நடிகர் நெப்போலியன்

நடிகர் நெப்போலியன் பற்றி இதெல்லாம் தெரியுமா உங்களுக்கு… 15 சுவாரஸ்யத் தகவல்கள்!

  • 16 வயதில் இருந்தே தி.மு.க சார்பில் யூனியன் சேர்மனுக்காக போட்டியிட்ட தன் மாமா கே.என் நேருவுக்காக தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டார்.
  • 1989-ம் ஆண்டு திருச்சி லால்குடியில் வெற்றிபெற்று அப்போதைய மின்சாரத்துறை அமைச்சரான கே.என் நேருவுக்கு பி.ஏவாக நியமிக்கப்பட்டார், நெப்போலியன்.
  • அந்தக் காலக்கட்டத்தில் வெளியான உதயம் திரைப்படத்தில் நடித்த நாகார்ஜூனா தன்னைப்போல தோற்றம் கொண்டவராக இருக்கிறாரே.. நாமளும் நடித்தால் என்ன என்ற ஆசை இவருக்கு வந்திருக்கிறது.
கருணாநிதியுடன் நெப்போலியன்
கருணாநிதியுடன் நெப்போலியன்
  • அதை இயக்குநர் பாரதிராஜாவிடம் சொல்ல, அவரும் புதுநெல்லு புது நாத்து படத்தில் 60 வயது முதியவராக அறிமுகம் செய்து வைத்தார். அப்போது நெப்போலியனுக்கு வயது 27.
  • புதுநெல்லு புது நாத்து படத்தில்தான் குமரேசன் எனும் பெயரை நெப்போலியன் என பாரதிராஜா மாற்றினார்.
  • பெயரைக் கேட்டு நண்பர்கள் கிண்டல் செய்ய ‘இந்த பெயர் ஹாலிவுட்டுக்கானது’ என அப்போதே நண்பர்களுக்கு பதிலளித்திருக்கிறார். இப்போது ஹாலிவுட்டில் 4 படங்கள் நடித்து முடித்திருக்கிறார்
  • ஆரம்பக் காலகட்டங்களில் அப்பா வேடமாகக் கிடைக்க, வில்லனாக ரஜினியுடன் நடித்த `எஜமான்’ பிரேக் கொடுத்தது.
  • நடிகர் சங்கத்தில் விஜயகாந்த் தலைவராக இருந்தபோது அவரது விருப்பத்துக்கு இணங்க, நடிகர் சங்க துணைத் தலைவரானார், நெப்போலியன்.
  • எத்தனை பக்க வசனமாக இருந்தாலும், ஒரே டேக்கில் பேசுபவர்.
  • அமைச்சர் கே.என் நேருவுக்கு பி.ஏ-வாக இருந்த காலத்தில் சுமார் 2,000 தொலைபேசி எண்களை மனப்பாடமாக வைத்திருந்தாராம்.
நடிகர் நெப்போலியன்
நடிகர் நெப்போலியன்
  • எத்தனை படங்கள் நடித்திருந்தாலும் அவரது மனசுக்கு நெருக்கமான படம் ‘சீவலப்பேரி பாண்டி’.
  • 2001-ம் ஆண்டு முதன்முதலாக தி.மு.க சார்பில் வில்லிவாக்கம் தொகுதியில் போட்டியிட்டு எம்.எல்.ஏ ஆனார்.
  • 2009-ம் ஆண்டு பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்று மத்திய இணைஅமைச்சர் பதவி வகித்தார்.
  • ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ `பொடா’ வழக்கில் சிறையில் இருந்தபோது கருணாநிதி நேரில் சென்று அவரை சந்தித்தார். அந்த சந்திப்பில் கருணாநிதியுடன் இருந்த ஒரே நபர் நெப்போலியன் மட்டும்தான்.
  • நெப்போலியனின் மகன் தனுஷ் சிறுவயதில் மஸ்குலர் டிஸ்ட்ரபி எனும் தசைச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்டார். இதனால், ஜீவன் பவுண்டேசன் என்ற அமைப்பைத் தொடங்கி 11 வருடமாக நடத்திவருகிறார்.

Also Read – `ப்ரியா’ முதல் `பானு’ வரை – சிம்ரனின் டாப் 10 ரோல்கள் (பகுதி 1)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top