மருத்துவர்கள் என்றென்றும் மக்களின் மனதுக்கு நெருக்கமானவர்கள். மருத்துவத் துறையில் தடம் பதிக்க வேண்டும் என்று சிறுவயது முதலே தயாராகும் மாணவர்களை நாம் பார்த்திருக்கலாம். சமூகத்துக்கு மருத்துவர்கள் ஆற்றும் சேவை அளப்பரியது. எத்தனை படிப்புகள் வந்தாலும் மருத்துவப் படிப்புகளுக்கான மதிப்பு அலாதியானது. உங்கள் அன்பு மகன்/மகள் டாக்டராக வேண்டும் என்று நினைப்பவரா நீங்கள்… மருத்துவராக வேண்டும் என்பதுதான் என்னுடைய வாழ்நாள் லட்சியம் என்று நினைப்பவரா நீங்கள்… உங்களுக்குத்தான் இந்த செய்தி.
இலவச நீட் பயிற்சி
மருத்துவப் படிப்பில் சேர நீட் நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இந்த ஆண்டு இளநிலை படிப்புகளுக்கான நீட் தேர்வு செப்டம்பர் 12-ல் நடக்கும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்தநிலையில், மருத்துவராக நினைக்கும் மாணவர்களுக்குக் கரம் கொடுக்க முன்வந்திருக்கிறது மாமல்லபுரத்தில் இயங்கி வரும் கிங்ஸ் இண்டர்நேஷனல் மெடிக்கல் அகாடமி (KIMA). நீட் தேர்வுக்குத் தயாராகும் மாணவர்களுக்கு ஒரு மாத கால இலவச ஆன்லைன் கோச்சிங்கை வழங்குகிறது கிங்ஸ். திறமையான வல்லுநர் குழு மூலம் நடத்தப்படும் ஒரு மாத கால பயிற்சியில் ஸ்டடி மெட்டீரியல்கள் இலவசமாக வழங்கப்படுவதோடு, தினசரி நீட் Mock டெஸ்டுகள் நடத்தப்படுகின்றன. இந்த பயிற்சி மூலம் மாணவர்கள் நீட் தேர்வில் சிறப்பாக செயல்பட முடியும்.

வெளிநாட்டில் மருத்துவப் படிப்பு
நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றிருந்தாலும், பிளஸ் டூவில் நல்ல கட்- ஆஃப் வைத்திருந்தும் ஒரு சில மதிப்பெண் புள்ளிகளால் மருத்துவப் படிப்பைத் தவறவிடும் மாணவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். அவர்களுக்கு வெளிநாட்டில் மருத்துவம் படிக்கத் தேவையான வழிகாட்டுதல்களையும் ஆலோசனைகளையும் வழங்குகிறது கிங்ஸ். ஃபிலிப்பைன்ஸில் இருக்கும் சர்வதேச தரத்திலான தாவோ மெடிக்கல் ஸ்கூல் பவுண்டேஷன் (DMSFI)-ன் இந்திய பயிற்சி நிறுவனமாக கிங்ஸ் செயல்படுகிறது. இந்திய அளவில் மாணவர்களுக்கு நீட் கோச்சிங் வழங்குவதோடு, ஃபிலிப்பைன்ஸில் மருத்துவம் பயில்வதற்காக பிரத்யேகமாக 1.4 வருட பயிற்சியும் இங்கு அளிக்கப்படுகிறது.
ஏன் ஃபிலிப்பைன்ஸ்?
உலகத் தரத்திலான உள்கட்டமைப்பு வசதிகள், அதிநவீன தொழில்நுட்பங்களைக் கொண்ட தாவோ மெடிக்கல் ஸ்கூல் பவுண்டேஷன், ஃபிலிப்பைன்ஸின் முன்னணி மருத்துவக் கல்லூரி. பல்வேறு நாடுகளைச் சேர்ந்த மாணவர்களோடு படிக்க வாய்ப்புக் கிட்டும். மருத்துவப் படிப்புக்கான கட்டணம் மிகவும் குறைவு. ஹாஸ்டல் வசதி, சிறப்பான உணவு, பாதுகாப்பான சூழல் மாணவர்களுக்குக் கிடைக்கும். ஆங்கிலம்தான் இணைப்பு மொழி என்பதால், தகவல் தொடர்பிலும் பிரச்னை எழ வாய்ப்பில்லை. தங்குவதற்கான செலவும், உணவுக்கான செலவும் ரொம்பவே குறைவு. இந்தியாவில் இருந்து எளிதாக ஃபிலிப்பைன்ஸ் சென்று வர முடியும்.
FMGE தேர்வு
வெளிநாட்டில் படித்து முடித்து இந்தியா திரும்பி இங்கு மெடிக்கல் பிராக்டீஸ் தொடங்க Foreign Medical Graduates Examination – FMGE என்ற தேர்வை எழுத வேண்டும். இதற்கான பிரத்யேக பயிற்சியையும் ஆலோசனைகளையும் கிங்ஸ் வழங்குகிறது. ஃபிலிப்பைன்ஸில் படித்தவர்கள் இந்தத் தேர்வில் சிறப்பாக செயல்பட்டிருக்கிறார்கள். இந்த ஆண்டு FMGE தேர்வில் ஃபிலிப்பைன்ஸில் படித்த 6 பேர் தேசிய அளவில் முதல் 10 இடங்களுக்குள் வந்திருக்கிறார்கள்.
இலவச நீட் பயிற்சியில் சேர என்ன செய்ய வேண்டும்?
உள்நாட்டிலோ அல்லது வெளிநாட்டிலோ மருத்துவம் படிக்க நீட் தேர்வு அவசியம். கிங்ஸ் வழங்கும் இலவச நீட் பயிற்சியில் சேர கீழே இருக்கும் லிங்கைக் கிளிக் செய்து உங்கள் தகவல்களை அளித்து பதிவு செய்யுங்கள். குறைந்த இடங்களே இருப்பதால், உடனே ரெஜிஸ்டர் செய்து உங்கள் வாய்ப்பை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். குறுகிய கால சலுகையான இந்த வாய்ப்பு இப்போ போனா எப்பவும் கிடைக்காது… மிஸ் பண்ணிடாதீங்க! ரெஜிஸ்டர் செய்ய இந்த லிங்கை கிளிக் செய்யவும் – www.kingsneet.in
0 Comments