தனுஷ்

எப்படிதான் யோசிக்கிறாரோ… ‘Poetu’ தனுஷ் செய்த தரமான சம்பவங்கள்!

இன்னைக்கு காதல் குதூகலத்துல இருக்குறவங்க, காதல் தோல்வில இருக்குறவங்க, வாழ்க்கையை நினைச்சு கவலைல இருக்குறவங்க, எதுக்குனே தெரியாமல் டிப்ரஷன்ல இருக்குறவங்க, தனிமைல இருக்குறவங்க, வைப் பண்றவங்க, அரவணைப்பு தேவைப்படுறவங்க கேக்குற பாடல்கள் பெரும்பாலும் நா.முத்துக்குமார் எழுதுனதாதான் இருக்கும். அவருக்கு அடுத்து அப்படியான உணர்வுகளை அவ்வளவு அழகா எளிமையான வரிகள்ல சொல்றது நம்ம ‘பொயட்டு’ தனுஷ்னுதான் தோணும். தனுஷ் எழுதுன ஒவ்வொரு பாட்டுமே நம்மள்ல பலபேருக்கு மனப்பாடமா இருக்கும். ஏன்னா, அந்த வரிகளோட நம்மளை ஈஸியா கனெக்ட் பண்ணிக்க முடியும். சரி, ‘Poetu’ தனுஷ் பண்ண தரமான சம்பவங்களைதான் இந்த வீடியோல நாம தெரிஞ்சுக்கப்போறோம்.

‘Poetu’ தனுஷ்
‘Poetu’ தனுஷ்

தனுஷ் முதல்முதல்ல பாட்டு எழுதுனது ‘மயக்கம் என்ன’ படத்துலதான். செல்வராகவன் – தனுஷ் சேர்ந்துதான் படத்துல எல்லாப் பாட்டையும் எழுதியிருப்பாங்க. ஒவ்வொரு பாட்டுமே நச்னு நங்கூரம் மாதிரி இருக்கும். ஜி.வி.பிரகாஷ் மியூசிக் வேற. சொல்லவா வேணும்? ‘மயக்கம் என்ன’ படம் தொடங்குனதுல இருந்து கடைசி கிளைமேக்ஸ் வரைக்கும் ஒருவித மென்சோகம் இருந்துட்டே இருக்கும். அதை தன்னோட இசை மூலமா ஜி.வி இன்னும் அழுத்தமாக்கியிருப்பாரு. இடைல வர்ற பாடல் வரிகள் வழியா தனுஷ் அந்த படம் சொல்ல வர்றதை ஸ்பாயில் பண்ணாம இதைத்தான் சொல்ல வர்றோம்னு கதையை, கதாபாத்திரத்தோட உணர்வுகளை ஷார்ட் அண்ட் ஸ்வீட்டா சொல்லியிருப்பாரு. படத்துல தனுஷ் தன்னோட திறமையை நிரூபிக்க வாய்ப்பு கிடைக்காமல் ஓடிட்டே இருப்பாரு. அப்போ நிராகரிப்பின் வலியை கடத்துற விதமா, ‘ஓட ஓட ஓட தூரம் குறையல’ பாட்டு வரும். அதுல ‘உலகமே ஸ்பீடா ஓடி போகுது, என் வண்டி பஞ்சர் ஆகி நிக்குது’ வரிகள், ‘ஜானும் ஏறல ஏறல முழமா சருக்குறனே’, ‘மீனா நீந்துறேன் நீந்துறேன் கடலும் சேரலையே, படகா போகுறேன் போகுறேன் கரையும் சேரலையே’ வரிகள் எல்லாம் அப்படியே நிறைய இளைஞர்களுக்கு செட் ஆகும்.

