கடந்த வாரம் திருவாரூரில் பாரதிய ஜனதா கட்சி நடத்திய கூட்டத்துக்குக் கூடிய கூட்டம் அரசியல் தளத்திலும், பொதுமக்கள் மத்தியிலும், ஆச்சரியத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது. வழக்கம்போல், பி.ஜே.பி ஐ.டி-விங்கின் போட்டோஷாப் வேலை என்றும் சொல்லப்பட்டது. ஆனால், அது போட்டோஷாப் இல்லை. உண்மையான கூட்டம் என்பதை, பி.ஜே.பி ஐ.டி-விங்கும் அண்ணாமலையும் வீடியோ போட்டு நிருபித்தனர். பிறகு தாமதமாக அது உண்மையான கூட்டம் தான் என்ற உண்மை அனைவருக்கும் தெரிய வந்த து. தமிழ்நாடு பி.ஜே.பி-யின் வரலாற்றில் அந்தக் கட்சியின் அகில இந்தியத் தலைவர்கள் வராமல், பெரிய தேர்தல் பிரச்சாரங்கள் தவிர்த்து, ஒரு மாநிலத் தலைவரின் தலைமையில் நடந்த ஆர்ப்பாட்த்திற்கு இவ்வளவு கூட்டம் கூடியது இதுதான் முதல் முறை. இது எப்படி சாத்தியமானது என்றால், தற்போது அண்ணாமலையின் கீழ் பணியாற்றும் டீம்தான் அதற்குக் காரணம்.
இதற்கு முன்பிருந்த பி.ஜே.பி தலைவர்களைப் போன்ற சமூக பின்புலத்தில் இருந்து வந்தவரில்லை அண்ணாமலை. அதுபோல், ஒரு காலகட்டம் வரை பி.ஜே.பி என்பது ஒரு முன்னேறிய வகுப்பினர்குரிய கட்சி என்பதுபோல் இருந்த அதன் கட்டமைப்பை மாற்றும் வேலைகள் அண்ணாமலை காலத்திற்கு முன்பே தொடங்கிவிட்டது என்றாலும், தற்போதுதான் அந்த வேலை வேகம் பிடித்துள்ளது. அதுபோல், ஒவ்வொரு வேலைக்கும் ஒரு டீம் என அண்ணாமலை சரியாக நியமனம் செய்து கொண்டு செய்யும் வேலைகளும் ஒரு காரணம்.
1) கிருஷ்ணகுமார் முருகன், பொறுப்பாளர், அண்ணாநகர் ஐ.டி. விங்.

தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சிக்கென்று ஐ.டி.விங் இருக்கிறது. அதை நிர்மல் என்பவர் பார்த்துக் கொள்கிறார். அவர் ஒருவகையில் சசிகலாவின் தூரத்து உறவினர். முன்னர் டி.டி.வி.தினகரனின் அ.ம.மு.க-விற்கும் வேலை செய்தவர், அண்ணாமலை பி.ஜே.பி-யில் பொறுப்புக்கு வந்த நேரத்தில் அவரும் வந்துவிட்டார். அப்போது முதல் அவர்தான் தமிழ்நாடு பி.ஜே.பி-யின் அதிகாரப்பூர்வ ஐ.டி-விங்கைப் பார்த்துக் கொள்கிறார். ஆனால், அந்த ஐ.டி-விங்கை மட்டும் நம்புவதற்கு அண்ணாமலை தயாராக இல்லை. அவர் கட்சியைத் தாண்டி தன்னை முன்னிறுத்திக் கொள்வதற்கும், தன்னுடைய பேச்சு, நடவடிக்கைகளை வைரல் ஆக்குவதற்கும் அண்ணா நகரில் தனியாக ஒரு ஐ.டி.விங்கை வைத்து நடத்துகிறார்.

