ஸ்கூல் டேஸ், காலேஜ் டேஸ் – ரெண்டையும் மறக்கவே முடியாது. மறக்கவும் விடமாட்டாங்க. ‘பொன்னாரம் பூவாரம்… கண்ணோரம் சிங்காரம்’னு எதாவது ஒரு விஷயம் வந்து அதை திரும்பவும் நியாபகப்படுத்திட்டே இருக்கும். ரொம்ப மிஸ் பண்றோம்… ‘சோதிக்காதீங்கடா என்னய’னு அதை நினைச்சு புலம்பவும் முடியாது. ஏன்னா, இஷ்டமோ… நஷ்டமோ… கஷ்டப்பட்டு ஓடுற இந்த வாழ்க்கைல நம்மள அரவணைச்சிக்கிறது கொஞ்சநஞ்சம் மீதி இருக்குற அந்த நினைவுகள்தான். அந்த நினைவுகளுக்கு தீனிபோடுற வகைல தமிழ் சினிமால நிறைய கல்லூரி வாழ்க்கை சார்ந்த படங்கள் வந்திருக்கு. அதுல எப்பவும் நம்மோட நினைவுகள்ல இருக்குற சில யூனிக் படங்களைப் பற்றிதான் இந்த வீடியோல நாம பார்க்கப்போறோம்.
நம்மவர்
ரியல் மாஸ்டர் ‘நம்மவர்’தான். நம்ம வாழ்க்கைல எல்லாருமே இந்தப் படத்துல வர்ற மாதிரியான ஒரு வாத்தியை கண்டிப்பா பார்த்திருப்போம். காலேஜ்ல ஒட்டு மொத்த வாத்தியாரையும் எதிர்த்து நின்னு மாணவர்களுக்கு சப்போர்ட் பண்ற வாத்தியார் அவராதான் இருப்பாரு. நானும் படிக்கும்போது உன்னைவிட நல்லா ஆட்டம் போட்டவன்தான்ற தொணில பல டயலாக் பேசுறதா இருக்கட்டும், அந்த மிடுக்கை வாத்தியார் ஆனதுக்கு அப்புறமாவும் விடாமல் மெச்சூரிட்டியோட ஸ்ட்ராங்கா பிடிச்சிக்கிட்டு இருக்குறதா இருக்கட்டும், “முற்றுப்புள்ளி இல்லாத வாக்கியம் போர் அடிக்குமா இல்லையா? முற்றுப்புள்ளிதான் ஒரு வாக்கியத்துக்கு அழகையும் அர்த்தத்தையும் கொடுக்குது. என்னோட வாக்கியம் ரொம்ப சின்னது”னு டெத் ஃபிலாசஃபி பேசுறதா இருக்கட்டும், மாணவர்களுக்கு செக்ஸ் Education எடுக்குறதா இருக்கட்டும், கடைசில ஒரு நல்ல ஆசிரியரா எல்லாத்தையும் மன்னிச்சு கரணை நல்வழிப்படுத்த முயற்சி பண்றதா இருக்கட்டும், காதல் காட்சிகளா இருக்கட்டும் அத்தனையையும் ‘நம்மவர்’ கச்சிதமா பண்ணியிருப்பாரு. செம ஆட்டம்போட்டு இன்னைக்கு புரொஃபஸரா இருக்குறவங்களுக்கு நம்மவர் நல்ல நினைவுகளைத் தரும் நாஸ்டால்ஜியா படம். அதேபோல மாணவர்களுக்கும் சில லைஃப் லெஸன்ஸ சொல்ற படம்.
‘நம்மவர்’ படத்துக்குனு சில ஸ்பெஷல் விஷயங்கள் எல்லாம் இருக்கு. ‘செப்பு’னு மோகன்லால் நடிப்புல வந்த படத்துல இருந்து இன்ஸ்பைர் பண்ணிதான் இதை எடுத்துருக்காங்க. இந்தப் படத்துக்கு தேசிய விருது கிடைச்சுது, பெஸ்ட் சப்போர்ட்டிங் ரோல்ல நடிச்சதுக்காக நாகேஷுக்கும் தேசிய விருது கிடைச்சுது. நாகேஷ் ஒரு எமோஷனாலன எதார்த்தமான அப்பாவா, காமிக்கலான புரொஃபஸ்ரா கலக்கியிருப்பாரு. இதுபோக தமிழ்நாடு ஸ்டேட் ஃபிலிம் விருதும் இந்தப் படத்துக்கு கொடுத்தாங்க. செப்பு படத்துல மோகன்லாம் இறந்துட்டதா காமிப்பாங்க. ஆனால், நம்மவர்ல ஓப்பன் என்டிங் இருக்கும். அதேபோல, இந்தப் படத்துல வர்ற ஒரு பாட்டுக்கு இசைக்கருவி எதுவும் இல்லாம இசையமைச்சிருப்பாங்க. ஒரு துரதிஷ்டமான விஷயம் என்னனா, இந்தப் படத்தோட மியூசிக் டைரக்டர்க்கு கேன்சர் இருந்துச்சு. அதுல இன்ஸ்பைர் ஆகிதான் கமலுக்கும் அந்த போர்ஷன் வைச்சதா சொல்லுவாங்க. பாடகர் ஸ்ரீநிவாஸ் இருக்காருல அவர் பாடுன ஃபர்ஸ்ட் பாட்டு இந்தப் படத்துல வர்ற ‘சொர்க்கம் என்பது நமக்கு’ பாட்டுதான். கமல் படங்கள் பார்த்து வளர்ந்த லோகேஷ், மாஸ்டர் எடுக்குறதுக்கு இந்த ‘நம்மவர்’தான் விதை போட்டிருக்கு. படம் முழுக்கவே ஆன்னா, ஆவண்ணா, அப்னா டைமுன்னா, வாங்கன்னா, வணக்கம்னா, வாத்தி ரெய்டுனானு நம்மவர் வைப்ஸ்தான் இருக்கும்.