மயக்கம் என்ன
மயக்கம் என்ன

‘பிறை தேடும் இரவிலே உயிரே’ – ஒவ்வொரு தடவையும் இந்தப் பாட்டைக் கேக்கும்போது உள்ளுக்குள்ள என்னவோ பண்ணும். யாமினி மாதிரி ஒரு மனைவியை ஏன் இன்னைக்கும் பசங்க தேடுறாங்கன்றதுக்கு இந்த பாட்டு ஒண்ணே போதும். ஒவ்வொரு வரியும் அவ்வளவு உணர்வுபூர்வமா இருக்கும். இங்க நமக்கு ஆறுதல் அளிக்க யாரும் இல்லைன்றதுதான் மிகப்பெரிய குறையா இருக்கு. இந்தப் பாட்டைக் கேட்டா கண்டிப்பா கொஞ்சம் ஆறுதல் கிடைக்கும். ‘இருளில் கண்ணீரும் எதற்கு? மடியில் கண் மூடவா. அழகே இந்த சோகம் எதற்கு? நான் உன் தாயும் அல்லவா?” – ப்பா இந்த வரிகளை எப்படி கடந்து போக முடியும்? ‘என் ஆயுள் ரேகை நீயடி, என் ஆணி வேரடி, சுமை தாங்கும் என் கண்மணி, எனை சுடும் பனி’- இந்த வரிகளை கேக்கும்போது யாரோ வந்து நம்மள கட்டிப்புடிச்ச மாதிரி ஒரு உணர்வு வரும். இந்தப் பாட்டை முழுசா கேட்டு முடிச்சதும், கண்கள் பக்கத்துல ஒரு துளி கண்ணீர் மட்டும் அப்படியே கசியும். இதெல்லாம் பியூர் தனுஷ் லிரிக்ஸ் மேஜிக்தான்.

3
3

‘பொயட்டு தனுஷா’ தனுஷ் மாறுன படம் ‘3’ தான். ஆமா, இந்தப் படத்துல இருந்துதான் அவரை பொயட்டு-னு கூப்பிட ஆரம்பிச்சாங்க. இந்தப் படத்துல ‘இதழின் ஓரம்’ பாட்டு தவிர மத்த எல்லாப் பாட்டுமே தனுஷ் எழுதுனதுதான். எல்லாமே காதல் பாட்டு தான். ஆனால், ஒவ்வொரு பாட்டும் ஒவ்வொரு எமோஷன்ல இருக்கும். பாட்டோட டைட்டிலே அப்படிதான் இருக்கும். ரெண்டு பேரும் காதலிக்க தொடங்குனதுக்கு பிறகு ஒரு சின்ன காமம் கலந்த வர்ணனை இருக்கும்ல, அதை ‘கண்ணழகா’ பாட்டுல இன்னசண்ட் கலந்து தனுஷ் சொல்லியிருப்பாரு. ‘உயிரே உயிரே உன்னைவிட எதுவும் உயிரில் பெரிதாய் இல்லையடி’ வரிகள் வரும்போதுலாம் அப்படியே நம்ம ஸ்கூல் லவ் கண்ணு முன்னாடி வந்துபோகும். கல்யாணம் ஆனதுக்கு அப்புறம் ஊடல், அன்பு, காதல் எல்லாத்தையும் ‘நீ பார்த்த விழிகள்’ பாட்டுல சொல்லியிருப்பாரு. ‘நிழல் தரும் இவள் பார்வை, வழியெங்கும் இனி தேவை, உயிரே உயிரே உயிர் நீதான் என்றால், உடனே வருவாய் உடல் சாகும் முன்னால்’ வரிகள் எல்லாம் உச்சம். செம ஃபீல் கொடுக்கும். அப்புறம் பிரிவின் வலியை சொல்ற ‘போ நீ போ’ பாட்டு. நிறைய பேர் இந்தப் பாட்டைக் கேட்டு அழுதுட்டு இருப்பாங்க நான் காலேஜ் படிக்கும்போது. ‘இதுவரை உன்னுடன் வாழ்ந்த என் நாள்கள் மறுமுறை வாழவும் வழியில்லையா?’லாம் இன்னைக்கு எக்ஸ் லவ்வர்க்கு சொல்ற மெசேஜ்தான்.

