வெங்கடேஷ்

டோலிவுட் ரீமேக் கிங்… வெங்கடேஷ் ஜர்னி!

போட்றா அவனை, எடுடா வண்டியை அப்படினு ரஜினி பொன்னியின் செல்வன் மேடையில சொல்லியிருப்பார். அது யாருக்கு வொர்க்அவுட் ஆகுதோ இல்லையோ, நம்ம விக்ட்ரி வெங்கடேஷ்க்கு பொருத்தமா இருக்கும். அப்படி காலேஜ் காலத்துல லாஸ்ட் பெஞ்ச் ஸ்டூடண்டாவே நிறைய சம்பவங்கள் செய்திருக்கார். தமிழ்ல அஜித்குமார் எப்படியோ, அப்படித்தான் தெலுங்குல விக்டரி வெங்கடேஷ். அப்படி ஒப்பிடுறதுக்கும் காரணங்கள் இருக்கு.

சின்னதம்பி, சுந்தரகாண்டம், சூர்ய வம்சம், அண்ணாமலை, சின்ன கவுண்டர், பிரியமானவளே, காக்க காக்க, ஜெமினி, ஆனந்தம், இறுதி சுற்று, அசுரன்.. .என்னடா வரிசையா தமிழ்பட பெயர்களா சொல்றான்னு தோணுதா.. இந்த படங்கள் எல்லாமே தமிழ்ல இருந்து தெலுங்குல விக்ட்ரி வெங்கடேஷால ரீமேக் பண்ணப்பட்ட படங்கள். தெலுங்கு சினிமாவோட ரீமேக் ராஜான்னே சொல்லலாம். சினிமாவுல இவர் பண்ண சில சம்பவங்களும், சாதனைகளும் இருக்கு. மனுஷன் ஒரு கட்டத்துல டிப்ரசனாகி சினிமாவை விட்டு விலகி இமயமலைக்கெல்லாம் போயிருக்கார். தனக்கு என்ன தோணுதோ அதை அப்பவே பண்ணிடனும்னு நினைக்கிற மனுஷன். இப்படிப்பட்ட இவரோட சினிமா பயணத்தைத்தான் இந்த வீடியோவுல பார்க்கப் போறோம்.

ஆரம்பக்கால பள்ளி கல்லூரி காலங்கள் சென்னையிலதான் இருந்தது. லயோலா காலேஜ்ல படிப்பு, நண்பர்கள் கூட அரட்டைனு இருந்தது. காலேஜ்ல இவர் கேங்க்ல 10 பேர் இருப்பாங்க. இவர்தான் கூட்டத்துக்கு தலைவன். கடைசி பெஞ்ச் மாணவன்னு ஏகப்பட்ட அலப்பறைகள் பண்ணியிருக்கார். அதுலயும் உட்சபட்சமா போய் ஒருகட்டத்துல லயோலாவுக்கும், பச்சையப்பாவுக்கும் கேங்க் வார் ஒண்ணு நடக்க இருந்தது. லயோலா சார்புல 100 பேர், பச்சையப்பா சார்புல 100 பேர்னு கூடி கலவரமே நடக்க இருந்தது. அப்புறம் பிரின்சிபல் வந்து தடுத்து நிறுத்தியிருக்காங்க. லயோலா சார்புல குழுவுக்கு தலைமை தாங்குனதும் விக்டரி வெங்கடேஷ்தான். மேல பார்த்தது ஒரு சாம்பிள்தான். இதுமாதிரி பல முரட்டு சம்பவங்களை பண்ணியிருக்கார்.

