எந்தெந்த ஹீரோயின் என்னென்ன படிச்சிருக்காங்க?

தமிழ் சினிமால முன்னணி நடிகையா இருக்குறவங்கள பல பேர் படிச்சவங்கதான். இன்னைக்கு நடிப்புல அவங்க கலக்கிட்டு இருக்காங்க. முன்னொரு காலத்துல படிப்புலயும் கலக்கி டிகிரிலாம் வாங்கியிருக்காங்க. “நடிப்புனு வந்தாலும் படிப்பும் முக்கியம்தான்”னு அவங்களுக்கும் தெரிஞ்சுருக்கு. சரி… எந்தெந்த நடிகைகள் என்னென்ன டிகிரிலாம் வாங்கியிருக்காங்? அதைதான் இந்த வீடியோல நாம தெரிஞ்சுக்கப்போறோம்.

நயன்தாரா

நயன்தாரா
நயன்தாரா

‘மாயா, காதம்பரி, மதிவதனி, கோகிலா’னு செமயான பல கேரக்டர்கள்ல இறங்கி கலக்கி இன்னைக்கு சூப்பர் ஸ்டாரா வளர்ந்து நிக்கிற நம்ம ‘கண்மணி’ அதாங்க நயன்தாரா… கேரளால திருவல்லான்ற ஊர்ல உள்ள மர்தோமா காலேஜ்ல பி.ஏ இங்கிலீஷ் படிச்சிருக்காங்க. ‘பார்டன்… பார்டன்’னு பாஸ் என்கிற பாஸ்கரன் படத்துல அவங்க பேசும்போதே தெரியல… மேடம் இங்கிலீஷ்ல புலினு?!

த்ரிஷா

த்ரிஷா
த்ரிஷா

வுமன் சென்ட்ரிக் படங்கள் வொர்க் அவுட் ஆகலைனாலும், த்ரிஷா என்னைக்கும் கெத்துதான். அதுவும் தனலட்சுமி, அபி, ஜெஸ்ஸி, ஜானு, ஹேமானிகா கேரக்டர்லாம் த்ரிஷாவைத் தவிர வேற யார் பண்ணாலும் இவ்ளோ நல்லா வந்துருக்காதுனே சொல்லலாம். ரஜினில இருந்து விஜய் சேதுபதி வரை எல்லார்கூடயும் வேற நடிச்சிட்டாங்க. இவங்க சென்னைல இருக்குற எத்திராஜ் காலேஜ்ல பி.பி.ஏ படிச்சிருக்காங்க. சோ, கார்த்திக்கு அவரோட படத்தோட பிசினஸ்ல எதாவது டவுட்னா ஜெஸ்ஸிக்கிட்ட கால் பண்ணி கேட்டுக்கலாம்.

சமந்தா

சமந்தா
சமந்தா

‘அழகென்ற சொல்லுக்கு சமந்தா’. கதீஜா கேரக்டர் பார்த்ததுக்கு அப்புறம் இப்படிதான் சொல்ல வேண்டியதா இருக்கு. வேம்பு, தாரா, சத்யா, நித்யா வாசுதேவன், மித்ரானு சமந்தா பண்ண எல்லா கேரக்டர்களும் அவ்வளவு கியூட்டா இருக்கும். சமந்தா, ஸ்டெல்லா மேரீஸ் காலேஜ்ல பி.காம் பண்ணியிருக்காங்க. சமந்தா ஃபேன்ஸ்லாம் உடனே பி.காம் எடுக்க போய்டாதீங்க. உங்களுக்குப் புடிச்சத படிங்க.

அனுஷ்கா

அனுஷ்கா
அனுஷ்கா

சினிமா இண்டஸ்ட்ரீக்குள்ளயே அனுஷ்காவுக்கு நிறைய ஸ்டார்ஸ் ஃபேனா இருக்காங்க. பாகுபலி, இஞ்சி இடுப்பழகி, என்னை அறிந்தால் அப்டினு அவங்க பண்ண கேரக்டர்ஸ் எல்லாமே ரொம்ப முக்கியமானது. குறிப்பா இஞ்சி இடுப்பழகி பேசின விஷயம் ரொம்ப அழகானது. பெங்களூர்ல இருக்குற மவுண்ட் கார்மல் காலேஜ்ல பி.சி.ஏ படிச்சிருக்காங்க, அனுஷ்கா.

