மல்லிகைப் பூவே டு மல்லிப்பூ… பாடலாசிரியர் தாமரை பயணம்!

கண்கள் நீயே பாட்டுல “பலநூறு மொழிகளில் பேசும் முதல் மேதை நீ இசையாக பலபல ஓசை செய்திடும் இராவணன் ஈடில்லா என்மகன்”-னு வரிகள் எழுதியிருப்பாங்க. மகனை ராவணன்னு கொஞ்சுன வரிகளைப் பார்த்து எல்லாரும் வியந்து பாராட்டுனாங்க. அதேபோல, அழகிய அசுரா, வசீகரா, கலாபக்காதலா, கலாபம் போலாடும்-னு அவ்வளவு அழகியலான புதிய வார்த்தைகளை எழுதி சிலிர்க்க வைச்சாங்க. ஆங்கில வார்த்தைகளின் கலப்பு இல்லாமல், ஆபாசம் இல்லாமல், இரட்டை அர்த்தங்கள் இல்லாமல் கவித்துமாக பாடல் வரிகளை எழுதி பல ஆண்டுகளாக களத்தில் நின்று விளையாடும் பாடலாசிரியர் தாமரையைப் பத்திதான் இந்த வீடியோல பார்க்கப்போறோம்.

தாமரை
தாமரை

கவிஞர் தாமரை, தன்னோட ஏழு வயசுல இருந்தே புத்தகங்கள் படிக்க தொடங்கிட்டாங்க. தாமரையோட பெரியம்மா அவங்களை அடிக்கடி சினிமாவுக்கு கூட்டிட்டுப் போவாங்களாம். அப்போ, எதிர்ல அவங்க அப்பா புத்தகங்களோட வந்தா, அதுல ஒண்ணை எடுத்து படிச்சிட்டே நடக்கத் தொடங்கிருவாங்களாம். தாமரையோட அம்மாவும் அப்பாவும் முதல் தலைமுறை பட்டதாரிகள். அவங்க படிக்கிறதுக்கு பட்ட கஷ்டங்களையெல்லாம் சொல்றதைக் கேட்டு, நல்லா படிக்கணும்னு தாமரைக்கு ஆர்வம். அவங்க வீட்டுல எல்லாருமே படிப்புல கில்லாடிதான். முற்போக்கான சிந்தனையுடனும் சமூகத்துல இருக்குற முரண்கள், வேற்றுமைகள் பத்தியும் வாழ்க்கையைப் பத்தியும் நிறைய கேள்விகளோடதான் வளர்ந்துருக்காங்க. ஸ்கூல் படிச்சு முடிஞ்சதும் அவங்களுக்கு ஜார்னலிஸம் படிக்கணும்னு ஆசை. ஆனால், அவங்க முன்னாடி வைக்கப்பட்டது ரெண்டே ஆப்ஷன், ஒண்ணு மெடிசின், இன்னொன்னு இஞ்சினீயரிங்.

தாமரை
தாமரை

தாமரை இஞ்சினீயரிங் காலேஜ்ல அதும் மெக்கானிக்கல் டிப்பார்ட்மெண்ட்ல சேர்ந்தாங்க. படிச்சு முடிச்சதும்  ஒரு கம்பெனில 7 வருஷம் வேலை பார்த்துருக்காங்க. வேலைல திருப்தி இல்லாமல் வேலையை ஒருநாள் விட்டுட்டாங்க. அந்த 7 வருஷத்துல நிறைய படிக்கிறது, எழுதுறதை விட்டுட்டாங்க. வேலையை விட்டதும் குடும்பத்துல சென்னைக்குப் போய் பாட்டு எழுதப் போறேன்னு சொல்லியிருக்காங்க. வீட்டுல என்னதான் முற்போக்கு சிந்தனை உள்ளவங்க இருந்தாலும் அவங்க அக்சப்ட் பண்ணிக்கவே இல்லை. அப்புறம் அந்த நாள்கள்ல நிறைய படிக்க ஆரம்பிச்சிருக்காங்க. எழுத ஆரம்பிச்சிருக்காங்க. கதவை பூட்டிட்டு முழுநாள் உட்கார்ந்து படிப்பாங்களாம். அவங்க வேலையே, சிறுகதை, கவிதை, கட்டுரை போட்டிகள்ல கலந்துக்குறது தான். அதுல நிறைய பரிசுகள் வாங்க ஆரம்பிச்சாங்க. அந்த பரிசுகள் வாங்க சென்னைக்கு வருவாங்க. அப்போ இயக்குநர்கள், இசையமைப்பாளர்களை சந்திச்சு வாய்ப்புகள் கேட்க ஆரம்பிச்சுருக்காங்க.

