தசாவதாரம் கமல்… 10 வேடங்களில் அதிகம் ஸ்கோர் பண்ணியது யார்?

பத்து வேடங்களில் கமல் நடித்து கடந்த 2008-ம் ஆண்டு வெளியான படம் தசாவதாரம். இந்தப் படத்தில் அதிக காட்சிகளில் வரும் ஹீரோ கோவிந்த் கேரக்டர்தான் என்றாலும், அவரை விட மற்ற சில கேரக்டர்கள் வசீகரிச்சிருக்கும். தசாவதாரத்தின் பத்து கேரக்டர்கள் பத்தியும், அதுல யாரு அதிகமா ஸ்கோர் பண்ணாங்கன்றதைப் பத்தியும்தான் நாம இந்த வீடியோவுல பார்க்கப்போறோம்.

கமலுக்கும் ரோலெக்ஸ் வாட்சுக்கும் இப்போ வந்த விக்ரம் படத்துக்கு முன்னாடியே, தசாவதாரம் டைம்லயே ஒரு கனெக்‌ஷன் இருக்கு… வீடியோவை முழுசா பாருங்க, அதுக்கான விடையை பின்னாடி சொல்றேன்.

புராஸ்தெட்டிக் மேக்கப்போட உதவியால கமல் நடிச்சிருந்த 10 கேரக்டர்கள்ல எது அதிகம் ஸ்கோர் பண்ணுச்சுக்கு ஒன் பை ஒண்ணா ஆர்டரா பார்த்துடுவோமா?

10.கலிஃபுல்லா கான்

கலிஃபுல்லா கான்
கலிஃபுல்லா கான்

அபூர்வ சகோதரர்கள் குள்ள கமலுக்கு ஆப்போசிட்டா இந்தப் படத்துல கமல் 6 அடி 8 அங்குலம் இருக்க கலிஃபுல்லா கான் கேரக்டர்ல நடிச்சிருப்பார். முகத்தில் போடப்பட்டிருக்கும் அதிகப்படியான மேக்கப்புகளால், அவர் காட்டும் உணர்ச்சிகளை அதிகம் பார்க்க முடியாமல் போனது என்றே சொல்லலாம். அதேநேரம், டயலாக் டெலிவரியில் வேற லெவல் எனர்ஜி கொடுத்திருப்பார் கமல்.

9.ஷிங்கன் நராஹஸி

ஷிங்கன் நராஹஸி
ஷிங்கன் நராஹஸி

தங்கையைக் கொன்றவரைப் பழிவாங்கும் ஜப்பானிய குங்ஃபூ மாஸ்டர் கேரக்டர். இதில், ஜப்பானியராகவே மேக்கப் உதவியோடு கமல் மாறியிருப்பார். வழக்கமான உயரத்தை விட உயரம் குறைந்தவர் போன்ற தோற்றத்தை ஏற்படுத்தியதில் கமல் வென்றிருந்தாலும், அவர் காட்டும் ரியாக்‌ஷன்கள் இந்த கேரக்டரின் அழுத்தத்தை நமக்குக் கடத்தத் தவறிவிடுகிறது என்றே சொல்லலாம். கிளைமேக்ஸ் ஃபைட் சீனில் இந்தக் குறையைக் கொஞ்சம் நிவர்த்தி செய்திருப்பார்கள்.

8.அவதார் சிங்

அவதார் சிங்
அவதார் சிங்

மேக்கப்புகளுக்கு நடுவே கொஞ்சூண்டு தெரியும் பெரும்பாலான கேரக்டர்களில், ஒரிஜினல் கமலுக்கு மிக நெருக்கமாக இருக்கும் முகம் பாப் பாடகர் அவதார் சிங்குடையது. பாடகர்களுக்கு அடிநாதமான குரலே போய்விடும் என்று தெரிந்ததும் கடைசி நிகழ்ச்சியில் பாடும்போதும் சரி, ரத்த வாந்தி எடுத்தபடியே ரஞ்சிதே என்று சரிந்துவிழும் காட்சியிலும் கவனிக்க வைப்பார் அவதார். சில சீன்களே வந்து போயிருந்தாலும் ரசிகர்கள் மறக்க முடியாத கேரக்டர் இது.

