காளி வெங்கட்

அப்பாவி அசுரன்… கலங்கி கலக்கும் காளி வெங்கட் கதை!

காளி வெங்கட், குறும்படங்களில் முகம் காட்டத் தொடங்கி இன்று தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குநர்களின் திரைப்படங்கள், வெப் சீரிஸ் என்று தன் நடிப்பின் எல்லைகளை விசாலப்படுத்திக் கொண்டிருப்பவர். திரைத் துறையில் நீண்ட காலப் போராட்டத்துக்குப் பின்னர் தன்னை நிலைநிறுத்திக் கொண்டிருக்கும் திறமையான கலைஞர். வாய்ப்புகள் ரொம்ப சிரமத்துக்கிடையில கிடைச்சாலும், மக்கள் மனசுல பதியுற மாதிரி கேரெக்டர்கள் கிடைக்க ரொம்ப நாள் ஆச்சு. இவரோட சினிமா பயணத்தைப் பத்தித்தான் இந்த வீடியோவுல பார்க்கப் போறோம்.

காளி வெங்கட் பயணம் ஆரம்பம்!

காளிவெங்கட்டோட சொந்த ஊர் திருநெல்வேலி பக்கத்துல கத்தாழம்பட்டியில பிறந்தவர். சின்ன வயசுல இருந்தே கூச்ச சுபாவம் கொண்டவர். ஆனா ஒரு கட்டத்துல நண்பனால மேடையேறி பாடுற வாய்ப்பு கிடைச்சது. அதுதான் இன்னைக்கு அவரை சினிமாவுல சிறந்த குணச்சித்திர நடிகன் வரைக்கும் கொண்டுவந்து நிறுத்தியிருக்கு. 1997 ஆண்டு சென்னைக்கு கிளம்பி வந்தார்.

காளி வெங்கட்
காளி வெங்கட்

சென்னை வந்தவருக்கு நினைச்சது மாதிரி சினிமா உலகத்துக்குள்ள நுழைய முடியல. சென்னைல ஒரு நாள் ஒட்டுறதே ரொம்ப கஷ்டமா இருந்திருக்கு. அப்போதான் முடிவு பண்ணியிருக்கார். சினிமா அப்புறமா பார்க்கலாம். முதல்ல வாழ்க்கைய பாக்கணும்ன்னு ஒரு மளிகை கடையில வேலை செஞ்சார். அப்புறமா ஒரு டீ ஸ்டால்ல வேலை பார்த்தார். அதுக்க அப்புறம், காளிவெங்கட்டும், அவர் அண்ணனும் சேர்ந்து ஒரு மளிகை கடை வச்சாங்க. வீடுகளுக்கு வாட்டர் கேன் போடுறது, காய்கறி விற்பனை இப்படி பல வேலைகள் பார்த்து, அரும்பாக்கம் பக்கத்துல சின்னதாக ஒரு வீடு வாங்கினார். அப்படி கொஞ்சம் கொஞ்சமாக வாழ்கையில நிலையான பிறகு சினிமாவுக்கு உலகத்துல நுழையனும்கிற ஆசை மீண்டும் வந்தது இவருக்கு. 2006 ல இருந்து சினிமா வாய்ப்பு தேட ஆரம்பிச்சார். ஒரு ரெண்டு வருசத்திலே வாய்ப்பு கிடைச்சுது. இவரோட குரு விஜய் பிரபாகரன் ’தசையினை தீச்சுடினும்’ படத்துல காளிங்குற கேரெக்டர்ல நடிக்க முதல் வாய்ப்பு கொடுத்தார். இதுக்கப்புறம்தான் வெங்கட்டா இருந்தவர் காளிவெங்கட்டானார். 1940 ல நடக்கிற மாதிரியான கதை. அந்த படத்திலே பெரிய ரோல், கொடுத்தாங்க. இவருக்கே 15 காட்சிகளுக்கு மேல உண்டு. அந்த படம் பண்ணினதுக்கு அப்புறம் எந்த மாதிரியான கேரக்டர் கொடுத்தாலும் பண்ண முடியும்ன்னு நம்பிக்கை இவருக்கு வந்திருக்கு. ஆனா படம் டிராப் ஆக மறுபடியும் வாய்ப்பு தேடுறார்.

ஒருகட்டத்துல 2008 முதல் 2010 வரைக்கும் இவரோட போட்டோ இல்லாத ஆபீசே இருக்காதுங்குற நிலைக்கு எல்லா ஆபீசும் ஏறி இறங்கினார். அப்போ இவர்கூட வாய்ப்பு தேடிட்டு இருந்த நடிகர் விஜய் சேதுபதி இவரை குறும்படங்கள்ல நடிக்க சொல்ல, இவரும் நடிக்கிறார். முண்டாசுப்பட்டி இயக்குநர் ராம்குமாரோட அறிமுகம் கிடைக்க முண்டாசுப்பட்டி குறும்படத்துல நடிச்சு அப்ளாஸ் அள்றார். அப்படியே சில படங்கள்ல நடிச்சுக்கிட்டே வர்றார் ஆனா பெரிசா கைகொடுக்கல. இந்த நேரத்துலதான் முண்டாசுப்பட்டி திரைப்படமா உருவாகுது. அதுலயும் நடிச்சார் காளி வெங்கட். இந்த படத்தின்மூலமா மிகப்பெரிய பிரேக் கிடைக்க, அடுத்தடுத்து பிசியாக காமெடி ரோல்களிலும், குணச்சித்திர ரோல்கள்லேயும் நடிச்சார்.

