“பாக்ஸ் ஆஃபீஸ் ஹிட்.. பார்க்குறவங்க அவுட்..” பாலய்யா, வீரய்யா சேட்டைகள்!

தமிழ்நாட்டில் துணிவா வாரிசானு ஒரு பக்கம் போட்டி நடந்த போது அக்கட தேசத்தில் வீர சிம்மாவா, வால்டர் வீரைய்யாவான்னு ஒரு போட்டி நடந்தது. பாலைய்யாவா சிரஞ்சீவியா போட்டி நடக்கும் போலன்னு எதிர்பார்த்துகிட்டு டிரெயிலரைப் பார்த்தா, பாலைய்யா சிரஞ்ஜீவி கூட மோதலை. சூரியன், சந்திரன், பூமி, வானம், ஆகாயம், விண்வெளி, குதிரை, எருமை, ஜீப், கார், பிசிக்ஸ், கெமிஸ்ட்ரி, ஜியாகிராஃபி எல்லாத்துக்கு எதிராவும் கிளாஷ் விட்டுகிட்டிருக்காரு.

கார்ல ரிவர்ஸ் கியர் ஃபெய்லியர் ஆச்சுன்னா எப்படி காரை ரிவர்ஸ்ல எடுக்குறதுன்னு படம் பார்த்தப்போ தான் எனக்குத் தெரிஞ்சது…

ஒரு 11 சீட்டர் எஸ்.யூ.வி காரை ஒரு எத்து விட்டப்போ அது அப்படியே ரிவர்ஸ் கியர்ல 382கிமீ வேகத்துக்குப் போகுது… பார்த்ததும் ஒரு நிமிஷம் ஷாக்… என்னாச்சு பாலைய்யாவுக்கு..?

“ஜெய் சென்னகேசவா…”னு மீசையை சுண்டி விரலை சுடுக்கி அவ்ளோ பெரிய டிரெயினையே அசால்ட்டா பின்னாடி போக வச்ச பாலைய்யாவுக்கு வயசாயிருச்சு… அதனால டிரெயின்ல இருந்து கொஞ்சம் இறங்கி வந்து காரை எத்தி விட்டிருக்காரு… நமக்கு ஃபன் மிஸ்ஸாயிருமோன்னு ஒரு காவியச் சோகத்தோட படம் பார்க்க ஆரம்பிச்சா… “தலைவன் நம்மளை ஏமாத்தல…” அது பத்தி பின்னாடி வருவோம்… இப்போ இன்னொருத்தரைப் பார்க்க வேண்டி இருக்கு…

இரண்டு கால் மணித ஜூவராசிகள், நான்கு கால் விலங்குகள், ஓடும் கார், சீறிப்பாயும் ரயில், பறக்கும் விமாணம் என எல்லாத்தோடவும் தலைவன் பாலைய்யாவால் எப்படி வீம்பா விளையாட முடியுதாம் தெரியுமா..? இந்தப் படத்துல ஒரு டயலாக்ல அவரே சொல்றார்… அது என்னனு கடைசியில் பார்ப்போம்.

தலைவன் பாலைய்யா இருக்கட்டும். கூடவே இன்னொருத்தரையும் பார்த்துடுவோம்… அவர் யார்னா, நம்ம வால்டர் வீரைய்யா… பாலைய்யா ஒரு பக்கம் மிரள வச்சா, நம்ம வீரைய்யா ஓப்பனிங்லயே அல்ற விட்டாப்ள…

வால்டர் வீரைய்யா

நான் நாலாவது படிக்கும் போது எங்கூட படிச்ச ஒரு பையன், “நான் எங்க நிலத்துல நின்னு களைவெட்டிகிட்டிருந்தப்போ திடீர்னு சத்தம், பார்த்தா ஒரு ஏரோபிளேன் எங்க வயல்ல விழுந்துருச்சு, அதுல இருந்து வெளிய வந்த டிரைவர், டேய் தம்பி பிளைட்டுல பெட்ரோல் இல்லை, போய் வாங்கிட்டு வானு ஒரு மிராண்டா பாட்டில் கொடுத்தார். என் சைக்கிள் எடுத்துட்டுப் போய் நான் பெட்ரோல் வாங்கிட்டு வந்தப்புறம் ஏரோபிளான்ல ஊத்தி சொய்ங்னு பறந்து போனார். போகும் போது இந்த சாக்லேட் குடுத்துட்டுப் போனாரனு…? ஓலா ஓட்டினான். கிளாஸே உட்கார்ந்து கதை கேட்டுச்சு… பல பேர் அப்பவே போடா புளுகாண்டி பிச்சைன்னு கொக்கலி காட்டிட்டு ஓடிப்போச்சு.