சாய் பல்லவி

சாய் பல்லவி
சாய் பல்லவி

மலர் டீச்சர்னா யாருக்குதான் பிடிக்காது? இப்படி ஒரு டீச்சர் நமக்கு வரமாட்டாங்களானு ஏங்க வைச்ச சாய் பல்லவி நிஜத்துல டீச்சர் இல்லை டாக்டர். ஜார்ஜியால போய் எம்.பி.பி.எஸ் படிச்சிருக்காங்க. எக்ஸ்கியூஸ்மி அவங்க ஹாஸ்பிடல் எங்க இருக்குனு அவங்களையே சோஷியல் மீடியால டேக் பண்ணி கேளுங்க.

ராஷ்மிகா

ராஷ்மிகா
ராஷ்மிகா

தளபதி 66ல பிஸியா நடிச்சிட்டு இருக்காங்க. இன்டர்நேஷனல் க்ரஷ்னு இவங்களை அனௌன்ஸ் பண்ணிட்டாங்க. எம்.எஸ் ராமையா காலேஜ்ல இங்கிலீஷ், ஜார்னலிஸம், சைக்காலஜினு மூணுமே படிச்சிருக்காங்க. வேறலெவல்!

கீர்த்தி சுரேஷ்

கீர்த்தி சுரேஷ்
கீர்த்தி சுரேஷ்

மகாநடின்ற ஒரே படத்துல ஒட்டுமொத்த இந்தியாவையும் திரும்பிப் பார்க்க வைச்சிட்டாங்க. கீர்த்தி ஃபேஷன் டிசைனிங் முடிச்சிருக்காங்க. இதனாலயே, ஷூட்டிங்லலாம் ஒரு சின்ன மிஸ்டேக் பேஷன் டிசைனிங்ல நடந்தாலும் ஈஸியா கண்டுபிடிச்சு தூக்கிருவாங்களாம்.

பிரியங்கா மோகன்

பிரியங்கா மோகன்
பிரியங்கா மோகன்

பசங்க மத்தியில மெழுகு ஆலா வலம் வர்றது பிரியங்கா மோகன்தான். இவங்க என்ன படிச்சிருக்காங்கனு சொன்னா, நம்ம பசங்க எல்லாருக்குமே புடிச்சிடும். ஆமா, நம்மள்ல பலர் மாதிரி இவங்களும் இஞ்சினீயரிங் ஸ்டுடண்ட்தான்.

பிரியா பவானி ஷங்கர்

பிரியா பவானி ஷங்கர்

பிரியா பவானி ஷங்கரும் ஒரு இஞ்சினீயரிங் ஸ்டூடண்ட்தான். பி.எஸ்.அப்துர் ரஹ்மான் கிரஸண்ட் இஞ்சினீயரிங் காலேஜ்லதான் படிச்சிருக்காங்க. அதுக்கப்புறம் எம்.பி.ஏ-வும் முடிச்சிருக்காங்க.

பூஜா ஹெக்டே

பூஜா ஹெக்டே
பூஜா ஹெக்டே

மாஸ்டர் படத்துல நடிச்சு அரபிக் குத்து பாட்டுக்கு நம்மள செமயா ஆட்டம் போட வைச்சிட்டாங்க. உலக அளவுல இந்தப் பாட்டு செம ஹிட். பூஜா ஹெக்டே மும்பையில் உள்ள எம்.எம்.கே காலேஜ்ல எம்.காம் முடிச்சிருக்காங்க.

நம்ம கொண்டாடுற நடிகைகள் எல்லாம் இவ்வளவு படிச்சிருக்காங்களா?னு ஆச்சரியமா இருக்குல. சரி, இதுல உங்களோட ஃபேவரைட் ஆக்ட்ரஸ் யாருனு கமெண்ட்ல சொல்லுங்க! 

Also Read – 4 ‘மில்லியன் டாலர்’ கேள்விகளுக்கு மணிரத்னத்தின்  நறுக் பதில்!

1 thought on “எந்தெந்த ஹீரோயின் என்னென்ன படிச்சிருக்காங்க?”

  1. You actually make it seem so easy with your presentation but I find this topic to be actually something that I think I would never understand. It seems too complex and extremely broad for me. I am looking forward for your next post, I will try to get the hang of it!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top