2022-ல் தமிழ் சினிமாவின் டாப் 10 ஹிட் சம்பவங்கள்!

2022-ல தமிழ் சினிமால நடந்த டாப் 10 ஹிட் சம்பவங்களைத்தான் நாம இந்த வீடியோல பார்க்கப்போறோம். ரெடி ஸ்டார்ட்.


#10 விஜய் பேட்டி

‘என்னது தளபதிக்கு பத்தாவது இடமா.. ஓடு தெரியுது ப்ரோ’ என்று வரவேண்டாம். இது எந்த ஆர்டர்லயும் இல்ல. ரேண்டமாதான் சொல்றோம். 

கிட்டத்தட்ட 10 வருடங்களுக்குப் பிறகு விஜய் மீடியால பேட்டி கொடுத்திருக்கிறார். பீஸ்ட் பட ப்ரொமோசனுக்காக நெல்சன் இந்த பேட்டியை எடுத்திருந்தார். “ஒரு பேட்டில நான் சொன்னது ஒரு மாதிரி.. அவங்க எழுதுனது ஒரு மாதிரி இருந்தது. அதுக்கு வந்த நெகட்டிவிட்டியை பார்த்துதான் இனிமே பேட்டி கொடுக்கவேணாம்னு முடிவு பண்ணேன்” என்று ஓபனாக பேசியிருந்தார் விஜய். அப்பா மேட்டரில் இருந்து அரசியல் மேட்டர் வரை பேசியிருந்தார்கள். பீஸ்ட் படம் ஹிட் அடிச்சா எங்களையெல்லாம் ஃபாரின் டூர் கூட்டிட்டு போறீங்களா என்று நெல்சன் கேட்டதுக்கு நான் தனியா போறேன். நீங்க தனியா போயிட்டு வாங்க என்று சொல்லியிருப்பார் தளபதி. டூர் போனாங்களா இல்லையானு தெரியல.  டாப் 10 மூவீஸ் சுரேஷ் ஸ்டைலில் ரிவ்யூ சொல்வதென்றால் பீஸ்ட் = ரோஸ்ட்.

#9  சிம்புவுக்கு டாக்டர் பட்டம்

லிட்டில் சூப்பர் ஸ்டார், எஸ்.டி.ஆர், ஆத்மன் என்று இருக்கிற பட்டங்கள் போதாதென்று சிம்புவுக்கு இன்னொரு பட்டமும் இந்த வருசம் வந்து சேர்ந்தது. சிம்பு இனி டாக்டர் சிம்பு. கொடுத்தது யார் தெரியுமா? வெந்து தணிந்தது காடு படத்தைத் தயாரித்த ஐசரி கணேஷ் நடத்தி வரும் வேல்ஸ் யுனிவர்சிட்டி. வழக்கமாக படம் ஹிட் அடித்தால் ப்ரொடியூசர் கார் வாங்கித் தருவார். இந்த படத்தில் காருக்கு பதிலா கவுரவ பட்டம் போல. ஆனா ஒண்ணு சிம்பு நடிச்ச எந்த படத்தை வேணா மறந்துடலாம். இந்தப் படம் யாருக்கும் மறக்காது. அப்படி ஒரு வேலையை பாத்துவிட்ருக்காப்ல கூல் சுரேஷ். வெந்து தணிந்தது காடு… தக்காளி டாக்டர் சிம்புவுக்கு வணக்கத்தை போடு.

#8 பொன்னியின் செல்வன்

1950 ல எழுதுன பொன்னியின் செல்வன் நாவலை எம்.ஜி.ஆர், கமல்னு ஆரம்பிச்சு பலரும் படமாக்க நினைச்சு முடியாமல் போனது. அதை இந்த வருடம் சாதித்துக் காட்டியிருக்கிறார் மணிரத்னம். பொன்னியின் செல்வன் படம்தான் இந்த வருசத்தின் தரமான சம்பவம். உயிர் உங்களுடையது தேவி என்று இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் தட்டும் 2k கிட்ஸில் ஆரம்பித்து தொடர்கதையாக வாரவாரம் காத்திருந்து வாசித்த 60s காலத்து ஸ்லீப்பர் செல்கள் வரை எல்லாருக்கும் படம் பிடித்து போக.. 400 கோடிக்கு மேல் கலெக்ட் செய்தது பொன்னியின் செல்வன். மாங்கு மாங்குனு மாசக்கணக்கா ப்ரொமோசன் பண்ணினதும் ஒரு காரணம். அதுலயும் ரஜினியும் கமலும் ஒன்றாக மேடையேறிய ஆடியோ லாஞ்ச்ல ‘என்ன ஃபீலு ஃபீலு’ என்று ரஜினியின் மாஸ் ஸ்பீச் சக்கை ஹிட். 