இப்போ ஏன் இதை சொல்றேன்னா… இப்படி ஒரு சம்பவம் தான் நம்ம வீரையாவோட ஓப்பனிங். அடுத்த சீன்ல தமிழ்ல இருந்து கைதி பட சிச்சுவேஷன், தெலுங்குல இருந்து KGF part 1 ல இருந்து ஒரு சம்பவம். அதிரடி பில்டப்புடன் தலையில மாட்டி வச்சிருக்க துணியைக் கழட்டும் போது சிரஞ்சீவிகாருன்னு விசிலடிச்சா… அங்கதான் சர்ப்ரைஸ்… அது பாபி சிம்ஹா… அவர் யாரு, அவரால் அந்த ஸ்டேஷன்ல இருந்த போலீஸ்காரருக்கு என்ன ஆச்சுன்னு ஒரு படம் ஓடி முடிஞ்சதும் தான் வீரைய்யா வந்தாரு… அதுக்கப்புறம் நானும் ரவுடிதான் படத்துல இருந்து ஒரு சீன்… அப்புறம், அந்த போலீசுக்கு உதவி பண்ண மலேசியாவுக்கு கிளம்பிபோறாரு… அட இது ‘பில்லா’ அப்டின்னு உட்கார்ந்தா, வெயிட் பண்ணுங்க கொஞ்சம் ரொமான்ஸ் பண்ணுவோம்னு ஹீரோயின்… அப்புறம் ஒரு பிளாஷ்பேக்… அது நம்ம அக்னி நட்சத்திரம் கதை. அடுத்து கொஞ்சம் கதை செக்கச் சிவந்த வானம் விஜய் சேதுபதி கேரக்டர். ஹீரோயின் முன்னாடி வந்தாங்கல்ல, ரொமான்ஸ் மட்டுமில்லாம வேற எதுனா கதையை வளப்போம்னு பார்த்தா அது மதுர சோனியா அகர்வால் ட்விஸ்டு. வில்லு படத்துல அப்பா மேல விழுந்த பழியைத் துடைக்க மகன் கிளம்புனதை அண்ணன் தம்பினு மாத்தினா கிளைமேக்ஸ் வந்துரும்.

அடேய்… இதுக்கு வில்லு படத்தைத்தான் சொல்வியான்னா… தமிழ்லயே இன்னும் எக்கச்சக்க ரெஃபரன்ஸ் இருக்கு போங்க…

பாலைய்யா

வால்டர் வீரைய்யா படத்தைப் பார்த்து முடிச்சதும், பயத்தோட வீர சிம்ம ரெட்டி படத்தைப் பார்த்தா, அதுலயும் ஹீரோயின் ஸ்ருதி தான். என்னடா இது பொங்கலுக்கு மோதின ரெண்டு படத்துக்கும் வந்த சோதனைன்னு பார்த்தா ரெண்டு படத்தையும் தயாரிச்சதும் ஒரே கம்பனி தான். அங்கங்க கதையும் ஒன்னுதான் போவியான்னு படம் பார்த்து முடிக்கும் போது புரிஞ்சது.

