தமிழ் சினிமா சீன்கள் Inspiration-னா Copy-யா… நீங்களே சொல்லுங்க!

தமிழ் சினிமாக்களில் ஒரு சீன் பார்க்கும்போது ‘உன்னை எங்கயோ பார்த்த மாதிரி இருக்கே’ என்று தோன்றும் சில Inspiration என்று சொல்லும் காட்சிகளைத்தான் இப்போது நாம் பார்க்கப்போகிறோம். இது எந்த வகையிலும் விமர்சனம் ஆகாது. ஒவ்வொரு இயக்குநரும் அவரவர் வழியில் ஃபிலிம் மேக்கர்கள்தான். ஆனால், நாம் சொல்லப்போகும் இந்த காட்சிக்கும் வேறு மொழியில் வந்திருக்கும் காட்சிக்கும் சம்பந்தம் இருக்கும்! அது Inspiration -னாகவும் இருக்கலாம். Copy-யாவும் இருக்கலாம்.

அரண்மனை காபி

அரண்மனை
அரண்மனை

இந்தப் படத்தில் 3 பாகங்கள் வெளியானது. ஹன்சிகா நடித்திருக்கும் முதல் படத்தின் ஒரு காட்சியில் காதல் தண்டபாணி அரண்மனைக்குள் இருந்து பேய் இருப்பதை உணர்ந்து எதிரில் இருக்கும் ஒரு உருவத்திடம் உதவி கேட்பார். அப்போது இவர் என்னவெல்லாம் செய்கிறாரோ அதை எல்லாம் அவரும் செய்வார். கடைசியில் எதிரில் இருப்பவரும் அவரேதான் என்பது தெரிந்தவுடன் அலறிவிடுவார். அதே கான்செப்ட் கொண்டு ஒரு காட்சி ஹாலிவுட்டில் வெளியாகி இருக்கும் 1408 என்கிற படத்திலும் இடம்பெற்றிருக்கும். இரண்டாவது ஒரு சண்டை காட்சி. சுந்தர் சி ஒரு பட்டறைக்கு போகும் போது சண்டை போடும் முன் ஒரு ஸ்லோ மோஷன் காட்சி இடம்பெறும். அதே மாதிரியான ஒரு காட்சி equalizer படத்தில் இடம்பெற்றிருக்கும்.

கார் காபி

வான்டட்
வான்டட்

சேசிங் சீன்கள் எந்தளவிற்கு வித்தியாசப்படுமோ அந்தளவிற்கு பாராட்டுக்குறிய காட்சியாகவும் அது மாறும். அப்படி மங்காத்தா படத்தின் ஒரு காட்சியில் வைபவை அப்படியே தன்னுடைய காரில் அள்ளி போட்டுக் கொள்வார் அர்ஜுன். அதே ரக காட்சி வான்டட் படத்திலும் இடம்பெற்றிருக்கும். ஹீரோ ஜேம்ஸை ஹீரோயின் ஏஞ்சலினா ஜூலி அப்படியே அதே போல் அள்ளி தன்னுடைய காருக்குள் போட்டுக்கொள்வார். அப்படியே பாலிவுட் பக்கம் அஜய் தேவ்கன் செய்யும் ஒரு கார் ஸ்டன்ட் காட்சியை பார்த்தாலும் ரெட் 2 படத்தின் சாயல் தெரியும்.

