தமிழ் சினிமாவைப் பார்த்துதான் எல்லாருமே ஆடிப்போவாங்க. ஆனால், இன்னைக்கு தமிழ் சினிமாவையே ஆடிப்போய் அண்ணார்ந்து பார்க்க வைச்சிருக்கு, சின்னத்திரை. என்ன ஸ்டண்ட் எடுக்குறீங்க? என்ன சிச்சுவேஷனுக்கு என்ன சாங்க யூஸ் பண்றீங்க? இப்போ நாங்க பண்றோம் பாருங்கனு தமிழ் சினிமாவுக்கே பாடம் எடுத்துருக்கு சின்னத்திரை. சோஷியல் மீடியால எந்தப் பக்கம் திரும்புனாலும் இன்னைக்கு இந்தப் பேச்சுதான். சினிமா கிரிடிக்ஸ்கூட இப்படி ஒரு காட்சியை பார்த்திருக்க முடியாதுனு கதறுராங்க. என்ன, ஓவர் பில்டப்பா பேசுற. அப்படி என்ன சம்பவம் நடந்துச்சுனுதான கேக்குறீங்க. சொல்றேன். ஈரமான ரோஜாவே… ஈரமான ரோஜாவே…னு ஒரு சீரியல். அவங்க பண்ண சம்பவம்தான் எல்லாத்துக்கும் காரணம். அதைப் பத்திதான் இந்த வீடியோல நாம பார்க்கப்போறோம்.

முன்னாடிலாம் இந்தி சீரியல்ஸ்தான் சீரியல் கில்லர் ரேஞ்ச்ல சீரியஸா பேசி நம்மள சீரியஸ் ஆக்கி கொண்டு கொலையறுப்பாங்க. ஆனால், இன்னைக்கு நீங்க என்னடா தமிழ் மக்களை கடுப்பேத்துறது. அப்புறம் நாங்க எதுக்கு இருக்கோம். இப்போ, நாங்க எப்படி கடுப்பேத்துறோம் பாருனு அவங்களுக்கு ஈக்குவலா டஃப் கொடுக்குறாங்க. ரொம்ப உக்கிரமா வேற இருக்காங்க. சரி, கதைக்கு வருவோம். விஜய் டி.வில ஈரமான ரோஜாவேனு ஒரு சீரியல். இந்த சீரியலோட சீசன் 1, 2018 ல இருந்து 2021 வரைக்கும் போச்சு. கிட்டத்தட்ட 800 எபிசோடு போச்சு. ஆமாங்க, குடும்பங்கள் கொண்டாடும் வெற்றி பெற்றது. இதனால, பார்ட்-2 அதாவது சீசன் – 2 எடுக்கலாம்னு முடிவு பண்ணி, இப்போ எடுத்துட்டு இருக்காங்க. அதுல ஒரு எபிசோடு புரோமோ வந்துருக்கு.

ஈரமான ரோஜாவே சீசன்-2ல சித்தார்த், பிக்பாஸ் கேப்ரியல்லா, திரவியம், ஸ்வாதினு சின்னத்திரை பட்டாளமே நடிக்கிறாங்க. இந்த சீரியல் தொடர்பா சமீபத்துல வந்த ஒரு புரோமோல… பந்த் அனௌன்ஸ் பண்ணி நடுரோட்டுல போராட்டம் நடக்கும். கேப்ரியல்லா பஸ்ல போய்ட்டு இருப்பாங்க. ஒரே பஸ்ல கேப்ரியல்லாவுக்கே தெரியாமல் சுமார் ஒரு வாரகாலமா அவங்க ஹஸ்பண்ட் அதாங்க சித்தார்த் ஃபாலோ பண்றாங்கனா பார்த்துக்கோங்க. பஸ்ஸ மடக்கி ஃபைட்லாம் பயங்கரமா நடந்துட்டு இருக்கும். சில அடியாள்களை சித்தார்த் அடிச்சுப்போட்டுச்சு. கேப்ரியல்லா கையை புடிப்பாரு. பாம்லாம் வெடிக்கும். உடனே, ஒரு பாட்டு வரும். ‘இரு பூக்கள் கிளை மேலே… ஒரு புயலோ மலை மேலே”னு. அதாங்க உயிரே படத்துல வந்த பாட்டு. இதெல்லாம் ஏ.ஆர்.ரஹ்மானும் மணி ரத்னமும் பார்த்த வெக்ஸ் ஆயிடுவாங்களேடா. சீரியலா இருந்தாலும் ஒரு நியாயம் வேணாமா? சரி இதையாவது மன்னிச்சர்லாம்.