நம்மவர் கமல் மாதிரி உங்க காலேஜ்ல இருந்த புரொஃபஸரை கமெண்டுல சொல்லுங்க!
இதயம்
இன்னைக்கும் ஒன் சைட் லவ் பண்ணி பல நாளா சொல்லாம திரியுற பசங்களை கிண்டல் பண்ண கூப்பிடுற ஒரு பெயர், இதயம் முரளிதான். ஏன், நம்ம மேயாத மான் ஹீரோகூட இதயம் முரளிதான். அவ்வளவு ஏன் பெரும்பாலான 90’ஸ் கிட்ஸே இதயம் முரளிதான்றேன். (ஈஸியா கிண்டல் பண்ணிடுறாங்க. ‘ஆனந்தம் ஆனந்தம் பாடும்னு, ஒன் சைட் லவ் பண்றவனுக்குத்தான் தெரியும். அந்த வலி..!) லவ்வுக்குனு ஒரு டிரெண்டை செட் பண்ண படம் இதுனே சொல்லலாம். ஒவ்வொரு தடவையும் இந்தப் படம் பார்க்கும்போதும் தன்னோட கல்லூரி காலத்து காதலி நினைவுக்கு வருவாங்க. படிச்ச காலேஜ் ஜென்ட்ஸ் காலேஜா இருந்தாகூட… ஐயயோ, இப்படி லவ் பண்ணக்கூட ஒரு காதலி நம்ம காலேஜ்ல இல்லாமப் போச்சேனு ஒரு ஃபீலிங் வரும். எல்லாரும் மெடிக்கல் காலேஜுக்கு டாக்டர் ஆகதான போவாங்க. ஆனால், அன்னைக்கே தலைவன் லவ் பண்ண போய்ருக்கான். அதுவும் ஒன் சைட் லவ். படம் ஒரு தபூ சங்கர் கவிதை மாதிரி இருக்கும். இளையராஜா அதுக்கு தரமா மியூசிக் போட்டிருப்பாரு. பொட்டு வைத்த வட்ட நிலா பாட்டுலாம் இன்னைக்கும் பிளே லிஸ்ட ரூலிங்னா சும்மாவா?
ஏப்ரல் மாதத்தில்
காலேஜ் லைஃப்னா இப்படி இருக்கணும். இப்படிப்பட்ட ஃப்ரெண்ட்ஸ்தான் இருக்கணும். இப்படி ஒரு காதலி கிடைக்கணும்னு நினைக்க வைச்சப் படம். ஃப்ரெண்டுக்கு ஃபீஸ் கட்டுறது, காலேஜ்லயே அழகான பொண்ணுக்கு பசங்க கியூல வந்து புரொபோஸ் பண்றது, ஊர் சுத்துறது, காலேஜ் எக்ஸிபிஷன், காமெடி இன்னும் இன்னும்னு படத்துல ஏகப்பட்ட விஷயங்கள் நம்மளோட காலேஜ் லைஃப நினைவுபடுத்துற மாதிரி இருக்கும். அந்த கேம்பஸ், கேண்டீன் எல்லாம்கூட நல்லா இருக்கும். கடைசில அவங்க சேரணும்னு வேண்டிக்கிட்டவங்கலாம் இருப்பாங்கனு நினைக்கிறேன். அந்த கெமிஸ்ட்ரி அப்படி இருக்கும். கண்டிப்பா அந்த மரம் எல்லோர் கல்லூரி வாழ்க்கைலயும் ஒரு ரோல் ப்ளே பண்ணியிருக்கும். அதையும் அழகா காட்டியிருப்பாங்க. குறிப்பா சொல்லணும்னா அந்தப் படத்தோட பாடல்கள். மொத்தக் கதையையும் அந்தப் பாடல்கள்ல அடக்கிடலாம். கனவுகள் பூக்கும் பாட்டு நம்மளோட வெக்கேஷனை நியாபகப்படுத்தும். ஏ நெஞ்சே அப்சொலியூட்லி காதலை நியாபகப்படுத்தும். சைட் அடிப்போம் பாட்டு நாம பண்ண அட்டகாசங்களை நியாபகப்படுத்தும். மனசே மனசே பாட்டு ஃபேர்வலை நியாபக்கப்படுத்தி கண்ணுல தண்ணி வர வைச்சிரும்.
