Virat Kohli - Pujara

`அட்வான்டேஜ் நியூசிலாந்து’ – புஜாரா ஏன் அப்படிச் சொன்னார்? #WTCFinal #IndvsNZ

இந்தியா – நியூசிலாந்து அணிகள் மோதும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி இங்கிலாந்தின் சவுதாம்டனில் இருக்கும் ஏகஸ் பௌல் மைதானத்தில் வரும் 18-ம் தேதி தொடங்குகிறது.

கடந்த 2 ஆண்டுகளாக நடைபெற்ற உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் முடிவில் நியூசிலாந்து, இந்திய அணிகள் இறுதிப்போட்டிக்குத் தகுதிபெற்றன. லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெறுவதாக இருந்த இறுதிப்போட்டி கொரோனா சூழலைக் கருத்தில் கொண்டு தங்கும்விடுதியோடு கூடிய ஏகஸ் பௌல் மைதானத்துக்கு மாற்றப்பட்டது. இதற்காக இங்கிலாந்து சென்றிருக்கும் இந்திய அணி சவுதாம்டன் மைதானத்தில் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது. டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்கு முன்னதாக இந்திய அணி டெஸ்ட் போட்டிகளில் விளையாடாத நிலையில், விராட் கோலி – கே.எல்.ராகுல் தலைமையில் இரண்டு அனிகளாகப் பிரிக்கப்பட்டு, தங்களுக்குள்ளாகவே பயிற்சிப்போட்டியில் விளையாடினர். பேட்டிங்கில் சுப்மன் கில், ஜடேஜா உள்ளிட்டோர் அசத்த, பௌலிங்கில் முகமது சிராஜ், ஸ்ரதுல் தாக்குர் உள்ளிட்டோர் மிரட்டினர். இந்திய அணி இறுதியாகக் கடந்த மார்ச்சில் நடைபெற்ற இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்குப் பின்னர் டெஸ்ட் போட்டிகளில் விளையாடவில்லை. ஐபிஎல் தொடரில் விளையாடி வந்த நிலையில், கொரோனா சூழலால் அந்தத் தொடர் பாதியிலேயே நிறுத்தப்பட்டது.

Pujara

அதேநேரம், டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்கு முன்பாக நியூசிலாந்து அணி இங்கிலாந்துக்கு எதிராக 2 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது. அந்தத் தொடரை 1-0 என்ற கணக்கில் வென்ற நியூசிலாந்து, 1999-ம் ஆண்டுக்குப் பிறகு இங்கிலாந்து மண்ணில் டெஸ்ட் தொடரை வென்று சாதித்திருக்கிறது. இதைக் குறிப்பிட்டுப் பேசிய இந்திய அணியின் பேட்ஸ்மேன் சட்டீஸ்வர் புஜாரா, “இறுதிப் போட்டிக்கு முன்பாக இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடியிருப்பதால், அவர்களுக்கு அட்வான்டேஜ் இருக்கும். ஆனால், இறுதிப் போட்டி என்று வருகையில் நாங்கள் நிச்சயம் எங்களுடைய பெஸ்டைக் கொடுப்போம். இந்த டீம், டெஸ்ட் சாம்பியன்ஷிப்பை வெல்லும் திறன் படைத்தது.

அதனால், அதைப்பற்றி நாங்கள் கவலைப்படப் போவதில்லை. பிராக்டீஸுக்காகக் கிடைத்திருக்கும் 10-12 நாட்கள்தான் எங்கள் ஃபோகஸ். பயிற்சிப் போட்டியிலும் விளையாடப்போகிறோம். இந்த நாட்களை சிறப்பான முறையில் பயன்படுத்திக் கொண்டு, இறுதிப்போட்டிக்கு சிறப்பாகத் தயாராவோம்’’ என்று கூறினார்.

இங்கிலாந்தின் காலநிலைக்கு ஏற்றவாறு அட்ஜஸ்ட் செய்துகொள்வதே வீரர்களுக்கு மிகப்பெரிய சவால் என்று குறிப்பிட்ட புஜாரா, “ஒரே நாளில் பல்வேறு காலநிலைகள் மாறுவதற்கேற்ப அட்ஜஸ்ட் செய்துகொண்டு விளையாடுவதுதான் வீரர்களுக்கு சவாலான காரியம். திடீரென மழை பொழியும். அப்போது நீங்கள் ஃபீல்டை விட்டு வெளியேற வேண்டும். சிறிது நேரத்திலேயே அந்த சூழல் மாறி வெயில் கொளுத்தும். அப்போது மைதானத்தில் இறங்கி விளையாட நீங்கள் தயாராக இருக்க வேண்டும். தனிப்பட்ட முறையில் டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் விளையாடுவதில் பெரிய மகிழ்ச்சி. கிரிக்கெட்டின் கடினமான ஃபார்மேட்டான டெஸ்டில் மட்டுமே நான் விளையாடுகிறேன். இந்த இடத்துக்கு வருவதற்கு ஒரு அணியாக கடந்த 2 ஆண்டுகளாக நாங்கள் கடுமையான முயற்சிகளை மேற்கொண்டிருக்கிறோம். அதனால், அணியின் ஒவ்வொரு வீரரும் இதற்காகத் தயாராகி இருக்கிறார்கள்’’ என்றும் அவர் கூறினார்.

Also Read – ஒரே நேரத்தில் 2 தொடர்கள்.. 2 வெவ்வேறு அணிகள்… இந்திய அணியின் அப்ரோச் சொல்லும் சேதி?

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top