தமிழ் மக்கள் மலையாள சினிமாவை ஏன் கொண்டாடுறாங்க… 3 முக்கிய காரணங்கள்!

மலையாள சினிமானு சொன்னாலே முகம் சுழிக்கிற காலம் மாறி, இந்திய சினிமாவில் முக்கியமான ஒன்றாக மலையாள சினிமாக்கள் இன்னைக்கு பார்க்கப்படுது. மலையாளத்துல வெளியாகுற ஒவ்வொரு சினிமாவையும் மற்ற மாநிலங்கள்ல இருக்குற மக்கள் கொண்டாடித் தீர்க்குறாங்க. மற்ற மொழி டைரக்டர்கள் அந்தப் படங்களை ரீமேக் பண்றாங்க. ஃபகத் ஃபாஸில் ஒரு விருது விழாவுல, “மலையாளத்துல சினிமா செய்ய முடியுதுன்றதுதான் நான் செய்த பாக்கியம். தமிழ், தெலுங்கு, கன்னடம் இன்டஸ்ட்ரீல நான் இருந்துருந்தா டைமண்ட் நெக்ளஸ், தொண்டிமுதல், சாப்பா குரிசு, மகேஷிண்ட பிரதிகாரம்னு நான் நடிச்ச எந்தப் படத்தையும் இன்னொரு மொழில செய்ய முடியாமல் போய்ருக்கும்”னு சொல்லுவாரு. மலையாள சினிமாக்களையும் மற்ற இண்டஸ்ட்ரீ சினிமாக்களையும் கம்பேர் பண்ணி பார்த்தா அது எவ்வளவு உண்மைனு தோணும். சரி, மலையாள சினிமாக்களை அதிகளவில் தமிழ் மக்களும் கொண்டாடுறாங்க. ஏன்?

Maheshinte Prathikaaram
Maheshinte Prathikaaram

எதார்த்தமான கதைக்களங்கள்

நம்ம அன்றாட வாழ்க்கையில் நடக்கக்கூடிய விஷயங்களை அல்லது சமூகத்தில் இருக்குற சாதாரண பிரச்னைகளா நாம நினைக்கிற விஷயங்களைத்தான் மலையாள சினிமாக்கள் அதிகளவு பேசுது. மலையாளத்துல ஃபேண்டஸியான கதைகள் அதிகமா வராது. அடிச்சு பறக்க விடுற சூப்பர் ஹீரோக்கள் கிடையாது. எல்லாக் கதைகளும் மக்களின்  வாழ்க்கையை பிரதிபலிக்குது. எல்லாக் கதை மாந்தர்களும் சாமானிய மக்களை பிரதிபலிக்குது. லாக்டௌன்ல வந்த படங்களையே இதுக்கு உதாரணமா சொல்லலாம். ‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’னு ஒரு படம் வந்துச்சு. எல்லா வீட்டுலயும் பெண்கள் எவ்வளவு ஆணாதிக்க மனநிலைல நடத்தப்படுறாங்க, சமையலறையிலயே அவங்கள எப்படி முடக்கி வைக்கிறாங்கனு காட்டின படம். நம்மளும் இப்படிதான அம்மா, மனைவி, தங்கச்சியெல்லாம் நடத்துறோம்னு படத்தைப் பார்த்தா ஒரு சின்ன குற்றவுணர்ச்சி வரும். இதேமாதிரி பீமண்ட வழி, ஹோம், காணேகாணே, சமீபத்துல வந்த ஜோ அண்ட் ஜோ, இப்படி நிறைய உதாரணங்களை சொல்லிட்டே போகலாம்.

Jo and Jo

சமூக பிரச்னைகளை பேசுற படங்களாக வந்த நயாட்டு, பட, குருதி, ஜன கன மன போன்ற படங்களும் பொலிட்டிக்கல் கரெக்ட்னஸோட இருக்கும். குடும்பங்களை பேஸ் பண்ணி எடுக்குற படங்கள்னாலும் அதையும் வேறலெவல்ல எடுப்பாங்க. த்ரில்லர் ஜானர்னு சொன்னாலும் விட்டு விலாசுவாங்க. ஃபாரன்சிக், அஞ்சாம் பாதிரா, த்ரிஷ்யம், ஜோசப், இருள் இப்படி அதுக்கான உதாரணங்களையும் சொல்லிட்டே போகலாம். லவ்னு வந்தாலும் உருகி தள்ளிருவாங்க. பிரேமம், என்னு நிண்டே மொய்தீன், ஹிருதயம், அன்னயும் ரசூலும், ஜூன், தீவண்டி இப்படி லவ் படங்களுக்கான உதாரணங்களையும் சொல்லிட்டே போகலாம். தமிழ் சினிமால இஸ்லாமியரையோ, கிறிஸ்தவரையோ ரெப்ரஸண்ட் பண்ற மாதிரியான ஹீரோக்கள் வருவது ரொம்ப ரேர். ஆனால், மலையாள சினிமால பெரும்பாலான கதாபாத்திரங்கள் இவங்களை ரெப்ரஸண்ட் பண்ணிதான் இருக்கும். இந்த விஷயம் ரொம்ப முக்கியமானது. அதேநேரம் தமிழர்களை வில்லன்களை நிறைய படங்கள்ல சித்தரிப்பாங்க. இதை கொஞ்சம் தவிர்க்கலாம்.