காமெடி காபி

There's something about Mary
There’s something about Mary

சில காமெடி காட்சிகள் கூட எங்கோ பார்த்த ஃபீலை கொடுத்திருக்கிறது. அப்படி சந்தானம் பட காமெடியில் அவர் ஒருவரிடம் லிஃப்ட் கேட்பார். அப்போது அவரைத் தள்ளிவிட்டு அந்த பைகை இவர் எடுத்து ஓட்ட முயற்சி செய்வார். பழைய காலத்து வண்டி என்பதால் 10 கிமீ வேகத்தை தாண்டாது அந்த வண்டி. இதே காமெடியானது மிஸ்டர் பீன் செய்திருப்பார். பீன்ஸ் ஹாலிடே எனும் படத்தில் அவரும் இதே போல் லிஃப்ட் கேட்பார். அப்போது அதே டூ வீலர் ஒன்று இவரை நோக்கி வரும். இவரும் அதை திருடி எடுத்து போக முயற்சி செய்வார். இன்னொரு காமெடி நகரம் படத்தில் இடம்பெற்றிருக்கும் வடிவேலு காமெடி. அதிலும் அந்த ‘ஹேய் டாமி எந்திரி’ எனும் காமெடி செம ஹ்யூமர். அதே மாதிரியான ஒரு காட்சி There’s something about Mary படத்திலும் இடம்பெற்றிருக்கும். வாயோடு வாய் வைத்து மூச்சு கொடுப்பது, கரன்ட் ஷாக் ட்ரீட்மென்ட் சீன்கள் இடம்பெற்றிருக்கும்.

சுடு காபி

Shoot em up
Shoot em up

எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் வெளியான படம் நியூட்டனின் மூன்றாம் விதி. க்ளைமாக்ஸின் போது எஸ்.ஜே.சூர்யாவின் கை படுபயங்கரமாக அடிபட்டு விடும். அந்த சமயம் வில்லனின் ஆட்டத்திற்கு முற்று புள்ளி வைக்க கைகளின் இடுக்குகளில் புல்லட்களை வைத்து பக்கத்தில் எரிந்து கொண்டிருக்கும் தீக்கு அருகே கையை வைப்பார். அப்போது அந்த புல்லட்கள் வில்லனின் உடம்பை துளைக்கும். அதே காட்சி Shoot em up எனும் ஒரு ஹாலிவுட் படத்தில் இடம்பெற்றிருக்கும். வில்லனை அதே ஸ்டைலில் ஹீரோ போட்டுத்தள்ளுவார். இன்னொரு நாஸ்டால்ஜியா நியூஸ் இந்த படத்தை பற்றி கூட ஒன்று சொல்லலாம். போக்கிரி வந்த சமயம்தான் Shoot em up படமும் ரிலீஸ் ஆனது. அதை சிங்க் செய்யும் விதமாக இந்தப் படத்தின் தமிழ் டப்பிங் டைட்டிலை அமெரிக்கன் போக்கிரி என்று சூட்டியிருந்தார்கள்.

காயின் சாவி காபி

How to steal a million
How to steal a million

லிங்கா படத்தில் ரஜினியும் அனுஷ்காவும் ஒரு ரூமிற்குள் மாட்டிகொள்வார்கள். திருடன் ரோலில் நடித்திருக்கும் நம் ரஜினி தன்னிடம் இருக்கும் காந்தத்தை வைத்து செம சூப்பராக இன்னொரு பக்கம் இருக்கும் சாவியை எடுப்பார். இதே மாதிரியான் ஒரு காட்சி 1966-ல் வெளியானது. படத்தின் பெயர் How to steal a million. அதே மாதிரி ஹீரோ ஹீரோயின் காட்சிதான் இதுவும். அதே போல் கத்தி படத்தின் காயின் ஃபைட் சீன் தமிழ் சினிமாவின் செம எபிக் சீன். கரன்டை கட் செய்து காயின் தூக்கி வீசி க்ளாஸ் அண்ட் மாஸாக சண்டை போடுவார் விஜய். இதே கான்செப்ட் கொண்ட ஒரு ஃபைட் Black belt jones என்ற படத்திலும் இடம்பெற்றிருக்கும். ஆனால் காயின் என்றில்லாமல் ஒவ்வொரு 3 செகண்டுகளுக்கும் கரன்ட் ஆஃப் செய்யப்படும்.

Sathya Mobile Short film Contest

Sathya Mobile Short flim Contest
Register Link – https://bit.ly/tnnshortfilm

Also Read : கே.ஜி.எஃப் ராக்கிக்கும் சீவலப்பேரி பாண்டிக்கும் 3 ஒற்றுமை, 1 வித்தியாசம்!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top