சுந்தர் சி இயக்கத்தில் பிரஷாந்த் – கிரண், வடிவேலு உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த 203-ம் ஆண்டு செப்டம்பர் 27-ம் தேதி ரிலீஸான படம் வின்னர். இந்தப் படத்துல வர்ற எந்த கேரக்டரை மறந்தாலும் கைப்புள்ளயையும் அவரோட வருத்தப்படாத வாலிபர் சங்கத்தையும் நம்மால மறக்கவே முடியாது. பள்ளிக்கூடத்துல படிச்ச திப்பு சுல்தானையும் அக்பரையும் மறந்தாலும் மறப்போமே தவிர கைப்புள்ளையை நம்மள்ல ஒருத்தராவே ஏத்துக்கிட்டோம்னே சொல்லலாம். அந்த அளவுக்கு மனசுல பதிஞ்சு போன வரலாற்று சம்பவங்கள் அவை.
கைப்புள்ள காலை உடைச்சது கட்டதுரை இல்லைங்குற ரகசியம் உங்களுக்குத் தெரியுமா… அப்புறம் எப்படி கைப்புள்ளயோட கால் உடைஞ்சது?… அதே மாதிரி கைப்புள்ளயின் வருத்தப்படாத வாலிபர் சங்கக் கட்டடம் எங்க இருக்குனு தெரியுமா… வீடியோவை முழுசா பாருங்க இந்த ரெண்டு கேள்விகளுக்குமான விடையை நானே சொல்றேன்.

தமிழ் சினிமாவோட காமெடி கல்ட் கிளாசிக் படங்கள்ல வின்னர் படத்துக்கு முக்கியமான இடம் எப்போதும் இருக்கும்னே சொல்லலாம். அதுக்கான 3 காரணங்களைத்தான் இந்த வீடியோல பார்க்கப்போறோம்.
கைப்புள்ள ‘வடிவேலு’
தமிழ் சினிமா கேரக்டர்கள்ல மறக்க முடியாத காமெடி கேரக்டர்கள் வரிசைல நம்ம கைப்புள்ள டாப்ல இருப்பார். அந்த அளவுக்கு கைப்புள்ள காமெடியின் ரீச் இருந்துச்சு. படம் ரிலீஸாகி 18 வருஷத்துக்கு மேல ஆனாலும், கைப்புள்ளயோட வருத்தப்படாத வாலிபர் சங்கத்தையும் அவரோட வரையப்பட்ட மீசையையும் பாடி லாங்குவேஜையும் எந்தவொரு தமிழ் சினிமா ரசிகனாலும் மறக்க முடியாது. கட்டதுரைக்கு கட்டம் சரியில்லை’,
என் சங்கத்து ஆளை அடிச்சவன் எவன்டா’னு கெத்தா அசால்ட் காட்டுற கைப்புள்ளயோட டயலாக்கை 80ஸ், 90ஸ், 2கே கிட்ஸ்னு பல தலைமுறைகளும் கொண்டாடுனதுதான் வைகைப்புயல் வடிவேலுவோட வெற்றி.

கைப்புள்ள காமெடியை ஒரு தடவையாவது போடாம எந்தவொரு காமெடி சேனலோட ஒருநாள் புரோகிராம்கள் நிறைவுபெறாது. அந்த அளவுக்கு சின்னத்திரையிலும் யூடியூப் சேனல்கள், சோசியல் மீடியாக்களில் அப்பப்போ கைப்புள்ள ரெஃபரென்ஸை நாம கடந்து போக வேண்டி வரும். உலகெங்கும் வாழும் தமிழ் குடும்பங்களின் செல்லப்பிள்ளை இந்த ’கைப்புள்ள’. படத்துல கைப்புள்ள வைச்சிருக்க சங்கமான வருத்தப்படாத வாலிபர் சங்கம்ங்குற பேரையே சிவகார்த்திகேயன் படத்துக்குத் தலைப்பா வைக்குற அளவுக்கு மாஸ் ரீச் நம்ம கைப்புள்ளயோட சங்கம்னா பார்த்துக்கோங்களேன்.
காமெடி ரோலர் கோஸ்டர் சீன்கள்
ஆரம்பத்தில் படத்தின் ஃபர்ஸ்ட் ஹாஃபில் மட்டும் வந்து போகிற மாதிரி கைப்புள்ள கேரக்டரை சுந்தர் சி எழுதியிருந்தாராம். ஆனால், வடிவேலுவின் போர்ஷன்கள் எதிர்பார்த்ததை விட சிறப்பாக வரவே, பிரஷாந்துடன் கிரணின் ஊருக்குச் செல்வதாக கைப்புள்ள கேரக்டரை நீட்டித்து ஸ்கிரிப்டில் சேஞ்ச் கொண்டுவந்திருக்கிறார். அது சிறப்பாகவே வொர்க் அவுட் ஆனதோடு, காமெடி கல்ட் கிளாசிக் வரிசையில் படத்தையும் கொண்டு சேர்த்தது என்றே சொல்லலாம்.
நாய்க்கு பிஸ்கட் போடும் சீன், வீட்டில் திருடப் போய் உண்மையான திருடனுடன் நடக்கும் கான்வோ, திருட்டு குற்றத்துக்கு அபராதம் போடும் பஞ்சாயத்து சீன், பிரஷாந்த் ஊருக்கு வருகையில் கை வண்டியில் வழிகாட்டும் சீன், கட்டத்துரையுடன் ஒரண்டை இழுத்து பல இடங்களில் கைப்புள்ள உடம்பைப் புண்ணாக்கிக் கொள்ளும் சீன்கள் என படத்தில் வடிவேலு சிரிப்பு வெடிகளைப் பரவலாகத் தூவியிருப்பார். கைப்புள்ள காமெடில நீங்க எதையுமே மிஸ் பண்ண முடியாதுங்குறதுதான் வின்னர் படத்தோட முக்கியமான பலமே. அந்த அளவுக்கு ஒவ்வொரு சீனிலும் ரசிகர்களுக்கு காமெடி ரோலர் கோஸ்டர் விருந்துதான்.

