ஆயிரம் ஆண்டுகளைக் கடந்தும், ராஜ ராஜ சோழனை தமிழ் கூறும் நல்லுலகத்தில் பிரபலமடையச் செய்த இரண்டாவது முக்கியமான விஷயம் “தஞ்சை பெரிய கோவில்”.
எதே…
இரண்டாவது விஷயமா…?
அப்போ முதல் விஷயம் என்னன்னு கேக்குறீங்களா..?
பொன்னியின் செல்வன் புத்தகம்…
கடந்த 20-30 வருசமா சென்னை புத்தகக் கண்காட்சியில் பொது மக்களின் ஏகோபித்த ஓகோபித்த ஆதரவைப் பெற்ற இரண்டு விஷயங்களிலும் ஒன்று பொன்னியின் செல்வன் தான்… இன்னொன்னு டெல்லி அப்பளம்…
தமிழில் வரலாற்று நாவல்களுக்கான ஓர் அகராதி, பல்கலைக்கழகம், மூல நூல் எல்லாமே பொன்னியின் செல்வன் தான். அதற்குப் பிறகு தமிழில் வெளிவந்த அத்தனை வரலாற்று நாவல்களுக்கும் ஒரு பென்ச்மார்க் “பொன்னியின் செல்வன்”தான்.

—
சோழ வம்சத்தில் புகழ்பெற்ற பேரரசான ராஜராஜ சோழன் என்று அறியப்படும் அருள்மொழி வர்மர் காலத்தில் நடக்கும் கதை. கிட்டத்தட்ட 10-ம் நூற்றாண்டில் நடக்கும் கதையில் வந்தியத்தேவன், ராஜராஜ சோழனின் தந்தை சுந்தரச் சோழர், அவரின் சகோதரி குந்தவை, சகோதரர் ஆதித்தர் கரிகால் சோழன், அநிருத்த பிரம்மராயர், நந்தினி, மந்தாகினி, ஆழ்வார்க்கடியான், பெரிய மற்றும் சிறிய பழுவேட்டரையர்கள் என பல கேரக்டர்கள் வந்து போகும். இத்தனை கேரக்டர்களை வைத்துக்கொண்டு சோழர் ஆட்சிக்காலத்தையே நம் கண்முன் கொண்டுவந்து நிறுத்தியிருப்பார் கல்கி. வரலாற்றுச் சம்பவங்களோடு புனைவையும் கலந்து வெரைட்டி காட்டப்பட்டிருக்கும் பொன்னியின் செல்வன், தமிழ் நாவல் உலகின் மாஸ்டர் பீஸ்களில் ஒன்று. பொன்னியின் செல்வன் புத்தகம் ஐந்து பாகங்களாகவும் ஆயிரம் பக்கங்களுக்கு மேலாகவும் பிரமாண்டமாக விரியும் படைப்பு இது. அவ்வளவு பெரிய கதையை மிகச் சுருக்கமாக பார்ப்போம்.

தன்னுடைய சகோதரி குந்தவைக்கும், தந்தை சுந்தர சோழருக்கும் காஞ்சியில் இருந்து வந்தியத்தேவனிடம் கடிதம் கொடுத்து அனுப்புகிறார் ஆதித்த கரிகாலன். வந்தியத்தேவனின் இந்தப் பயனத்தில் சோழ சாம்ராஜ்யத்தை கவிழ்க்க நடக்கும் சூழ்ச்சியை அறிந்துகொள்கிறார். இருவரிடமும் கடிதம் கொடுத்த பிறகு குந்தவை, ஈழத்தில் இருக்கும் அவருடைய இளைய சகோதரர் அருள்மொழிவர்மனுக்கு aka பொன்னியின் செல்வனுக்கு வந்தியத்தேவன் மூலமாக ஒரு தகவலை அனுப்புகிறார்.
பூங்குழலியின் படகில் ஈழத்தை அடையும் வந்தியத்தேவன், அருள் மொழி வர்மரிடம் குந்தவையின் தகவலைச் சேர்க்கிறார். அருள் மொழி வர்மரை, குந்தவையின் வேண்டுகோள்படி வந்தியத்தேவன் தஞ்சைக்கு அழைக்க, பார்த்திபேந்திரன் காஞ்சிக்கு அழைக்க, ஆழ்வார்க்கடியான் ஈழத்திலேயே இருங்க என சொல்ல, ஒரே குழப்பம் தான். இந்தக் குழப்பங்களுக்கு இடையில் பழுவேட்டரையர் வீரர்கள் இளவரசரை சிறை செய்ய ஒரு கப்பலில் வர, அவர்களிடம் வந்தியத்தேவன் சிக்க, இளவரசர் அவரை மீட்க இன்னொரு கப்பலில் செல்ல சரியான நேரம் பார்த்து புயல் வர, அந்தப் புயலில் இரு கப்பல்களும் சிக்க, புயலிலிருந்தும் எதிரிகளிடமிருந்தும் மீண்டு கடலில் இளவரசரும் வந்தியத்தேவனும் மிதக்க, பூங்குழலி அவர்களை கரையேற்றுகிறாள்.