சூப் சாங்
சூப் சாங்

உலகத்தையே அதிர வைச்சு சூப் சாங்னு ஒரு டிரெண்டை கிரியேட் பண்ணிவிட்ட பாட்டுனா அது ‘வொய் திஸ் கொலவெறி’தான். நிறைய சர்ச்சைகளையும் இந்தப் பாட்டு சந்திச்சுது. பொலிட்டிகலி தப்பான ஒரு உதாரணமான பாட்டு தான் இது. அதேமாதிரிதான் ‘மயக்கம் என்ன’ படத்துல வர்ற ‘காதல் என் காதல்’ பாட்டு. பாட்டு வரிகள் எல்லாம் அவ்வளவு அழகா இருக்கும். ஒரு சூப் சாங்கா சில வரிகள் பெண்களை அவமதிக்கிற மாதிரி வந்ததால நிறைய எதிர்ப்புகள் இந்தப் பாட்டுக்கும் வந்துச்சு. அதனால, இதை அப்படியே ஸ்கிப் பண்ணிட்டு அடுத்தப் பாட்டுக்கு போய்டுவோம். தனுஷ் அவரோட படத்துக்கு மட்டுமில்ல, அடுத்த ஹீரோவோட படத்துக்கும் செமயா பாட்டு எழுதி கொடுப்பாரு. எதிர் நீச்சல் படத்துல சிவகார்த்திகேயனுக்கு ஒரு இண்ட்ரோ சாங் எழுதியிருப்பாரு. இன்னைக்கும் பசங்க யாராவது லைஃப்ல எதாவது ஒரு விஷயத்துல ஜெயிச்சிட்டா ‘பூமி என்ன சுத்துதே’ பாட்டுல வர்ற ‘டேமேஜ் ஆன பீஸு நானே, ஜோக்கர் இப்போ ஹீரோ ஆனேன்’ லைனதான் ஸ்டேட்டஸா வைப்பாங்க. சிவகார்த்திகேயனும் அந்தப் பாட்டு புரோமோல, “இந்த லைனுக்குள்ள என்னோட அஞ்சரை வருஷ வாழ்க்கை இருக்கு”னு சொல்லுவாரு. அவருக்கு மட்டுமில்ல நிறைய பேருக்கு இந்த லைனுக்குள்ள பல வருஷ வாழ்க்கை புதைஞ்சு இருக்கும். அந்த பல்ஸ புடிக்கிறதுதான் தனுஷ்.

அம்மா அம்மா
அம்மா அம்மா

‘அம்மா’ எமோஷன்னு சொன்னதும் எல்லாருக்கும் டக்னு நியாபகம் வர்றது வி.ஐ.பி அம்மா பாட்டுதான். மனுஷன் அப்படி எமோஷனலா எழுதி வைச்சிருப்பாரு. பாட்டு கேட்டு முடிக்கும்போது நம்ம அம்மாக்கு ஃபோன் பண்ணி பேசணும்னு தோணும். அந்த எண்ணம் நமக்கு வருதுல அதுலயே தனுஷ் லிரிசிஸ்டா ஜெயிச்சிட்டாரு. ‘நான் போன பின்னும் நீ வாழ வேண்டும், எந்தன் மூச்சு உனக்குள்ளும் உண்டு, எங்கப் போனாலும் நானும் வருவேன், கண்ணாடிப்பாரு நானும் தெரிவேன்’னு அம்மா குரல்ல பாடல் வரும்போதுலாம் சிலிர்க்கும். பாட்டோட முதல் வரியே அவ்வளவு எமோஷனலா இருக்கும். வேறலெவல் தனுஷ் நீங்க. வேலையில்லா பட்டதாரில எல்லாப் பாட்டும் தனுஷ் எழுதுனதுதான். போ இன்று நீயாக, வாட் எ கருவாடு, ஏய் இங்கப்பாரு-னு எல்லாப் பாட்டும் தரமா இருக்கும். குறிப்பா ஊதுங்கடா சங்கு பாட்டை தனியா மென்ஷன் பண்ணனும். தண்டச்சோறுனு வீட்டுல திட்டு வாங்குன எல்லாருக்கும் இதுதான் கீதம். அதுலயும், ‘எருமைக்குக்கூட ப்ளூகிராஸ் இருக்கு. எனக்காக யோசிக்க உயிரா இருக்கு? மரத்தை சுத்தி டூயட் பாடி எனக்கும்தான் லவ் பண்ண எனக்கும்தான் ஆசை இருக்கு, வெளியாம சொல்லாமல் உள்ள அழுகுறேன்டா’ வரிகள்லாம் பசங்க ஏங்குற வாழ்க்கையை சொல்ற வரிகள்.

Also Read: இந்தியன் படம் தமிழ் சினிமாவுக்கு ஏன் முக்கியம் – 3 காரணங்கள்!

