ஜெஸ்ஸி-ன்னு சொன்னா நமக்கு முதல்ல நினைவுக்கு வர்றது த்ரிஷா. இதுக்கு காரணம் எதுவும் சொல்லத் தேவையில்லை. சரி, ரெண்டாவதா யாரு நினைவுக்கு வருவாங்க? – சிம்புவா? அதான் இல்லை.. விடிவி கணேஷ்.
இங்க என்ன சொல்லுது… ஜெஸ்ஸி ஜெஸ்ஸின்னு சொல்லுதா? – இப்படி கரகரத்த குரல்ல அவர் சொல்றதை கேட்கும்போதே ஜெஸ்ஸியோட பேரழகு ரெண்டு மடங்கு ஆகிடும். உண்மையிலேயே, அந்தப் படத்துல சிம்புவை விட விடிவி கணேஷ்தான் அதிக ஜெஸ்ஸின்ற பேரை அதிகமா உச்சரிப்பாரோன்னு தோணுது. அந்த அளவுக்கு அவர் இம்பாக்ட் கிரியேட் பண்ணியிருப்பார்.

என்னதான் நமக்கு நம்ம ஏஜ் குரூப்ல, நம்மளை விட கொஞ்சம் சின்ன வயசுல இருக்குறவங்க ஃப்ரெண்டா இருந்தாலும், நம்ம எமோஷனல் லைஃப்ல கார்டியன் ஏஞ்சலா விடிவி கணேஷ் மாதிரி ஒருத்தர் நமக்கு ஃப்ரெண்ட் இருப்பாங்க. அப்படி யாரும் இல்லைன்னா, அப்படி ஒருத்தர் ஃப்ரெண்டா இருந்தா நல்லா இருக்குமேன்ற ஏக்கம் இருக்கும். அதான் சினிமாவுல அவரோட பவர் பாயின்ட்டே. அதை தெரிஞ்சோ தெரியாமலோ பிடிச்சிகிட்டு விடிவில ஆரம்பிச்சு இன்னிக்கு வாரிசு வரைக்கும் வந்து நிற்கிறார் விடிவி கணேஷ். இதெல்லாம் எப்படி நடந்துச்சு? ஸ்க்ரீன்ல பார்க்குற விடிவி கணேஷ் – நிஜ விடிவி கணேஷுக்கு என்ன மாதிரி சிமிலாரிட்டீஸ் இருக்கு. இதெல்லாம்தான் இந்த வீடியோ ஸ்டோரில பார்க்கப் போறோம்.
முதல்ல விடிவி கணேஷோட சினிமா என்ட்ரியை சுருக்கமாகப் பார்ப்போம். விடிவி கணேஷ் டிபிக்கல் சென்னைவாசிதான். அவர் கைக்குழந்தையா இருந்தப்பவே அவங்க பேரண்ட்ஸ் சென்னைல செட்டில் ஆகிட்டாங்க. படிப்பு எல்லாமே சென்னைதான். அவர் ஸ்கூல் படிக்கும்போது தன்னோட நார்த் இந்தியன்ஸ் ஃப்ரெண்ட்ஸோட சேர்ந்து கட் அடிச்சுட்டு இந்திப் படங்களா பாத்துத் தள்ளுறதுதான் வழக்கம். அப்போதான் அவருக்கு சினிமா மேல பயங்கர ஈடுபாடு வருது.
ஒரு இருபது வயசு இருக்கும். நேரா டி.ராஜேந்தர் வீட்டுக்குப் போய் அவரை மீட் பண்றாரு. நான் சினிமால ஒர்க் பண்ணனும்னு கேக்குறார். ‘சரிப்பா… நாளைக்கு காலைல ஷூட்டிங் வந்துடு’ன்னு சொல்றார். சரின்னு இவரும் அவர் சொன்ன இடத்துல போய் நிக்கிறார். டி.ஆர். சுழன்று சுழன்று வேலை செய்றதையும், ஷூட்டிங்கோட பிரமாண்டத்தையும் பார்த்துட்டு மிரண்டு போய் ஓட்டம் பிடிக்கிறார்.