#7 அனிருத்தா.. ரஹ்மானா யாருக்கு ஹிட் அதிகம்? 

உன் பாட்டுக்கும் என் பாட்டுக்கும் சோடி போடுவமா சோடி.. என்று போட்டிபோட்டுக்கொண்டு ஹிட் கொடுத்திருக்கிறார்கள் அனிருத்தும் ரஹ்மானும். அனி ப்ரோ ‘ஹலமதி ஹபிபூ’வை இறக்கினால் இங்கிட்டு ரஹ்மான் ‘சோழா சோழா’வை இறக்கி டிரிப் ஆக்குகிறார். இவரு ‘நான் பிழை’ எடுத்துக் காட்டினால் அவரு ‘மறக்குமா நெஞ்சம்’னு எசைப்பாட்டு பாடுறாரு. ஒருவர் ‘மல்லிப்பூ வச்சி வச்சி வாடுதே’ என்று நேசனல் லெவல் டிரெண்டிங் கொடுத்தால் இன்னொருவர் ‘டூ டூ டூ’ என்று இண்டர்நேசனல் லெவலில் இறங்கி செய்கிறார். இந்த போட்டியில் டான், திருச்சிற்றம்பலம், விக்ரம் என மாஸ் ஹிட்டுகளைக் கொடுத்து வெற்றி பெற்ற அனிருத்தான் 2022-ன் சென்சேஷன். ஆனாலும் 30 வருசமா அப்போ இருக்குற சென்சேஷன்களுக்கு டஃப் கொடுக்கிற ரஹ்மான் செம்ம கெத்துல. 

அனிருத்தா.. ரஹ்மானா யாருக்கு ஹிட் அதிகம்? 

#6 நயன்தாரா – விக்னேஷ்சிவன் திருமணம்

ஊரறிந்த ரகசியமாக இருந்த விக்னேஷ்சிவன் – நயன்தாராவின் ரிலேசன்ஷிப் அஃபிஷியலானது இந்த வருடம்தான். மாமல்லபுரத்தில் ஒரு ரெசார்ட்டில் விவிஐபிகள் மத்தியில் நடந்தது திருமணம். நாலஞ்சு போட்டோவை மட்டும் போட்டுவிட்டு கல்யாண கேசட் நெட்ஃபிளிக்ஸ்ல வரும் என்று அறிவிக்கப்பட்டது. ஆளாளுக்கு அந்த வீடியோவுக்கு காத்திருக்க எங்களுக்கு டூ-டூ-டூ ட்வின்ஸ் பிறந்திருக்குங்க என்று அறிவித்து இன்ப அதிர்ச்சி கொடுத்தார் விக்கி. ஜூன்லதானடா கல்யாணம் ஆச்சு.. அக்டோபர்ல குழந்தையா என்னயா சொல்றீங்க என்று ஷாக்காக வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றதாக சொல்லப்பட்டது. ஒரு பக்கம் இது சரியா தப்பானு விவாதம் நடக்க இன்னொரு பக்கம் வாடகைத்தாய் வச்சுக்க கல்யாணம் ஆகி 5 வருசம் ஆகணுமே என்று சர்ச்சை கிளம்பியது. 2016-லயே அவங்களுக்கு ரெஜிஸ்டர் மேரேஜ் நடந்திருக்கு என்று சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. பையன் சுச்சூ போயிட்டான் ஹிஹி என்று விக்னேஷ்சிவன் நெகிழ்ச்சியாக இன்ஸ்டாகிராமில் ஸ்டோரி வைக்கிறார். இன்னும் கொஞ்ச நாள்ல அவங்க ஸ்கூலுக்கே போயிடுவாங்க போல.. எலேய் நெட்ஃபிளிக்ஸூ… அந்த வீடியோவ எப்படா விடுவா?

#5 வலிமை – அஜித் 

ஆழ்வார் படம் பார்த்தும் அசராமல் நின்ற தல ரசிகர்களைத் கதறவிட்ட படம் என்றால் வலிமைதான். டைட்டில் வெளியாகி இன்றுடன் 500 வது நாள் என்று போஸ்டர் அடித்தும்கூட படத்தை பற்றிய எந்த அப்டேட்டும் கொடுக்காமல் அறிக்கை மட்டும் கொடுத்து வச்சு செய்தது படக்குழு. மோடியில் இருந்து மொயின்அலி வரை வலிமை அப்டேட் கேட்டு சலித்துவிட்டார்கள். ஆண்டாண்டுகளாக நடந்த இந்த பஞ்சாயத்துக்கு முடிவாக ஒரு வழியாக இந்த வருடம் வலிமை படம் ரிலீஸ் ஆனது. ‘இன்னாடி இது இப்படி ஆயிருச்சு’ என்று உச்சுக்கொட்டும்படிதான் படம் இருந்தது. படம் வந்ததும் வாழாய் என் வாழ்வை வாழவே என்று பைக்கை எடுத்துக்கொண்டு பறந்துவிட்டார் தல.  பத்ரிநாத், கேதர்நாத், லே-லடாக், ஜம்மு, கார்கில், தாய்லாந்து என பைக்கில் சுற்றிக்கொண்டிருந்தார். travel vlog புகழ் டி.டி.எஃப் வாசனே பண்ணாத அட்டகாச ரைடுகளெல்லாம் பண்ணி ஆல்டைம் டிரெண்டிங்கிலேயே அஜித். அதற்கு நடுவிலும் துணிவு ஷூட்டிங் முடித்திருக்கிறார். ஹேய் எப்புட்றா..! 