தாமரை
தாமரை

தமிழ் சினிமா அவ்வளவு சீக்கிரம் யாருக்கும் வாய்ப்பு கொடுக்காது இல்லையா? தாமரைக்கும் அப்படிதான். ஆனால், சென்னைக்கு வந்தாதான் சினிமால வாய்ப்பு கிடைக்கும்னு உறுதியா நம்புனாங்க. சென்னைக்கு ஒருகட்டத்துல வந்துட்டாங்க. அதுக்கு முன்னாடிலே இலக்கிய உலகத்துல, பத்திரிக்கை துறைல அவங்க ரொம்ப ஃபேமஸான ஆளா இருந்தாங்க. சென்னை வந்ததும் கவிதை புத்தகங்கள், படைப்புகளைக் கொடுத்து வாய்ப்பு கேட்க தொடங்கியிருக்காங்க. அப்படிதான் சீமானை போய் தாமரை சந்திக்கிறாங்க. அவரோட கவிதையை படிச்சு ரொம்ப இம்ப்ரஸ் ஆன சீமான், தன்னோட இனியவளே படத்துல ’தென்றல் எந்தன்’ பாட்டு எழுத வாய்ப்பு கொடுக்குறாரு. சினிமா துறைக்குள்ள தாமரை இப்படித்தான் அறிமுகம் ஆனாங்க.

தாமரை
தாமரை

முதல் 3, 4 வருஷம் சினிமா துறைல ரொம்பவே கஷ்டப்பட்டாங்க. அப்புறம்தான் கவுதம் வாசுதேவ் மேனனோட அறிமுகம் அவங்களுக்கு கிடைக்குது. மின்னலே படத்துல வசீகரா பாட்டு எழுறாங்க. இந்தப் பாட்டுதான் அவங்களுக்கு மிகப்பெரிய பிரேக் கொடுத்தது. அந்தப் பாட்டு எழுதி கொடுத்ததும் கௌதம் மேனன், “இப்படிதான் பெண்கள் நினைப்பாங்களா?”னு கேட்ருக்காரு. அந்தப் பாட்டுல ஒரு வார்த்தையைக் கூட கௌதம் மாத்தவே இல்லை. பெண் பார்வையிலயும் நிறைய விஷயங்களை அழகா, பாடல் வரிகளை எழுத முடியும்னு தாமரை நிரூபிக்கிறாங்க. தமிழ் சினிமாவின் மிகப்பெரிய வெற்றிபெற்ற முதல் பெண் பாடலாசிரியர், தாமரைனு தைரியமா சொல்லலாம். தாமரை இன்ஸ்பிரேஷனா எடுத்துக்கு அவங்களுக்கு முன்னோடியா பெண் பாடலாசிரியர்கள் இல்லை. ஆனால், தாமரை நிறைய பெண் பாடலாசிரியர்களுக்கு இன்னைக்கு இன்ஸ்பிரேஷனா மாறியிருக்காங்க. இதுக்கு அப்புறம் நடந்தது எல்லாமே ஹிஸ்டரி. செம கெத்துல?!

தாமரை
தாமரை

பெரும்பாலும் இன்னைக்கு வரைக்கும் எல்லா காதல் பாடல்கள்லயுமே பெண்கள், ஆண்களைப் பத்தி பாடுற வரிகளையும் ஆண்கள்தான் எழுதிட்டு இருந்தாங்க. பெண் இப்படித்தான் ஆண்களை பத்தி நினைப்பாங்க, இப்படித்தான் ஆண்களைப் பத்தி நினைக்கணும்னும் நிறைய பாட்டுல எழுதுறதா தாமரை சொல்லுவாங்க. இதை மாத்துனது தாமரைதான். அவங்களோட வெற்றிக்கு முக்கியமான காரணங்கள்ல ஒண்ணாகவும் இதைத்தான் தாமரை நினைக்கிறாங்க. இன்னொரு முக்கியமான காரணம் கௌதம் மேனன் – ஹாரிஸ் ஜெயராஜ் – தாமரை கூட்டணிதான். கௌதம் மேனனோட முதல் படத்துல தொடங்கி ரிலீஸ் ஆக காத்துருக்குற துருவ நட்சத்திரம் வரைக்கும் இந்த மூணு பேரோட கூட்டணி தொடர்ந்துட்டுதான் இருக்கு. இந்தக் கூட்டணி ஏன் அவ்வளவு ஸ்பெஷல்னு தாமரைக்கிட்ட கேட்டா செமயா விளக்கம் ஒண்ணு சொல்லுவாங்க.

