விஜய் பண்ற ஹேர்ஸ்டைல், மேனரிஸம்னு சின்ன சின்ன விஷயங்களைக் கூட அவரோட ரசிகர்கள் கவனிச்சு அதை அப்படியே தங்களோட லைஃப்ல ஃபாலோ பண்ணுவாங்க. அப்படிப்பட்ட தளபதி வெறியர்கள் விஜய்யோட காஸ்டியூம்ஸை விட்டு வைப்பாங்களா? விஜயோட ஒவ்வொரு படத்தோட ஃபஸ்ட் லுக் போஸ்டர்ஸும் ரிலீஸ் ஆகும்போது, “அப்புறம் என்னப்பா, டிரெஸ்ஸ ஆர்டர் போட்டுர்லாமா?”னு விஜய் ஃபேன்ஸ்லாம் கிளம்பிடுவாங்க. ஃபஸ்ட் லுக் போஸ்டர் என்ன, ஆஃப் ஸ்கிரீன்ல விஜய் போடுற காஸ்டியூம்ஸகூட விட்டு வைக்க மாட்டாங்க. ஒருதடவை ஒரு கடைக்கு ஷர்ட் வாங்க போகும்போது கடைக்கார அண்ணன், “மாஸ்டர் படம் வந்துச்சுனா, ஒரு செக்ட் ஷர்ட் கூட பார்க்க முடியாது. எல்லாத்தையும் விஜய் ஃபேன்ஸ் வாங்கிட்டு போய்டுவாங்க”ன்னாரு. பொருளாதாரத்துலகூட விஜய் எவ்வளவு பெரிய தாக்கத்தை ஏற்படுத்துறாரு பாருங்க. இன்னைக்கு இளைஞர்களோட ஸ்டைல் ஐகான் விஜய்னு கான்ஃபிடன்டா சொல்லலாம். சரி, இதுவரைக்கும் விஜய்யோட படங்கள்ல காஸ்டியூம் எப்படிலாம் மாறியிருக்கு. அதைத்தான் இந்த வீடியோல நாம பார்க்கப்போறோம்.

விஜய்யோட டிரெஸ்ஸிங் சென்ஸ் எப்படிலாம் மாறியிருக்குனு தெரிஞ்சுக்க அவரோட கரியர்ல திருப்புமுனையாக அமைந்த படங்களை நாம கவனிச்சாலே போதும். சிம்பிளான ஷர்ட், பேண்ட்னு நம்ம பக்கத்து வீட்டு பையன் மாதிரி டிரெஸ் போட்டு பூவே உனக்காக படத்துல நடிச்சிருப்பாரு. இந்தப் படம் விஜய் கரியர்ல முக்கியமான படம். இதுக்கப்புறம் `லவ் டுடே, ஒன்ஸ் மோர், நேருக்கு நேர், காதலுக்கு மரியாதை, துள்ளாத மனமும் துள்ளும், மின்சார கண்ணா, குஷி, பிரியமானவளே ஃபிரெண்ட்ஸ், பத்ரி, ஷாஜஹான்’ன்னு எல்லா படத்துலயும் கிட்டத்தட்ட ஒரேமாதிரியான காஸ்டியூம்ஸ்தான் போட்ருப்பாரு. 90’ஸ்ஸில் டிரெண்டான டிரெஸ்னா அது தொளதொள சட்டையும் டைட்டான பேண்டும்தான். விஜய்யின் ஆரம்பகால படங்களில் பெரும்பாலும் இந்த ஸ்டைல்தான் இருக்கும். பூவே உனக்காக படத்துக்கு அப்புறம் விஜய்யின் கரியரில் மிகவும் முக்கியமான படங்களாக அமைந்த காதலுக்கு மரியாதை, துள்ளாத மனமும் துள்ளும் படத்துல அவருக்கு ஆடை வடிவமைப்பாளரா இருந்தது, ராஜேந்திரன்.

