இங்க வா… யார் நீ… உனக்கு என்ன பிரச்னை… விஜய் தேவரகொண்டா ரோஸ்ட்!

எல்லா இன்டஸ்ட்ரீலயும் இன்டர்வியூக்கள்ல பெரும்பாலான ஹீரோயின்ஸ் தங்களோட ட்ரீம் பாயா, விஜய் தேவரகொண்டாவதான் சொல்லுவாங்க. ஹீரோயின்களுக்கு மட்டுமா? தடுக்கி ஒரு பொண்ணு மேல விழுந்தா விஜய் தேவரகொண்டா ஃபேன் மேலதான் விழுவீங்க. (அதுக்காக விழுந்து அடி வாங்கினா, சமூகம் பொறுப்பில்ல). ஆனால், ரிஸ்க் எடுத்து ரோஸ்ட் பண்ணப்போறோம். ஆரம்பிக்கலாமா? ரக்கட் பாய்ஸ் துணை.

விஜய் தேவரகொண்டா
விஜய் தேவரகொண்டா

விஜய் தேவரகொண்டா, இந்தப் பேரைக் கேட்டதும் உங்களுக்கு முதலில் ஞாபகம் வர வார்த்தை என்ன?
a) ரௌடிடா
b) ரக்கட் லவ்வர்
c) இவன் யார்றா கோமாளி

உங்களுக்குத் தோணுறதை கமெண்ட்ல சொல்லுங்க… வேற வார்த்தைகள் தோணினாலும் சொல்லுங்க. நீங்க சில தப்பான வார்த்தைகள் சொன்னாக்கூட அவர் அதுக்கு செட் ஆவாப்ள. ஆள் அப்படி. கமெண்ட் பண்ணிட்டு வீடியோவைத் தொடர்ந்து பாருங்க.

நீங்க ஒரு அக்மார்க் 2k கிட்டா இருந்தா உங்க பதில்  ரௌடியா இருக்கும், பாவமா ஃபேஸ்புக்ல குடியிருக்குற  90’s kids-ஆ இருந்தா ‘அவர் சரியான ரக்கட் லவ்வர் பாய்ப்பா’னு இருக்கும். 80’s kids-ஆ இருந்தா இவன் யார்றா கோமாளினுதான் இருக்கும். ஏன் ரௌடிடான்னு ஒரு ஆப்ஷன் இருக்குன்னே உங்களுக்குப் புரியாமலும் இருக்கும். அது ஏன்னு கடைசில சொல்றேன்.

விஜய் தேவரகொண்டா
விஜய் தேவரகொண்டா

நடிக்க வந்த புதுசில் துறுதுறுன்னு ஆறடியில் அட்டகாசமா கன்னிப் பெண்கள் நெஞ்சில் கையெழுத்துப் போட்ட விஜய் தேவரகொண்டாவை ஏன் நெட்டிசன்கள் அடிக்கடி வறுத்தெடுக்குறாங்க? டவுட் இருக்குல கிளியர் பண்ணிருவோம்.

நடிக்க வந்த புதிதில்  Nuvvila, Yevade Subramanyam, Pelli Choopulu-னு பெயர் சொல்ற மாதிரி தரமான படங்கள், ஸ்க்ரீன் பிரசன்ஸ்னு எல்லாம் நல்ல விதமாவே அவர் கெரியர் போச்சு. அதன் பிறகு அர்ஜூன் ரெட்டி, மஹாநடி, டேக்ஸி வாலா, கீதா கோவிந்தம்னு தொடர்ச்சியா கமர்சியலா செம ஹிட்டடிச்சு அவர் கெரியர் உச்சத்துக்குப் போச்சு. போச்சுல, அப்படியே போ வேண்டியதான? ஆனால், விதி யாரை விட்டுச்சு?

மெத்தட் ஆக்டிங்னு ஒண்ணு இருக்கு. அந்தக் கதாபாத்திரமாவே மாறி அந்தப் படத்தில் நடிப்பாங்க. உலகளவுல பல ஜாம்பவான்கள் இந்த மெத்தட் ஆக்டிங் முறையில் நடிச்சவங்க இருக்காங்க. இதுல ஒரு சிக்கல் என்னன்னா, படம் முடிஞ்ச பிறகு அந்தக் கதாபாத்திரத்தில் இருந்து வெளிய வர முடியாமல் தவிப்பாங்க. அந்த மாதிரி நம்ம வி.தே-வுக்கு ஒரு சிக்கல் என்ன நடந்துருச்சுன்னா அர்ஜூன் ரெட்டி படத்துக்கப்புறம் அவரால் அந்த மாச்சோ, கிறுக்குக் கோமாளித்தனம், அடாவடித்தனம், முன்கோபி, நான் வித்தியாசமானவன் இமேஜ் இதெல்லாம் விட்டு 5 வருசமா வெளிய வர முடியாம தவிக்குறார்.

