சிட்காம் சீரிஸ்களில் `Friends’ மற்றும் `Big bang theory’ ஆகிய இரண்டு சீரிஸ்களுக்கும்தான் ரசிகர்கள் அதிகம். அதிலும் ̀ஃப்ரெண்ட்ஸ்’ சீரிஸ் பார்த்துவிட்டு தன்னுடைய கேரக்டரையும் அந்த சீரிஸில் வரும் கேரக்டரையும் பொருத்திப் பார்க்காதவர்களே இல்லை எனலாம். ஒரு முறை இந்த சீரியஸுக்குள் போய்விட்டால் வெளிவருவது கஷ்டம் என்கிறார்கள் இதன் வெறித்தனமான ரசிகர்கள். 1994-ல் ஆரம்பித்து 2004 வரை 10 சீசன்கள் வெளிவந்திருக்கின்றன. தற்போது 2021-ல் அதை எடுத்துப் பார்த்தால்கூட அவ்வளவு ஃப்ரெஷ்ஷாக இருக்கும். மொத்த சீரிஸையும் பார்த்து முடித்தவர்கள் இன்றளவிலும் ஏதாவது ஒரு சீஸனில் ஏதாவது ஒரு எபிசோடை Random ஆக எடுத்துப் பார்த்து திருப்தி அடைந்து கொண்டிருப்பார்கள். அந்தளவிற்கு இது உண்டாக்கிய தாக்கம் அலாதியானது.
Also Read – எப்போதும் மகிழ்ச்சியா இருக்கணுமா? – அப்போ இந்த 7 வழிகளை ஃபாலோ பண்ணுங்க

இதில் இடம்பெறும் ஒவ்வொரு கேடக்டரும் ஒவ்வொரு தனித்தன்மை உடையவர்கள். இதில் Joey ஆக நடித்திருப்பவருக்குத்தான் ஏராளமான ரசிகர்கள் இருப்பார்கள். இவர் செய்யும் சேட்டைக்கு அளவே இருக்காது. வாழ்க்கையின் பல இக்கட்டான சூழ்நிலையின்போது என்ன செய்வது எனத் தெரியாமல் மனம் ஒரு வித குழப்ப நிலையை அடையும். அப்படியான பிரச்னைகளுக்கு போகிற போக்கில் ஒரு தீர்வை சொல்லிவிடும் இந்த சீரிஸ். வாழ்க்கையில் நகைச்சுவையின் முக்கியத்துவத்தை உணர்த்தும் ஓர் சீரிஸ்தான் இது.
இன்றைய கால கட்டத்தை டார்கெட் செய்து இந்த சூழலுக்கு ஏற்ப மீண்டும் இந்த சீரிஸ் வெளிவராதா என ஏங்காத ரசிகர்களே இல்லை எனலாம். இதன் பெரிய ப்ளஸ்ஸே இதைப் பார்க்கும் போது எழும் நாஸ்டால்ஜியா நினைவுகள்தான். டைட்டிலின் போது வரும் அந்த வயலின் ஸ்ட்ரிங்ஸை இப்போது நினைத்தாலும் சிலிர்க்கிறது. அந்தளவிற்கு இந்த சீரிஸை ஒரு எமோஷனாகத்தான் பலரும் அணுகினார்கள். இதே பாசிட்டிவிட்டியோடு ̀ஃப்ரெண்ட்ஸ்' ரசிகர்களுக்கும் ஒரு பாசிட்டிவ் செய்து தற்போது வந்திருக்கிறது. ̀ஃப்ரெண்ட்ஸ்' ரீ-யூனியனாக மறுபடியும் நம்மை தேடி வரும் மே 27-ம் தேதியில் இருந்து அனைவரும் வருகிறார்கள். முதல் சீசனின் முதல் எபிசோட் அன்றுதான் வெளியாகிறது. அதைக் குறிப்பிடும் ஒரு டீசர் சமீபத்தில்தான் வெளியானது. அதில் மெயின் கேரக்டராக நடித்த 6 பேரும் ஒருவரை ஒருவர் தழுவி ஸ்லோமோஷனில் நடந்து வருகிறார்கள். அதைப் பார்க்கும் போது தன்னால் பழைய ̀ஃப்ரெண்ட்ஸ்' நினைவலைகளில் ஜாலியாக நீச்சல் போடுவதைத் தடுக்க முடியவில்லை.

̀ஃப்ரெண்ட்ஸ்' ரசிகர்களின் வேண்டுகோளிற்கு இணங்கவே இதற்கு மீண்டும் ரீ-என்ட்ரி கொடுக்க நினைத்திருக்கிறார்கள். Ben winston என்பவர் இந்த ரீயூனினை இயக்குகிறார். இதில் ரேச்சலாக நடித்த ஜெனிஃபர் ஆனிஸ்டன் வெறுமனே இவர்கள் க்ரூப்பாக எடுத்த செல்ஃபியை இன்ஸ்டா பக்கத்தில் போஸ்ட் செய்திருக்கிறார். அந்த போஸ்ட் லைக்கை குவித்திருந்தது. இது ஏற்படுத்திய தாக்கம்தான் அதற்கு ஒரே காரணம். இன்னொரு பக்கம் இளமையாக நாம் பார்த்த ஒவ்வொருவருக்கும் நரையோடு பார்த்த போது லேசாக மனசு வலித்தது. இருந்தாலும் அழகு எப்படி இருந்தாலும் அழகுதான் என்ற கூற்றை நினைத்து மனதை தேற்றிக் கொண்டு அவர்களை பார்த்து ரசித்தோம். தற்போது ரேச்சல் க்ரீன், மோனிகா கெல்லர், ஃபீபி, ஜோயி, சாண்ட்லர், ராஸ் என நமது ஃபேவரைட் ஆட்களை மீண்டும் டிவியில் பார்க்கப் போகிறோம் என்று நினைக்கவும் பட்டாம்பூச்சி பறக்கிறது.
இந்த ஃபீலிங்கிற்கு லாக்டவுன் சூழலும் நிறையவே கை கொடுக்கிறது. HBO Max சேனலில் இந்த சீரிஸ் டெலிகாஸ்ட் செய்யப்படுகிறது. அந்த வயலின் ஸ்ட்ரிங்ஸோடு ஃப்ரெண்ட்ஸ் எனும் டைட்டிலை பார்ப்பதற்காக வெயிட்டுவோம்!
0 Comments