கேரளா பாக்ஸ் ஆஃபீஸை அலற வைத்த டைரக்டர்… அட்டகாசமான அஞ்சலி மேனன் ஜர்னி!

பார்வதி சில நாள்களுக்கு முன்னாடி சோஷியல் மீடியால பிரக்னன்ட் கிட் ஃபோட்டோ போட்ருந்தாங்க. அதைப் பார்த்துட்டு பார்வதி ஃபேன்ஸ்லாம் கண்ணீர் விட்டு கதறிட்டு இருந்தாங்க. “கல்யாணம் ஆகாமல் கர்ப்பமா?”னு கேள்விலாம் கேட்டு நியூஸ் போட்டுட்டு இருந்தாங்க. அடுத்தது, ஷோபனா, அதாங்க நம்ம நித்யாமேனனும் இதே மாதிரி போஸ்ட் போட்டாங்க. ரைட்டு எதோ நடக்குதுனு யோசிக்கும்போது பத்ம பிரியாவும் இந்த போஸ்ட் போட, அப்பாடா, எதோ படத்தோட புரொமோஷன்தான்னு அவங்க ஃபேன்ஸ்லாம் நிம்மதி பெருமூச்சு விட்டாங்க. இவங்க மூணு பேரும் பிரக்னன்ட் ஆக காரணம், அதாவது பிரக்னன்ட் போஸ்ட் போட காரணம் யாரு தெரியுமா? அஞ்சலி மேனன். யாருனு தெரியலையா? நமக்கு புடிச்ச பேங்களூர் டேஸ் டைரக்டர்.

கஸின்ஸ் மூணு பேரு. கேரளால இருந்து பெங்களூர் போய் வாழணும்னு ஆசைப்படுறாங்க. அங்க அவங்க வாழ்க்கைல என்னலாம் நடக்குன்றதுதான் கதை. இதை சொன்ன அடுத்த நிமிஷம் அஞ்சலி மேனனோட ஃப்ரெண்ட், அதாவது உஸ்தாத் ஹோட்டல், டிரான்ஸ் படம்லாம் எடுத்த அன்வர் ரஷீத், “நான்தான் இந்தக் கதையை புரொடியூஸ் பண்ணுவேன்”னு சொல்லியிருக்காரு. அடுத்து உடனே, “மூணு கஸின்ஸா நடிக்க எந்த நடிகர்களை மனசுல வைச்சிருக்கீங்க?”னு கேட்ருக்காரு. அதுக்கு அஞ்சலி, “எனக்கு மலையாளத்துல இருக்குற சூப்பர் ஸ்டார்ஸ்லாம் வேணாம். இளம் நடிகர்கள்தான் வேணும்”னு ரிப்ளை பண்ணிருக்காங்க. “புது முகங்கள்தான் வேணுமா?”னு அன்வர் உடனே கேட்ருக்காரு. “இல்லை, எல்லாருக்கும் தெரிஞ்ச முகங்கள் தான் வேணும்”னு சொல்லிட்டு, துல்கர் சல்மான், நிவின் பாலி, நஸ்ரியா நஸீம், ஃபகத் ஃபாஸில் பெயர்களை குறிப்பிட்ருக்காங்க. செம கமர்ஷியலான நடிகர்கள் குரூப், அதுவும் தன்னோட இரண்டாவது படத்துல. இன்னொரு பெரிய சர்ப்ரைஸ் ஃபேக்ட் என்னனா, துல்கரும் நிவின் பாலியும் அஜித் – விஜய் மாதிரி வளர்ந்து வந்த காலகட்டம் அது எல்லாம் சேர்ந்து படத்தோட எதிர்பார்ப்பை எகிற வைச்சுது. படம் ரிலீஸ் ஆனதும் தியேட்டர்ல செம ரெஸ்பான்ஸ். அதுவரைக்கும் ரிலீஸான படங்கள்லயே highest first-weekend கலெக்‌ஷன் இந்தப் படம் பண்ணிச்சுனு சொல்றாங்க. முதல் மலையாள பெண் இயக்குநர் பாக்ஸ் ஆஃபிஸ் ரெக்கார்ட்ல தெறிக்க விட்டாங்கனும் எழுதுனாங்க. இன்னைக்கும் அந்தப் படம் பலரோட ஃபேவரைட் படம்.