லேண்ட்ஸ்கேப்

கடவுளின் தேசம் கேரளானு சொல்லுவாங்க. காரணம், அவ்வளவு அழகான ஒரு இடத்தை இந்தியால எங்கயும் பார்க்க முடியாது. கேமராவைத் தூக்கி சும்மா எந்த இடத்தை ஃபோகஸ் பண்ணி வைச்சாஅலும் அது ரொம்ப அழகாதான் இருக்கும். இது கேரளாவுக்கே உரிய தனித்துவம். இந்த வகையில், கேரளா டைரக்டர்ஸ் கொடுத்து வைச்சவங்க. அந்த இடத்துக்குள்ளயே அவங்க தங்களோட படங்களை எடுக்குறதால அந்த இடங்கள் நமக்கு ரொம்ப புடிச்சுப்போகுது. உதாரணத்துக்கு ஒருசில படங்களை சொல்றது கஷ்டம்தான். இருந்தாலும் சொல்றேன். கும்பளாங்கி நைட்ஸ் படத்துல கும்பளாங்கின்ற கிராமத்தை காட்டியிருப்பாங்க. மகேஷிண்ட பிரதிகாரம் படத்துல இடுக்கியை காட்சிபடுத்தியிருப்பாங்க. நம்ம எல்லாரும் ரொம்பவே வியந்து பார்த்த அய்யப்பனும் கோஷியும் படத்தை அட்டப்பாடில ஷூட் பண்ணியிருப்பாங்க. இப்படி அவங்க காட்சிப்படுத்துற அழகான இடங்களை சொல்லிட்டே போகலாம்.

Hridayam
Hridayam

ஹீரோயின்கள்

தேவதைகளைப் பத்தி பேசாமல் மலையாள சினிமா நிறைவடையாது. நம்ம பசங்களோட க்ரஷ் லிஸ்ட்ல இப்போலாம் அதிகமா கேரளா ஹீரோயின்ஸ்தான் இருக்காங்க. ரொம்ப கிளாமர் சீன்ஸ் மலையாளப்படங்கள்ல இருக்காது. கிரிஞ்சா, நெஞ்சை நக்குறமாதிரியான டயலாக்ஸ் பேச மாட்டாங்க. லூசுத்தனமான கேரக்டர்ஸா சுத்த மாட்டாங்க. கதையை நகர்த்திக் கொண்டுபோற முக்கியமான கேரக்டர்ஸாதான் பெரும்பான்மையான கேரக்டர்ஸ் இருப்பாங்க. மற்ற சினிமாஇண்டஸ்ட்ரீல இருக்குற மாதிரி கதைக்கும் அவங்களுக்கும் சம்பந்தமே இல்லாமல்லாம் இருக்கமாட்டாங்க. நான் இதுக்கு முன்னாடி சொன்னா எல்லாப் படங்கள்லயும் ஹீரோயின்கள் முக்கியமான ரோல்லதான் நடிச்சிருப்பாங்க. குறிப்பா பார்வதி, நிமிஷா சஜயன், அன்னா பென், கிரேஸ் ஆன்டனி, மஞ்சு வாரியர், நிகிலா விமல், ரஜிஷா விஜயன், லிஜோமோல் ஜோஸ், கல்யாணி பிரியதர்ஷன், தர்ஷனா, அபர்னா பாலமுரளி, ஐஷ்வர்யா லக்‌ஷ்மி, வின்சி அலோசியஸ், மம்தா மோகன்தாஸ், சம்யுக்தா மேனன் – இப்படி போல்டான கேரக்டர்ஸ்ல நடிக்கிறவங்க லிஸ்ட்டை சொல்லிட்டே போகலாம்.

மலையாள சினிமாவை உங்களுக்கு ஏன் புடிக்கும்னு கமெண்ட்ல சொல்லுங்க!

Also Read – ஜெனிலியா… பிஸாங்கி… டோரா… செல்லப்பிள்ளை… ஷிவாங்கி இதுல யாரு?

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top