விஜய் படங்கள்ல லுக் வைஸ், டிரெஸ்ஸிங் வைஸ் மிகப்பெரிய மாற்றம் கொண்டுவந்தது, திருமலை படம்தான். ஒரு சாதாரண பனியன் போட்டுட்டு, அதுக்கு மேல சட்டை போட்டு பட்டன்லாம் திறந்து விட்ருப்பாரு. இந்தப் படத்துக்கும் ராஜேந்திரன்தான் காஸ்டியூம் டிசைனர். விஜய் கரியர்ல அவரை மாஸா மாத்தின படம் இது. அதுக்கு காலர்ல இருந்து சிகரெட் எடுக்குற சீன்லாம் ரொம்பவே ஹெல்ப் பண்ணியிருக்கும். அந்தப் பாம் ரிலீஸ் ஆன சமயத்துலயும் அவரோட ஃபேன்ஸ்லாம் சட்டைல பட்டன் போடாமல் திறந்துவிட்டுட்டு காலரை கடிச்சிட்டு திரிஞ்சாங்க. அடுத்து அவர் கரியர்ல முக்கியமான படம் ‘கில்லி’. இந்தப் படத்துலயும் கைலி, தொள தொள சட்டை, பனியன், கபடி ஜெர்ஸினு ரொம்ப சிம்பிளான காஸ்டியும்தான் இருக்கும். ஊர்ல கூட்டம்கூடி பேசிட்டு இருக்குற எல்லாப் பசங்களும் இப்படிதான் இருப்பாங்க. அதுனாலயே ஒரு கனெக்ட் இருந்துச்சு. அப்போ புதுசா வந்த விஜய் ஃபேன்ஸும் இந்த காஸ்டியூமை ஃபாலோ பண்ணாங்க. இந்தப் படத்துக்கு நளினி ஸ்ரீராம் காஸ்டியூம் டிசைனரா இருந்தாங்க.

`திருப்பாச்சி’ படம்… எப்படி மறக்க முடியும். திருப்பாச்சி படத்துல அப்படி ஸ்பெஷலா ஒண்ணும் டிரெஸ்ஸிங் சென்ஸ் விஜய்க்கு இருக்காதேனு நீங்க கேக்கலாம். ஆனால், பேரரசு விஜய்யோட சட்டையை வைச்சு `ஆயிரம்தான் இருந்தாலும் அண்ணன் சட்டை ஆகுமானு!’ சென்டிமென்ட் சீன் ஒன்னையே கிரியேட் பண்ணியிருப்பாரு. 90’ஸ் கிட்ஸ் அண்ணன் – தங்கச்சிங்க வீட்டுல பேசிக்கும்போது இந்த டயலாக் சொல்லி விளையாடுவாங்க. விளையாட்டா சொன்னாலும் அதுல அப்படி ஒரு சென்டிமென்ட் இருக்கும். தங்கச்சி இருக்குறவங்களுக்குதான் அந்த டயலாக்கோட அருமை தெரியும். இந்தப் படத்துக்கும் ராஜேந்திரன்தான் காஸ்டியூம் டிசைனர். அப்படியே கட் பண்ணா சச்சின். ஒரு ஃபீல் குட்டான படம். இன்னைக்கும் விஜய் ஃபேன்ஸ் கொண்டாடுற ஒரு படம். இந்தப் படம் ரிலீஸ் ஆனப்போ சச்சின் பேக் கொடுங்க, சச்சின் டீ ஷர்ட் கொடுங்கனு அவரோட ரசிகர்கள் கடைல போய் கேட்டு வாங்குனாங்கனா பார்த்துக்கோங்க. இந்தப் படத்துக்கும் ராஜேந்திரன்தான் காஸ்டியூம் டிசைனர்.