பெங்களூர் டேஸ் படத்துக்கு அப்புறம் அஞ்சலி மேனன் நிறைய பேரோட ஃபேவரைட் டைரக்டராவும் மாறிட்டாங்க. அவங்களோட பழைய படங்கள்ல இருந்து, அடுத்த படத்துக்கு வர்ற அப்டே வரைக்கும் எல்லாம் கவனிக்க ஆரம்பிச்சாங்க. அதுக்கு சின்ன எக்ஸாம்பிள்தான், இப்போ வந்த வொண்டர் வுமன். கேரளால இருக்குற நடிகர்கள்கூட அஞ்சலி மேனன் படத்துல நடிக்கணும்னு அவ்வளவு ஆசைப்படுவாங்க. காரணம், அவங்களோட கதைக்களம். அஞ்சலி மேனனோட ஃபேமிலி பிஸினஸ் ஃபேமிலி. இவங்களும் எப்படியும் பிஸினஸ்தான் பண்ணுவாங்கனுதான் வீட்டுல நினைச்சுட்டு இருந்துருக்காங்க. அதேமாதிரி, வீட்டுக்கும் ரொம்ப செல்லப்பிள்ளை. ரொம்ப டிபன்டன்டாதான் வளர்ந்துருக்காங்க. ஆனால், அவங்க அம்மா, அஞ்சலி மேனன் ஃபினான்ஷியலாவும் மெண்டலியும் இன்டிபென்டன்டா இருக்கணும் ஆசைப்பட்ருக்காங்க. அவங்க புனே யுனிவர்ஸிட்டில சேர்ந்து படிச்சது, இன்னைக்கு அவங்க இவ்வளவு இன்டிபென்டன்டா இருக்குறதுக்கு முக்கியமான காரணம்னு சொல்லலாம். புனேல படிக்கும்போதே டாகுமென்ட்ரி படங்கள்லாம் எடுக்க ஸ்டார்ட் பண்ணிட்டாங்க. அப்புறம், லண்டன் ஃபிலிம் ஸ்கூல்ல சேர்ந்து படிச்சிருக்காங்க. அங்க ஃபிலிம்ல இருக்குற நிறைய விஷயங்களை கொஞ்சம் கொஞ்சமா கத்துக்க ஆரம்பிச்சிருக்காங்க. அஞ்சலி என்ன பண்றாங்களோ, அதுக்கு வீட்டுல உள்ளவங்க சப்போர்ட்டாதான் இருந்துருக்காங்க. ஆனால், வீட்டுல அவங்க படம் எடுக்கப்போறேன்னு சொல்லவே இல்லை.

புனேல படிக்கும்போதுதான் நிறைய படங்கள்லாம் பார்க்க ஆரம்பிச்சிருக்காங்க. படம் பார்த்துட்டு வந்து அந்தப் படத்தைப் பத்தி நிறைய பேசுவாங்களாம். ஃப்ரெண்ட்ஸ் கேங்க்கூட சேர்ந்துதான் படம்லாம் பார்க்கப் போவாங்களாம். படம் ரொம்ப நல்லா இருந்துச்சுனா, மொத்த குரூப்பும் சைலண்டா வருவாங்களாம். ஒரே நாள்ல ஒரு டைரக்டரோட எல்லா பழைய படங்களையும் பார்க்கும்போது ஃபீல் ஒண்ணு வரும்ல, அந்த ஃபீல் வேற என்ன பண்ணாலும் கிடைக்கலை அவ்வளவு எஞ்சாய் பண்ணேன். அப்போவே அவங்களுக்கு சினிமா ஆசையும் வந்ததுனு சொல்லலாம். லண்டன்ல அஞ்சலி படிச்சிட்டு இருக்கும்போது, லகான் படமும் அங்க ரிலீஸ் ஆகியிருக்கு. ஆனால், அதுக்கான பப்ளிசிட்டி எதுவும் அங்க இல்லை. இப்படி ஒரு படம் வந்துருக்குனே அவங்களுக்கு தெரியாது. ஆனால், எதாவது இந்தியன் படம் ஒண்ணு பார்க்கணும்னு தனியா தியேட்டருக்கு போய்ருக்காங்க. டிக்கெட் எடுத்துட்டு உள்ள போய் உட்கார்ந்துருக்காங்க. மொத்தமே எட்டு பேருதான் உள்ள இருந்துருக்காங்க. படத்துல யாரு நடிச்சுருக்கா? எதைப் பத்தி படம் பேசப்போகுது?-னு எந்தவிதமான ஐடியாவும் இல்லாமலே இருந்துருக்காங்க. படம் தொடங்குனதும் அமீர் கான் வந்துருக்காரு. நமக்கு புடிச்ச ஆக்டர்னு சந்தோஷப்பட்ருக்காங்க. படம் முழுக்க பார்த்ததுக்கு அப்புறம் அந்த எக்ஸைட்மெண்டை உடனே காமிக்கணும்னு அங்க இருந்தவங்க, பக்கத்துல உள்ளவங்ககிட்டயே காமிச்சிருக்காங்க. தியேட்டர்லருந்து அவங்க 8 பேரும் ஃப்ரெண்ட்ஸா வெளிய வந்துருக்காங்க.

