ரஜினி, கலாநிதி மாறன் முன்னாடி அந்தோணி தாசன் பண்ண தரமான சம்பவம்!

சரியா சொல்லணும்னா ஒரு 10 வருஷத்துக்கு முன்னாடி வரைக்கும் அந்தோணி தாசன் – ரீட்டா கரகாட்டம்னா பக்கத்துல இருக்கிற சுற்றுவட்டாரமே திரண்டுவந்தது. அந்த அளவுக்கு அந்த ஜோடி பேமஸ். இப்பவும் ரீட்டாவுக்கு பேன்ஸ் இருக்கத்தான் செய்றாங்க. இன்னும் சொல்லப்போனா ஒரு 10 வருஷ காலம் அந்தோணி – ரீட்டா கரகாட்டம்னாதான் திருவிழாவே களைகட்டும்னு நிலை இருந்ததுனுகூட சொல்லலாம். ‘உங்க ஊர்ல நீங்க எப்படியோ, அவக ஊர்ல அவக பெரியாளு’ – இந்த டெம்ப்ளேட்லதான் கரகாட்டம் பண்ணிட்டிருந்தாங்க. அதுக்கு முக்கியமான காரணம், இவங்க ஆடுன கரகாட்டத்துல அனல் பறக்குற வேகம் இருந்தது. அதனாலகூட இவங்க ஆட்டம் எல்லோருக்கும் பிடிச்சுப்போச்சுனுகூட சொல்லலாம். ஆனா, புழுதி கிளம்ப மண்ல ஆடிக்கிட்டு இருந்த அந்தோணிதாசனை நெறையபேர் வச்சு செஞ்சிருக்காங்க. இரவெல்லாம் ஆடின ஆட்டத்துக்கு காசு கொடுக்காம அழுக வச்சு துரத்தி விட்டிருக்காங்க. இப்படி பல தடைகளை கடந்து இன்னைக்கு பல கலைஞர்களுக்கு வாய்ப்பு கொடுக்குற ஒரு இசை நிறுவனத்தையே தொடங்கியிருக்கார். அப்படி கஷ்டப்பட்ட இவரோட கதையைத்தான் இந்த வீடியோவுல பார்க்கப் போறோம்.

வீடியோவுக்குள்ள போறதுக்கு முன்னாடி இவருக்கும் போஃக் மார்லிக்கும் ஒரு சம்பந்தம் இருக்கு. அது என்னனு யோசிச்சு வைங்க. அதை வீடியோவோட கடைசியில பார்ப்போம்.

Anthony daasan
Anthony daasan

அந்தோணி தாசன் ஆரம்பம்!

”இவரோடஅப்பா நாதஸ்வரக் கலைஞர், அம்மா, கட்டடத் தொழிலாளி. வீட்ல அந்தோணிதாசனும், அவரோட அக்காவும்தான். அந்தோணிதாசனுக்கு நாட்டுப்புறக் கலைஞனுக்கே விதிக்கப் பட்ட வறுமையைத் தவிர வேறொண்ணும் பெருசா இல்லை.  ஆனா ஜெயிச்சே தீரணும்னு நெனப்பு மட்டும் இவருக்கு மாறவேயில்லை. அப்பா போகிற நிகழ்ச்சிக்கு சுருதிப் பெட்டி வாசிக்க ஆரம்பிச்சு அப்படியே கரகாட்டம் ஆடுறவங்க குழுவுல பஃபூனா போக ஆரம்பிச்சார். படிப்படியா 14 வயசிலேயே குறவன் குறத்தி ஆட்டம் ஆடுற அளவுக்குத் தொழிலைக் கத்துக்கிட்டார். கொஞ்சம் கொஞ்சம் சொந் தமா பாட்டெழுதி தஞ்சை அந்தோணிங்கிற பெயரில் நாட்டுப்புறப்பாடல் கேசட் வெளியிட்டார்.

மோஸ்ட் வாண்டட் சிங்கர்!

