துணிவு… இந்தப் படத்தோட இறுதிகட்ட படப்பிடிப்பை இப்போ ஆரம்பிச்சிட்டாங்க. இந்த ஷெடியூல் ஆரம்பிக்க ஏன் இவ்வளவு தாமதம் ஆச்சுனு தெரியுமா? துணிவு படம் ஒரு உண்மை சம்பவத்தை மையமா வெச்சு எடுக்குறாங்களாம்; அது என்ன சம்பவம்? வலிமையைல பண்ணுன தப்பை ஹெச்.வினோத் இந்தப் படத்துல பண்ணலை; அது என்ன?
பாங்காங்ல இப்போ ஆரம்பிச்சிருக்கிற துணிவு படத்தோட கடைசி ஷெடியூல் ரொம்ப முன்னாடியே ஆரம்பிக்க வேண்டியது. ஆனால், அது இப்போ தாமதா ஆரம்பிச்சதுக்கு அஜித்தோட பைக் ட்ரிப்தான் காரணம்னு சோஷியல் மீடியாவுல சொல்லிட்டு இருக்காங்க. ஆனால், அது உண்மை கிடையாது. ஏன்னா, எந்த ஹீரோவும் ஷூட்டிங்கை தள்ளி வெச்சுட்டு பைக் ட்ரிப் போக மாட்டார். இதுக்கு என்ன காரணம்னு விசாரிச்சா, சமீபத்தில் நடந்த ஐடி ரைடைதான் சொல்றாங்க. பல சினிமா பைனான்ஸியர் வீட்டுல ஐடி ரெய்டு போனதுனால, பல பைனான்ஸியர்ஸ் அந்த ரெய்டுக்கு அப்பறம் எந்தப் படத்துக்கும் பைனான்ஸ் பண்ணாம இருந்தாங்க. துணிவு படத்தைப் பொறுத்தவரைக்கும் மதுரை அன்புதான் பைனான்ஸியர். ரெய்டு முடிஞ்சதுக்கு அப்பறம் இவர் இப்போதான் பைனான்ஸ் பண்ண ஆரம்பிசிருக்கார். அதுனாலதான் படத்தோட ஷூட்டிங்கை இப்போ ஸ்டார்ட் பண்ணியிருக்காங்க.
நிஜக்கதை
விஜயோட பீஸ்ட் படம் வந்தப்போதே அஜித்தின் துணிவு படமும் இதே ஃபார்மெட்தான். பீஸ்ட்ல மால்; இதுல பேங்க்னு சில தகவல்கள் வந்துச்சு. இந்தத் தகவல் குறித்து படக்குழு எதுவும் சொல்லாத நிலையில் இந்த தகவல் வளர்ந்து கொண்டே செல்கிறது. 1987 ஆம் ஆண்டு பஞ்சாப்பில் நடந்த ஒரு வங்கி கொள்ளை சம்பவத்தை அடிப்படையாக வைத்தே துணிவு படத்தை எடுக்கிறார்கள் என்று சொல்கிறார்கள். அதை உறுதி செய்வதைப் போலவே படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கும் இருக்கிறது. முன்னதாகவே இந்தப் படத்தில் அஜித் நெகட்டிங் டோன் இருப்பதைப் போன்ற ரோலில் நடிக்கிறார் என்றும்; தீரன் படத்திற்குப் பிறகு வினோத் ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து படம் எடுக்கிறார் என்றும் தகவல்கள் வந்தது. இதை எல்லாம் ஒன்று சேர்ந்து வைத்து அஜித் ரசிகர்கள், அடுத்த மங்காத்தா என தங்களது எதிர்பார்ப்பை உயர்த்திக் கொண்டே செல்கிறார்கள்.
ஹெச்.வினோத்தின் துணிவு
வலிமை படத்திற்கு பிறகு இந்தப் படத்தின் வேலைகளை துவங்கிய வினோத், வலிமையில் செய்த தவறுகளை இந்தப் படத்தில் செய்யக்கூடாது என்பதில் ரொம்பவே தெளிவாக இருக்கிறார். அதனால்தான், அப்டேட் அப்டேட் என்று ரசிகர்களை கேட்க வைக்காமலேயே படத்தின் அஜித் லுக், ஷூட்டிங் அப்டேட், ஃபர்ஸ்ட் லுக் என அடுத்தடுத்து அப்டேட்களை கொடுத்துக்கொண்டே இருக்கிறார். அதுமட்டுமில்லாமல் மற்றுமொரு முக்கியமான முடிவையும் துணிவோடு எடுத்திருக்கிறார். வலிமை படத்தில் வேலை பார்த்தப்போது வினோத்திற்கும் யுவனுக்கும் இடையே சில கருத்து வேறுபாடுகள் வந்திருக்கின்றன. ஆனால், இதை பெரிது படுத்தாமல் படம் முடிந்தால் போதும் என வேலை பார்த்ததால்தான், எப்போதும் அஜித் – யுவன் காம்போவில் இருந்த பவர் இதில் மிஸ்ஸானது. அதை புரிந்துகொண்ட வினோத், இந்தப் படத்தில் ஜிப்ரானை இசையமைப்பாளராக கமிட் செய்தார். அதேப்போல் இந்தப் படத்தின் துவக்கத்திலேயே ஸ்டண்ட் மாஸ்டர் திலீப் சுப்பராயனோடு சில கருத்து வேறுபாடுகள் இருந்ததால், இதோடு இந்தப் படத்தை துவங்க வேண்டாம் என்று சுப்ரீம் சுந்தரை ஸ்டண்ட் இயக்குநராக கமிட் செய்துவிட்டார், வினோத்.
அப்டேட்
சமீபத்தில் பாங்காங்கில் துவங்கப்பட்ட இறுதிக்கட்ட படபிடிப்பு அக்டோபர் மூன்றாவது வாரத்திற்குள் முடிவடைகிறது. ஆரம்பத்தில் இந்தப் படம் தீபாவளிக்கு என்று சொல்லப்பட்ட நிலையில் படத்தின் ரிலீஸ் பொங்கலுக்கு தள்ளிப்போவதாக தெரிகிறது. ஆனால், ஏற்கெனவே பொங்கலுக்கு விஜய்யின் வாரிசு படமும் வருகிறது. ஆக, 2014 ஆம் ஆண்டு பொங்கலுக்கு விஜய்யின் ஜில்லாவும் அஜித்தின் வீரமும் ஒன்றாக வெளியானதைப் போலவே 2023 ஆம் ஆண்டு பொங்கலும் இருக்கப்போகிறது.
Also Read – இங்க வா… யார் நீ… உனக்கு என்ன பிரச்னை… விஜய் தேவரகொண்டா ரோஸ்ட்!