தாமரை
தாமரை

கௌதம், ஹாரிஸ்-னு ரெண்டு பேருமே தாமரைக்கு வரிகள்ல தடை போட்டதே கிடையாதாம். பாட்டை எழுதுறதுக்கு முன்னாடி வரைக்கும் நிறைய இன்புட்ஸ் கௌதம், ஹாரிஸ் கொடுப்பாங்களாம். பழைய வார்த்தைகள் எல்லாம் எடுத்து அந்த பாட்டுல யூஸ் பண்ணுவாங்க. அப்போ, கலாபம் அப்டின்ற வார்த்தை எல்லாம் எழுதும்போது மற்ற இயக்குநர்களா இருந்தா வேற வார்த்தை போடுங்கனு சொல்லிடுவாங்களாம். ஆனால், கௌதம் “கேக்குறவங்க தேடி தெரிஞ்சுக்கட்டும்”னு சொல்லிடுவாராம். அதனால, தாமரை பழைய வித்தியாசமான, நல்ல வார்த்தைகளை யூஸ் பண்ண ஆரம்பிச்சாங்க. அந்த வார்த்தைகளை இளைஞர்கள் தேடவும் ஆரம்பிச்சாங்க. அந்த வார்த்தைகளை வரிகளோட இசையோட சேர்த்து ரசிக்கவும் ஆரம்பிச்சாங்க. யதார்த்தமான மேல்தட்டு படக்காட்சி அமைப்பு, மேற்கத்திய பாணி இசை, அழகான தமிழ் மூணும் சேர்ந்து நல்ல கூட்டணியா மாறிடுச்சுனு ஒரு காரணம் சொல்லுவாங்க.

தாமரை
தாமரை

தாமரை – கௌதம் – ஹாரிஸ் கூட்டணில வந்த பெஸ்ட் லிரிக்ஸ்லாம் பார்ப்போமா? முதல்ல வசீகரா பாட்டு. அதுல, “அடை மழை வரும் அதில் நனைவோமே, குளிர் காய்ச்சலோடு சினேகம், ஒரு போர்வைக்குள் இரு தூக்கம்” பாட்டு கேட்கும்போது மனைவி இல்லைனா காதலியை மனசு தேடும். காக்க காக்கல முழு பாட்டும் இவங்க எழுதுனதுதான். ஒன்றா ரெண்டா ஆசைகள், என்னைக் கொஞ்சம் மாற்றி பாடல்கள்ல வர்ற எல்லா வரிகளுமே வேறலெவல்தான். வேட்டையாடு விளையாடு படத்துல கற்க கற்க-னு கமல்க்கு ஓப்பனிங் சாங் எழுதியிருப்பாங்க. எனக்கு தெரிஞ்சு பெண் பாடலாசிரியர்களுக்கு ஓப்பனிங் சாங் கொடுத்ததுலாம் கௌதம் மட்டும்தான்னு நினைக்கிறேன். அதுல பலரோட ஃபேவரைட் பார்த்த முதல் நாளே, மஞ்சள் வெயில் பாட்டுதான். பார்த்த முதல் நாளே பாட்டுல“ பார்த்தேன் கடந்தேன் பகல் இரவை உன் அலாதி அன்பினில் நனைந்த பின் நனைந்த பின் நானும் மழை ஆனேன்”னு ஒரு வரி வரும். ப்பா என்ன வரி!

