வால்ட் டிஸ்னி

Walt Disney: `ஃபேவரைட் பாடல், கடைசி வார்த்தை, Mickey Mouse’ – வால்ட் டிஸ்னி பற்றிய 7 சுவாரஸ்ய தகவல்கள்!

22 ஆஸ்கர் வென்ற, நூற்றுக்கணக்கான கேரக்டர்களை உருவாக்கிய வால்ட் டிஸ்னியை நம்ம எல்லாருக்கும் நல்லாவே தெரியும். அவர் வரைந்த கேரக்டர்கள் நம்மளோட குழந்தைப் பருவத்தை ரொம்பவே அழகாக்கியிருக்கு. இன்றும் அழகாக மாற்றிக்கொண்டிருக்கு. நம்ம வாழ்க்கைல Fun பகுதியை எப்பவும் சுவாரஸ்யமாக்குற வால்ட் டிஸ்னி பற்றிய 7 சுவாரஸ்யமான தகவல்களை தெரிஞ்சுப்போமா?

வால்ட் டிஸ்னி
வால்ட் டிஸ்னி

1) படிக்காத மேதைனு சொல்லுவாங்கள்ல. வால்ட் டிஸ்னியையும் அப்டி சொல்லலாம். ஏன்னா, அவர் பள்ளிக்கு போவதை பாதியிலேயே நிறுத்திட்டாரு. அப்புறம் அவருக்கு 16 வயசுல ராணுவத்துல சேர்ந்து வேலை பார்க்கணும்னு ஆசை வந்துச்சு. வயசு குறைவா இருக்குறதால அவரை ராணுவத்துல சேர்த்துக்கல. ஆனால், ரெட் கிராஸ் அமைப்புல ஆம்புலன்ஸ் டிரைவரா சேர்ந்துட்டார். ஆம்புலன்ஸ் டிரைவர் டு அகில உலக சூப்பர் ஸ்டார் ஆகியிருக்காரு பாருங்க!

2) `மனைவி பேச்சைக் கேட்டா உருப்படலாம்’னு சும்மாவா சொன்னாங்க. வால்ட் டிஸ்னி தன்னோட மனைவி பேச்சைக் கேட்டதாலதான் இன்னைக்கு உலக அளவில் பிரபலம் அடைஞ்சிருக்காரு. அட… ஆமாங்க! முதல்ல Mickey Mouse கேரக்டர்க்கு Mortimer Mouse-னுதான் வால்ட் டிஸ்னி பெயர் வைச்சுருக்காரு. ஆனால், அந்தப் பெயர் ரொம்ப பகட்டான பெயரா இருக்கு. Mickey Mouse-னு பெயரை மாத்துங்கனு டிஸ்னியின் மனைவி அவங்கள கன்வின்ஸ் பண்ணியிருக்காங்க. அப்புறம் Mortimer Mouse பெயரை Mickey Mouse-ன் எதிரி கேரக்டருக்கு டிஸ்னி வைச்சுட்டாரு. எல்லாருக்கும் ஃபேவரைட் மிக்கிதான பாஸ்!

வால்ட் டிஸ்னி
வால்ட் டிஸ்னி

3) Mickey Mouse வாய்ஸ்க்கு இங்க எத்தனை பேர் ரசிகர்? அந்த கேரக்டர் 1928-ம் ஆண்டு உருவாக்கப்பட்டதுல இருந்து 1947 வரைக்கும் டிஸ்னிதான் வாய்ஸ் கொடுத்தாரு. செமல்ல! அவரோட கேரக்டர்ஸ் பேசுற வாய்ஸ்ல எந்த வாய்ஸ் உங்களுக்கு பிடிக்கும்?

4) குழந்தைகளுக்கு பிடித்த ஏராளமான கேரக்டர்களை டிஸ்னி உருவாக்கியிருந்தாலும் அவரோட ஃபேவரைட் கேரக்டர் `goofy’தான். அவருக்குள்ள எப்பவுமே ஒரு குழந்தைத்தனம் இருந்துருக்கு. அதான், ஒவ்வொரு கேரக்டரையும் ரசிச்சு ரசிச்சு உருவாக்கியிருக்காரு.

5) வால்ட் டிஸ்னிக்கு ட்ரெயின் ரொம்ப புடிக்குமாம். அதனாலயே, தன்னோட டிஸ்னி லேண்ட்ல ட்ரெயின் போன்ற ரெய்டுகளை வச்சிருக்காரு. வால்ட் டிஸ்னிக்கு மற்றொரு கனவாக இருந்தது டிஸ்னி லேண்ட். கற்பனையா உருவாக்கின கதாபாத்திரங்களை குழந்தைகள் முன்னாடி கொண்டுவந்து நிறுத்தனும்னு மனுஷன் ரொம்பவே மெனக்கெட்ருக்காரு. கடன்லாம் வாங்கி டிஸ்னிலேண்ட் கட்டியிருக்காரு. டிஸ்னிலேண்ட் திறந்த முதல்நாளே அங்க கூட்டம் வேறலெவலாம். அந்த டிஸ்னிலேண்ட்ல அவருக்குனு ரகசியமா ஒரு கட்டடம் இருந்ததாகவும் சொல்லப்படுது.

வால்ட் டிஸ்னி
வால்ட் டிஸ்னி

6) எல்லா பிரபலங்களோட வாழ்க்கையிலும் சில மர்மங்கள் இருக்கும்ல. இவரோட வாழ்க்கைலயும் அப்படி சில மர்மங்கள் இருக்கு. அதுல ஒண்ணு அவரோட கடைசி வார்த்தை. தன்னுடைய இறப்புக்கு முன்னாடி வால்ட் டிஸ்னி, “Kurt Russell” அப்டினு எழுதினாரு. அவரோட ஸ்டுடியோல வேலைப் பார்த்த சிறுவனோட பெயர்தான் இது. இதை எதுக்கு எழுதினாருனு இன்னைக்கு வரைக்கும் யாருக்கும் தெரியாது. ஏன், இன்னைக்கு பெரிய நடிகரா இருக்குற Kurt Russell-க்கே தெரியாது. எதுக்கு எழுதிருப்பாரு?!

7) வால்ட் டிஸ்னி ஸ்டுடியோ படங்களில் எத்தனையோ பாடல்கள் இருக்கு. ஆனால், அவரோட ஃபேவரைட் பாடல் “Feed the Birds”தான். அவரோட படத்துல உங்களோட ஃபேவரைட் பாடல் என்ன?

Also Read : Pablo Escobar: 35 வயதில் உலகின் 7-வது கோடீஸ்வரன்; போதைப் பொருள் கடத்தல் மன்னன்- யார் இந்த பாப்லோ எஸ்கோபர்?

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top