தமிழ் சினிமாவில் பன்முகத் திறமைவாய்ந்த முன்னணி நடிகர்கள் பலர் இருக்காங்க. பாடகர், பாடலாசிரியர், இயக்குநர் என்று பலதுறைகளின் தங்களின் தனித்திறமைகளை அவ்வப்போது வெளிப்படுத்தி வருகின்றனர். அவ்வகையில், தங்களை இசையமைப்பாளராகவும் பலர் நிரூபித்து வெற்றியும் பெற்றுள்ளனர். இந்தப் படங்களுக்கு இவங்களா மியூசிக் போட்டாங்கனு ஆச்சரியப்படுற அளவுக்கு தூள் கிளப்பிய நடிகர்கள்.. இல்லைங்க… மியூசிக் டைரக்டர்ஸ் பத்திதான் இந்தக் கட்டுரையில் தெரிஞ்சுக்கப்போறோம்.
Also Read : தமிழில் பட்டையைக் கிளப்பும் கேங்க்ஸ்டர் படங்களின் லிஸ்ட் இதோ!
-
1 பாக்யராஜ்
மிகப்பெரிய டைரக்டர், நடிகர், திரைக்கதையில் கலக்கக்கூடியவர்.. இப்படிலாம் ஒருபக்கம் இவரைப் பத்தி பேச்சு இருந்தாலும் மறுபக்கம் இசையமைப்பாளராகவும் பல படங்களில் இறங்கி கலக்கி இருக்கிறார். ஞானப்பழம், பவுனு பவுனுதான், அவசரபோலீஸ் 100, பொண்ணு பாக்கப் போறேன், இது நம்ம ஆளு உள்ளிட்ட பல படங்களுக்கு இசையமைப்பாளராக பணியாற்றி உள்ளார். டான்ஸ் வேணும்னா வீக்கா இருக்கலாம்; ஆனால், மியூசிக் எல்லாம் மெர்சலா இருக்கும்.
-
2 டி.ராஜேந்தர்
நடிகர், இயக்குநர், பாடகர், பாடலாசிரியர், ஒளிப்பதிவாளர், தயாரிப்பாளர், அரசியல்வாதி என பல துறைகளிலும் கலக்கிய டி.ஆர் இசையமைக்கிறதையும் விட்டு வைக்கல. ஒரு தலை ராகம், வசந்த அழைப்புகள், ரயில் பயணங்களில், கிளிஞ்சல்கள், நெஞ்சில் ஒரு ராகம், காதல் அழிவதில்லை, என் தங்கை கல்யாணி, வீராசாமி என பல படங்களுக்கு இசையமைப்பாளராக பணியாற்றியுள்ளார்.
-
3 பாண்டியராஜன்
என்னது இவரும் மியூசிக் போட்ருக்காரானு ஷாக் ஆகாதிங்க. நெசமாவே இவரும் மியூசிக் போட்ருக்காரு. `நெத்தியடி’ அப்டின்ற படத்துக்கு இசையமைப்பாளர் இவர்தான்.
-
4 கருணாஸ்
நடிகர், பாடகர், அரசியல்வாதி என பல முகங்களைக் கொண்ட கருணாஸ் ராஜாதிராஜா, அம்பாசமுத்திரம் அம்பானி, பகிரி மற்றும் காசேதான் கடவுளடா போன்ற பல படங்களுக்கு பாடல்களை இசையமைத்து கொடுத்துள்ளார். குறிப்பிட்டு சொல்லனும்னா கடவுள் இருக்கான் குமாரு படத்துல வர்ற `லோகாலிட்டி பாய்ஸ்’ பாடலை இசையமைத்தது கருணாஸ்தான். இந்தப் பாட்டு பட்டிதொட்டி எங்கும் வேற லெவல் ஹிட்.
-
5 மன்சூர் அலிகான்
`ராஜாதிராஜ ராஜகுலோத்துங்க ராஜ மார்த்தாண்ட ராஜ கம்பீர காத்தவராய கிருஷ்ண காமராஜன்’ - என்னது இதுனு கேக்காதீங்க... மன்சூர் அலிகான் நடித்து இசையமைத்த படத்தின் பெயர்தான் இது. இதுமட்டுமில்ல வாழ்க ஜனநாயகம், அதிரடி உள்ளிட்ட பல படங்களுக்கு இசையமைச்சிருக்காரு.
-
6 எஸ்.ஜே.சூர்யா
வாலி, குஷினு இயக்குநரா தன்னை நிரூபிச்சவரு இறைவி, ஸ்பைடர், மான்ஸ்டர், மெர்சல்னு தன்னோட நடிப்புத் திறமையையும் நிரூபிச்சிட்டாரு. பாடகராகவும் பாடலாசிரியராகவும் இவர் பரவலாக அறியப்படாட்டாலும் இசையமைப்பாளரா ஒரே படத்துலயே பலரையும் கவர்ந்துட்டாருனுதான் சொல்லனும். 2015-ம் ஆண்டு வெளியான இசை படத்துக்கு இவர் தாங்க இசையமைப்பாளர். இசை படத்தில் சின்ன சின்ன மியூசிக் நோட்ஸ்லயும் நம்மை கவர்ந்துட்டாரு. இசை எப்படிலாம் உருவாகுதுனும் அந்த படத்துல சொல்லி ஆச்சரியப்படுத்தி இருப்பாரு. இன்னும் என்னலாம் திறமைய ஒளிச்சு வச்சிருக்காரோ இந்த மனுஷன்.
-
7 சிலம்பரசன்
நடிகர், பாடகர், பாடலாசிரியர், இயக்குநர், தயாரிப்பாளர் என பல துறைகள்ல கலக்கிய சிம்பு மியூசிக் டைரக்ஷன்லயும் மாஸ் பண்ணியிருக்காரு. சந்தானம் நடித்த சக்க போடு போடு ராஜா, பிக் பாஸ் ஓவியா நடித்த 90 எம்.எல் போன்ற படங்களுக்கு இவர்தான் இசையமைப்பாளர். பாடல்களும் செம ஹிட். இதுமட்டுமில்லாம பல ஆல்பம் பாடல்களுக்கும் மியூசிக் போட்ருக்காரு.
-
8 பிரேம்ஜி
வெங்கட் பிரபுவோட தம்பியாகவும் காமெடியனாகவும்தான இவர தெரியும் உங்களுக்கு.. ஆனால், இவர் ஒரு இசையமைப்பாளரும்கூட. யுவன்கிட்ட இருந்து நிறைய மியூசிக் கத்துக்கிட்டதா இவரே நிறைய இண்டர்வியூல சொல்லிருப்பாரு. துணிச்சல், அச்சமின்றி, ஆர்.கே.நகர், பார்ட்டி உட்பட பல படங்களுக்கு இசையமைத்து கலக்கியிருப்பாரு.
-
9 சித்தார்த் விபின்
`18 வயசுக்கு கீழ உள்ளவங்க.. இதயம் பலவீனமானவங்க.. ப்ரெக்னன்ட் லேடீஸ்.. இந்த ஃபைட்ட பாக்காதீங்கனு’ காமெடி பண்ணி நம்மள சிரிக்க வச்ச சித்தார்த் ஒரு மியூசிக் டைரக்டரும்கூட. நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் உள்ளிட்ட பல காமெடி படங்களுக்கு மியூசிக்கும் போட்ருக்காரு.
0 Comments