குமரி முத்து

இந்த கண்ணை வைச்சிட்டு நடிக்கப்போறியா.. குமரி முத்து இன்ஸ்பைரிங் ஜர்னி!

நான் ஐந்து பிள்ளைகளை பெத்தேன். எல்லாரும் விட்டுட்டுப் போய்ட்டாங்க. நீ மட்டும்தான் திரும்ப வந்துருக்க. ஒரு கல்யாணத்தைப் பண்ணிட்டு எங்கூடயே இருந்துரேன்னு குமரி முத்துகிட்ட அவங்கம்மா சொல்லிருக்காங்க. அதுக்கு குமரி முத்து, என்னுடைய லட்சியமே வேறனு பயங்கரமா சொல்லிருக்காரு. அப்படி என்னடா உன் லட்சியம்னு அவங்கம்மா கேட்க.. சினிமால பெரிய நடிகனா வரணும் அதுதான்ருக்காரு. இந்தக் கண்ணை வைச்சிட்டாடா நடிக்கப்போறனு அவங்கம்மாவே அவரை கிண்டல் பண்ணியிருக்காங்க. ரொம்பவே ஃபீல் பண்ணியிருக்காரு. இப்படி அம்மால இருந்து கூட இருக்குறவங்க வரை எல்லாருமே கிண்டல் பண்ண குமரி முத்து எப்படி சினிமால வந்து ஜெயிச்சாரு? அவரோட இன்ஸ்பைரிங் சினிமா ஜர்னி என்ன?


நாகர்கோவில்தான் அவருக்கு சொந்த ஊரு. சின்ன வயசுல இருந்தே நாடகம் மேல பயங்கரமான ஈர்ப்புலாம் உண்டு. படிப்பு மேலயும் ஆர்வம் உண்டு. ஆனால், எட்டாவதோட படிப்பை நிறுத்திட்டாரு. அதுக்கு காரணம்.. ஸ்கூல்ல படிக்கும்போது ஒருநாள் வாத்தியார் அவரை எழும்பி போர்டுல இருக்குறதை படிக்க சொல்லியிருக்காரு. இவருக்கு மாறு கண்ணுன்றதால போர்டை உத்துப் பார்க்குறது, வாத்தியாரை கிண்டல் பண்ற பார்வைனு நினைச்சு அடி வெளுக்குறாரு. பக்கத்துல இருந்த பையன் இவனுக்கு ஒன்றரை கண்ணு அதான்னு சொல்ல, அன்னைல இருந்து எல்லாரும் அவரோட கண்ணை வைச்சு கிண்டல் பண்ணும்போது ஒரு கட்டத்துல படிப்பையே நிறுத்திட்டு சென்னைக்கு கிளம்பி வந்துட்டாரு. அவரோட அண்ணன் நம்பிராஜன். சினிமால பெரிய ஆளு. அவர் மூலமா எம்.ஆர்.ராதா குழுல சேர்ந்து பயணிக்க தொடங்குனாரு.

Also Read – மும்பையைக் கலக்கிய மூன்று தமிழ் டான்கள்!

குமரி முத்து முகத்துல ஏகப்பட்ட காயங்களோட தழும்புகள் இருக்கும். அதுக்கும் பெரியாருக்கும் சம்பந்தம் இருக்கு. என்ன?

எம்.ஆர்.ராதாவோட கம்பெனில ஆறு வருஷம் இருந்துருக்காரு. பகுத்தறிவு சிந்தனைகள், பெரியார்னு பல விஷயம் அங்க பேசப்படும். அதுல சண்டை, அடி, தடினு எல்லாமே நடக்கும் அந்த தழும்புகள்தான் அவரோட முகத்துல நிரம்பி இருந்துச்சு சினிமா எதுவும் செட் ஆகலைனு திரும்ப ஊருக்கே போய்ருக்காரு. அப்போதான் அவங்கம்மா நான் மேல சொன்ன விஷயத்தை சொல்லியிருக்காங்க. உங்க அப்பாகூட வேலை பார்த்தவரோட பொண்ணை வந்து பாரு புடிச்சா கல்யாணம் பண்ணுனும் வற்புறுத்தியிருக்காங்க. அவரும் போய் பொண்ணை பார்த்துருக்காரு. ஸ்பாட்லயே எனக்கு பொண்ணு பிடிச்சிருக்குனு அவர் சொல்ல, பொண்ணுகிட்ட மாப்பிள்ளையை பிடிச்சிருக்கானு கேட்க, அதுக்கு.. வடக்கைப் பார்க்குற மாதிரி தெக்கைப் பார்க்குறான், எங்கயோ பார்க்குற மாதிரி என்னை பார்க்குறான், இவனை கட்டிட்டு என்ன எழவு கொட்டனு அவங்க சொன்ன வார்த்தைதான் குமரி முத்துவை இங்க கொண்டு வந்து நிறுத்தியிருக்குனு சொல்லுவாரு.

