தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர், சிம்ரன். ‘வித்தகி’ சிம்ரன் நடிப்பில் அசத்தலாக உருவான டாப் 10 ரோல்கள் பற்றிய தொகுப்பின் இரண்டாம் பகுதி இது. (குறிப்பு : இது தரவரிசைப் பட்டியல் அல்ல)
ஜானகி – ‘பம்மல் கே சம்பந்தம்’

சிம்ரனுக்கு காமெடியும் நன்கு வரும் என அவர் நிரூபித்த படம் இது. காமெடியில் கலக்கும் கமலுக்கு நிகராக இந்தப் படத்தில், சிம்ரனும் வாட்சை வயிற்றுக்குள் வைத்து ஆபரேசன் செய்துவிட்ட டாக்டர் வேடத்தில் பட்டையைக் கிளப்பியிருப்பார். படத்தில் கமலிடமிருந்து அந்த வாட்சை அவருக்கேத் தெரியாமல் மீட்க சிம்ரன் படும் பிரயத்தனங்கள் எல்லாமே அல்டிமேட் காமெடிகள். அந்த விசில் காட்சியை நம்மால் மறக்கமுடியுமா என்ன..?
ப்ரியா – ‘ப்ரியமானவளே’

இந்தப் படத்தில் தமிழ் கலாச்சாரம் என்றால் என்னவென்றேத் தெரியாத மேலைநாட்டு பாதிப்பில் வளர்ந்த இளைஞனை தன் அன்பால் வெல்லும் கனமான கதாபாத்திரம் சிம்ரனுக்கு. ஒரு வருஷம் அக்ரீமெண்ட் கல்யாணம் என்றதும் கொந்தளிப்பது தொடங்கி, கல்யாணத்திற்குப் பிறகு அந்த அக்ரீமெண்ட் முடியக்கூடாது என ஏங்குவது, அக்ரீமெண்ட் காலம் முடிந்ததும் கணவன்மீது வெறுப்பை உமிழ்வது என சகல ஆங்கிளிலும் அசத்தியிருப்பார் சிம்ரன்.
வீரலெட்சுமி – ‘கோவில்பட்டி வீரலெட்சுமி’

தலித் ஒடுக்குமுறைகளைப் பற்றி அப்போதே பேசிய ஒரு சில படங்களில் இந்தப் படமும் ஒன்று. சக்ஸஸ்ஃபுல் கியூட் ஹீரோயினாக சிம்ரன் வலம் வந்துகொண்டிருந்த நேரத்தில் தடாலடியான இந்த வேடத்தில் அவர் நடிக்கிறார் என்றதுமே எதிர்பார்ப்பு எகிறத் தொடங்கியது. படம் வெற்றிப்படமாக அமையவில்லையென்றாலும் அந்தப் பாத்திரத்திற்குத் தேவையான நியாயத்தை கச்சிதமாக வழங்கியிருப்பார் சிம்ரன். கூடவே முதன்முறையாக தனது சொந்தக் குரலில் டப்பிங்கும் பேசியிருப்பார் சிம்ரன்.
லெட்சுமி – ‘ஏழுமலை’

தன் கணவனை ஏமாற்றும் அவனது அண்ணன்கள், இந்த உண்மையை ஏற்க மறுக்கும் கணவன் என கிட்டத்தட்ட ‘வாலி’ பாணியிலான இந்தக் கதையில் சிம்ரன் ஜஸ்ட் லைக் தட் ஸ்கோர் செய்திருப்பார். கிளாமர், ஹோம்லி என இரண்டு ஏரியாவிலும் பக்காவாகப் பொருந்தியிருக்கும் சிம்ரன், ஒரு காட்சியில் ஆக்ரோஷமாக பேசி நடித்த, ‘வெட்டிப்போட்டுடுவேன்’ என்ற வசனத்தை யாராலயும் மறக்கமுடியுமா என்ன..?
மாலினி கிருஷ்ணன் – ‘வாரணம் ஆயிரம்’

‘ஹாய் மாலினி’ என சூர்யா காதல் மொழியும்போது வெட்கப்படும் இளம் மாலினியாகட்டும், காலங்கள் கடந்தபிறகு தன் குழந்தைகளை அரவணைத்துச் செல்லும் மெச்சூர்டு ஃப்ரெண்ட்லி அம்மாவாகட்டும் என ஒரே படத்தில் அசத்த சிம்ரனால் மட்டும்தான் முடியும். கௌதம் மேனனின் டிரேட்மார்க் அப்பர் மிடில் கிளாஸ் கேரக்டருக்கு சிம்ரன் தனது இயல்பான நடிப்பால் அழகாக உயிர்கொடுத்திருப்பார். தன் திருமணத்திற்குப் பிறகு சிறிய பிரேக் எடுத்திருந்த சிம்ரன் சூப்பர் கம்பேக் கொடுத்த படமும் இது என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read : `ப்ரியா’ முதல் `பானு’ வரை – சிம்ரனின் டாப் 10 ரோல்கள் (பகுதி 1)
I like this blog it’s a master piece! Glad I found this ohttps://69v.topn google.Blog money