‘பிடிச்சு வைச்சா சாணியா… பிள்ளையாரா?’ – மணிவண்ணனின் தரமான 5 தக் லைஃப் சம்பவங்கள்!

ஸ்டேட்ல இருந்து சென்ட்ரல் வரைக்குமான அரசியலை மணிவண்ணன் அளவுக்கு புரிஞ்சிக்கிட்டு அதை நக்கல் பண்ணவங்க தமிழ் சினிமாலயே இல்லைனு சொல்லலாம். நாம தினசரி அன்றாட வாழ்க்கைல பண்ற சம்பவங்களையும் பேச்சு வழக்குல இருக்குறதையும் வைச்சுதான் மனுஷன் தக் லைஃப் பண்ணியிருப்பாரு. இரட்டைப் பழம் சாப்பிட்டா இரட்டைப் பிள்ளை பிறக்குமா? புடிச்சு வைச்சா சாணியா… புள்ளையாரா? பிளேன் வாங்க முடியும்… சொந்தமா ரயில் வாங்க முடியுமா? ஃபோனைக் கும்பிடணுமா… சாமியைக் கும்பிடணுமா? இப்படி விசித்திரமான கேள்விக்குலாம் வில்லங்கமாவும் ரகளையாகவும் பதில் சொல்றது மணிவண்ணனால மட்டும்தான் முடியும். அப்படி ஆன் ஸ்கீர்ன்ல மணிவண்ணன் செய்த 5 தரமான தக் லைஃப் சம்பவங்களைப் பற்றி இந்த வீடியோல தெரிஞ்சுக்கலாம்.

மணிவண்ணன்
மணிவண்ணன்

ராசமகன்

இன்னைக்கும் சொல்லுவாங்க ‘இரட்டைப் பழம் சாப்ட்டா இரண்டு குழந்தை பிறந்துரும்’ அப்டினு. இதை வேறலெவல்ல ஓட்டியிருப்பாரு. மணிவண்ணன் இரட்டைப் பழத்தைப் பிச்சு சாப்பிடுவாரு. அப்போ இதே டயலாக்கை சொல்லுவாங்க. உடனே, “டேய், அந்தக் காலத்துலயே ஒரு பய எனக்கு பொண்ணு கொடுக்கல. வயசு வேற ஆகிப்போச்சு. இன்னும் அம்போனு சுத்துறேன். எனக்குபோய் ரெண்டு பொறக்கும், மூணு பொறக்கும்னா, எங்கபோய் பொறக்கும். கல்யாணமே பண்ணாம குழந்தை பெத்துக்குறதுக்கு நான் நீ கும்பிடுற கடவுளா? மனுஷன்டா” அப்டின்னுவாரு. இதோட நிறுத்துனா பரவால்ல, “எவன் எதை சொன்னாலும் ஏன், எதுக்குனு கேக்குறதே கிடையாது. மண்டைய மண்டைய ஆட்ட வேண்டியது”ன்னுவாரு. படம் ஃபுல்லா இந்த மாதிரி நிறைய சம்பவம் பண்ணியிருப்பாரு.

ராசமகன்
ராசமகன்

இன்னொன்னு சாணி காமெடி. மணிவண்ணன் ரசிகர்களால மறக்க முடியாத ஒண்ணு. “ என்ன சாணியைப் புடிச்சு தலைல பூ வைச்சு உட்ருக்காளுக. என்னடா இது”ன்னு மணிவண்ணன் கேப்பாரு. “ஐயயோ, புள்ளையாரு” அப்டின்னுவாங்க. “டேய் சாணி டா. நாத்தம் இங்க அடிக்குது”ன்னுவாரு. இதுலாம் மணிவண்ணனோட ஒரிஜினல் நக்கல். “புடிச்சு பூ வைச்சா புள்ளையாரு. வைக்கோல் வைச்சு தட்டுனா வறட்டி. எடுப்பாரத்து கிடந்ததுனா சாணி. சாணிங்குறேன் புள்ளையாரு புள்ளையாருன்ட்டு. எதுக்கெடுத்தாலும் கண்ணத்துல போட்டுக்க வேண்டியது. இப்படிதான் அன்னைக்கு கழுகு பறக்குது. கிருஷ்ணா கிருஷ்ணா பூ போடு, கிருஷ்ணா கிருஷ்ணா பூ போடுங்குற. அது எங்க இருந்து பூ போடும். புழுக்கதான் போடும். விஞ்ஞானபூர்வமா சிந்திங்கடா” – இந்த சீன்லாம் முதல் தடவை பார்க்கும்போது சிரிச்சு சிரிச்சு வயிறு வலியே வந்துடுச்சு.

