந்த வீக் உங்களுக்குப் பெரிய பிரச்னைகளும் இருக்காது. ஆவரேஜா இருக்க வாய்ப்புகள் அதிகம். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாப் போகும். செலவுகள் அதிகமாப் பண்ண வேண்டிய சூழல் ஏற்படும். நீங்க பார்த்த ஒரு வேலைக்கான அங்கீகாரமும் மதிப்பும் வாரத்தோட இறுதியில கிடைக்கலாம்.
மிதுனம்
வாரத்தோட தொடக்க நாட்கள்ல உடல்ரீதியாவும் மனரீதியாவும் உங்களுக்கு சின்ன பிரச்னைகள் வரலாம். செலவு அதிகமா இருக்கதால கொஞ்சம் மனசு பாரமாவும் இருக்கும். வாரத்தோட மத்தியில் உங்களுக்கான குட்நியூஸ் காத்திருக்கும். வேலை பாக்குற இடத்துல வர்ற பிரச்னைகளை ஈஸியா ஹேண்டில் பண்ணிடுவீங்க.
கடகம்
பண வரவுக்காகக் கொஞ்சம் எக்ஸ்ட்ரா எஃபோர் போட வேண்டி வரலாம். மாத சம்பளம் வாங்குறவங்களுக்கு இது பாசிட்டிவ்வான வாரம். உங்கள் நண்பர்கள், ஆபிஸ் கொலீக்ஸ் கூட தேவையில்லாத வாதத்தை அவாய்ட் பண்ணிடுங்க. குடும்ப வாழ்க்கை நல்லாவே போகும். ஆனால், உங்க லைஃப் பாட்னரோட சின்னச் சின்ன பிரச்னைகள் வர்றதுக்கும் வாய்ப்பிருக்கு. உங்க பாட்னரோட ஹெல்த்தை நல்லா கவனிச்சுக்கோங்க.
சிம்மம்
இந்த வாரம் நீங்க தொட்டதெல்லாம் துலங்கும். வெற்றியே வந்து சேரும். ரொம்ப லக்கியான வீக் இது. வேலை பாக்குற இடத்துல சாதகமான செய்திகள் வந்து சேரும். கொலீக்ஸ் உதவிக்கு வந்து நிப்பாங்க. எதிரியா நீங்க நினைக்குறவங்க விஷயத்துல கொஞ்சம் கவனமா இருங்க. பண வரவு இருக்கும். லவ்வர்ஸ்க்கு இடையேயான பிரச்னை நீங்கி பழையபடி ரிலாக்ஸாவீங்க. உங்க பாட்னர் ஸ்பெஷலா உங்களை உணரவைப்பாங்க. வாரத்தோட கடைசியில கொஞ்சம் செலவு அதிகமாக வாய்ப்பிருக்கு.
கன்னி
உடல்நலப் பிரச்னைகள் விஷயத்துல நல்ல முன்னேற்றம் இருக்கும். வேலை பாக்குற இடத்துல நல்ல ரிசல்ட் கிடைக்கும். மாத சம்பளக்காரர்கள் பணியிடத்தில் அங்கீகாரம் பெறுவார்கள். புரமோஷன் போன்ற உயர் பதவி கிடைக்க வாய்ப்பிருக்கு. மூத்த சகோதரருடன் பிரச்னைகள் எழ வாய்ப்பிருக்கு. அதைக் கவனமா ஹேண்டில் பண்ணுங்க. ஏற்கனவே பேசப்பட்ட ஒரு டீல் உங்களுக்கு இந்த வாரம் கைகூடும். அதனால், பண வரவும் இருக்கும். கவனக்குறைவா இல்லாம ஆக்டிவ்வா இருக்க வேண்டிய வாரம் இது.
துலாம்
வாரத்தோட முதல் சில நாட்கள்ல வேலை சம்மந்தமா சில பிரச்னைகள் வர வாய்ப்பிருக்கு. அதனால, எதைப்பத்தியும் வாய் திறக்குறதுக்கு முன்னாடி கவனமாப் பேசணும்ன்றதை நினைவில் வைச்சுக்கோங்க. வாரத்தோட மத்தியில் நிலைமை உங்களுக்கு சாதகமா மாறும். பண விஷயங்கள்ல சாதகமாகப் பல விஷயங்கள் நடக்கும். உங்கள் லைஃப் பாட்னர், உங்க ராசியால நல்ல பலன்களைப் பெறுவாங்க. ஸ்டூடண்ட்ஸ்க்கு இது ரொம்பவே புரடக்டிவ்வா இருக்கப்போற வாரம்.