7.ஜார்ஜ் புஷ்

ஜார்ஜ் புஷ்
ஜார்ஜ் புஷ்

இந்த வரிசையில் 7-வது இடத்தைப் பிடிப்பது அமெரிக்க அதிபர் ஜார்ஜ் ஃபுஷ் கேரக்டர்தான். நிஜ ஜார்ஜ் ஃபுஷ்ஷை நம்மில் பெரும்பாலானோர் பார்த்திருப்போம் என்பதால், அந்த கேரக்டரோடு ஒன்ற முடியாமல் போகிறது. அதேநேரம், புஷ்ஷின் எனர்ஜியையும், மேனரிஸத்தையும் நமக்குக் கடத்தி அந்தக் குறையை காணாமல் ஆக்கியிருப்பார் கமல்.

6.கோவிந்த் ராமசாமி

கோவிந்த் ராமசாமி
கோவிந்த் ராமசாமி

படத்தின் ஹீரோ கேரக்டர்; ஸ்கிரீன்பிளேவின் மைய இழை. வைரஸை லேபில் இருந்து திருடிக் கொண்டுபோகும் சீன், பல்ராம் நாயுடுவிடம் சிக்கிக் கொண்டு தடுமாறுவது, தமிழ் – தெலுங்கு மொழிகள் பற்றி பேசும் சீன், கிருஷ்வேணி பாட்டி, ஆண்டாள் கேரக்டர்களை சமாளிப்பது என கிளாசிக்கான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார். ஆனாலும், மெயின் கேரக்டரை விட இந்தப் படத்தில் 4 கேரக்டர்கள் அதிகம் ஸ்கோர் செய்திருக்கின்றன என்றே சொல்லலாம். `கடவுள் இல்லைனு யாருங்க சொன்னா… இருந்தா நல்லா இருக்கும்னுதானே சொல்றேன்’னு இந்த கேரக்டர் பேசுன வசனம் தமிழ் சினிமாவின் முக்கியமான வசனம்னே சொல்லலாம்.

5.ஃபிளெட்சர்

ஃபிளெட்சர்

சிஐஏவின் முன்னாள் ஏஜெண்ட், வில்லன்களுக்கான வேலை செய்யும் சூப்பர் அடியாள். Rouge Agents-ஐ நாம் எத்தனையோ ஹாலிவுட் படங்களில் பார்த்திருந்தாலும், அதிலிருந்து தனித்துத் தெரிய கமல் மெனக்கெட்டிருப்பார் என்றே சொல்ல வேண்டும். அதேநேரம், உடல்மொழியிலும் டயலாக் டெலிவரியிலும் ஃபிளெட்சரை சந்தேகிக்கவே முடியாது என்பதுதான் கமலின் அர்ப்பணிப்புக்குச் சான்று. இருந்தாலும், இந்த வரிசையில் ஃபிளெட்சரால் ஏழாவது இடம்தான் பிடிக்க முடிகிறது.

4.வின்சென்ட் பூவராகவன்

வின்சென்ட் பூவராகவன்
வின்சென்ட் பூவராகவன்

மணல் கொள்ளைக்கு எதிராகப் போராடும் படிக்காத போராளி பூவராகவன். தோள்பட்டையை தூக்கிக் கொண்டு நடக்கும் வித்தியாசமான மேனரிஸம், தூத்துக்குடி தமிழ் என இந்த கேரக்டரில் கமல் அதகளம் பண்ணியிருப்பார். `மக்ளே’ என இவர் பேசும் பல டயலாக்குகள் அப்ளாஸ் அள்ளின.

3.கிருஷ்ணவேணி பாட்டி

கிருஷ்ணவேணி பாட்டி

தசாவதாரம் படத்திலேயே அதிகம் கஷ்டப்பட்டு ஷூட் செய்தது கிருஷ்ணவேணி பாட்டியோட ஃபோர்ஷன்தான் என டைரக்டர் கே.எஸ்.ரவிக்குமாரே ஒரு பேட்டியில் சொல்லியிருப்பார். மகனைத் தொலைத்துவிட்டுத் தேடிக்கொண்டிருக்கும் 95 வயது பாட்டியாக அச்சு அசலாக நம்மை அசத்தியிருப்பார் கமல். ஒரு கட்டத்தில் பூவராகவனைத் தனது மடியில் போட்டுக்கொண்டு அழும்போது, அந்தத் தாக்கத்தை ரசிகர்களுக்கும் கடத்தியிருப்பார்.