படிப்பை முடிச்ச உடனே பாரதிராஜா இவரை நடிக்க கூப்பிட்டார். ஆனா அமெரிக்கா போய் படிக்கணும்னு ஆசை இருந்ததால, வெங்கடேஷ் ஒத்துக்கலை. அமெரிக்காவுல போய் மேற்படிப்பு படிச்சுட்டு, இந்தியாவுல தொழில் பண்ணலாம்னு ஐடியாவுல் ஆந்திரா வந்தார். ஆனா விதியோட விளையாட்டு, இவங்க அப்பா பெரிய தயாரிப்பாளர் வேற.. நிறைய ஹீரோக்கள்கிட்ட கால்ஷீட் கேட்டு பார்த்தார். யாரும் தரலை.. அப்போதான் நம்ம பையன் ஒருத்தன் இருக்கானே, நாம ஏன் வெளில தேடணும். டேய் ஷூட்டிங்குக்கு வந்துடுடானு சொல்லி அப்பா வெங்கடேஷை கூட்டிட்டு வந்துட்டார். முதல் படத்துலயே குஷ்பூ ஜோடி. எல்லோரும் அவங்க அப்பாகிட்ட ‘எதுக்குங்க உங்களுக்கு வேண்டாத வேலை’னு சொல்லியிருக்காங்க. ஆனா அவர் கான்பிடன்ட்டா ஹிட் பண்ணி காட்டுறேன்னு சொல்லியிருக்கார், முதல் படம் ரிலீஸ் ப்ளாக் பஸ்டர் ஆகுது படம். அடுத்தடுத்து 4 படங்கள் நடிக்கிறார், ப்ளாப் மேல் ப்ளாப் ஆகுது. ஒரு கட்டத்துல நாம நல்லாத்தானே நடிக்கிறோம். அப்புறம் ஏன் வேலைக்கு ஆகலைனு யோசிச்சு, ஆன்மீக பயணம் பக்கம் தன் பார்வையை திருப்புறார், திடீர்னு இமயமலைக்கு பயணம் செஞ்சு நிறைய ஆன்மீக விஷயங்களை தெரிஞ்சுக்கிறார். கடைசியா தன் பயணத்தை திருவண்ணாமலையில முடிக்கிறார். அங்கதான் வாழ்க்கைக்கு தேவையான முழுமையான விஷயத்தைக் கத்துக்கிறார். மறுபடியும் வந்து தன் பயணத்தை ஆரம்பிக்கிறார். இப்போ தொட்டதெல்லாம் ஹிட் ஆகுது. நடிகரா வெங்கடேஷ் உச்சத்துக்கு போறார். அடுத்தடுத்து பண்ற படங்கள்லாம் ஹிட் ஆகுது.

இந்த பாக்ஸ் ஆபீஸ், ரெக்கார்ட்ஸ் மேல எல்லாம் பெருசா ஆர்வம் காட்டுனதே கிடையாது. ‘எல்லா ரெக்கார்டும் என்னைக்காவது ஒருநாள் முறியடிக்கப்படத்தான் போகுது. நம்ம நடிக்கிற படங்கள் ஒரு பெஞ்ச் மார்க்கா இருக்கணும்னு நினைக்கிறது தப்பில்லை. அதுக்குனு ஒவ்வொரு படத்துக்கும் ரெக்கார்ட்ஸ் பின்னாடி ஓடுறதுல எனக்கு உடன்பாடில்லை. என்னுடைய சில படங்களும் நிறைய சாதனைகள் புரிஞ்சிருக்கு. அதைத் தயாரிப்பாளர் பார்த்துக்குவாங்க. இது முழுக்க முழுக்க பிசினஸ்தான். இதுக்குள்ள நான் வந்தா எனக்குதான் தேவையில்லாத ப்ரஷர், டென்ஷன். அதனால அதை நான் தலையில ஏத்துக்கிறது இல்ல’னு ஒரு பேட்டியே கொடுத்தார்.

படத்தை ரீமேக் பண்ணணும்னு முடிவு பண்ணபோதே பிசினஸ் ரீதியா என்னென்ன சவால் இருக்குனு முதல்ல பார்த்திடுவார். போதுமான வசூலும் பாராட்டுகளும் கிடைச்சாலே போதும். அதுக்கு மேல வந்தா அது முழுக்க போனஸ்ங்குற மனநிலையிலதான் டிராவல் பண்றார். அதேபோல இவர் ரீமேக் அப்படிங்ஜ்குற விஷயத்தை ஈஸியா பண்ணலை. அப்போ ஹீரோ சூப்பரா நடிச்சிருப்பார். அப்போ இவர் அதைத்தாண்டிய உழைப்பு போடணும். அதை தெரிஞ்சுதான் அந்த சேலஞ்ச்சை எடுத்துக்கிட்டு டிராவல் பண்றார். முதல்முதலா சின்னத்தம்பி ரீமேக் பண்றப்போ நிறையபேர் பண்ணா நல்லா இருக்காதுனு சொல்லியிருக்காங்க. அதையெல்லாம் கேட்டு டென்சன் ஆன வெங்கடேஷ் ஒரு கட்டத்துல அவர் மேலயே அவருக்கு சந்தேகம் வந்திடுச்சு. அப்போ கண்ணாடி முன்னாடி போய் நின்னு நாலு சீன்களை பண்ணி பார்க்கிறார், சரியாகத்தானே வருது, இவங்க கிடக்குறாய்ங்கனு சொல்லி ஷூட்டிங் கிளம்பினார். படம் ப்ளாக்பஸ்டர் ஹிட். மினிமம் கியாரண்டினு தெரிஞ்சா மட்டும்தான் அதை ரீமேக்குவார். இல்லைனா ‘நோ’தான்.