‘சென்னை சங்கமம்’ விழாவுல நிகழ்ச்சி பண்ண பாடகி சின்னப் பொண்ணுகூட வந்திருக்கார், அந்தோணி தாசன். அந்த விழாவுல நடிகர் கருணாஸ் அறிமுகம் கிடைச்சது. அவரும் கூப்பிட்டு திண்டுக்கல் சாரதி படத்துல திண்டுக்கல்லு திண்டுக்கல்லு பாடலை பாட வச்சார். அந்த பாட்டுல அந்தோணிதாசன் ஒரு கெஸ்ட் ரோலும் பண்ணியிருப்பார். ஆனா, இதுல சோகம் என்னன்னா?, இது இவரோட பாட்டுன்னு நிறைய பேருக்கு தெரியாமாலே போயிடுச்சு. அதை கருணாஸ்தான் பாடுனருனு எல்லோரும் நினைச்சாங்க. தொடர்ந்து சந்தோஷ் நாராயணன், ஷான் ரால்டன் போன்ற இசையமைப்பாளர்கள் வாய்ப்பு கொடுத்து ‘சூது கவ்வும்’ , ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’, ‘குக்கூ’, ‘முண்டாசுப் பட்டி’, ‘ஜிகர்தண்டா’, ‘னு வரிசையா தன்னோட முத்திரை பதிச்சவர், மானே மானே பாட்டை உறியடி படத்துக்காக அவரே இசையமைச்சு பாடினார். இப்போ காத்துவாக்குல ரெண்டு காதல், வாரியர்னு பாடல்களைப் பாடிக்கிட்டு, எம்.ஜி ஆர் மகன் படம் மூலமா இசையமைப்பாளர் அவதாரமும் எடுத்திருக்கார். இதுபோக மலையாளம், கன்னடத்துல மோஸ்ட் வாண்டட் சிங்கரும் நம்ம அந்தோணிதாசன்தான். இவங்க தேடுனது போக தமிழ்நாட்டோட முதல்வரும் தேட ஆரம்பிச்சாரு. அவருக்காக பாடின பாட்டுதான் ‘ஸ்டாலின்தான் வர்றாரு’. தமிழ்நாட்டின் மூலைமுடுக்குகள்ல எல்லாம் போய் சேர்றார், அந்தோணிதாசன்.  

அந்தோணி தாசன் – ஜிகர்தண்டா சம்பந்தம்!

ஜிகர்தண்டா பட்த்துல எல்லோருக்கும் பிடிச்ச ”ஏய் பாண்டி நாட்டு கொடியின் மேலே” பாட்டைப் பாடியிருப்பார். அதை எழுதினதும்  அவரேதான்… அந்த பாட்டுக்குப் பின்னால ஒரு பெரிய சம்பவமே இருக்கு. மதுரை பக்கத்துல இருக்கிற கிராமத்துல திருவிழா நடந்துக்கிட்டு இருக்கு. ராத்திரி முழுசும் கரகாட்டம் ஆடிட்டு, விடிஞ்சா காசு வாங்கிட்டு போகலாம்னு காத்துக்கிட்டிருக்காங்க. ஆனா, திருவிழாவுக்கு புக் பண்ணவர் காசை வாங்கிட்டு ஓடிட்டார். ஊர்க்காரங்க அடுத்த நாள் வேலையைப் பார்க்க ஆரம்பிச்சுட்டாங்க. அப்புறம் அவங்ககிட்ட கெஞ்சிக் கூத்தாடி பஸ்ஸூக்கு மட்டும் காசு வாங்கிட்டு மாட்டுத்தாவணி பஸ் ஸ்டாண்டுக்கு டவுன் பஸ்ல போனாங்க அந்தோணி தாசனும், அவங்க மனைவி ரீட்டாவும். அப்போ வைகை ஆற்றை பஸ் கடந்துச்சு. அப்போ மனசுல வைராக்கியமா ஒரு வார்த்தை நினைச்சிருக்கார். அந்த வாக்கியம்தான் ‘வைகை ஆத்து மண்ணு ஒரு நாள் என்பேரைச் சொல்லும்’. இந்த வாக்கியத்தைத்தான் பாட்டுல வச்சு எழுதி, அவரே பாடி, அதுல டான்ஸ்ம் ஆடியிருப்பார். அதுக்குப் பின்னால அந்தோணி தாசன் புகழை மதுரையே பாடிச்சுங்குறதெல்லாம் வரலாறு.

Anthony daasan
Anthony daasan

பலம்!