#4 இரவின் நிழல் 

உலகின் முதல் நான் லீனியர் சிங்கிள் ஷாட் படம் என்று வெளியானது இரவின் நிழல். ஆனாலும் அநியாயத்துக்கு வித்தியாசமா இருக்கீங்க சார் என்று ரசிகர்கள் ஃபீல் பண்ணும்படி ப்ரொமோசன் தொடங்கி ரிலீஸ் வரை வித்தியாசத்தைக் கொட்டியிருந்தார் பார்த்திபன். ஃபர்ஸ்ட் சிங்கிள் பற்றிய அறிவிப்பு பற்றிய அறிவிப்பு என்று டிவீட் போட்டு டரியல் ஆக்கினார். ஆடியோ லாஞ்சில் ஏ.ஆர்.ரஹ்மானை எடக்கு மடக்காக கேள்வி கேட்க ரஹ்மான் பதிலுக்கு எதையோ சொல்ல மைக் வேலை செய்யவில்லை என்று தூக்கி எறிந்தது டிரெண்டிங் ஆனது. படம் பார்க்க போனவர்கள் உள்ளே போகும்முன் ‘ஆஸ்கார் எடுத்து வைடா டிரம்ப்பே’ என்று பேட்டி கொடுத்துவிட்ட போக, வெளியே வரும்போது ஆபிஸ் ரூமில் இருந்து வெளிவருவதுபோல் வந்து கலக்கமூட்டினார்கள். இது சிங்கிள் ஷாட் தான் ஆனால் முதல் நான் லீனியர் கிடையாது என்று யூ-டியூபர்ஸ் ரிவ்யூ சொல்ல ‘எலேய் கலெக்டரு என் வயிறு எரியுலே’ என்று பார்த்திபன் கலங்கினார். போதாக்குறைக்கு ஓடிடியில் இந்தா வரும் அந்தா வரும் என்று தேதியே சொல்லாமல் ஒரு நாள் திடுதிடுப்பென வெளியிட்ட அமேசான் பிரைம் ‘world’s second non linear single shot film’ என்று போட்டு தன் பங்குக்கு பார்த்திபனை வெறுப்பேற்றியது. அடுத்த வருசம் நிறைய அவார்டு மேடைகளில் பார்த்திபன் அவார்டு வாங்கும் காட்சியையோ மண்ணை வாரி தூத்தும் காட்சியையோ பார்க்க முடியும். 

#3 விக்ரம் – மாஸ் ஹிட்

இந்த வருசம் யாருக்கு யோகம் அடிச்சதோ இல்லையோ கமலுக்குதான் ஜாக்பாட் அடித்தது என்று சொல்லலாம். கமல், ஃபகத், விஜய் சேதுபதி என ஏற்கனவே டவுன் பஸ் ஃபுல்லாகும் அளவுக்கு இருந்த ஸ்டார்களுக்கு மத்தியில் சூர்யாவும் கெஸ்ட் ரோலில் நடிக்க திரை தீப்பிடித்தது. விக்ரம் படம் உங்கவீட்டு எங்கவீட்டு ஹிட்டு இல்ல ஆஹா ஓஹா ஹிட் அடித்தது.  படத்தின் தயாரிப்பாளரும் கமல்தான் என்பதால், லோகேஷ்க்கு புது காரு, சூர்யாவுக்கு ரோலக்ஸ் வாட்ச்சு என்று பரிசுப் பொருட்களை வாரி வழங்கினார். அடுத்து லோகேஷ் – விஜய் கூட்டணியில் கமல் கெஸ்ட் ரோலில் வருவார் என்று வலைப்பேச்சுவாக்கில் சில தகவல்கள் வருகிறது. விக்ரம் மெகா ஹிட்டுக்குப் பிறகு லொகேஷ் கேட்டால் கமல் உயிரே கொடுப்பார். கால்ஷீட் கொடுக்கமாட்டாரா? 