தமிழ்செல்வன்

மணிவண்ணன் அரசியல்வாதியா கலக்கி எடுத்தப்படம் தமிழ் செல்வன். Privatization பத்தி அன்றே கணித்தார் மணிவண்ணன்னு சொல்லலாம். அதுக்கு இந்தப் படத்துல வர்ற ட்ரெயின் சீன் சரியான எக்ஸாம்பிள். பெரிய வீரன் வராம ட்ரெயின் ஏறமாட்டேன்னு அடம்பிடிச்சிட்டு இருப்பாரு. ட்ரெயின் லேட்டு வாங்கனு மாஸ்டர் வந்து கூப்பிடும்போது “உங்க ட்ரெயின் லேட்டா வரும்போது நாங்க வெயிட் பண்றதில்லையா?”னு சென்ட்ரலை ஒரு தாக்கு தாக்குவாரு. “இதுக்குதான் ரயிலை விலைக்கு வாங்குங்கனு சொன்னது!”னு கூட இருக்குறவரு டயலாக் பேச், போலீஸ் யோவ் போயானு அவரை அதட்டுவாரு. உடனே மணிவண்ணன், “என்னயா சென்ட்ரல், ஸ்டேட்னு அவனைபோய் மிரட்ற. கார் வாங்குற, பஸ் வாங்குற, கப்பல் வாங்குற, ஏரோ பிளேன் வாங்குற, நான் சொந்தமா ரயில் வாங்கக்கூடாதா? எப்படி இருந்தாலும் இதெல்லாம் தனியாருக்குதான் கொடுப்பான். நான் தான் பேசி முடிப்பேன். ஃபுல்லா ஏசி வண்டி விடப்போறேன்” அப்டின்னுவாரு. எப்படிப்பார்த்தாலும் அவர் சொன்னதுதான கொஞ்சம் கொஞ்சமா நடக்குது. கடைசில பெரியவீரன் வருவான். யாருனு பார்த்தா கிளி. அதுலக்கூட தக் லைஃப் பண்ணியிருப்பாரு.

தமிழ்செல்வன்
தமிழ்செல்வன்

அமைதிப்படை

மணிவண்ணன்னு சொன்னதும் நமக்கு நியாபகம் வர்ற படங்கள்ல ஒண்ணு, அமைதிப்படை. ஃப்ரேம்க்கு ஃப்ரேம், டயலாக்குக்கு டயலாக் தக் லைஃப் போட்டுட்டே இருக்க வேண்டியதுதான். “குளத்துல குளிச்சாலே மனசுக்கு சந்தோஷமாதான் இருக்குதுப்பா!”னு சத்யராஜ் சொல்லுவாரு. உடனே கூட இருக்குற ஆளுங்க “வாழ்க”னு கத்துவாங்க. அதுக்கு மணிவண்ணன் “டேய், இதுக்கு ஆமானு சொல்லோணும்டா. தொட்டதுக்குலாம் வாழ்க வாழ்கன்ட்டு”னு சொல்லுவாரு. அல்டிமேட் இதெல்லாம். அதேமாதிரி, அண்ட்ராயரை கசக்குறதுக்கு சண்டை போடுறது. சாதிக்கலவரத்தை ஏற்படுத்த டயலாக் எடுத்துக் கொடுக்குறதுனு எல்லா விஷயத்தையும் காட்டி அப்படியே அரசியலை தோல் உரிச்சி தக் லைஃப் பண்ணியிருப்பாரு. ஒருவேளை மணிவண்ணன் இப்போ இருந்துருந்தா, மணிவண்ணனோட எந்த டயலாக் இப்போ இருக்குற அரசியல் சூழலுக்கு சரியா இருக்கும்னு கமெண்ட்ல சொல்லுங்க!