அந்தோணி தாசன் பலமே அவரோட எனர்ஜிதான். இந்த கரகர குரல் கொஞ்சும், கெஞ்சும், சக்தி கொடுக்கும்னு இன்னும் சொல்லிட்டே போலாம். வரிகளைக் கடந்து இவர் கொடுக்கும் விஷேச சப்தம்தான் இவரோட தனித்துவம். இன்னைக்கும் ஸ்டேஜ் ஏறிட்டா எதுவா இருந்தாலும் எனக்கென்ன, நான் ஸ்டேஜ்ல பெர்ஃபார்ம் பண்ணுவேன்னு ஒரு பாட்டாவது பாடாம இறங்க மாட்டார். கூடவே ஆடுறதும் இவரோட இன்னொரு ப்ளஸ். அதுலயும் பேட்ட ஆடியோ லாஞ்ச்ல ஸ்டேஜ்ல ரஜினி, கலாநிதிமாறன் முன்னாடி பாடிக்கிட்டே பெர்ஃபார்ம் பண்ணுவார். ரெண்டுபேரும் வியந்து பார்ப்பாங்க. ஒரே வார்த்தையில சொல்லணும்னா அந்தோணிதாசன்னா எனர்ஜி. இன்னைக்கு வயசு 45 வயசு ஆகிடுச்சு. பேரான் பேத்தி எடுத்துட்டார். ஆனா இவர் பெர்ஃபார்ம் பண்ண ஆரம்பிச்சா அப்படி தெரியவே தெரியாது. குரலில் எனர்ஜியைக் கொட்டும் கொண்டாட்ட ஊற்று இந்த போக் மார்லினும் சொல்லலாம்.

Also Read – 2022-ல் தமிழ் சினிமாவின் டாப் 10 ஹிட் சம்பவங்கள்!

போஃக் மார்லி ரெக்கார்ட்ஸ்!

ஆரம்பக்காலக்கட்டங்கள்ல சினிமாவுக்குள்ள வந்தப்போ எல்லோரும் இவன்லாம் ஒரு ஆளு, இவன்லாம் பாடி என்ன பண்ணப்போறான்னு சொன்னவங்கதான் ஏராளம். அப்படி நினைக்கப்பட்டவர்தான் இன்னைக்கு போஃக் மார்லி ரெக்கார்ட்ஸ்னு ஒரு பாட்டு கம்பெனியே ஆரம்பிச்சிருக்கார். இந்த நிறுவனத்துல இவர் பாடுவர். வேற யாரும் பாட்டு தயாரிக்கணும்னா தாராளமா வந்து பாடிக்கலாம். இது எல்லா மக்களுக்குமான களம்னு சொல்றார், அந்தோணிதாசன். இதுக்குப் பின்னால இருக்கிற உழைப்பு கொஞ்ச நஞ்சம் இல்ல. ஆரம்பக் காலக்கட்டங்கள்ல சென்னைக்கு வர்றப்போ தங்க இடமில்லாத சூழலுக்கும் தள்ளப்பட்டிருக்கார். அதனால இன்னைக்கு அதுக்காகவே கிராமத்துல இருந்து யாராவது புதுசா பாட வந்தா அவங்க தங்குறதுக்காக ஆபீஸ் ஒண்ணு கட்டி வச்சிருக்கார். இன்னைக்கும் அந்தோணிதாசனோட பலம்னா சினிமா பாட்டுக்குள்ள கிராமிய வாசனை வீச வைக்கிறதுதான். சிலர் கிராமியக் கலைஞரா இருந்து திரைக்கு வர்றப்போ, சினிமாவுக்கு ஏத்த மாதிரி மாறிடும். ஆனா, இவர் என்னைக்குமே கிராமிய தனித்துவத்தை விட்டுக் கொடுத்ததே இல்லை.

போப் மார்லியோட தீவிர ஃபேன் அந்தோணி தாசன். அதனால தன்னோட பெயரை போஃக் மார்லினு  அடைமொழியா வச்சுக்கிறார். இவங்க ரெண்டுபேருக்குள்ளயும் இருக்கிற ஒற்றுமை ரெண்டுபேரோட மனைவி பேரும் ரீட்டாதான்.

எனக்கு இவர் பாட்டுல ஜிகர்தண்டா ‘பாண்டி நாட்டு கொடியின்னல’ பாட்டுதான் பிடிக்கும். உங்களுக்கு எந்த பாட்டு பிடிக்கும்னு கமெண்ட்ல சொல்லுங்க. 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top