பொருளாதார நிபுணர்களாக இல்லாதவர்கள்கூட நிதி மேலாண்மையில் மிகவும் கவனமாக இருப்பார்கள். நிதி மேலாண்மையில் செய்ய வேண்டிய விஷயங்கள் குறித்து பல்வேறு தகவல்கள் கொட்டிக் கிடக்கின்றன. ஆனால், நாம் செய்யும் தவறுகளை சுட்டிக் காட்டும் தகவல்கள் மிகவும் குறைவு. அந்த வகையில், நிதி மேலாண்மையில் நாம் தவறவிடுகின்ற விஷயங்கள் குறித்து இங்குதெரிந்துகொள்வோம்..
Also Read : ஒரு கல் மூன்றாவது உலகப் போரைத் தொடங்குமா?
-
1 கல்விக்கடன் சுமைதான் போல!
எல்லா கடன்களுமே ஒருவிதத்துல நிதி சுமைதான். ஆனால், கல்விக்கடன் மாணவர்களுக்கு சின்ன வயசுலயே ஒரு பெரிய சுமையா மாறிடுது. குறிப்பிட்ட வருடங்களுக்குள்ள டிகிரி முடிக்கலைனாலோ பாதிலயே ட்ராப் அவுட் ஆனாலோ இந்த கல்விக்கடன் நிதி வாழ்க்கைல நிச்சயம் பெரிய பாதிப்பபை ஏற்படுத்தும். வெளிநாடுகளை ஒப்பிடுகையில் இந்தியாவுல கல்விக்கடனுக்கான வட்டி விகிதம் குறைவாக இருப்பதாலும் அரசுகள் தள்ளுபடி செய்வதாலும் மாணவர்கள் ஓரளவு சமாளிக்கின்றனர். ஆனால், பல நாடுகளில் மாணவர்களுக்கு இந்த கல்விக்கடன் மிகப்பெரிய பிரச்னையாகவே உள்ள்ளது.
சோ சேட்!
-
2 நோ மீன்ஸ் நோ!
பணத்தைப் பத்தி பெரும்பான்மையான மக்கள் பேசத் தயங்குவாங்க. உங்களோட சம்பளம், பட்ஜெட் பத்தியெல்லாம் உங்க நண்பர்களோட பேச தொடங்கினால், அவங்ககிட்ட இருந்து நிறைய விஷயங்கள நீங்க கத்துக்குவீங்க. அதேபோல, நண்பர்கள் மற்றும் நெருக்கமானவங்க கிட்ட பண விஷயத்துல நோ சொல்ல தயங்குவாங்க. பணம் இல்லைனு சொல்றது ஒருவிதத்துல குற்ற உணர்வை ஏற்படுத்துறதா நினைக்கிறாங்க. ஆனால், நீங்க உங்களோட நிலைமையை மனசுல வச்சு ஸ்ட்ரிக்டா `நோ’னு முடிவு பண்ணிட்டா..
நோ மீன்ஸ் நோ தாங்க!
-
3 வெக்கேஷனுக்காக பணத்தை சேமிக்காம இருக்கலாமா?!
பரபரப்பான வாழ்க்கைல நாம எப்பவும் பிஸியாவே வாழ்ந்துட்டு இருக்கோம். இதுல இருந்து கொஞ்சம் ரெஸ்ட் எடுக்குறது நம்மள மீண்டும் புத்துணர்ச்சி மிக்க மனிதனாக மாற்ற அவசியமான ஒண்ணு. எனவே, கொஞ்சம் ஆடம்பரமாக நம்முடைய விடுமுறை நாள்களைக் கழிக்க நிதி மேலாண்மைல கொஞ்சம் மாற்றம் செய்யலாம்.
ப்ளீஸ் கன்சிடர் திஸ்!
-
4 ஒரே வேலைலதான் இருக்கனுமா என்ன?!
முன்னாடிலாம் ஒரே வேலைல இருந்துட்டு நாம செட்டில் ஆனதா நினைச்சுப்போம். ஆனால், இப்போ அது அவுட்டேட்டட் ஆயிடுச்சுனு சொல்றாங்க. ஆமா, ஏன் ஒரே வேலைல இருக்கக்கூடாது? ஒரே வேலைல இருந்தா நாம பொருளாதாரம் மற்றும் அறிவு என இரண்டுலயுமே தேங்கிப் போயிடுறோம். இதனால, நம்ம கரியர்ல பெரிய வளர்ச்சி எதுவும் இருக்காது. சம்பளத்துலயும் பெரிய முன்னேற்றம் இருக்காது.
உண்மைதானே பாஸ்!
-
5 பழைய வழியிலும் கொஞ்சம் சிந்திக்கலாமே!
புதிய ஃபினான்சியல் லைஃப் ஸ்டைலோட செட் ஆனவங்களுக்கு இது கொஞ்சம் கஷ்டமான விஷயம்தான். எக்ஸாம்பிளா சொல்றதுனா.. நாம டயர்டா இருக்கோம். ஆனால் ஃபுட் ஆர்டர் பண்ணிக்கலாம்னு நினைக்கிறவங்க.. இல்லை, இன்னைக்கு சமைச்சுக்கலாமேனு யோசிச்சீங்கனா.. நிறையவே பணத்தை மிச்சம் பண்ண முடியும்.
ட்ரை பண்ணுங்க.. உங்களால முடியும்!
-
6 எந்த வயசுல ரிட்டைர்டு ஆகலாம்?!
நெதர்லாந்து மாதிரியான நாடுகள்ல மக்கள் 72 வயசு வரைக்கும் வேலைக்கு போறாங்க. `ஏன் அவ்வளவு காலம் உழைக்கணும்?’னு ஃபினான்சியல் அட்வைசர்ஸ் கேள்வி எழுப்புறாங்க. அதுக்கு பதிலா குறைவான காலம் நிறைவான வேலையைப் பாத்துட்டு தேவையான பணத்தையும் சம்பாதிச்சிட்டு இருக்கலாமேனு அட்வைஸூம் சொல்றாங்க.
லைஃப் அட்வைஸ் பாஸ்!
0 Comments