Squid Game

`10 ஆண்டு நிராகரிப்பு… மாஸ்க்கின் பின்னணி’ – `Squid Game’ பற்றிய 11 சுவாரஸ்யங்கள்!

நெட்ஃபிளிக்ஸில் வெளியாகி சக்கைபோடு போட்டுக் கொண்டிருக்கும் கொரிய வெப் சீரியஸான Squid Game, மணி ஹெய்ஸ்ட் சீரியஸை முந்தி வரவேற்பைப் பெற்றிருக்கிறது. எளிமையான ஐடியாவைத் தனது பிரமாண்ட திரைக்கதையால் நகர்த்தியிருக்கிறார் இயக்குநர் hwang dong-hyuk.

Squid Game பற்றிய 11 சுவாரஸ்யத் தகவல்கள்!

Squid Game
Squid Game
  • Squid Game கதைக்கான ஐடியா இயக்குநர் hwang dong-hyuk 2008-ம் ஆண்டே பிடித்துவிட்டார். மூன்று மணி நேரப் படமாக இந்தக் கதையை 2009-ல் எழுதியிருக்கிறார். இவரின் முதல் படம் வெளியாகி பரவலாகக் கவனம் பெற்றநிலையில், பொருளாதாரரீதியாக சிரமத்தில் சிக்கியிருக்கிறார். இந்தக் கதையை ஏறக்குறைய 10 ஆண்டுகள் பல்வேறு தயாரிப்பாளர்களால் நிராகரிக்கப்பட்ட நிலையில், 2019ம் ஆண்டு இதை வெப் சீரியஸாகத் தயாரிக்க நெட்ஃபிளிக்ஸ் முன்வந்திருக்கிறது. இந்த வெப் சீரிஸ் தவிர 5 படங்கள் இயக்கி பிரபலமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Squid Game Mask
Mask
  • வெப் சீரிஸின் மேஜர் அட்ராக்‌ஷன்களில் ஒன்று அதில் வரும் பிரத்யேக மாஸ்க். கிட்டத்தட்ட புதிய அடையாளமாகவே மாறியிருக்கும் அந்த மாஸ்கை கலை இயக்குநர் Chae Kyung-sun, வாள் சண்டையில் பயன்படுத்தப்படும் மாஸ்குகள் மற்றும் கொரிய தீபகற்பத்தில் பயன்படுத்தப்படும் Haehotal பாரம்பரிய மாஸ்குகளின் வடிவங்களில் இன்ஸ்ஃபையர் ஆகி உருவாக்கியிருக்கிறார்.
  • முதல் எபிசோடான `Red Light, Green Light’-ல் வரும் மிகப்பெரிய பொம்மை, 1970,80-களில் வெளியான சிறுவர் பாடப் புத்தகங்களில் வரையப்பட்டிருந்த சித்திரங்கள் அடிப்படையில் உருவாக்கப்பட்டது.
  • கதையின் முக்கிய கேரக்டர்களான Gi-hun மற்றும் Sang-woo பாத்திரங்களில் நடிக்க Lee Jung-jae மற்றும் Park Hae-soo ஆகியோரைத் தொடக்கம் முதலே மனதில் வைத்திருக்கிறார் இயக்குநர். அதேநேரம், மற்ற கேரக்டர்களால Sae-byeok, Il-nam, மற்றும் பாகிஸ்தானைச் சேர்ந்த Ali கதாபாத்திரங்களுக்காக பிரபலமடையாத நடிகர்களைத் தேடிப் பிடித்திருக்கிறார் இயக்குநர் hwang dong-hyuk.
Squid Game Dalgona Challenge
Dalgona Challenge
  • மூன்றாவது எபிசோடில் வரும் டல்கோனா சேலஞ்சைப் படமாக்குவதற்காக டல்கோனா செய்வதில் வல்லுநர் ஒருவரை வரவழைத்து 3 நாட்கள் ஷூட் செய்திருக்கிறார்கள். அந்த மூன்று நாட்களும் செட் முழுவதும் சர்க்கரை நெடி சூழ்ந்திருந்ததாம்.
  • கயிறு இழுக்கும் போட்டியின்போது, நடிகர்களிடமிருந்து போட்டியாளர்களின் ரியாக்‌ஷன்கள் ஒரிஜினலாக வர வேண்டும் என்பதற்காக எதிர்முனையில் இயந்திரம் ஒன்றைப் பயன்படுத்தினார்களாம். இதனால், கயிறை இழுக்கவே முடியாது என்பது போன்ற சூழலில் நடிகர்கள் கடும் சிரமத்துக்கிடையில் நடித்திருக்கிறார்கள்.
Squid Game Doll
Doll
  • இறந்தவர்களை எடுத்துச் செல்ல வெப் சீரிஸில் பயன்படுத்தப்பட்ட பெட்டி, பரிசுப் பெட்டியைப் போன்று வடிவமைக்கப்பட்டிருந்தது. காரணம், போட்டியை நடத்துபவர், தன்னைக் கடவுளாக உருவகித்துக் கொண்டு போட்டியாளர்களுக்கு இறப்பு வடிவத்திலும் பரிசைக் கொடுக்க முடியும் என்பதை உணர்த்துவதற்காக அப்படி வடிவமைக்கப்பட்டதாம்.
  • இறந்தவர்களை எரிக்கும் அந்த அறை, நாஜிக்கள் ஆட்சியில் இருந்த Auschwitz வதை முகாமின் அடிப்படையில் டிசைன் செய்யப்பட்டிருக்கிறது.
  • Glass Stepping Stones போட்டிக்காக அமைக்கப்பட்ட செட் தரையில் இருந்து ஒரு மீட்டர் உயரத்தில் அமைக்கப்பட்டதாம். நடிகர்களுக்கு உண்மையிலேயே பயத்தை ஏற்படுத்தும் வகையில் இதைச் செய்திருக்கிறார்கள்.
hwang dong-hyuk
hwang dong-hyuk
  • படமாக எழுதியை வெப் சீரியஸாக மாற்றும்போது, புதிய விளையாட்டுகளைச் சேர்த்ததோடு, போலீஸ் கேரக்டரான Jun-Ho பாத்திரமும் பின்னர் சேர்க்கப்பட்டிருக்கிறது.
  • Sqiud Game சீரிஸின் இரண்டாவது பாகம் வந்தால் போட்டியை நடத்துவதாகக் காட்டப்பட்டிருக்கும் `Front Man’ பின்னணியைப் பற்றியதாக இருக்கும் என்று கூறியிருக்கிறார் இயக்குநர் Hwang.

Also Read – `எலிமினேட் ஆனா Death தான்!’ – நெட்ஃபிளிக்ஸின் `Squid Game’ எப்படியிருக்கிறது?

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top