இடையில ஒரு தெலுங்கு டப் படத்துல செம்ம லாஸ். அப்புறம், சினிமா சார்ந்து வேற ஏதாவது செய்யணும்னு அட்வர்டைசிங் ஃபீல்டுக்கு வர்றார். ரொம்ப வெற்றிகரமா அந்த விளம்பர ஏஜென்சி ரன் ஆகுது. அங்கதான் நிறைய சினிமாட்டோகிராஃபர் நண்பர்களா அறிமுகம் ஆகுறாங்க. அதுல முக்கியமானவர் ஒளிப்பதிவாளர் ஜீவா. கேமராமேன் ஆகலாம்னு விருப்பம் வருது. ஆனா, கேமராமேன் ஒர்க்கை ஃபீல்டுல பாத்துட்டு, இதுவும் நமக்கு வேலைக்கு ஆகாதுன்னு, எல்லாத்துக்கும் மேல எல்லாத்தையும் தன்னோட கண்ட்ரோல்ல வெச்சுக்கக்கூடிய சினிமா தயாரிப்புன்றதை கையில எடுக்கிறார். புரொடக்ஷன்ஸ் பக்கம் முழு கவனம் செலுத்தி ஃபீல்டுக்கு வர்றார்.
அதுக்கு இடையிலயே ஒளிப்பதிவாளர் ஆர்.டி ராஜசேகர் மூலமா அஜித் நடிச்ச ‘ரெட்’ படத்துல முதல் முதலா சின்ன ரோல்ல கேமரா முன்னாடி வர்றார். அதுவும் ரகுவரன் முன்னாடி உட்கார்ந்து வர்ற மாதிரி சீன். கலெக்ட்ர் ரோல். ஒரு மாதிரி மேனேஜ் பண்ணி நடிக்கிறார். கெளதம் வாசுதேவ் மேனனோட ‘பச்சக்கிளி முத்துச்சரம்’, ‘வாரணம் ஆயிரம்’ல சின்னச் சின்ன ரோல்.

விண்ணைத் தாண்டி வருவாயா படத்துல ப்ரொட்யூசர்ல ஒருத்தர். ஏற்கெனவே கெளதமோட நல்ல ஃப்ரெண்ட்ஷிப். ஆக்சுவல்லா, அந்தப் படத்துல முதல்ல விவேக்தான் ப்ளான் பண்ணியிருந்தாங்க. கெளதம் மேனன்தான் “நீங்களே பண்ணிடுங்க”ன்னு விடிவி கணேஷ் கிட்ட சொல்லியிருக்கார். ஒரு வழியா சம்மதிச்சிட்டார். ஷூட்டிங் ஸ்டார்ட் ஆகுது. சிம்புவோடவும் நெருக்கமா பழக ஆரம்பிக்கிறார். ஆனா, கேமராவை அவரால தைரியமா ஃபேஸ் பண்ண முடியலை. “நான் வேண்டாம். வேற யாராவது போட்டுக்கோங்க”ன்னு சொல்லியிருக்கார். ஆனா, சிம்பு விடலை. “கணேஷ் இல்லைன்னா, நான் நடிக்கவே மாட்டேன்”ன்ற ரேஞ்சுல குண்டு தூக்கிப் போட, ப்ரோட்யூசரான கணேஷ் வெலவலத்துப் போய் நடிக்க சம்மத்திச்சார். அப்படித்தான் அந்த கேரக்டருக்குள்ள கணேஷ் வர்றார். அதுக்கு அப்புறம் நடந்ததெல்லாம் நம்ம எல்லாருக்குமே தெரிஞ்ச வரலாறு!
‘விண்ணைத் தாண்டி வருவாயா’ படத்துல படம் முழுக்கவே சிம்புவோட டிராவல் பண்ணுவாரு விடிவி கணேஷ். காதலிக்கிற ரொமான்டிக் ஹீரோ, அவருக்கு உதவுற அவரோட ஏஜ் நண்பர்கள்னு பார்த்துப் பார்த்து சலிச்சுப் போன தமிழ் ரசிகர்களுக்கு ரொம்ப ரிலீஃப் தந்த கேரக்டர் அது. கார்த்திக் காதலில் துவண்டு போறப்ப எல்லாம் ‘ஜெஸ்ஸி உனக்குத்தான்’னு ஊக்கம் கொடுக்கிற அந்த இயல்பான உண்மையான அந்த வாய்ஸ் இருக்கே… அதுவே சிம்பு கேரக்டருக்கு மட்டும் இல்லாம, நமக்கும் செம்ம எனர்ஜியை கொடுக்கும். அதுவும் அந்த church சீன்ல விடிவி கணேஷ் காட்டுற பதற்றம், படபடப்பு, துண்டுத்துண்டான டயலாக் எல்லாமே நம்மளை ஒருவழி பண்ணிடும். அதுவும் அந்த “ப்ப்பா..”ன்னு சொல்ற முமெண்ட் இருக்கே.. சான்சே இல்லை.