காளி வெங்கட்
காளி வெங்கட்

தனித்துவம்!

மாரி டிரெய்லரில் ‘எட்டு வருஷத்துக்கு முந்தி நடந்ததா சொல்றாங்க சார்.. அப்ப அவன் ஐட்டக்காரன்கூட இல்ல’னு சொல்ற குரலை தமிழ் சினிமா எப்போதுமே மறக்காத அளவுக்கு குரலில் தனித்தன்மை கொண்டவர். முண்டாசுப்பட்டியில் கொங்கு பாஷை. இறுதிச் சுற்றில் மெட்ராஸ் பாஷை. தெகிடியில் வேறு பாணினு பாஷைக்கு ஏத்த மாதிரி உடல் மொழியும் மாற்றி நடிக்கக் கூடிய திறமை கொண்டவர் காளிவெங்கட். இவர்கிட்ட குணச்சித்திரமா, காமெடியானு கேட்டா,..”எனக்கு என்னை ஒரு நடிகனாக சொல்லிக்கிறது தான் பெருமைன்னு நினைக்கிறேன். என் குரு நாதர் எப்பவும் சொல்லுவார், ‘கேரக்டர் என்ன கேட்கிறதோ, அத நீ குடுக்கணும்’. அப்படி தான் என்னை நான் பழக்கப்படுத்திட்டு வர்றேன். இவர் இந்த மாதிரி நடிகர், அந்த மாதிரி நடிகர்ன்னு சொல்லுவதை விட “நடிகர்”ன்னு சொன்னா சந்தோசம். அந்த கேரக்டர் காமெடி பண்ணலாம்னா கண்டிப்பா பண்ணுவேன். அழணுமா அழுவேன். எதுவுமே கேரக்டர் கேட்கிறது தான்” இப்படித்தான் சொல்லுவார். ஏன்னா ரெண்டுலயுமே காளிவெங்கட் கில்லி.

Also Read – நிஜத்திலும் சண்டக்கோழி.. நடிகர் லால் மெர்சல் பின்னணி!

கவனிக்க வைத்த சினிமாக்கள்!

முண்டாசுப்பட்டியில் விஷ்ணுவிஷாலின் நண்பராக படம் முழுக்க டிராவல் பண்ணினார். அங்கங்க இவர் அடிச்ச கவுண்டர்களுக்கு தியேட்டரே விழுந்து விழுந்து சிரிச்சது. மாரியில் போலீஸாக நடித்து தனுஷிற்கு பில்டப்பை ஏற்றி குரல் மூலம் கவனிக்க வச்சார். அடுத்து வந்த இறுதிச்சுற்றில் சென்னைவாசியாக நடித்தார். அதுவும் ஹீரோயின்க்கு அப்பா வேடம். மனுஷன் மெச்சூரிட்டியான நடிப்புல வெளுத்து வாங்கியிருப்பார். சின்ன வயசுலயே ஹீரோயினுக்கு அப்பா ரோல் பண்றதெல்லாம் யாரும் டிரை பண்ணி பார்க்குறதுக்கு பயம் வரும். அடுத்ததா கொடி படத்துல தனுஷோட நண்பரா வருவார். கிளைமேக்ஸ்ல தன்னோட நண்பனை கொலை செஞ்சதுக்காக த்ரிஷாவை பலிவாங்குற காளி வெங்கட் நடிப்பின் வேறுபரிமாணம் தொட்டிருப்பார். ராட்சசனில் வில்லனுடன் போராடும் போலீஸ், சூரரைப்போற்று சூர்யாவின் நண்பன். சார்பட்டா பரம்பர, டான் பேராசிரியர், கட்டா குஸ்தினு அடுத்தடுத்த படங்கள்ல தூள் கிளப்பினார். அதுலயும் கட்டாகுஸ்தியில டேய் போறதுக்கு முன்னால இதை பார்த்துட்டு போங்குறது மீம் மெட்டீரியல்களா யூஸ் ஆகிட்டிருக்கு.

`கார்கி’ காளி வெங்கட்

காளி வெங்கட்
காளி வெங்கட்

காளி வெங்கட் இனி எத்தனை படங்கள் நடித்தாலும் கார்கியை விட்டுவிட்டு அவரோட கரியர் பத்தி பேச முடியாது. அப்பாவியான திக்கி திக்கி பேசும் வக்கீல் கதாபாத்திரம். ஆனா, எனக்கு இதெல்லாம் அல்வா சாப்பிடுற மாதிரினு மனுஷன் பிச்சு உதறியிருந்தார். நல்ல நடிகனாக கார்கி மூலம் அடுத்த கட்டத்துக்கு நகர்ந்திருக்கிறார், மனுஷன். ரொம்பவே ஷட்டிலான கதாபாத்திரத்தின் மூலம் சாய்பல்லவிக்கு இணையாக தோளோடு தோள்கொடுத்து படத்தைத் தாங்கியிருந்தார் மனுஷன். இவரை நம்பி என்ன ரோல் வேணாலும் கொடுக்கலாம்னு சொல்ற அளவுக்கு செய்கை செய்திருந்தார்.

எனக்கு இவர் நடிப்புல பிடிச்ச படம் முண்டாசுப்பட்டியும், கார்கியும்தான். உங்களுக்கு என்ன படம் பிடிக்கும்னு கமெண்ட்ல சொல்லுங்க.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top