விஜய் தேவரகொண்டா
விஜய் தேவரகொண்டா

இதனால என்ன ஆச்சுன்னா விஜய் தேவரகொண்டா பற்றி இரண்டுவிதமான பார்வை உருவாகிடுச்சு.

மெத்தட் ஆக்டிங்க்ல நடிகர்களுக்குத்தானே, இவருக்கு என்னன்னு ஒரு குரூப் கேள்வி கேக்குது. இன்னொரு குரூப்போ அப்போ நம்ம வி.தே ஒரு இந்திய டேனியல் டே லூயிஸ்டான்னு விசிலடிக்க ஆரம்பிச்சிருச்சு.

கிறுக்குத்தனமா, கோமாளித்தனமா, பசு மாடு பார்த்தா கண்ணு அவிஞ்சுப் போற கலர்ல சட்டை போடுறது. ஊர்ல கெழவிகளுக்கு ஜாக்கெட் தைக்குற டைலர் கடையில் மீந்துப் போன துணியை வச்சு சட்டை தைச்சுப் போட்டுகிட்டு சுத்துறது. 1970-களில் இருந்து டைம் டிராவல் பண்ணி வந்த விநோத ஜந்து லுக்ல சுத்துறது, பல காலமா இந்தியன் டாய்லெட் பயன்படுத்திட்டு, திடீர்னு வெஸ்ட் டாய்லெட்ல உட்கார்ந்த மாதிரி பேட்டிகளின் போது நாற்காலி விளிம்புல உட்கார்ந்து காலைத் தூக்கி டேபிள் மேல வச்சுக்குறது. அரைத்தூக்கத்துல எழுந்து உளறுற மாதிரி பேசுறதுன்னு விஜய் தேவரகொண்டா பண்றதுலாம் அராஜகத்தின் உச்சம்.

விஜய் தேவரகொண்டா
விஜய் தேவரகொண்டா

கரடியே காறித்துப்பின கதையை நீங்க வடிவேலு சொல்லி பார்த்திருப்பீங்க. பார்த்தாலே என்ன கன்றாவிடா இதுனு பிரெண்ட்ஸ் படத்துல ராதாரவி கேப்பாரே அந்த மாதிரி கேக்கத் தோணுற வகையில் டிரஸ் போடுற ரன்வீர் சிங்கே ஒரு முறை பேட்டியில், “விஜய் தேவரகொண்டா ஒரு சில் டூட், பார்த்தீங்கல்ல பேட்டிகே அரை டவுசர் தான் போட்டு வந்திருக்கான்”னு சொல்லிருப்பாரு.

விஜய் தேவரகொண்டா கரியர்ல மோசமான படம்னு எல்லாரும் லிகர் படத்தை சொல்றாங்க. அதான் இல்லை. அதைவிட கொடூரமான ஒரு படம் அர்ஜூன் ரெட்டி. என்னப்பா எல்லாரும் ஹிட்டுங்றாங்க, நீ கொடூரம்ன்ற?னு தான கேக்குறீங்க? குடிக்கிறதையும், வன்முறையையும், பொண்ணுங்ககிட்ட ஆணாதிக்க மனோபாவத்தோட நடந்துக்குறதையும் கொண்டாடுற கூட்டம் எப்படி உருப்படும்? அந்தக் கூட்டத்துக்கு இந்த க்ராஸ் பிரீட் லிகர் ஐகான் வேற. என்னத்த சொல்ல? இங்கதான் நம்ம தலைவி பார்வதி ஒரு இண்டர்வியூல ஐகான அழுற அளவுக்கு வைச்சு செஞ்சிருப்பாங்க. ஒரு இண்டர்வியூல பார்வது, “பெண் வெறுப்பையும் அவங்க மேல காட்டுற வன்முறையையும் போற்றும் விதமா படம் எடுக்குறாங்க. அதுக்கு ரசிகர்கள் கைதட்றாங்கனா. அப்போ அதை அக்சப்ட் பண்றதாதான அர்த்தம். அதேநேரத்துல அதை அவங்கள கில்டியா உணர வைச்சு ஒரு உரையாடலை நடத்துனீங்கனா, அது சினிமா. அர்ஜூன் ரெட்டிலாம் ஆணாதிக்கம் உயர்வாக சித்தரிக்கப்பட்ட படம்”னு நம்ம லிகர் முன்னாடியே சொல்லுவாங்க. அவங்க சொன்ன ஒவ்வொரு வார்த்தையும், ஏன்டா மகனே… கழட்டி அடிச்சது மாதிரி இருந்துருக்காது?