கல்லூரி
ரொம்பவே எமோஷனலான படம், கல்லூரி. உண்மையிலேயே நடந்த சம்பவத்தை அடிப்படையா வைச்சு எடுத்துருப்பாங்க. ஆனாலும், அதுல ராகிங், ஃப்ரெண்ட்ஸ், காதல், அதுக்காக சண்டைக்குப் போறது, தமிழ் மீடியம் பசங்க படுற கஷ்டம், வீட்டு கஷ்டம், கல்ச்சுரல்ஸ், அங்க வர்ற சண்டை, பஸ்ல போறது – இப்படி எல்லாத்தையும் ரொம்பவே இயல்பா சொல்லியிருப்பாரு இயக்குநர். ஷார்ட்டா சொல்லணும்னா நம்மளோட கிளாஸ யோசிச்சுப் பார்த்தா கல்லூரி படத்துல வர்ற கிளாஸ்தான் சரியா இருக்கும். ஆல் கிரெடிட்ஸ் கோஸ் டு பாலாஜி சக்திவேல். அவர் இல்லைனா இதை இவ்வளவு இயல்பா வேற யாராலுயும் எடுத்திருக்க முடியாதுனு அப்பப்போ தோணும். இந்தப் படத்துலயும் பாட்டுலாம் ரொம்பவே நல்லாருக்கும். ஸ்டார்ட்டிங்ல பஸ்ல வர்ற பாட்டு இன்னைக்குக் கேட்டாலும் ஃபன்னா இருக்கும். ஜூன் ஜூலை மாதம் பூக்கும் பூ அதன் பேர் நட்பு, சரியா தவறா, உன்னருகில் வருகையில்னு எல்லாமே இன்னும் நினைவுல இருக்குற பாடல்கள்.
வசூல்ராஜா
காலேஜ் படங்கள் லிஸ்ட்ல ரௌடிக்கு என்ன வேலைனு நீங்க கேக்கலாம். ரௌடியா இருந்தாலும் அவரும் ஸ்டுடன்ட்தானே? அதுவும் டாக்டர். இவ்வளவு நேரம் நம்ம பார்த்ததுக்கு அப்படியே நேரெதிரான ஒரு படம்னா அது வசூல்ராஜா எம்.பி.பி.எஸ்தான். காதல், கோபம், அடிதடி இதையெல்லாம்விட அதிகமா காமெடி – எப்படி, கவிதை மாதிரி இருக்குல? இதுலாம், இந்தப் படத்துல இருக்கும். எனக்கு ஒரு டவுட்னு கமல் கிளாஸ்ல கால் தூக்குறதுல இருந்து கிளைமேக்ஸ்ல அழுதுட்டே பேசுற டயலாக் வரைக்கும் மனுஷன் அப்படி நடிச்சிருப்பாரு. இந்தப் படம் கிளாஸ்ல அவர் பண்ற அட்டகாசங்களை வைச்சு வந்திருந்தாலும், ஒரு மனிதநேயத்தை, அந்த உணர்வுகளை அழகா சொல்லிச்சுன்னு சொல்லலாம். எனக்கு ரொம்பவே பெர்சனல் ஃபேவரைட் இந்தப் படம். இந்தப் படத்தை பல மொழிகள்ல எடுத்துருக்காங்க. ஆனால், அதையெல்லாம்விட பெஸ்ட்டை கமல்ஹாசன் கொடுத்திருப்பாருனு தோணும். என்ன பண்ணாலும் அதுல தன்னோட தனி சிக்னேச்சரைப் போடுறதுதான கமல் ஸ்டைல். அதை வசூல்ராஜாலயும் மாஸா பண்ணியிருப்பாரு, கமல். அந்தப் படத்துல வர்ற டயலாக்கும் முக்கியமான விஷயம். அதுக்கு காரணம் முதல் சந்துல இருக்குற மார்க பந்துன்ற கிரேஸி மோகன்.
இதைத்தவிர நண்பன் படத்தைக் குறிப்பிட்டு சொல்லலாம். Passion-னு ஒண்ணு இருக்கும்ல அதை நோக்கி உன் அடியை எடுத்து வைனு அழகா சொன்னப்படம் இது. அப்புறம், சச்சின், காதல் தேசம், இனிது இனிதுனு ஏகப்பட்ட கல்லூரிப் படங்களை சொல்லிட்டே போகலாம். உங்க காலேஜ் லைஃபை நியாபகப்படுத்தின பெஸ்ட் படம் எதுன்றதை கமெண்ட்ல சொல்லுங்க!
Also Read: தமிழ் சினிமாவின் பெஸ்ட் ஆன் – ஸ்கிரீன் ‘Pair’ யாரு?