விருச்சிகம்
வேலையால் ஸ்ட்ரெஸ் வர்ற வாய்ப்பிருக்கு. அதனால, உங்க ஹெல்த் விஷயத்துல அலட்சியமா இருக்க வேண்டாம். அதேநேரம், நினைக்குற அளவுக்கு இல்லாம வேலை ஸ்மூத்தாகப் போகும். மாத சம்பளக்காரர்களுக்கு ரிலாக்ஸா இருக்கும். ஆனால், பிஸினஸில் இருப்போருக்கு பண விஷயமாக சின்ன பிரச்னைகள் ஏற்பட வாய்ப்பு இருக்கு. ஃபேமிலி மெம்பர்ஸோட நல்லிணக்கமா இருங்க. வாரத்தோட கடைசியில சில தேவையில்லாத செலவுகள் வரலாம்.
தனுசு
வேலை பாக்குற இடத்துல உங்க வேலையை முடிக்க கூடுதல் நேரம் உழைக்க வேண்டி வரும். பண விஷயத்துல எல்லாமே சிறப்பாவே இருக்கும். ஹெல்த் விஷயத்துல அஜாக்கிரதையா இருக்க வேண்டாம். சாப்பாடு விஷயத்துலயும் கவனமா இருங்க. பணியிடத்தில் உங்களுக்கு சாதகமான சூழல் ஏற்படும். பணம் மற்றும் நேரத்தை சில தேவையில்லாத விஷயங்கள்ல செலவழிப்பீர்கள். குடும்ப வாழ்க்கை ரொம்ப ரிலாக்ஸா இருக்கும்.
மகரம்
பணப்பிரச்னையைத் தீர்க்க மற்றவர்கள் உதவியை நாடும் சூழல் வரலாம். வேலை விஷயத்தில் எல்லாம் நார்மலாகவே இருக்கும். அதேநேரம், உங்களுக்குக் கொடுக்கப்பட்ட அசைன்மெண்டுகளை முடிக்க நீங்கள் கூடுதல் மெனக்கெட வேண்டி இருக்கும். உங்கள் குழந்தைகள் உடல்நலனில் கவனம் தேவை. லைஃப் பாட்னரோட சின்ன பிரச்னைகள் ஏற்பட வாய்ப்பிருக்கிறது. பிஸினஸ் விஷயத்தில் பெரிய முடிவுகளை இந்த வாரம் எடுக்க வேண்டிய சூழல் வரலாம்.
கும்பம்
இந்த வாரத்தின் தொடக்கத்தில் சில சிக்கல்கள் உங்களுக்கு ஏற்படலாம். ஆனால், அதிலிருந்து மீள்வீர்கள். வேலை விஷயத்தில் நீங்கள் கூடுதலாக உழைக்க வேண்டியிருக்கும். பிஸினஸில் எக்ஸ்பான்சனுக்கான வாய்ப்பு ஏற்படலாம். குடும்ப வாழ்க்கையில் பிரச்னை இருக்காது. கல்யாணத்துக்காகக் காத்திருப்போருக்கு நல்ல தகவல் கிடைக்கும். இந்த வாரம் உங்களுக்குப் பண வரவு இருக்கலாம். மாணவர்களுக்கு இந்த வாரம் புரடக்டிவ்வாக இருக்கும்.
மீனம்
இந்த வாரம் வேலை விஷயத்திலும், பணியிடத்திலும் கொஞ்சம் லெத்தார்ஜிக்காகக் கழியலாம். வாரத்தின் தொடக்கத்தில் தேவையில்லாத விஷயங்களால் தலைவலி ஏற்படலாம். பொருளாதாரரீதியாக எந்தப் பிரச்னைகளும் வருவதற்கு வாய்ப்பில்லை. நண்பர்களுடனும் மூத்த சகோதரர்களுடனும் தேவையில்லாத ஆர்கியூமெண்ட்டைத் தவிர்த்துவிடுங்கள். உங்க லைஃப் பாட்னரோடும் ஃபேமிலியோடும் இணக்கமாக இருப்பீர்கள்.
Also Read – தமிழ்நாட்டைப் பத்தி உங்களுக்கு எந்த அளவுக்குத் தெரியும்… செக் பண்ணலாமா?