எலெக்ட்ரிக் கார்

Electric Car: எலெக்ட்ரிக் கார் வாங்கும் முன் கவனிக்க வேண்டிய 7 அம்சங்கள்!

எலெக்ட்ரிக் கார்கள்தான் எதிர்காலம் என்றாகிவிட்டது. சுற்றுச்சூழலை மாசுபடுத்தாத எலெக்ட்ரிக் வாகனங்கள் சாலைகளில் ஓடத் தொடங்கியிருக்கின்றன. வரும் காலங்களில் இவை முழுமையாக ஆக்கிரமிக்கும் என்பதில் சந்தேகமில்லை. எலெக்ட்ரிக் கார்கள் வாங்கும் முன்னர் கவனிக்க வேண்டிய 7 அம்சங்கள்.

விலை

எலெக்ட்ரிக் கார்கள் சுற்றுச்சூழலை மாசுபடுத்தாத தன்மை கொண்டவைதான். ஆனால், பெட்ரோல், டீசல் கார்களை ஒப்பிடுகையில் விலையோ பன்மடங்கு அதிகம். மிகச்சிறிய ஹேட்ச் பேக் எலெக்ட்ரிக் காரே ரூ.6 லட்சத்துக்கு மேல் என்பதால், பட்ஜெட்டை மனதில் வைத்து காரைத் தேர்வு செய்யுங்கள்.

எலெக்ட்ரிக் கார்
எலெக்ட்ரிக் கார்

வரிச் சலுகை – ஊக்கத் தொகை

எலெக்ட்ரிக் கார்கள் வாங்குவதை ஊக்குவிக்கும் வகையில் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு வரிச் சலுகைகளோடு, ஊக்கத் தொகையும் வழங்குகின்றன. நீங்கள் வாங்கத் திட்டமிடும் எலெக்ட்ரிக் கார்கள் இந்த சலுகைகளுக்குள் வருகிறதா என்பதை ஆய்வு செய்து பார்த்து முடிவெடுங்கள்

வசதிகள் – சாப்ட்வேர் அப்டேட்

எலெக்ட்ரிக் கார்கள் பல்வேறு தேவைகளுக்கு ஏற்ப மோட்டார், பேட்டரி திறன் உள்ளிட்ட வசதிகளுடன் வடிவமைக்கப்பட்டிருக்கின்றன. குறிப்பாக, உங்கள் தேவைகளைக் கருத்தில் கொண்டு அதற்கேற்ற வசதிகளுடனான காரைத் தேர்வு செய்யுங்கள். காரைத் தேர்வு செய்யும் முன்னர், அதன் தொழில்நுட்ப விவரங்களை சரிபார்த்து விட்டு முடிவெடுங்கள். காரில் பயன்படுத்தப்பட்டிருக்கும் சாப்ட்வேருக்குத் தயாரிப்பாளர்கள் தரப்பில் இருந்து தொடர்ச்சியாக அப்டேட்டுகள் அளிக்கப்படுமா என்பதையும் தெரிந்து கொள்ளுங்கள்.

டிரைவிங் ரேஞ்ச்

பெட்ரோல் – டீசல் கார்களில் மைலேஜ் எப்படியோ, அதேபோலத்தான் எலெக்ட்ரிக் கார்களில் ரேஞ்ச். பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்தால் கார் செல்லும் தொலைவுதான் ரேஞ்ச் என்றழைக்கப்படுகிறது. பல்வேறு ரேஞ்ச்களில் எலெக்ட்ரிக் கார்கள் விற்பனைக்குக் கிடைக்கின்றன. உங்கள் அன்றாடத் தேவைக்கேற்க ரேஞ்சுடனான காரைத் தேர்வு செய்வது முக்கியம். தயாரிப்பு நிறுவனம் சொல்வதை வைத்து முடிவு செய்யாதீர்கள். குறிப்பிட்ட காரின் ரேஞ்ச் குறித்த ரிவ்யூக்கள், முந்தைய வாடிக்கையாளர்களின் அனுபவங்களை வைத்து முடிவெடுங்கள். பொதுவாக 100 கி.மீ-க்கு மேல் ரேஞ்ச்சினை இந்த வகைக் கார்கள் கொண்டிருக்கும். நவீன வசதிகளுடனான சூப்பர் கார்கள் சில 400 கி.மீ-க்கு மேல் கூட ரேஞ்சினைக் கொண்டிருக்கின்றன.

எலெக்ட்ரிக் கார்
எலெக்ட்ரிக் கார்

பேட்டரி ஆயுள் – சார்ஜிங்

எலெக்ட்ரிக் வாகனங்களின் உயிர்நாடியே பேட்டரிதான். இதனால், கார்களை வாங்குவதற்கு முன்னர் பேட்டரியின் ஆயுள் எப்படியிருக்கிறது, அதற்கான வாரண்டி உள்ளிட்ட அம்சங்களை உற்று நோக்குங்கள். அதேபோல், பெட்ரோல் பங்குகள் போல் எலெக்ட்ரிக் சார்ஜிங் ஸ்டேஷன்கள் நமது நாட்டில் அருகிவிடவில்லை. அதையும் கவனத்தில் கொண்டு முடிவெடுங்கள்.

பராமரிப்பு செலவு – விற்பனைக்குப் பிந்தைய சர்வீஸ்

எலெக்ட்ரிக் கார்களைப் பயன்படுத்தும் போது அதற்கு ஆகும் பராமரிப்பு செலவு எப்படியிருக்கும் என்பது குறித்தும் கேட்டு தெரிந்துகொள்ளுங்கள். அதேபோல், விற்பனைக்குப் பின் பழுது ஏதேனும் ஏற்பட்டால் சர்வீஸிங் வசதி பற்றியும் அறிந்துகொள்ள வேண்டியது அவசியம்.

எலெக்ட்ரிக் கார்
எலெக்ட்ரிக் கார்

காப்பீடு

எலெக்ட்ரிக் வாகனங்களைப் போலவே, அதற்கான காப்பீட்டு செலவும் ரொம்பவே அதிகம். மற்ற கார்களைப் போல் அல்லாமல் இதற்கான காப்பீடுக்காக நீங்கள் கூடுதலாக செலவு செய்ய வேண்டி வரும். இந்த அம்சத்தைக் கருத்தில் கொண்டு பட்ஜெட்டை முடிவு செய்யுங்கள்.

Also Read – எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வாங்கப் போறீங்களா… செக் பண்ண வேண்டிய 7 விஷயங்கள்!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top