பவர்ஃபுல் ஒன்லைனர்கள்!
வின்னர் பட ஒன்லைன்கள் பலவும் இன்னிக்கும் டிரெண்டிங் டெம்ப்ளேட்தான்.. எல்லா சூழ்நிலைக்கும் பொருத்துற மாதிரியான பவர்ஃபுல் ஒன்லைனரா அடுக்கியிருப்பாரு கைப்புள்ள… அவர் கேரக்டர் மட்டுமல்ல படத்துல வர்ற பெரும்பாலான கேரக்டர்கள் ஒன்லைனரில் புகுந்து விளையாடியிருப்பாங்க… கட்டதுரைக்கு கட்டம் சரியில்லை’ங்குற ஒன்லைன்தான் படத்துல கைப்புள்ள கேரக்டர் பேசுற முதல் டயலாக்.
என் சங்கத்து ஆளை அடிச்சது எவன்?’, நான் கிழிச்ச கோட்டைத் தாண்ட மாட்டேன்’, ’இப்படியே உசுப்பேத்தி, உசுப்பேத்தி உடம்பை ரணகளமாக்கிட்டாங்களேடா’,
இந்த ஊரு இன்னமுமா நம்மள நம்பிக்கிட்டு இருக்கு’, சண்டைல கிழியாத சட்டை எங்க இருக்கு’, ’நல்லா கேக்குறாங்கங்யா டீடெய்லு’ சொன்னா நம்ப மாட்டீங்க... மேல சொன்ன இத்தனை ஒன்லைனர்களையுமே கைப்புள்ள கேரக்டர் இண்ட்ரடியூஸ் ஆகி 5, 6 நிமிஷத்துக்குள்ளேயே பேசுற டயலாக்குகள். நம்பியாரிடம் வடிவேலு சொல்லும்,
எம்.ஜி.ஆர் இல்லாம குளிர்விட்டுப் போச்சு உனக்கு’, வயசானாலும் வில்லத்தனம் போகலையே’,
இது ரத்த பூமி. இங்க குழாயைத் திறந்த ரத்தம்தான் வரும்’, சந்தைக்கு பேண்ட் ஷர்டில் கிளம்பும் வடிவேலுவை, இந்த கிளம்பிட்டாருல்ல கலெக்டரு’னு நம்பியார் கலாய்ப்பார். அதற்கு,
இந்தா சொல்லிட்டாருல்ல கவர்னரு’னு ஒன்லைன் பஞ்ச்லயே பதில் கொடுப்பார் கைப்புள்ள. இப்படி படம் நெடுக வரும் ஒன்லைனர்களுக்கு ஆடியன்ஸ் பெரிய ரெஸ்ஃபான்ஸ் கொடுத்திருப்பார்கள். இத்தனை வருடங்கள் கழித்தும் கைப்புள்ள டெம்ப்ளேட்டில் பல மீம்களைப் பார்க்க முடியும்.

கைப்புள்ள காலை கட்டதுரை உடைக்குற மாதிரி ஒரு சீன் படத்துல வரும். அதுக்கப்புறம் கைப்புள்ள நொண்டி நொண்டிதான் படம் நெடுக நடந்து வருவார். அதுவே தனி மேனரிசமாவும் பேசப்பட்டுச்சு. ஆனால், உண்மையில் வின்னர் படத்துக்காக வடிவேலுவை சுந்தர் சி அணுகியபோது, அவருக்கு ஆக்சிடண்ட் ஆகி காலில் பலத்த காயம் ஏற்பட்டிருந்ததாம். `இந்த உடைஞ்ச காலோட எப்படின்னே நடிக்குறது’னு தனக்கே உரிய பாணியில் சுந்தர் சியிடம் வடிவேலு கேட்டிருக்கிறார். ‘அடிபட்ட காலோடு நடந்து காட்டுங்க’னு சுந்தர் சி சொல்லியிருக்கிறார். வடிவேலுவும் நடந்து காட்டியிருக்கிறார். அதன்பிறகுதான், சுந்தர் சி சமயோசிதமாக யோசித்து வடிவேலுவின் காலில் அடிபடுவது போன்ற சீனை வைத்து, அதன்பிறகு கைப்புள்ள கேரக்டர் நொண்டி நொண்டி நடப்பது போன்ற காட்சிகளை வைத்திருக்கிறார்.
பொள்ளாச்சில இருந்து 21 கி.மீ தூரத்துல இருக்க ஊர்தான் மயிலாடுதுறை அல்லது அப்படிங்குற ஊர்லதான் வருத்தப்படாத வாலிபர் சங்கக் கட்டம் இருக்கு. நெல் அடிக்கும் கதிர் களமான அந்த வீட்டைச் சுற்றி நிறைய படங்களோட பாடல்கள் ஷூட் நடந்திருக்கு. பொள்ளாச்சில செண்டிமெண்டான லொகேஷனா இந்த இடத்தைப் பாக்குறாங்களாம். அந்த வீட்டுக்குப் பக்கத்துலயே குளிக்கும் பெண்களிடம் கைப்புள்ள வம்பிழுக்கும் சீனை சூட் பண்ண அருவியும் இருக்கு. அந்த இடம் இப்போ வின்னர் ஃபால்ஸ்ங்குற பேர்ல லோக்கல்ல செம ஃபேமஸாம்.
0 Comments