Also Read: தனித்துவ நடிகன் ஜெயராமின் கதை!

படங்கள்ல இப்படியான விஷயங்களை பேசிட்டு வெளிய வந்து, “நான் படம் நடிப்பேன். என் படத்தை பார்க்காததும் பார்க்குறதும் அவங்க விருப்பம். எனக்கு படத்துல நடிக்க வாய்ப்புகள் வந்துட்டேதான் இருக்கும்”னு ஆணவத்தோட பேசுறதுக்கே வைச்சு செய்யணும். உங்களுக்கு பிகில்ல பாத்ரூம் சீன் நியாபகம் வந்த அதுக்கு சமூகம் பொறுப்பாகாது.

எல்லா கிளாஸ்லயும் பசங்க மத்தியில சில பிரிவிணைகள் இருக்கும். இருக்குறதுலயே அராத்துத்தனம் பண்ணிகிட்டு ஒட்டுமொத்த பள்ளிக்கூடமே திரும்பி பாக்குற சேட்டைக்காரப் பசங்களான கடைசி பெஞ்ச் ஒரு பக்கம், எல்லா ஆசிரியர்களுக்கும் பிடிச்ச முதல் பென்ச் அம்மாஞ்சியான பசங்க இன்னொரு பக்கம். ஆனா, இந்த ரெண்டு பக்கமும் சேர முடியாம நடுவில் இருக்க சில பசங்க தவிப்பாங்க. ஏன்டா முதல் பென்சுக்கு வரமாட்டேங்குறன்னு ஒவ்வொரு முறை பேப்பர் கொடுக்கும் போதும் ஆசிரியர்கள்கிட்ட அடிவாங்குவாங்க. கொஞ்சமா சேட்டை பண்ணி கடைசி பெஞ்சுக்குப் போகலாம்னு முயற்சி பண்ணியும் ஆசிரியர்கள்கிட்ட அடிவாங்குவாங்க, கடைசி பெஞ்ச் ரவுடிகள் கிட்டவும் அடிவாங்குவாங்க. எங்கயும் சேர முடியாம நடுவில் தத்தளிப்பாங்க. நாம ஞாபகம் வச்சுக்க வேண்டியது இந்தப் பசங்களைத்தான்.

விஜய் தேவரகொண்டா

காலேஜ் எல்லாம் முடிஞ்ச பிறகு அந்த முதல் பெஞ்ச் பசங்க Performer of the month வாங்க அமைதியா ஒரு பக்கம் போராடிகிட்டிருப்பாங்க. கடைசி பெஞ்ச் பசங்க ஒரு பக்கம் வேலை கிடைக்காம, கிடைச்ச வேலையைத் தக்க வைக்கவும் போராடிகிட்டிருப்பாங்க. ஆனா,  அந்ந மிடில் பெஞ்ச் பசங்கதான் கிடைச்ச வேலையில் இருந்துகொண்டு பள்ளியில் செய்ய முடியாத சேட்டைகளை இப்போ செய்ய ஆரம்பிப்பாங்க. நானும் ரௌவுடிதான் நானும் ரௌவுடிதான்னு வாண்டடடா வந்து வண்டில ஏறுவாங்க.  ஆர்வக்கோளாறா எதையாச்சும் செஞ்சுட்டு அடி வாங்கிட்டு இருப்பாங்க. இவன் யார்றா கோமாளின்னுதான் ஊரே பாக்கும்.

அந்த மாதிரியான பசங்களை நாம வாழ்க்கையில் ஒரு முறையாச்சும் கடந்து வந்திருப்போம். அர்ஜூன் ரெட்டி aka ரௌடி aka டார்லிங் aka விஜய் தேவரகொண்டாவும் அந்த மாதிரியான ஒரு பையன் தான். வாண்டடா வந்து வண்டில ஏறுன வடிவேலு கணக்கா இழுத்து இழுத்துப் பேசி ரௌடிஸ்னு தன் ரசிகர்களைக் கூப்பிட்டு கெத்து காட்டுறதா நினைச்சு கிறுக்குத்தனம் பண்ணிட்டு திரியுற விஜய தேவரகொண்டாவுக்கு ஒரு அட்வைஸ் சொல்லனும்னா நீங்க என்ன சொல்வீங்க? கமெண்ட்ல சொல்லுங்க.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top