ஒட்டுமொத்தமா அந்தப் படத்துக்கு ஜீவன் கொடுத்த கேரக்டராவே விடிவி கணேஷ் இருப்பார். கார்த்திக் – ஜெஸ்ஸி லவ்வை அவங்க பக்கத்துல இருந்து ஃபீல் பண்ற அனுபவத்தை விடிவி கணேஷ் மூலமா நமக்கு கடத்தப்பட்டிருக்கும். அவர் கொடுக்குற ரியாக்ஷன்களே ஆடியன்ஸான நமக்கும் ஏற்படும். அந்த அளவுக்கு அந்த கேரக்டரை செம்மயா பண்ணியிருப்பார்.
‘வானம்’ படத்துல சிம்புவோட ரொம்ப கலகலப்பா பண்ணியிருப்பார். இந்தப் படத்துலதான் விடிவி கணேஷும் சந்தானம் பர்சனலாவும் க்ளோஸ் ஆகுறாங்க. வானம் படத்துல “நாப்பது ஆயிரமா…”, “அறநூறு கோடியா…”-ன்னு விடிவி கணேஷ் சொல்றதுக்கெல்லாம் சந்தானம் கவுன்ட்டர் கொடுத்தது செம்மயா ஒர்க் ஆச்சு.
அடுத்ததும் ‘ஒஸ்தி’ படத்துல சிம்புவுடன். ஆனா, இந்த தடவை ஹீரோயின் அப்பாவா வந்தார். மப்பாவும் வந்தார். செம்ம குடிகாரர் ரோல். அதுலயும் அந்த சிரிக்க வைக்கிற போட்டி சீன்ல சூப்பரா ஸ்கோர் பண்ணியிருப்பார்.
அடுத்ததா சிம்புவுக்கு சித்தப்பாவா ‘போடா போடி’ படம் முழுக்க வித்தியாசமான கெட்டப்புல, ரொமான்ஸ் உள்பட விதவிதமான சேட்டைகள் செஞ்சு, படத்தை கலகலப்பாக்கி இருப்பாரு விடிவி கணேஷ். குறிப்பாக, அந்தப் படத்துல அவர் பேசுற இங்கிலீஷ் டயலாக்கும் மாடுலேஷனும் செம்மயா இருக்கும். அந்தப் படத்துல சிம்புவுக்கும் வரலக்ஷ்மிக்கும் கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆச்சோ இல்லையோ, சிம்புவுக்கும் விடிவி கணேஷுக்கும் செம்மயா கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆகியிருக்கும்.
‘வாலு’ படத்துல குட்டிப் பையாவாகவும், ‘வந்தா ராஜாவாதான் வருவேன்’ படத்துல சிம்புவின் வலதுகரமாகவும் வலம் வரும் விடிவி கணேஷ், சிம்புவோட படங்கள்ல மட்டுமில்லை, நிஜ வாழ்க்கையிலும் நெருக்கமான நண்பர்தான். சிம்புவுக்கு பொண்ணு தேடுற அளவுக்கு க்ளோஸ். குறிப்பாக, லாக்டெளன் காலத்துல கணேஷ் அடிக்கடி வீடியோ கால்ல பேசினதே சிம்பு கூடதான்.
Also Read – ‘போட்டுத் தாக்கு முதல் மாங்கல்யம் வரை’ – சிங்கர் ரோஷினி பாடிய பாடல்களா இதெல்லாம்?
சிம்புவுக்கு அப்புறம் கணேஷ் அதிகமா நடிச்சது சந்தானம் படங்கள்தான். ‘கண்ணா லட்டு திண்ண ஆசையா’, ‘வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்’, ‘இனிமே இப்படித்தான்’, ‘வாலிப ராஜா’ன்னு வரிசையா இவரோட காம்போ படங்கள் வந்துச்சு. இவங்களும் நிஜத்துலயும் நெருங்கிய நண்பர்கள்தான்.