அஞ்சலி மேனனோட முதல் படம் மஞ்சாடிக்குரு. வீட்டுல பெரியவரு இறந்துருவாரு. அதுக்கு அவங்களோட பிள்ளைகள் எல்லாம் வருவாங்க. அந்த வீட்டுக்குள்ள அவங்களுக்குள்ள நடக்குற சண்டைகள், வேலைக்கார பொண்ணு ஒண்ணு வரும். அந்தப் பொண்ணோட கதை, உறவுகள், காதல், பால்யம்னு ஏகப்பட்ட விஷயம் சொல்லிருப்பாங்க. படத்தோட டைட்டிலே செமயான ஒண்ணா இருக்கும். மஞ்சாடி முத்துகளைப் பார்த்தா குழந்தைங்க எல்லாருமே எடுத்து சேர்த்து வைப்பாங்க. தனியா இருக்குறதைவிட சேர்ந்து இருக்குறதுதான் அதன் அழகே. அதை வைச்சு உறவுகளை சொல்றது செமயா இருக்கு. அப்புறம் உஸ்தாத் ஹோட்டல். வெறும் சாப்பாடு யாரு வேணும்னாலும் செய்யலாம். ஆனால், செய்யும்போது ஆன்மால இருந்து செய்யணும்னு சொல்லியிருப்பாங்க. சுலைமானியை வைச்சு மொத்த உலகத்தையும் காலுக்கடில கொண்டு வந்து நிக்க வைப்பாங்க. ஒவ்வொரு தடவையும் படம் பார்க்கும்போது சிலிர்க்கும். அந்தப் படத்துக்காக நேஷனல் அவார்ட் வாங்குனாங்க. அப்புறம் பெங்களூர் டேஸ். நம்ம எல்லாருக்கும் தெரியும். அடுத்து அஞ்சலி மேனன் எடுத்த படம், அவ்வளவு ஃபீல்குட்டான படம். அதுதான் கூடே. அண்ணன் – தங்கச்சி உறவு, அப்பாம்மா உறவு, ஃபாரீன் போய்ட்டு வர்ற ஒருத்தரோட மனநிலை, தங்கச்சி இறந்துபோனதும் அவங்க ஹீரோ கண்ணுக்கு மட்டும் தெரியுற விஷயம், காதல்னு ஏகப்பட்ட விஷயங்களை அவ்வளவு அழகா சொல்லியிருப்பாங்க.

Also Read: விஜய் ஃபேன்ஸ்க்கு ஃபஸ்ட் சிங்கிள் எப்பவுமே ஸ்பெஷல்தான்… ஏன் தெரியுமா?

மஞ்சாடிக்குருல தொடங்கி கூடே வரைக்கும் எல்லாப் படத்துலயும் காட்சிப்படுத்தப்படாத கதை ஒண்ணு சொல்லுவாங்க. அந்தக் குட்டி ஸ்டோரியே அவ்வளவு அழகா இருக்கும். மஞ்சாடிக்குரு படத்துல ஊர்வசியோட லவ் ஸ்டோரி, உஸ்தாத் ஹோட்டல்ல தாத்தாவோட லவ் ஸ்டோரி, கூடேல வர்ற கார் ஸ்டோரி எல்லாமே அட்டகாசமா இருக்கும். இந்த கதைகளுக்காகவே அஞ்சலிக்கு ஆயிரம் முத்தங்கள் கொடுக்கலாம்.

நல்ல கதைகளை, எமோஷனலா மக்கள் கனெக்ட் ஆகுற கதைகளை கொடுக்கணும்னு அஞ்சலி எப்பவும் சொல்லுவாங்க. அவங்களோட எல்லா கதைகளும் இதுவரைக்கும் அப்படிதான் இருந்துருக்கு. இப்போ வரப்போற, வொண்டர் வுமன் படமும் அப்படித்தான் இருக்கும்னு நம்புவோம். மலையாள சினிமாவுக்கு மட்டுமில்ல, இந்திய சினிமாவுக்கே அஞ்சலி மாதிரி ஒரு டைரக்டர் கிடைச்சது வரம் தான்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top