நடிப்புக்குனு தனியா எங்கயுமே போய் கத்துக்கலை. இன்னைக்கும் திரையில கம்பீரமா தெறிக்க விடுற ஹீரோக்கள்ல இவரும் ஒருத்தர். அசுரன் படத்துல தனுஷ் பண்ணது இப்போ வரைக்கும் யுனிக்கா இருக்கு. ஆனா அதை நாரப்பாவா திரையில இவர் எப்படி கொண்டுவரப்போறார்னு கொஞ்சம் சந்தேகம் இருந்துச்சு. ஆனா அதுக்கு எந்த குறையும் வைக்காம தன்னோட பெர்ஃபார்மென்ஸை கொடுத்தார். இவர் என்னைக்குமே இமேஜை பத்தி கவலைப்பட்டதே இல்லை. அதுதான் இவரோட ப்ளஸ்னுகூட சொல்லலாம். நமக்கு இப்படி இமேஜ், இந்த கதைகள் சூஸ் பண்ணனும்னு யோசிக்கிறதே இல்லை. இது எல்லாமே ஒரு பிசினஸ். கதைதான் அதோட ஹீரோவை தீர்மானிக்குது. தனக்கு சரின்னு பட்டா உடனே பண்ணிடுவார்.

Also Read – ஒவ்வொரு படமும் கொல மாஸ்… சேட்டன்ஸின் அடிபொலி கதகளி ஃபீல்குட் படங்கள்!

நடிப்புன்னு வந்துட்டா மகேஷ் பாபு கூட இணைஞ்சும் படம் பண்ணுவார், நாகசைதன்யா கூடவும் படம் பண்ணுவார். சோலோ ஹீரோவாவும் படம் பண்ணுவார். இப்படி எல்லாமுமா எல்லா காலக்கட்டத்துலயும் பண்ணியிருக்கார். அதேபோல உடலை இன்னமும் ஃபிட்டாக வைச்சிருக்கார். நடிப்பு தடுமறுற சமயங்கள்ல எமோசனல் சீன் வரலைன்னா, கமல் சாரோட 4 எக்ஸ் பிரசன்கள் வச்சிருக்கார். அதைப் பார்த்து எமோசன் ஆகிடுவாராம். இன்னைக்கு வரைக்கும் கமலோட நாயகனுக்கு மிகப்பெரிய ரசிகன் இந்த வெங்கடேஷ். தெலுங்கு சினிமா உலகத்தைப் பொறுத்தவரைக்கும் டிரெண்ட் செட்டர்னா அது வெங்கடேஷாத்தான் இருக்க முடியும். விதவிதமான கெட்டப்கள், காதுல கடுக்கன், வித்தியாசமான ஜீன்ஸ்னு எப்பவுமே ஒரு டிரெண்ட் செட்டராத்தான் இன்னைக்கு வரைக்கும் இருக்கார். இப்போதான் முக்கியமான கட்டத்துக்கு வர்றோம். ஷில்பா ஷெட்டி, ப்ரீத்தி ஜிந்தா, ட்விங்கிள் கண்ணா, தபு, கத்ரீனா கைஃப்னு நிறைய பாலிவுட் ஹீரோயின்கள் தென்னிந்திய சினிமாவுக்கு வந்தது இவர் படம் மூலமாதான். அதிலும் தபு மெயின் ஹீரோயினா அறிமுகமானதும் இவர்கூடத்தான். படங்கள்ல ஜோடி ரிப்பீட் ஆவதை விரும்ப மாட்டார் வெங்கடேஷ். கதையும் புதுசா இருந்தா மட்டும்தான் படத்தையே ஒத்துக்குவார். இல்லைனா பண்ண மாட்டார்.

சினிமாவை தொழிலாக மட்டுமே பார்க்கிறார், அது ஒரு என்டர்டெயின்ட்மெண்ட் அவ்ளோதான். ரசிகர்கள் ஓவர்டூவா எதையும் பண்ணிடக் கூடாதுனு நினைக்கிறவர். முதல்ல குடும்பத்தை போய் பாருங்க. அப்புறமா படம் பார்க்க வாங்க. பிடிச்சா பாருங்க, இல்லைனா பார்க்கதீங்க. ரசிகர்கள் சமுதாயத்துக்கு நல்லது பண்ணனும். அதுதான் வெங்கடேஷ்க்கு பெருமைனு சொல்றார் நம்ம அஜித் மாதிரி..

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top