அன்னைக்கு அந்தப் பொண்ணு இப்படி சொல்லிடுச்சு எப்படியாவது சினிமால ஜெயிக்கணும்னு திரும்ப வந்து வாய்ப்புகளை தேட ஆரம்பிக்கிறாரு. ஏறி இறங்குன எல்லா கம்பெனிலயும் மூஞ்சியும் முகரையும் பாரு, இந்தக் கண்ணை வைச்சுட்டு நடிக்க வந்துட்டியானு அசிங்கப்படுத்தி வெளிய அனுப்பியிருக்காங்க. ஆனால், இன்னொரு பக்கம் நாடகங்கள்ல தொடர்ந்து நடிச்சிட்டு இருந்துருக்காரு. மைலாப்பூர் ஃபைன் ஆர்ட்ஸ் கிளப்ல இவர் நாடகம் போட்டாரு. அந்த நாடகத்தை பிரபல ஏ.எல்.நாராயணனு வந்துருந்தாரு. இவரோட நடிப்பு, நகைச்சுவை தன்மைலாம் பிடிச்சுப்போய், பொய் சொல்லாதே படத்தோட டைரக்டர் ஜெகன்னாதன்கிட்ட அறிமுகப்படுத்துறாரு. அவர் நாகேஷ்கூட சின்ன காட்சில முடிதிருத்துபவராக நடிக்க வாய்ப்பு கொடுக்குறாரு. இந்த பையன் பார்வை வித்தியாசமா இருக்கு க்ளோசப் எடுங்க சொல்லி எடுத்துருக்காரு. நாகேஷும் இவரோட நடிப்பை பயங்கரமா பாராட்டியிருக்காரு. அவர்கூட மட்டும் 65 படங்கள் பண்ணியிருக்காரு.

பொய் சொல்லாதேல தொடங்கி பல படங்கள்ல அவருக்கு நல்ல கேரக்டர் கிடைச்சுது. ஆனால், அவருக்கு மிகப்பெரிய பிரேக் கொடுத்த டைரக்டர் மகேந்திரன்தான். முள்ளும் மலரும், உதிரிப்பூக்கள் படங்கள் அவர் ஃபிலிமோகிராஃபில பெஸ்ட்டுனு சொல்லலாம். உதிரிப்பூக்கள்ல ஹீரோ கிடையாதுன்றது மாதுரி, பெரிய நகைச்சுவை நடிகர்கள் கிடையாது குமரி முத்துவும் சாமிகண்ணும்தான் கலக்கி எடுத்துருப்பாங்க. அந்த பயித்தியக்காரன் கேரக்டருக்கு குமரி முத்து பெஸ்ட்டுனே சொல்லலாம். இன்னொன்னு அவரோட சிரிப்பு. சின்னப்பூவே மெல்லப்பேசுல வைத்தியர் கேரக்டரும் இவருக்கு பிரேக்தான். ஷாட் போயிட்டே இருக்கும் போது ஒரு சீன்ல டக்னு சிரிச்சிட்டாராம். எல்லாரும் கட் கட்னு சொல்லி விழுந்து விழுந்து சிரிக்க ஆரம்பிச்சு, எங்கணே இந்த சிரிப்பை வைச்சிருந்தீங்கனு கேட்டாங்களாம். அதுவே அவர் அடையாளமாவும் மாறிடுச்சு. எதை வைச்சு கிண்டல் பண்ணாங்களோ.. அதுவே அவர் அடையாளமா இப்பவும் இருக்கு. கிட்டத்தட்ட 700 படங்கள் நடிச்சிட்டாரு.

நாடகம், சினிமா போல அரசியல்லயும் அவருக்கு அதிக ஆர்வம் இருந்துச்சு. திமுக மேலயும் கருணாநிதி மேலயும் அளப்பறிய அன்பு கொண்டிருந்தார். பெரியார், அண்ணா, கலைஞர்னு அவரோட பாசப்பட்டியல் பெருசா. பதவிக்காகலாம் நான் இங்க இல்லை. எதையும் எதிர்பார்த்தும் கட்சில நான் இல்லை. கலைஞர் சொன்னாலும் சொல்லாட்டியும் நான் பிரசாரத்துக்கு போவேண். உதயசூரியனுக்கு ஓட்டு கேட்பேன். எப்பவும் நான் திமுக கட்சிதான்னு சொல்லுவாரு.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top