தங்க மகன்
தங்க மகன்

தங்க மகன் படத்துல வழக்கம் போல ரொமாண்டிக்கான பல வரிகளை மனுஷன் எழுதியிருப்பாரு. பாட்டு வரில வெரைட்டி காட்டுனது மாரிலதான். மாரி படத்துல எல்லா பாட்டுமே சும்மா மாஸா எழுதியிருப்பாரு. தர லோக்கல் பாட்டுல வர்ற ‘ஊரு உலகம் தெரியாது, நியாயம் தர்மம் கிடையாது, பாதை மாற புடிக்காது, பாசம் நேசம் புரியாது’ வரிகள்லாம் ரக்கட் பாய்ஸ்க்கான வரிகள். அன்றே கணித்து தனுஷ் எழுதியிருக்காரு. அடுத்து தனுஷ் எழுதுன செம பாட்டுனா ‘வெண்பனி மலரே’. இளைமைல விட்டுப்போன காதல் முதுமைல தொடர்றதை அவ்வளவு அழகா எழுதியிருப்பாரு. அந்த ‘வெண்பனி மலரே’ வார்த்தையே எவ்வளவு கேட்சியா இருக்குல? ‘தேடிய தருணங்கள் எல்லாம் தேடியே வருகிறதே, தேகத்தின் சுருக்கங்கள் எல்லாம் சிரிக்கிறதே’, ‘காலங்கள் ஓய்ந்த பின்னும் காதல் என்ன, வாலிபம் தேய்ந்த பின்னும் கூச்சம்தான் என்ன?’ லிரிக்ஸ்லாம் நான் பொயட்டு தனுஷ் இல்லை. கவிஞன் தனுஷ்னு நம்மள சொல்ல வைக்கும். அதேமாதிரிதான் பேட்ட படத்துல இளமை திரும்புதே பாட்டும் எழுதியிருப்பாரு. ‘சாய்கையில் தாங்க தேவை ஒரு தோள் தானே, தனி மரம் நானடி, தோட்டமாய் நீயடி, வாலிபத்தின் எல்லையில் வாசல் வந்த முல்லையே’ வரிகள் எல்லாம் அல்டிமேட்.

திருச்சிற்றம்பலம்
திருச்சிற்றம்பலம்

திருச்சிற்றம்பலம் படத்துல டி.என்.ஏ காம்போ பேக் கொடுத்துச்சு. படமும் ஹிட்டு, பாட்டும் ஹிட்டு, பாட்டு வரிகளும் ஹிட்டு. எல்லார் வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ்லயும் இன்னைக்கு திருச்சிற்றம்பலம் பாட்டுதான் ஓடிக்கிட்டு இருக்கு. மேகம் கருக்காதா பாட்டுல, ‘கண்பாஷை பேசினால், நான் என்ன செய்வேன்? கன்ஃபியூஷன் ஆகிறேன் உள்ளுக்குள்ளே, பறக்க பறக்க துடிக்குதே, பழக பழக புடிக்குதே, பழைய ரணங்கள் மறக்குதே’ வரிலாம் தனுஷால மட்டுமே எழுத முடிகிற வரிகள்தான். தங்க்லீஷை எப்படி எங்க ரிதம்க்கு ஏத்த மாதிரி பயன்படுத்தனும்னு தனுஷ்க்கு செம ஐடியா இருக்கும்போல, அதை வைச்சு பின்னி எடுத்துருவாரு. ‘வாழ்க்கை போகும் போக்கிலெல்லாம் நான் போகிறேன்’ லைன் என்னோட ஃபேவரைட். அப்புறம் தேன்மொழி பாட்டு. நார்மல் லவ் ஃபெயிலியர் பாட்டு வித் தனுஷ் டச். ‘பாலே இங்க தேரல பாயாசம் கேக்குதா? காத்தே இங்க வீசல காத்தாடி கேக்குதா?’ லைன்லாம் செம ஹைலைட்டு பாட்டுல. எல்லாரும் இதைதான் முணுமுணுத்துட்டு திரியுறாங்க. தனுஷ் இதுவரைக்கும் லிரிசிஸ்டா பண்ண சம்பவங்கள் இதுதான். இதுக்கப்புறமும் தனுஷ் நிறைய சம்பவங்கள் லிரிசிஸ்டா பண்ணுவாரு. அவர் தன்னை லிரிசிஸ்டா ஒத்துக்கவே மாட்டாரு. ஆனால், நமக்கு அவர்தான் லிரிசிஸ்ட்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top