2.ரங்கராஜ நம்பி

 ரங்கராஜ நம்பி
ரங்கராஜ நம்பி

கோவிந்தராஜர் சிலையை கடலில் வீச முயலும் சைவ மன்னன் குலோத்துங்க சோழனை எதிர்த்து களமாடும் வீர வைஷ்ணவன் இந்த ரங்கராஜ நம்பி. 10 நிமிடங்களே வந்துபோகும் கேரக்டர் என்றாலும், ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துவிட்ட கேரக்டர். படத்தோட ஓபனிங்லயே படத்துக்கு ஒரு பிரமாண்டம் கொடுத்தது ரங்கராஜ நம்பியோட நடிப்பும் வசனங்களும்தான்.

1.பல்ராம் நாயுடு

பல்ராம் நாயுடு
பல்ராம் நாயுடு

நக்கல் நையாண்டியும் கமலும் ஒட்டிப் பிறந்த இரட்டையர்கள் என்றே சொல்லலாம். அந்த அளவுக்கு கமலின் காமெடிகளுக்குத் தனி அடையாளம் எப்போதும் இருக்கும். அந்தவகையில், படத்தில் தனியாக காமெடி டிராக் இல்லாத குறையை பல்ராம் நாயுடு சோலாவாக நீக்கியிருப்பார். உதவியாளரான டான்ஸ் மாஸ்டர் ரகுராமோடு சேர்ந்து இவர் அடிக்கும் லூட்டிகள் சிரிப்பு வெடிகள். தெலுங்கு வாடையோடு கலந்து இவர் பேசும் தமிழுக்கும் தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது. ’ரா’ விசாரணை அதிகாரியான பல்ராம் நாயுடு கேரக்டருக்கு மக்கள் கொடுத்த வரவேற்பால், சபாஷ் நாயுடு என்கிற பெயரில் தனி படமே உருவாக்கப் போவதாகக் கமல் அறிவித்தார். ஆனால், பின்னர் சில, பல காரணங்களால் அந்தப் படம் கைவிடப்பட்டது.

சரி முன்னாடி கேட்டிருந்த கேள்விக்கு வருவோம். விக்ரம் படத்துல ரோலக்ஸ் கேரக்டர்ல நடிச்ச சூர்யாவுக்கு கமல், ரோலக்ஸ் வாட்ச் கிஃப்ட் பண்ணிருந்தார்ல. அதேமாதிரி, தசாவதாரம் சமயத்துல படம் முழுசா முடிஞ்ச பிறகு, முதல்முறையா பார்த்த கமல், பேசாம எழுந்து போய்ட்டாராம். இதனால டைரக்டர் கே.எஸ்.ரவிக்குமார் கொஞ்சம் குழம்பிப் போய்ட்டாரம். அப்புறமா, ஆபிஸுக்கு வரச்சொன்னதும், ஏதோ நிறைய கரெக்‌ஷன் சொல்லப்போறார்னு போனவருக்கு ஸ்வீட் சர்ப்ரைஸ் கொடுத்திருக்கிறார் கமல். டைரக்டர் கே.எஸ்.ரவிக்குமாருக்கு ரோலக்ஸ் வாட்ச் வாங்கி கிஃப்ட் பண்ணதோடு, பாரட்டவும் செஞ்சிருக்கார்.

பெர்சனலா பார்த்தா தசாவதாரம் படத்துல ஃபிளெட்சர் கேரக்டர்தான் என்னோட ஃபேவரைட். உங்களோட ஃபேவரைட் கேரக்டர் எதுனு மறக்காம கமெண்ட்ல சொல்லுங்க.

Also Read – குருதிப்புனல்… இப்படி ஒரு ஆக்‌ஷன் படம் எடுத்துட்டா லைஃப் டைம் செட்டில்மென்ட்றா!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top