புயலில் இருந்து மீண்டவரை நோய் தாக்க, அருள்மொழி வர்மருக்கு நாகையில் புத்தவிகாரையில் சிகிச்சை நடைபெறுகிறது. இளவரசர் இறந்துவிட்டதாக வதந்தி பரவ, அரசவையைக் கைப்பற்றும் சூழ்ச்சியில் இருந்து மீளும் வரை இளவரசரை தலைமறைவாக இருக்கும் படி குந்தவை கட்டளையிடுகிறார். இன்னொருபுறம் பாண்டிய ஆபத்துதவிகள், நந்தினி, சபலப்பட்ட சிற்றரசர்கள் என ஒரு எதிர்ப்புரட்சிப் படை சோழ சாம்ராஜ்யத்துக்கு எதிராக உருவாகும் சதித்திட்டத்தை முறியடிக்க அருள்மொழிவர்மர் யானை மீதேறி வந்து சோழ சாம்ராஜ்யத்தை நிலை நிறுத்துவார்.
Also Read : பொன்னியின் செல்வன் போஸ்டர்கள்ல இந்த 5 விஷயங்களை நோட் பண்ணீங்களா?
சூழ்ச்சியை ஓரளவுக்கு அறிந்த வந்தியத்தேவன், ஆதித்த கரிகாலனை கடம்பூர் மாளிகைக்குச் செல்ல வேண்டாம் எனத் தடுக்கிறார். அவர் முயற்சி வீணாக, ஆதித்த கரிகாலர், பார்த்திபேந்திரன், வந்தியத்தேவன், கந்தமாறன் அனைவரும் கடம்பூர் மாளிகைக்குச் செல்கிறார், இறுதியில் ஆதித்த கரிகாலன் நந்தினியைச் சந்திக்கிறார். மந்தாகினி தேவி சாயலில் இருக்கும் நந்தினி, அதைப்பயன்படுத்தியே சுந்தரச் சோழரைக் கலக்கத்திலேயே வைத்திருக்க, இந்த சதியை முறியடிக்க மந்திரி அநிருத்தர் மந்தாகினியை தஞ்சைக்கு அழைத்து வர முயற்சிக்க, சில பல குழப்பங்களுக்குப் பிறகு பூங்குழலி மந்தாகினி தேவியின் இடத்தில் இடமாறி வர, மந்தாகினி தேவி அரசர் சுந்தர சோழரை சந்திக்கிறார்.
ஒரே நாளில் அரசரையும், இளவரசர்களையும் படுகொலை புரிய இருக்கும் பாண்டிய ஆபத்துதவிகளின் சதித்திட்டம் பெரிய பழுவேட்டரையருக்குத் தெரிய வர, சுந்தர சோழரை மாந்தாகினி தேவி உயிரைக் கொடுத்து காப்பாற்றுகிறார். சதித்திட்டத்தில் அருள் மொழிவர்மர் தப்பிக்கிறார், ஆதித்தர் பலியாகிறார், பழியோ வந்தியத்தேவன் மீது. மக்களின் ஆதரவுடன் அருள் மொழிவர்மர் முடிசூட, வந்தியத்தேவன் தன் மீதான பழியைத் துடைத்தெறிய… சுபம்.
பொன்னியின் செல்வன் புத்தகத்தைப் படிக்க
பொன்னியின் செல்வன் கதாபாத்திபாத்திரங்களில் உங்களுக்குப் பிடித்தவர் யார், படிக்கும் போது நீங்க மெய்சிலிர்த்துபோன அத்தியாயத்தை கமெண்ட் பண்ணுங்க.
0 Comments