விக்ரம் மாஸ் ஹிட்

#2 ரெட் ஜெயண்ட் மூவீஸ்

2022-ல் தமிழ் சினிமாவில் ஓவர் டைம் வேலை பார்த்தது என்றால் உதய் அண்ணா மட்டும்தான். ரெட்ஜெயிண்ட் காட்டில் மழையல்ல மாண்டஸ் புயலே வீசியது.  ‘புயல் வேகத்துல போய்ட்டு இருக்கேன்’ என்று இந்த வருடம் மட்டும் 20க்கும் மேற்பட்ட படங்களை டிஸ்ட்ரிபியூட் செய்திருக்கிறது ரெட் ஜெயண்ட் மூவீஸ். ஸ்டாலினுக்கும் உதயநிதிக்கும் நடந்த உரையாடல் இது.. இந்த தியேட்டர்ல இந்த படம் ஓடுதே அது யாரு பண்றா.. நான்தான்ப்பா.. அந்த தியேட்டர்ல அந்தப் படம்.. அதுவும் நான்தான்ப்பா.. ‘அதுவும் உங்கள்தா’ என்று தசாவதாரம் பல்ராம் நாயுடு மோடுக்கு போயிருப்பார் ஸ்டாலின். ‘ஏம்ப்பா.. எம்புட்டு படம்?’ என்று உதய் அண்ணாவிடம் கேட்டால் இதெல்லாம் அஃபிஷியலா ரிலீஸ் பண்ணது மட்டும்தான் தம்பி.. அன்அபிஷியல் லாரி பின்னாடி இருக்கு என்று சிரிக்கிறார்.  என்னங்க நடக்குது என்று தயாரிப்பாளர்களிடம் விசாரித்தால் இன்னைக்கு தேதிக்கு இவர்ட்ட போனாதான் லாபம். அதான் நாங்களே தேடிப்போறோம் என்று கலகத்தலைவனுக்கு பாராட்டு விழா நடத்தாத குறையாக புகழ்கிறார்கள். இதற்கிடையில் ‘மாமன்னன்தான் கடைசிப் படம் ஏன்னா நான் இப்போ மாண்புமிகு.. வரட்டா மாமே டுர்ர்ர்’ என்று சொல்லி நடிப்புக்கு குட் பை சொல்லிவிட்டார் உதயநிதி. 

#1 லவ் டுடே

இந்த வருடத்தின் செம்ம சர்ப்ரைஸ் லவ் டுடேதான். ஒரு புதுமுக நடிகரின் படம் கன்னாபின்னா ஹிட் அடிக்கிறது இதுக்கு முன்னாடி நிறைய நடந்திருக்கு. ஆனா இதான் ஃபர்ஸ்ட் டைம். பிரதீப் ரங்கநாதன் நடித்து இயக்கிய இந்தப் படத்தின் பட்ஜெட் 5.5 கோடிதான் ஆனால் தமிழ்நாட்டில் 20 கோடி வசூலித்ததாக சொல்லப்படுகிறது. படம் வந்து இரண்டு மாதங்கள் ஆகியும் இன்னமும் இன்ஸ்டாகிராமில் மாமாக்குட்டி வைப்ஸ் குறையவில்லை. பாய் பெஸ்ட்டி, வி.பி.என், இன்ஸ்டாகிராம் ஸ்டாக்கிங், ஃபேக் ஐடி என டிஜிட்டல் யுகத்தின் சிக்கல்களை செம்ம ஃபன்னாக கொடுத்து ஒவ்வொரு நிமிடத்தையும் ரசிக்க வைத்தது படம்.  போனை மாத்திக்குற கான்சப்ட்டை வைத்து லட்சக்கணக்கான காதலர்களுக்கு வேட்டு வைத்த இந்தப் படம் முதல்வரின் குடும்பத்திலும் குண்டு வைத்ததுதான் உச்சம். யுவன் 212-வது முறை கம்பேக் கொடுத்து படத்தின் பி.ஜி.எம் பாடல்கள் என எல்லாமே ரிப்பீட் மோடில் கேட்கவைத்தார்.  

போனஸ்:

இது போக போனஸாக சில பாயிண்டுகள் சொல்லவேண்டும் என்றால் இந்த வருடம் வெப்சீரீஸ்களுக்கான பொற்காலம் என்று சொல்லலாம். விமல் நடிப்பில் வந்த விலங்கு வெப்சீரீஸ் சூர ஹிட். இன்னொரு பக்கம் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த சுழல், எஸ்.ஜே.சூர்யா நடித்த வதந்தி, பேட்டைகாளி, ஃபிங்கர்டிப் என நல்ல நல்ல வெப்சீரீஸ் வந்தது. பல வருடங்கள் கழித்து நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் மூலம் கம்பேக் கொடுத்தார் வடிவேலு. ஆனாலும் இல்லைங்க நாங்க பழைய காமெடியவே பார்த்துக்குறோம் என்று ஜகா வாங்கினார்கள் மீம் பாய்ஸ். 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top