‘கப்பல்’ படத்துல வைபவ் ரூம் மெட்டா வந்து அட்ராசிட்டி பண்ணுவாரு. லவ்வுக்காகவும் ஃப்ரெண்ட்ஷிப்காகவும் பல ஐடியா தட்டி விடுறவர், ஒரு ஐடியாவால தன்னோட காலையே ஒடைச்சிக்கிறது எல்லாம் அல்டிமேட். ‘ரோமியோ ஜூலியட்’ல விடிவி கணேஷாவே ஜெயம் ரவிக்கு ஃப்ரெண்டா வந்து நிறைய லவ் டிபிஸ் கொடுப்பாரு.
‘த்ரிஷா இல்லைன்னா நயன்தாரா’வுல ஜி.வி.பிரகாஷுக்கு ஃப்ரெண்டாவும், கார்டியனாவும், சித்தப்பாவாகவும் வந்து எமோஷனல் சப்போர்ட்டா இருப்பார். அதுவும் அவங்க ரெண்டு பேரும் தண்ணி அடிக்கிற சீன் இருக்கே… உச்சம்!!
சுந்தர்.சி படங்கள்லயும் விடிவி கணேஷ் ஆஜராகிடுவார். குறிப்பா ஜீவா, ஷிவா காம்போவும் செம்மயா இருக்கும். ஷிவாவும் விடிவி கணேஷும் எந்த அளவுக்கு க்ளோஸ்ன்றது, சன் டிவில வெளிவந்த டிவி சீரியஸ் ஸ்பூஃப் ஷோவே சாட்சி. ஆக்சுவல்லி, ஷிவாதான் திடீர்னு ஒரு நாள் கூப்டு அந்த ஷோல நடிக்க வெச்சிருக்கார். ஷாட் டைம்ல ரெண்டும் பேரு சேர்ந்து கலக்கியிருப்பாங்க.
ஒரு வழியா லவ் குரு கேரக்டர்ஸ்ல இருந்து எஸ்கேப் ஆன விடிவி கணேஷ் ‘பீஸ்ட்’ல விஜய்க்கு தோஸ்தாவும், செக்யூரிட்டி ஏஜென்சி நடத்துறவராகவும் வருவார். விஜய்க்கு நிஜத்துலயும் விடிவி கணேஷை ரொம்ப பிடிச்சுப் போய், அந்த நட்பால ‘வாரிசு’லையும் தன்னோட டீம்ல விடிவி கணேஷனை இணைச்சுகிட்டார் விஜய். ரெண்டு பேரும் எந்த அளவுக்கு க்ளோஸ்ன்றதை வாரிசு ஆடியோ லாஞ்ச்ல கணேஷ் விவரிச்சி இருப்பார்.
ஷூட்டிங் ஸ்பாட்ல இவர் பண்ற சேட்டைக்கு அளவே இருக்காது. இதை கவனிச்ச விஜய், ‘வாரிசு’ ஷூட்டிங் ஸ்டார்ட் ஆகும்போது ஹைதராபாத்ல கணெஷ்கிட்ட சொல்லியிருக்கார்… “நெல்சன்கிட்ட பண்ண மாதிரியெல்லாம் இங்கே பண்ண முடியாது”ன்னு வார்ன் பண்ற அளவுக்கு இருந்துருக்கு அவரோட சேட்டைகள்.
சிம்பு, ஜிவி பிரகாஷ் தொடங்கி சுந்தர்.சி, விஜய் வரைக்கும் எல்லா ஏஜ் க்ரூப் நடிகர்களுக்கும் இப்படி ஃப்ரெண்டா கலக்குற விடிவி கணேஷுக்கு எவ்ளோ ஏஜ் இருக்கும் நினைக்கிறீங்க?
ஃபார்ட்டி ப்ளஸ்?
ஃபார்ட்டி ஃபைவ் ப்ளஸ்?
ஃபிஃப்டி ப்ளஸ்..?
சொன்னா நம்ப மாட்டீங்க… சிக்ஸ்டி ப்ளஸ்!
Subscribe Tamilnadu Now Youtube channel for more entertaining videos
0 Comments