இன்னொரு புரோமோ வந்துச்சு. அதுலதான் எல்லாரும் கொஞ்சம் ஷாக் ஆயிட்டாங்க. குறிப்பா விக்ரம் டீம். ஆண்டவர்லாம் என்ன ஆக்ஷன் பண்றாரு… தலைவன் சித்துவ பாருங்க. அடி பொளக்குறாரு. ஆமாங்க, ஒரு வண்டியில ரெண்டு பேரும் போய்ட்டு இருப்பாங்க. குறுக்க பந்த்க்காரங்க வந்துருவாங்க. பொண்டாட்டி காருக்குள்ள தூங்குறா… சத்தம்போடாமல் ஃபைட் பண்ணலாம்னு ஒரு மாஸ் ஃபைட் சீனை எடுத்து வைச்சிருக்காங்க. ஈரமான ரோஜாவே ஃபேன்ஸ்லாம் சிலிர்த்துப்போய் சில்லறைய சிதற விடுவாங்கனா பார்த்துக்கோங்க. ஈகிள் இஸ் கம்மிங்னு மியூசிக்லாம் வேற… (கொஞ்சம் கூட கூச்சமே இல்லேல?). அதுவும் அந்த எக்ஸ்பிரஷன்ஸ். டேய், அவன் சீரியஸாவே நடிக்கிறான்டா மொமண்டுதான்.

இதையெல்லாம் பெத்த தாய்க்கிட்ட போட்டு காமிச்சு என்னனு கேட்டா… பிரேக்கிங் பேட், மணி ஹெய்ஸ்ட், ஸ்குவிட் கேம், பீக்கி பிளைண்ட்ர்ஸ்க்கு வந்தா ரத்தம் ஈரமான ரோஜாவேல வந்தா தக்காளி சட்னியா?னு ஒரு கேள்வி கேட்டு நம்மள அப்படியே ஆஃப் பண்ணிடுறாங்க. ‘என்ன ரங்கா… நியாயமா இதெல்லாம்’. இவங்க எஸ்.டி.டி எல்லாம் தோண்டிப் பார்த்தா இதைவிட கொடுமையெல்லாம் பண்ணி வைச்சிருக்காங்க. போன சீசன்ல லாஸ்ட் எபிசோடுனு நினைக்கிறேன்… வந்து உக்காரு… வந்து உக்காரு… வந்து உக்காருனு சொல்லியே ஒரு எபிசோடு முடிச்சிட்டாய்ங்க. டேய், யாருடா நீங்கலாம்? இந்த சீரியலோட ஒன் லைனே கேவலமா இருக்கும். அதாவது இவன் லவ்வர அவன் கல்யாணம் பண்ணுவான். அவன் லவ்வர இவன் கல்யாணம் பண்ணுவான். இதை எப்படி அக்ஸப்ட் பண்ணாங்கனு இன்னும் தெரியல திமிங்கலம். அதுமட்டுமில்ல சாஸ்திரம், சம்பிரதாயம்னு மொத்த குடும்பமும் சாம்பிராணியாதான் இருக்கும்போல. புரோமோ பார்த்ததுக்கே பத்தி எரியுதே… எப்படி இதெல்லாம் பார்க்குறாங்க? என்னமோ… போடா மாதவா!
Also Read: தமிழ் மக்கள் மலையாள சினிமாவை ஏன் கொண்டாடுறாங்க… 3 முக்கிய காரணங்கள்!





kuwin sở hữu kho game đa dạng từ slot đến trò chơi bài đổi thưởng, mang đến cho bạn những giây phút giải trí tuyệt vời.
kuwin sở hữu kho game đa dạng từ slot đến trò chơi bài đổi thưởng, mang đến cho bạn những giây phút giải trí tuyệt vời.