சிறுவர்கள் முதல் இளைஞர்கள் வரை கவனிக்க வைச்சு ஈர்த்த ஒரு காஸ்டியூம்னா அது `போக்கிரி’ காஸ்டியூம்தான். தீபாவளி அப்போ அந்த காஸ்டியூம் போட்டுட்டு கையில கர்சிப்பை சுத்திட்டு அலப்பறை பண்ணிட்டு திரிஞ்சாங்க. ஒரு சட்டைமேல இன்னொரு சட்டை போடுற ஃபேஷன்லாம் ஆரம்பிச்சது விஜய்தான். இன்னைக்கு வரைக்கும் அந்த ஃபேஷன் இருக்கு. இதனை வடிவமைத்தவரும் நளினி ஸ்ரீராம்தான். அதுக்கப்புறம் வந்த `நண்பன், துப்பாக்கி, தலைவா, ஜில்லா’ படங்கள்ல விஜய் பெரும்பாலும் டீ ஷர்ட்தான் போட்ருப்பாரு. அந்த சமயங்களில் விஜய் ரசிகர்கள் மத்தியில் டீ ஷர்ட் பிரபலமாக இருந்தது. அதுவும் நண்பன், துப்பாக்கி டீ ஷர்ட்லாம் வேறலெவல் ஃபேமஸ். துப்பாக்கில விஜய்யோட லுக்கை மொத்தமா மாத்தினாங்க. டிரெஸ்ஸிங் சென்ஸையும்தான். இதுக்கு கோமல் ஷஹானிதான் காஸ்டியூம் டிசைனர்.
விஜய்யோட டிரெஸ்ஸிங் சென்ஸ் விமர்சனத்துக்கும் ஆளாகியிருக்கு. ஆமா, புலி, பைரவா படங்கள்ல எல்லாம் அவரோட காஸ்டியூமை வைச்சு செய்தாங்க. இருந்தாலும் விஜய் ரசிகர்கள் மத்தியில பைரவா ஷர்ட் ரொம்பவே ஃபேமஸ்தான். ‘தெறி, மெர்சல், பிகில்’ போன்ற படங்களில் விஜய்யின் டிரெஸ்ஸிங் சென்ஸ் குறிப்பிட்டு பேசும்படியாக அமைந்தது. இந்தப் படங்கள் வெளியான போது விஜய் ரசிகர்கள் மத்தியில் பிளைன் கேஷூவல் ஷர்ட்கள், செக்ட் ஷர்ட்கள் மிகவும் பிரபலம். இந்த படங்கள் அனைத்திலும் பணியாற்றியவர் கோமல் ஷஹானிதான். மாஸ்டர் படத்தில் பெரும்பாலும் செக்ட் ஷர்ட்டுகளை அணிந்திருப்பார். இதனால், விஜய் ரசிகர்கள் மத்தியில் செக்ட் ஷர்ட் வேறலெவலில் டிரெண்ட் ஆனது. இந்தப் படத்துக்கு பல்லவிதான் காஸ்டியூம் டிசைனர். அப்புறம் கடைசியா வந்த பீஸ்ட் படம். விஜய் கம்மியான எண்ணிக்கைல டிரெஸ் சேஞ்ச் பண்ணி நடிச்சது பீஸ்ட்லதான். மொத்தமே 4,5 காஸ்டியூம்ஸ்தான். ஆனால், பிரிண்டட் ஷர்ட்டை செம டிரெண்டாக்கி விட்டுட்டாரு. கிளைமேக்ஸ்ல வந்த ஷர்ட்ட போட்டுட்டுதான் படம் பார்க்கவே போனாங்க. அதுமட்டுமில்ல. ரத்தம் இருக்குற ஷர்ட்டை டிசைனாவே வித்தாங்கன்னா பார்த்துக்கோங்க. இந்தப் படத்துக்கும் காஸ்டியூம் டிசைனர் பல்லவிதான். ஆனால், அரபிக்குத்து பாட்டுக்கு வி. சாய்ன்றவரு காஸ்டியூம் ரெடி பண்ணியிருக்காரு.

ஆன் ஸ்கிரீன், ஆஃப் ஸ்கிரீன்னு எங்கேயும் எப்போதும் என்ன டிரெஸ் போட்டுட்டு வந்தாலும் விஜய் மாஸாதான் அவரோட ரசிகர்களுக்கு தெரிவாரு. தலைவா….னு கத்தி அந்த ஃபோட்டோவை இந்திய அளவுல டிரெண்ட் ஆக்கதான் செய்வாங்க. ஆனால், விஜய்யோட ஆஃப் ஸ்கிரீன் ஃபேவரைட் டிரெஸ் கோர்ட் சூட்தானாம். பிரியமானவளே படத்துல இருந்தே அவருக்கு கோர்ட் மேல கொஞ்சம் அதிக காதலாம். நண்பன் வெற்றி விழா, மாஸ்டர் ஆடியோ லாஞ்ச்னு எப்போலாம் முடியுதோ அப்போலாம் கோர்ட் போட்டுட்டு வந்து கலக்குவாரு. ஆன் ஸ்கிரீனில், `துப்பாக்கி, பைரவா, சர்க்கார், பிகில்’ போன்ற படங்களில்கூட கோட் சூட் போட்டு அசத்தியிருப்பார். மாஸ்டர் ஆடியோ லாஞ்சில, “நண்பர் அஜித் போல கோட் சூட்ல வரலாம்னு நினைச்சேன்னு” என விஜய் பேசுன வசனமும் செம வைரல். ஆனால் விஜய்யை பெரும்பாலும் கேஸூவல் லுக்லதான் பார்க்க முடியும். அடுத்தடுத்து வர்ற படங்கள்லயும் அவர் என்ன காஸ்டியூம் போட்டாலும் அதுவும் டிரெண்ட் செட்டராதான் இருக்கும்.
விஜய்யோட காஸ்டியூம்ல உங்களோட ஃபேவரைட் எதுனு கமெண்ட்ல சொல்லுங்க!
Also Read : இட்லி உப்புமா, கால சக்கரம், பூங்குயில் பாட்டு பிடிச்சிருக்கு… – இது தேவயானி டிரெண்ட்ஸ்! #HBDDevayani
0 Comments