இந்தியாவில் கொரோனா வைரஸ் இரண்டாவது அலை மிகவும் கொடூரமான பாதிப்பை ஏற்படுத்தி வருது. மகாராஷ்டிரா, டெல்லி, உத்தரப்பிரதேசம் மற்றும் மத்தியப் பிரதேசம் போன்ற மாநிலங்கள் மிகவும் கடுமையாக பாதிப்படைந்துள்ளன. ஆக்ஸிஜன் கிடைக்காமல் கொரோனாவால் பாதிப்படைந்த மக்கள் பலரும் திணறி வருகின்றனர். பல மருத்துவமனைகளிலும் படுக்கை வசதிகள் இல்லை என குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
இறப்பு எண்ணிக்கையும் அதிகமாகி வருவதால் சடலங்களை தகனம் செய்ய முடியாமல் உறவினர்கள் தவித்து வருகின்றனர். இதுதொடர்பான புகைப்படங்கள் சோஷியல் மீடியாக்களில் அதிகம் பகிரப்பட்டு கவலைகளை ஏற்படுத்தி வருகின்றன. இந்த நிலையில், உலக சுகாதார அமைப்பு இந்தியாவில் கொரோனா பரவல் பற்றி தெரிவித்துள்ள கருத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Also Read : வொர்க் ஃப்ரம் ஹோமை என்ஜாய் பண்ண 5 வழிகள்!
உலக சுகாதார அமைப்பின் செய்தி தொடர்பாளர் தாரிக் ஜாசரெவிக், “இந்தியாவுக்கு ஆக்ஸிஜன் வழங்குவது உள்ளிட்ட தேவையான உதவிகளை உலக சுகாதார அமைப்பு செய்து வருகிறது. இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிப்படைந்தவர்களில் 15 சதவிகிதத்துக்கும் குறைவானவர்களுக்குதான் மருத்துவமனையில் சிகிச்சை தேவைப்படுகிறது. அதிலும் குறைவான நபர்களுக்குதான் ஆக்ஸிஜன் தேவைப்படுகிறது. ஆனால், பிரச்னையின் ஒரு பகுதி என்னவென்றால், தேவையான தகவல் மற்றும் ஆலோசனைகள் கிடைக்காததால் மக்கள் பலரும் மருத்துவமனைக்கு வேகமாக செல்கின்றனர்.
வீட்டிலேயே இருந்து தங்களை சரியாக பராமரித்துக் கொண்டாலே கொரோனாவில் இருந்து பாதுகாப்பாக இருக்க முடியும். சமூக அளவிலான மையங்கள் நோயாளிகளை சோதனை செய்ய வேண்டும். பாதுகாப்பான வீட்டு பராமரிப்புகள் குறித்து மக்களுக்கு ஆலோசனைகளை வழங்க வேண்டும். எல்லா நாட்டுக்கும் பொருந்துற உண்மை என்னனா.. தடுப்பூசி தட்டுப்பாடுகள் நிலவும் இந்த சமயத்துல உரிய பாதுகாப்பு நடவடிக்கைகள் எதுவும் இல்லாமல் மக்கள் கூட்டமாக கூடுவது மிகப்பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தும்” அப்டினு சொல்லியிருக்காரு.