கிருஷ்ண குமார் முருகனுக்குக் கீழ் 14 பேர் கொண்ட அணி உள்ளது. இவர்கள்தான், அண்ணாமலையை வைத்து வெளியாகும் போஸ்டர்களை டிசைன் செய்வது, யூ-ட்யூப் வீடியோக்களை வெளியிடுவது போன்ற வேலைகளைப் பார்த்துக் கொள்கின்றனர். அண்ணாமலையின் பேட்டிகள், பேச்சுகளுக்கான கண்டென்ட்டுகளை சோசியல் மீடியாவில் இருந்து எடுத்து, அதில் தேவையான மாற்றங்களைச் செய்து தருவதும் இந்த கிருஷ்ண குமார் முருகன்தான்.
2) சீனியர் நாராயணன் திருப்பதி

பி.ஜே.பி சார்பில் டி.வி. விவாதங்களில் கலந்து கொண்டிருந்த நாராயணன் திருப்பதி தற்போது அண்ணாமலையின் குளோஸ் சர்க்கிளில் உள்ளார். ஹெச்.ராஜா, கே.டி.ராகவன், பொன்.ராதாகிருஷ்ணன் போன்ற சீனியர்கள் அண்ணாமலை மீது கடும் அதிருப்தியில் இருக்கும் சூழலில், அண்ணாமலையின் தலைமையை முழுமையாக ஆதரிப்பதும், அதிகாரப்பூர்வமாக பி.ஜே.யினரின் குரலாக அண்ணாமலையிடம் பேசுவதுமாக தற்போது இருப்பவர் நாராயணன் திருப்பதிதான். அதுபோல், தமிழக பி.ஜே.பி-யின் பழைய வரலாறு தொடர்பான சந்தேகங்கள், திராவிட இயக்கங்கள் பற்றிய சந்தேகங்களில் அண்ணாமலைக்கு தகவல்கள் தந்து உதவுவது நாராயணன் திருப்பதிதான்.
3) `Anti தி.மு.க’ கிஷோர் கே சாமி.

பி.ஜே.பி-யின் கொள்கைகளில் சித்தாந்தரீதியாக எதை ஹைலைட் செய்யலாம் என்பதிலும், தி.மு.க-வை எந்தெந்த விஷயங்களில் கடுமையாக விமர்சனம் செய்யலாம் என்பதற்கும், தனிப்பட்ட முறையில் கலைஞர், மு.க.ஸ்டாலின், உதயநிதியை அட்டாக் செய்வதற்கும் தேவையான தகவல்களை கிஷோர் கே சாமி மூலம் அண்ணாமலை பெற்றுக் கொள்கிறார். இதற்காக அவருடன் தொடர்ந்து தொடர்பில் இருக்கிறார்.

அண்ணாமலையோடு கர்நாடகாவில் ஐ.பி.எஸ்ஸாக இருந்தபோது, அவருடைய நண்பராக இருந்தவர் பாண்டித்துரை. பெங்களூருவில் சாப்ட்வேர் நிறுவனம் நடத்திக் கொண்டிருந்தவர், அண்ணாமலை தமிழ்நாடு வந்து பி.ஜே.பி-யில் இணைந்ததும், இவரும் தமிழகம் வந்துவிட்டார். இவரும், கிருஷ்ண குமார் முருகனின் ஐ.டி-விங்கில் முக்கியமான ஆளாக உள்ளார். அதுபோல், தற்போது இவர் இளைஞரணியில் பொறுப்பில் இல்லையென்றாலும், அந்த அணிக்கான ஆலோசனைகளை வழங்குவது, வேலைத்திட்டங்களை எப்படிச் செயல்படுத்துவது தொடர்பானவற்றில் அண்ணாமலைக்கு நம்பிக்கைக்குரியவராக உள்ளார்.
4) கருப்பு முருகானந்தம், கரு.நாகராஜன்…

கருப்பு முருகானந்தம், கருநாகராஜன் போன்றவர்கள் அண்ணாமலையின் விசுவாசிகளாகவும், இவர் சொல்லும் அரசியல் நடவடிக்கைகளுக்கு வடிவம் கொடுப்பவர்களாகவும் இருக்கின்றனர்.

தற்போது திருவாரூரில் கூடிய கூட்டத்திற்கு முக்கியக் காரணம், அந்தப் பகுதியில் தி.மு.க-வில் முன்னணி தொண்டர்களாகவும், பொறுப்பாளர்களாகவும் இருந்த பலர் பி.ஜே.பி-யில் இணைந்தது மட்டுமல்ல… அவர்களை ஒருங்கிணைத்து கருப்பு முருகானந்தம் வேலை பார்ப்பதும்தான். தற்போது டெல்டா மாவட்ட பி.ஜே.பி-யின் வளர்ச்சிக்கு, அண்ணாமலை முழுமையாக நம்புவது கருப்பு முருகானந்தத்தைத்தான்.
Also Read – பிசினஸ்மேனாக ஆசைப்பட்ட அண்ணாமலை, அரசியலில் ஜெயித்தது எப்படி? Personal Flashback