நாத்திகர் கமல் நடித்த இந்த பக்திப் படத்தைப் பார்த்திருக்கீங்களா..?

அந்தக் காட்சியில் கமல், `ஐயப்பன் எனக்கும் வேண்டப்பட்டவர்தான்’ என்ற வசனத்தையும் நாத்திகர் கமல் பேசி நடித்து ஆச்சர்யத்தையும் கூட்டியிருப்பார். 1 min


சரணம் ஐயப்பா - கமல், சுருளி ராஜன்
சரணம் ஐயப்பா - கமல், சுருளி ராஜன்

கடவுள் இல்லை என சொல்லும் நாத்திகரான கமல்ஹாசன், ஆத்திகத்தைப் பிரச்சாரம் செய்யும் பக்திப் படம் ஒன்றில் நடித்திருக்கிறார் என்றாலோ கடவுளைப் பற்றிய வசனமும் பேசி நடித்திருக்கிறார் என்றாலோ உங்களால் நம்பமுடிகிறதா..? எஸ். இது எல்லாமே நடந்திருக்கிறது.

80-களில் அப்போது அடிக்கடி வெளியாகும் பக்தி படங்களில் பிரபலங்கள் கேமியோ ரோலில் நடிப்பது வழக்கமாக இருந்து வந்தது. அப்படி உருவான ஒரு படம்தான் 1980-ஆம் ஆண்டு வெளியான ‘சரணம் ஐயப்பா’ எனும் பக்திப் படம். சபரிமலை ஐயப்பனின் புகழைப் பரப்பும் விதமாக எடுக்கப்பட்ட இந்தப் படத்தில் பழம்பெரும் நடிகை  மனோரமா ஆச்சியின் மகன் பூபதி ஹீரோவாக நடித்திருப்பார். இந்தப் படத்தை இயக்கிய தசரதன் என்னும் இயக்குநர் கமலின் நண்பரும்கூட.

சரணம் ஐயப்பா
சரணம் ஐயப்பா

சரணம் ஐயப்பா

கடுமையான குற்றங்களைச் செய்து ஜெயிலுக்குச் சென்று அங்கிருந்துத் தப்பித்த சில குற்றவாளிகள் சபரிமலை பகுதியில் தஞ்சமடைந்து போலீஸிடமிருந்து தப்பிப்பப்பதற்காக ஐயப்ப பக்தர்கள்போல வேடமிட்டுக்கொள்வார்கள்.  கதைப்போக்கில் அவர்கள் மனம் மாறி திருந்துவதுபோல வடிவமைக்கப்பட்டிருக்கும் இதன் திரைக்கதையில் ஆங்காங்கே ரஜினி, முத்துராமன், நம்பியார், ஜெய்சங்கர், ஸ்ரீபிரியா, பாக்யராஜ் போன்ற ஏராளமான நட்சத்திரங்கள் கேமியோ ரோலில் நடித்திருப்பார்கள். அந்த வரிசையில்தான் கமலும் இந்தப் படத்தில் கேமியோ ரோல் செய்து தனக்கே உரிய பாணியில் நடித்து அசத்தியிருப்பார்.

சரணம் ஐயப்பா - கமல், சுருளி ராஜன்
சரணம் ஐயப்பா – கமல், சுருளி ராஜன்

சபரிமலைக்கு மாலை போட்டிருக்கும் ஐயப்பப் பக்தரான சுருளிராஜன் பலரிடம் நன்கொடை கேட்டுப் போவார். அந்த வரிசையில் நடிகர் கமலாகவே நடித்திருக்கும் கமலிடமும் நன்கொடை கேட்டு அவர் போக, கமல் நன்கொடைக் கொடுத்து அனுப்புவதுபோல அந்தக் காட்சி அமைக்கப்பட்டிருக்கும். மேலும் அந்தக் காட்சியில் கமல், `ஐயப்பன் எனக்கும் வேண்டப்பட்டவர்தான்’ என்ற வசனத்தையும் பேசி நடித்து ஆச்சர்யத்தையும் கூட்டியிருப்பார்.

மேலும் அந்தப் படத்தில் கைதிகள் சிறையில் இருக்கும்போது பூபதி உள்ளிட்ட நடிகர்கள் ஆடிப்பாடும்.. இசையமைப்பாளர் சந்திரபோஸ் இசையில் உருவான `அண்ணா வாடா.. தம்பி வாடா’ என்னும் பாடலையும் பாடியவர் கமல்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

கமல் இவ்வாறு நடித்தது பற்றிய உங்களது கருத்து என்ன மக்களே..?

Also Read – `என்ஜாய் எஞ்சாமி’ முதல் `அடிபொலி’ வரை… 2021-ல் யூ டியூபில் கலக்கிய ஆல்பம் பாடல்கள்!


Like it? Share with your friends!

501

What's Your Reaction?

lol lol
40
lol
love love
36
love
omg omg
28
omg
hate hate
36
hate

0 Comments

Leave a Reply

Choose A Format
Personality quiz
Series of questions that intends to reveal something about the personality
Trivia quiz
Series of questions with right and wrong answers that intends to check knowledge
Poll
Voting to make decisions or determine opinions
Story
Formatted Text with Embeds and Visuals
List
The Classic Internet Listicles
Countdown
The Classic Internet Countdowns
Open List
Submit your own item and vote up for the best submission
Ranked List
Upvote or downvote to decide the best list item
Meme
Upload your own images to make custom memes
Video
Youtube and Vimeo Embeds
Audio
Soundcloud or Mixcloud Embeds
Image
Photo or GIF
Gif
GIF format
வேறலெவல்… இவ்வளவு சிம்பிளான கதையவா இப்படி படமெடுத்தாங்க? இந்த பாட்டை எல்லாம் கேட்டா அந்த நாளுக்கே போயிடலாம்..! ‘சோ’வை பற்றிய சில சுவாரஸ்யங்கள்! ஆயுத பூஜை – விஜயதசமிலாம் வந்த நமக்கு ஏன் சந்தோஷமா இருக்கும் தெரியுமா? பாடகர் மனோ ஏன் Underrated?!