உணவுப் பழக்க, வழக்கம் சரியாக இல்லையென்றால், பல்வேறு செரிமானக் கோளாறுகளால் நாம் அவதிப்பட வேண்டி வரும். அப்படி செரிமானத்துக்கு வேட்டு வைக்கும் 5 தவறான உணவுப் பழக்கங்கள் பற்றிதான் நாம தெரிஞ்சுக்கப் போறோம்.
உணவே மருந்து
உணவை சரியான விகிதத்தில் எடுத்துக்கொள்ளும்பட்சத்தில் அதுவே நமது உடலுக்கு அருமருந்தாக அமையும். பல நேரங்களில், மலச்சிக்கல், வயிறு உப்புசம், நெஞ்செரிச்சல் போன்ற பிரச்னைகள் நம்ம சந்தோஷத்தையே கெடுத்துடும். அப்படியான பிரச்னைகளுக்கு முக்கியமான காரணம் நம்மளோட உணவுப் பழக்கம்தான்னு சொல்றாங்க டாக்டர்ஸ்.
இப்படியான செரிமானக் கோளாறுகளில் இருந்து நம்மைத் தற்காத்துக் கொள்ள தவிர்க்க வேண்டிய 5 தவறான உணவுப் பழக்கங்கள் என்னென்ன?
பசியில்லாதபோது உணவு எடுத்துக்கொள்வது
சரியான நேரத்தில் உணவு எடுத்துக்கொள்ள வேண்டும் என ஒரு டைமிங் செட் செய்துகொள்வது நல்லதுதான். அதேநேரம், குறிப்பிட்ட நேரத்தில் பசியில்லை என்றாலும் வலுக்கட்டாயமாக உணவு எடுத்துக் கொண்டால், உங்கள் மூளை கொடுக்கும் சிக்னலை சரியாக நீங்கள் புரிந்துகொள்ளவில்லை என்று பொருள். உங்கள் வயிற்றில் இருந்து பசி என்கிற சிக்னல் மூளைக்குப் போகாத சமயத்தில், செரிமானத்துக்கு உதவும் ரசாயனங்களும் சுரக்காது. இந்த நேரத்தில் நீங்கள் உணவு எடுத்துக்கொள்ளும்போது, செரிமானக் கோளாறுகள் ஏற்பட வாய்ப்பிருக்கிறது.
நோ எமோஷன்
நெகட்டிவ் சிந்தனைகளில் இருந்து தப்புவதற்கான எஸ்கேப் ரூட்டாக சிலர் உணவை எடுத்துக்கொள்வதுண்டு. இஷ்டமான உணவுகளை எடுத்துக்கொண்டால், கஷ்டமான சூழல்களில் இருந்து விடுபடலாம் என்பது சிலரின் எமோஷனாக இருக்கும். அப்படி, அதிகப்படியான உணவு வகைகளை எடுத்துக்கொள்வது உங்களுக்குப் பிரச்னைகளைத்தான் ஏற்படுத்தும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
உணவுக்கு முன் அல்லது பின்னர் அதிகமாக தண்ணீர் குடிப்பது
அதிகமாக தண்ணீர் குடிப்பது உணவை செரிக்க உதவும் அமிலங்களை நீர்த்துப் போகச் செய்யும். நாம் பள்ளி வேதியியல் பாடப்புத்தகத்தில் படித்திருப்பது போலவேதான், அமிலங்களை நீர்த்துப் போகச் செய்ய அத்துடன் தண்ணீர் சேர்ப்பது பற்றி அறிந்திருப்போமல்லவா… செரிமான அமிலங்கள் செயழிலந்து விடும் நேரத்தில் செரிமானக் கோளாறுகள் ஏற்படும்.
மல்டி டாஸ்கிங் வேண்டாமே பாஸ்!
உணவு எடுத்துக்கொள்ள சரியான நேரம் ஒதுக்குவது அவசியம். போகிறபோக்கில் பல வேலைகளைச் செய்துகொண்டே உணவை எடுத்துக்கொள்வது சிலருக்குப் பழக்கமாக இருக்கும். அப்படிச் செய்தால், நம்முடைய செரிமான மண்டலம் சரியாக வேலை செய்யாமல் போகலாம். அத்தோடு, முழுமையான ஈடுபாட்டோடு உணவை எடுத்துக்கொண்டால் மட்டுமே, அதிலிருக்கும் சத்துகளையும் நம் உடல் முழுமையாக எடுத்துக்கொள்ளும்.
வாதம், பித்தம், கபம்!
முத்தாது என்று சித்த மருத்துவத்தில் குறிப்பிடப்படுபவை வாதம், பித்தம், கபம். உடலை இயக்கும் உயிர்ச் சத்துகள் இவை. வாதம், உடலின் இயக்கத்தையும் பித்தம், வெப்பத்தால் சீரான ரத்த ஓட்டம் உள்ளிட்டவைகளையும் கபம், நீர்த்துவத்தையும் பாதுகாப்பது. இவற்றுக்கு ஏற்றவகையில் உணவை எடுத்துக்கொள்ளவில்லை என்றால், அதுவும் செரிமானக் கோளாறுகளுக்குக் காரணமாக அமையும்.
Also Read – வீகன் Foodies-களுக்கான பெஸ்ட் உணவுகள்.. இறைச்சிக்கு மாற்றான 5 அசத்தல் ஃபுட்ஸ்!