Waltair veerayya, Veera simha reddy, Shruthi hassan

துருக்கில இருந்து கிளம்பி வந்த ஷவர்மாவை நம்ம ஊர்ல தெருவுக்கு தெரு நம்ம பசங்க ரசிச்சு சாப்பிடும் போது, துருக்கிக்கே போய் ராகி களியும், நாட்டு கோழியும் விக்குற கடை வச்சிருக்காங்க ஹனி ரோஸ். இப்போ அந்த நாட்டுக்கோழி இந்தியாவோடதா, துருக்கியோடதான்னு தெரியலை. ஹனி ரோசுக்கு வயசாயிருச்சுல்லன்னு பார்த்துகிட்டிருந்தா, நம்மூர் காரங்களுக்கு ஷவர்மா புடிச்ச மாதிரி அங்க ஒரு துருக்கி வில்லனுக்கு நம்ம ஊர் ராகி களி புடிச்சிருது, அதுக்குன்னு இன்னும் ரெண்டு சேர்த்து வாங்கி சாப்பிடாம ஹோட்டலையே விலைக்கு கேட்டு பஞ்சாயத்தாகி, அடிதடி ஆகி. ஹனி ரோஸ் வில்லன் கிட்ட போய் பேசும் போது ஒரு அதிர்ச்சித்தகவலை சொல்றாங்க. அதாவது அவங்க பையன் தான் பாலைய்யாவாம்… அந்த ராகி களி குடுக்குற பவர்ல தான் பாலைய்யா இப்டி பஞ்ச் பேசவும் வில்லன்களை பந்தாடவும் ஹீரோயின்களோட வளைஞ்சு நெளிஞ்சு டேண்ஸ் ஆடுறதுக்கும் காரணமாம்.

பாலைய்யா

பாலைய்யா படத்துல அடிதடி முடிஞ்சதும் ஒரு பாட்டு வரனும்ல. அதுக்கு முன்னாடி ஹீரோயின் வரனும். ஒரு சண்டையில பாலைய்யா துப்பாகி எடுத்து சுட அது ஸ்ருதி காதுக்குப் பக்கத்துல உரசிக்கிட்டு போனதுல அவங்களுக்கு காது கேக்காம போயிருது. சில பல ஊடல்களுக்குப் பிறகு இன்னொரு சண்டையில் அதே மாதிரி பாலைய்யா துப்பாக்கி எடுத்து சுட கேக்காம போன காது திரும்ப கேக்குது. லவ்வும் வந்துருச்சு, பாட்டும் வந்துருச்சு…

Also Read : நீங்க நினச்சுக்கூட பார்க்க முடியாது… நந்தமுரி பாலகிருஷ்ணா படத்தின் `Impossible’ காட்சிகள்!

பைட் வந்தாச்சு, பாட்டு வந்தாச்சு… அடுத்தது ஒரு பிளாஷ்பேக் தான் வரனும்ல… அதே தான் “உன் அப்பா யார் தெரியுமா..?” அப்படின்னு ஆக்ரோஷமான ஒரு பிளாஷ்பேக்… பாலைய்யா படத்துல என்ன பெருசா பிளாஷ்பேக், வில்லன் கிட்ட இருந்து ஊரைக் காப்பாத்துற, ஊரே தெய்வமா பாக்குற ஒரு பெரிய மனுஷன்… காது கிழியுற அளவுக்கு பஞ்ச் டயலாக். இன்னொரு பிளாஷ்பேக். அப்பா இடத்துக்கு மகன் வந்து ஊரைக் காப்பாத்துறதுன்னு அச்சு அசலா பாலைய்யா டெம்ப்ளேட்.

பாலைய்யா டேன்ஸ் வேணுமா இருக்கூ… பஞ்ச் டயலாக் வேணுமா இருக்கூ… பாஞ்சு பாஞ்சு விழுற அடியாள் வேணுமா இருக்கூ… ரெண்டு ஹீரோயின் வேணுமா இருக்கூ… ரெண்டு பிளாஷ்பேக் வேணுமா இருக்கூ… இதெல்லாம் இல்லைன்னா அது பாலைய்யா படமே இல்லைடான்னு சொல்ற அளவுக்கு டெம்ப்ளேட்ல கச்சிதமா இருக்க இந்தப் படத்தை தெலுங்குல வழக்கம் போல கொண்டாட. மத்த மொழில எல்லாம் மிரண்டு போய் ட்ரோல் பண்ணிகிட்டிருக்காங்க.

ரெண்டு படத்தையும் நீங்க பார்த்துட்டீங்களா? உங்களுக்கு எது புடிச்சது? பாலைய்யா பஞ்ச் டயலாக்ல உங்களை எது ரொம்ப ஹெவியா அட்ராக்ட் பண்ணுச்சுன்னு கமெண்ட்ல சொல்லுங்க.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top