அமைதிப்படை
அமைதிப்படை

காதல் கோட்டை

நாத்திகவாதிகள் சொல்ற முக்கியமான விஷயங்கள்ல ஒண்ணு விஞ்ஞானத்தைக் கேளுங்க அப்டின்றதுதான். அதை ஷார்ட்டா தக் லைஃப்ல காதல் கோட்டை படத்துல சொல்லியிருப்பாரு. “விஞ்ஞானத்தின் கண்டுபிடிப்பே காதல் விவகாரத்தின் தூதுவனே”னு கவிதையெல்லாம் பாடி ஃபோன் கடை நடத்துவாரு.
கடைல வேலைபார்க்குற பையன் “ஏன் டெலிஃபோனக் கும்பிடுறீங்க?”னு கேப்பாரு. அதுக்கு மணிவண்ணன் ஒரு விளக்கத்தைக் கொடுப்பாரு பாருங்க… அப்படி நச்னு இருக்கும். “நம்ம கடையோட ஆணிவேரே இந்த டெலிஃபோன்தான். இதைக் கும்பிடாம வேற எதடா கும்பிடுவ?”னு மணிவண்ணன் கேக்க… அந்தப் பையன் டெலிபோனைப் பார்த்து முருகானு கும்பிடுவான். உடனே, “டேய் முருகன் யாரு டெலிஃபோனைக் கண்டுபிடிச்சவனா? சயிண்டிஸ்டுகளை கும்பிடுங்கடா சனியன்புடிச்சவங்களா!” அப்டின்னுவாரு. எவ்வளவு பெரிய விஷயத்தை அசால்ட்டா சொல்லிட்டாரு மனுஷன்.

காதல் கோட்டை
காதல் கோட்டை

ஆணழகன்

பொதுவா பொம்பளைங்க, ஆம்பளைங்கள பார்த்து சொல்ற டயலாக் இது. “பத்துமாசம் சுமந்து பெத்திருந்தா பாசம், பந்தம் எல்லாம் இருக்கும்” அப்டினு. கே.ஆர்.விஜயாவும் மணிவண்ணன்கிட்ட இதே டயலாக்கை படத்துல சொல்லுவாங்க. அதுக்கு ஒரு ரிப்ளை கொடுப்பாரு பாருங்க. எவனுமே யோசிச்சிருக்க மாட்டான். “பத்து மாசம் சுமக்குற கதையவே இன்னும் எத்தனை வருஷத்துக்கு பேசுவீங்க? இந்த உலகத்துல பொறந்த எந்த ஆம்பளையாவது பத்து மாசம் சுமக்க மாட்டேன்னு சொன்னானா? எங்களால சுமக்க முடியலை. அதனால, சுமக்கல. இதெல்லாம் சயின்ஸ். இதுக்கு ஆம்பளைங்க என்ன பண்ன முடியும்”னு ஆம்பளைங்க சார்பா ஒரு பதிலை சொல்லி தக் லைஃப் பண்ணியிருப்பாரு பாருங்க. வேறலெவல். ஏங்க, இதை சொல்றதால என்னை மேல் சாவனிஸ்ட்னுலாம் நினைக்காதீங்க. ஜஸ்ட் சயின்ஸ்க்கு சப்போர்ட் பண்ணேன் அவ்வளவுதான்.

மணிவண்ணன்
மணிவண்ணன்

இந்த மாதிரி எக்கச்சக்கமான தரமான சம்பவங்களை மணிவண்ணன் பண்ணியிருக்காரு. லிஸ்ட் போட்டுட்டு போய்ட்டே இருக்கலாம். சரி, அவர் செய்த சம்பவங்கள்ல உங்களோட ஃபேவரைட் எதுனும் மறக்காம கமெண்ட்ல சொல்லுங்க! உங்க ஃப்ரெண்டுக்கும் மணிவண்ணனை புடிக்கும்னா இந்த வீடியோவை அவருக்கும் ஷேர் பண்ணி விஞ்ஞானத்தை வளர்த்துவிடுங்க மக்களே!

Also Read: ’தேனிசைத் தென்றல்’ தேவா பாட்டுல இந்த 4 விஷயங்களைக் கவனிச்சிருக்கீங்களா?

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top