பச்சைக்கிளி முத்துச்சரம் படத்துல கரு கரு விழிகளால் பாட்டு வரும். அதுல “புது புது வரிகளால், என் கவிதை தாளும் நிறையுதே, கனவுகள் கனவுகள் வந்து கண்கள் தாண்டி வழியுதே” வரிகள் எல்லாம் பக்கா வைப்க்கான வரிகள். அடுத்து வாரணம் ஆயிரம். சொல்லவா வேணும். நெஞ்சுக்குள் பெய்திடும் வான்மழை, அனல் மேலே பனித்துளி, முந்தினம் பார்த்தேனே – எல்லாப் பாட்டுலயும் ஒவ்வொரு வரியையும் ரசிச்சு ரசிச்சு எழுதியிருப்பாங்க போல. அப்படியே உயிரை உருக்கி எடுத்துரும் பாட்டு. என்னை அறிந்தால் படத்துலயும் பாடல்கள் வேறலெவல்ல இருக்கும். உனக்கென்ன வேணும் சொல்லு பாட்டுலாம் டிராவல்ல கேட்டா மயக்கிரும். மழைவரப்போகுதே, இதயத்தில் ஏதோ ஒன்று எல்லாமே கேட்கும்போது மூளை வழியா இதயத்துக்குள்ள போய் ஏதோ பண்ணும். பியூர் மேஜிக்தான். கடைசியா இந்த மூவர் கூட்டணி துருவ நட்சத்திரம்ல வேலை பார்த்தாங்க. ஒரு பாட்டுதான் ரிலீஸ் ஆகியிருக்கு. அதுவும் வேறமாறி ஹிட்டு.

கௌதம் – தாமரை கூட்டணில ஹாரிஸ் கொஞ்சம் நாளா சேரல. அந்த இடத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் வந்தாரு. ஆனால், தாமரை வழக்கம்போல தன்னோட ஸ்டைல்ல வேறமாறி சம்பவம் பண்ணிட்டு இருக்காங்க. இவங்க கூட்டணில வந்த எல்லா பாட்டுமே குறிப்பிட்டு சொல்ற பாடல்கள்தான். ஆனால், எல்லாரையும் வியக்க வைச்சது “தள்ளிப் போகாதே” பாட்டுதான். அப்படியே ஒரு கதை மாதிரி இருக்கும் பாட்டு. முதல்ல இந்த ட்யூன் அவங்களுக்கு புரியவே இல்லையாம். அப்புறம், கௌதம் டம்மி வரிகள்லாம் போட்டுப் பாடி தாமரை எழுதியிருக்காங்க. சமீபத்துல வந்த வெந்து தணிந்தது காடு படத்துலயும் தாமரைதான் பாடல் வரிகளை எழுதியிருக்காங்க. மல்லிப்பூ பாட்டுதான் இன்னைக்கு டிரெண்ட். இன்னொரு விஷயம் ஆச்சரியம் என்னனா, இதே மல்லிப்பூவை வைச்சு 90’ஸ் கிட்ஸ் ஃபேவரைட் பாட்டு ஒண்ணையும் தாமரை எழுதியிருக்காங்க. “மல்லிகைப் பூவே மல்லிகைப் பூவே பார்த்தாயா?”னு ஒரு பாட்டு வரும்ல அது தாமரை எழுதுனதுதான்.

தாலாட்டுப் பாடல்கள்ல தாமரை ஸ்பெஷல்னே சொல்லலாம். தமிழ்ல வந்த பெஸ்ட் 10 தாலாட்டு பாடல்கள எடுத்துக்கிட்டா அதுல தாமரையோட கண்கள் நீயே, கண்ணான கண்ணே இந்த ரெண்டு பாட்டுமே இருக்கும். ஒரு விஷயம் என்னனா, இந்த ரெண்டு பாட்டைத் தவிர மற்ற பாடல்களை எழுதுன எல்லாருமே ஆண்களாதான் இருப்பாங்க. கண்ணான கண்ணே பாட்டை அஜித் கேட்டுட்டு ரொம்பவே ஹேப்பி ஆயிட்டாராம். டேட்ஸ் லிட்டில் பிரின்ஸஸ்க்குலாம் இன்னைக்கும் தாலாட்டுப் பாட்டு கண்ணான கண்ணே தான். “புண்ணான நெஞ்சை, பொன்னான கையால், பூப்போல நீவ வா” வரிகள் எல்லாம் பியூர் காயங்களை ஆற்றும் வரிகள்தான்.

உயிரே என் உயிரே, ஒரு மாலை இளம் வெயில் நேரம், மறுவார்த்தை பேசாதே, செந்தூரா, நீயும் நானும், தூவானம், மாலை மங்கும் நேரம், ஒரு வெக்கம் வருதே, கேட்டா கொடுக்குற பூமி இது – இப்படி வெரைட்டியா தாமரை எழுதுன பெஸ்ட் பாடல்கள சொல்லிட்டே போகலாம்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top